ராய்ப்பூர்: தன் கணவனை இழந்து வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல்
தவிக்கும் விதவைகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை மீண்டும் மகிழ்ச்சிக்கு
உள்ளாக்க நேச்சர் கேர் சோசியல் வெல்பர் சொசைட்டி என்ற சமூக நல நிறுவனம்
ராய்பூரை சேர்ந்த, தைரியமாக விதவை ஒருவரை மணந்த இளைஞரை பாராட்டும் வகையில்
அவர்களுக்கு தேன்நிலவு சுற்றுலாவை பரிசாக அளித்துள்ளது. விதவைக்கு நீங்கள் மறுவாழ்வு
தந்தால்
அவர்கள் ராய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த தம்பதியினருக்கு 4
பகல், 3 இரவுகளுக்கான தேன்நிலவு சுற்றுலாவை இலவசமாக அளித்தனர்.அந்த
தம்பதியினர் ஆசியாவில் உள்ள 45 குறிப்பிட்ட இடங்களில் எதை வேண்டுமானலும்
தேர்ந்தெடுத்து கொள்ளலாம்
புதன், 12 மார்ச், 2014
(ஜெயலலிதா ?) மமதா பானர்ஜி அன்னா ஹசாரேவுடன் ஒரே மேடையில் இன்று பங்கேற்பு ! மமதாவின் தேசிய வியூகம் !


டெல்லி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா
பானர்ஜி டெல்லியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் அன்னா
ஹசாரேவுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் மமதா பானர்ஜி. அன்னா ஹசாரே பங்கேற்கும்
பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமது தேசிய அளவிலான தேர்தல்
வியூகத்தை மமதா பானர்ஜி வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தில் தமது கட்சியின் வேட்பாளர் பட்டியலையும் மமதா பானர்ஜி
வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது. அண்மைக்காலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா
பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் என்றும் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் இணைந்து
செயல்பட தயார் என்றும் மமதா பானர்ஜி கூறி வருகிறார்.
அத்துடன் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஆதரவைப் பெற்றவராகவும்
வலம்வருகிறார் மமதா .இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும்
பொதுக்கூட்டத்தில் தமது தேர்தல் வியூகங்களை மமதா பகிரங்கப்படுத்துவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
‘நிமிர்ந்து நில்’ கமர்ஷியல் களத்தில் குதிக்க நினைத்த சமுத்திரகனி
தன் 12ஆம் வகுப்பு வரை ஒரு ஆஸ்ரமப் பள்ளியில் படிக்கும் ஜெயம் ரவி, அதையே தன் உலகமாக நினைத்து வாழ்கிறார். கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வரும் ஜெயம் ரவிக்கு இந்த சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஆஸ்ரமத்தில் தான் கற்றுக்கொண்ட எதுவுமே இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பயன்படவில்லை என்று தெரியவருகிறது. இருந்தாலும் நான் இப்படித்தான் வாழ்வேன் என்று அடம் பிடிக்கிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு முறையும் ரூல்ஸ் பேசி போலிசில் மாட்டிக்கொள்வதும், அவர் நண்பரான சூரி போலிசுக்கு தேவையான கட்டிங்கை கொடுத்து அவரை மீட்டுவருவதும் சகஜமாகிவிடுகிறது.
ராதிகாவுக்கு NO சீட் ! குனிஞ்சு குனிஞ்சு குட்டு வாங்கினதுதான் மிச்சம் ?
அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதிகூட ஒதுக்காததால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமக்கு செல்வாக்குள்ள மூன்று மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் உள்ள ஒரு தொகுதியில், ராதிகாவை நிறுத்துவது என்ற சரத்குமாரின் திட்டமும் அம்பேல்.
இதனால், அ.தி.மு.க. பிரசாரத்தில் பங்கேற்காமல் ச.ம.க. தொண்டர்கள் ஒதுங்கி நிற்கின்றனர். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா? நீடித்தாலும் தேர்தலில் இவர்களால் ஏதாவது பலன் கிட்டுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட்களை கழற்றிவிட்டதால் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய கட்சிகள் ஏதும். ஆனால், ஜெயலலிதா எடுக்கும் முடிவுக்கு எல்லாம் கடந்த 3 ஆண்டுகளாக ஆமாம் சாமி போட்ட சரத்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தங்களுக்கு சீட் ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார இந்த ராதிகா இருக்காகளே தான் ஏதோ பெரிய இண்டேலேகுசுவல் ரேஞ்சுக்கு பீலா விடுவார் .கேவலம் ஜெயலலிதாவிடம் போய் சேர்ந்தது எதுக்காகவாம் .அப்பா அப்பான்னு கோபாலபுரம் சுத்திவிட்டு .....
கோச்சடையான்’ கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடிக்காமல் இருந்தாலே போதும். அதுவே ரசிகர்களுக்கு அவர் செய்யும் பெரிய உதவி.
சூப்பர் ஸ்டார் தீவிர சீக்காளியாக நடக்கக் கூட முடியாமல் இருந்தபோதுதான், ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு நடந்தது.
ஆனாலும் அவர் அந்தப் படத்தில் Action Hero வாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றனர்.
அப்படியானல் வழக்கத்தைவிட அதிகமாக ரசிகர்களை ‘கூமுட்டை’யாக்குவார்கள் என்று நினைத்தேன்.
அப்படியானல் வழக்கத்தைவிட அதிகமாக ரசிகர்களை ‘கூமுட்டை’யாக்குவார்கள் என்று நினைத்தேன்.
அதுபோலவே அந்தப் படத்தின் பத்திரிகை
விளம்பரங்களில் ரஜினி சாயலில் ஒருவர் நடித்திருக்கறார் என்பதாகவே
இருந்தது. அதனால், ரஜினியின் பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூலை
‘கோச்சடையான்’ முறியடிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், அதன் முன்னோட்டக் காட்சிகளை youtube
ல் பார்த்த பிறகு, பாபா, நாட்டுக்கொரு நல்லவன் படங்களின் வசூல் சாதனையை
‘கோச்சடையான்’ முறியடிக்காது என்று முடிவானது;
காரணம், கோச்சடையானில் ரஜினி சாயலில் ஒரு பொம்மை நடித்திருக்கிறது.
காரணம், கோச்சடையானில் ரஜினி சாயலில் ஒரு பொம்மை நடித்திருக்கிறது.
ரசிகர்களை ‘கூமுட்டை’ யாக நினைக்கும் இவர்களை, ரசிகர்கள் ‘நீங்க தாண்டா கூமுட்டை’ என்று நிச்சயம் தீர்ப்பளிப்பார்கள்.
காங்கிரசை உடைக்க வாசன் போட்ட திட்டம் 'அம்பேல்' !பிரதமரிடம் வாங்கி கட்டினார் !
கோபமடைந்த பிரதமர், வாசனை கண்டித்துள்ளார். 'மத்திய அமைச்சரவையில் இருந்து
கொண்டு, நீங்கள் இப்படி குறைகூறுவது பொருத்தமான செயல் அல்ல. பிரதமர் என்ற
முறையில், நான் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாருக்கும் தெரியும். அதை
விமர்சிக்கவோ, குறை சொல்லவோ, உங்களுக்கு உரிமை கிடையாது' என்று பிரதமர்
கொஞ்சம் சூடாக பேசியதாக தெரிகிறது. அ.தி.மு.க.,விடம் இருந்து, 'கிரீன்' சிக்னல் கிடைக்காததாலும்,
எதிர்பார்த்த அளவுக்கு, மூத்த நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்காததாலும்,
காங்கிரசை உடைக்கும் முயற்சியை, கடைசி நேரத்தில் கைவிட்டார், வாசன்.
'தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; 39 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யப்
போகிறேன்' என்றும், அவர் அறிவித்துள்ளார்.
தனிக்கட்சி துவங்கும் திட்டத்தோடு, டில்லியில் இருந்து திரும்பிய மத்திய அமைச்சர் வாசன், நேற்று காலை, தன் ஆதரவாளர்களை அழைத்தார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், ஆதரவாளர்கள் கூடினர். அவர் எதிர்பார்த்த அளவுக்கு, முன்னணி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தற்போதைய எம்.பி.,க்களில் ஆரூண், ராமசுப்பு மட்டுமே வந்திருந்தனர்; எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வரவில்லை. எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் யாரும் நம்பமாட்டாங்க தமிழகத்தில்
தனிக்கட்சி துவங்கும் திட்டத்தோடு, டில்லியில் இருந்து திரும்பிய மத்திய அமைச்சர் வாசன், நேற்று காலை, தன் ஆதரவாளர்களை அழைத்தார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், ஆதரவாளர்கள் கூடினர். அவர் எதிர்பார்த்த அளவுக்கு, முன்னணி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தற்போதைய எம்.பி.,க்களில் ஆரூண், ராமசுப்பு மட்டுமே வந்திருந்தனர்; எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வரவில்லை. எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் யாரும் நம்பமாட்டாங்க தமிழகத்தில்
அம்பலமான விஜயகாந்தின் 'திடுக்' திட்டம் ! தே.மு.தி.க., போட்டியிடும் இடங்களாகப் பார்த்து பிரசாரம்?
அ.தி.மு.க., தரப்பில், முதல்வர், ஜெயலலிதா பிரசாரம் துவக்கி விட்டார். எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி விட்டது. ஆனால், பா.ஜ., கூட்டணியில், நேற்று வரை, தொகுதி பங்கீடே முடியவில்லை. ஆனாலும், தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்ப முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.இரண்டு முறை வலம்வரும், 14ம் தேதி திருவள்ளூர் (தனி) தொகுதியில் இடம்பெற்றுள்ள, கும்மிடிப்பூண்டியில், விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளார். எல்லாருக்கும் தெரிஞ்சது தானே ? .... தே.மு.தி.க காரன் , ப.ம.க வுக்கு வோட்டு போடா மாட்டான் .. பா.ம.க காரன் தே.மு.தி.க , ம.தி.மு.க விற்கு வோட்டு போடா மாட்டான் , ம.தி.மு.க காரன் ரெண்டு பெருக்கும் வோட்டு போட மாட்டான் ஏன்னா ... அவங்ககிட்ட வோட்டு போட யாரும் இல்லை .. இதில் குளிர் காய்ந்து வெற்றி பெற போவது பி.ஜே.பி மட்டுமே
செவ்வாய், 11 மார்ச், 2014
அழகிரி பற்றி நூல் எழுதியவருக்கு 'சீட்': ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி ! அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை':
மதுரை: 'அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை' என்று நூல் எழுதி, அழகிரி கையாலேயே வெளியிட்ட தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், விருதுநகர் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, கட்சியினரே எதிர்பாராத ஒன்று.தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க தலைவராக, 15 ஆண்டுகள் இருந்தார் ரத்தினவேலு. பின், சங்கத்தில் ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பிறகு, இவருக்காக 'முதுநிலை தலைவர்' பதவி உருவாக்கப்பட்டு, அந்த பதவியை வகித்து வருகிறார். மதுரைக்கு 1980ல் அழகிரி அடி எடுத்துவைத்த நாள் முதல், ரத்தினவேலுடன் அறிமுகம் உண்டு. அவரின் நெருங்கிய வட்டத்தில் இல்லை என்றாலும், தி.மு.க., அனுதாபியாகவே இருந்தார் ரத்தினவேலு. அழகிரிக்கு 'ஆற்றலரசர்' என்ற பட்டத்தை கொடுத்தவர். ஸ்டாலின் ஒரு சராசரி காங்கிரஸ் அல்லது பாஜக தலைவர்களை போன்றே காட்சி அளிக்கிறார் . திராவிட பாரம்பரியம் சுய மரியாதையை சமுக நீதி போன்ற கொள்கை விடயங்களில் வெறும் டம்மி பீசாக தான் ஸ்டாலின் இருக்கிறார்,எப்படி பார்த்தாலும் அழகிரி சற்று மேலானவராக தான் தெரிகிறார் . திமுகவை மீண்டும் ஒரு சுயமான அமைப்பாக மீட்டு எடுப்பதற்கு அழகிரியை விட்டால் யார் இருக்கிறார். பாவம் குஷ்புவும் ஒதுங்குகிறார் போல் தெரிகிறது
ஜாதிப்பெயரை சூட மறுத்த வித்யா பாலன் (வித்யா ஐயர்)
ஒரிஜினல் பெயரை மாற்ற சொன்னதால் பட வாய்ப்பை உதறினார்
வித்யா பாலன்.வித்யாபாலன் ஆரம்ப கட்டத்தில் தமிழ் படத்தில்தான்
அறிமுகமானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில்
நடிக்கவில்லை. அதன்பிறகு அவர் தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளாமல்
பாலிவுட்டுக்கு சென்றார். குடும்ப பாங்காக நடித்துக்கொண்டிருந்தவர், சில்க்
ஸ்மிதாவின் வாழ்க்கை படமான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்‘ல் சில்க் வேடத்தில்
படுகவர்ச்சியாக நடித்து அசத்தினார். பாலிவுட்டில் தனக்கென தனி இடம்
பிடித்தார். தொடர்ந்து ‘கஹானி‘ உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையில் தேர்வு
செய்த படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடிக்கிறார்.
இந்தியாவுக்கு நேரில் வந்து நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர் ஆர்வம்
சென்னை:வரும்
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சுமார்
11,844 தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில் கேரளாவை
சேர்ந்தவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்திய தேர்தல்களில்
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் என்று
நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 2010ம் மக்கள்
பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஓட்டளிக்க வகை செய்யப்பட்டது. ஆனால்,
தேர்தல் விதிமுறைப்படி வேறு எந்த நாட்டு குடியுரிமையும் பெறாத வெளிநாட்டு
வாழ் இந்தியர்கள், இந்திய தேர்தலில் ஓட்டளிக்கலாம்.
இயக்குநர் கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம் : வங்கி நடவடிக்கை!
தமிழ்
திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கிறார் கவுதம்மேனன். மின்னலே, காக்க
காக்க, வேட்டை யாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல ஹிட்
படங்களை எடுத்துள்ளார்.
தற்போது
அஜீத் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் சொந்தமாக பட நிறுவனம்
துவங்கி நடுநிசி நாய்கள், வெப்பம் உள்ளிட்ட சில படங்களையும் தயாரித்தார்.
அவை சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் கவுதம்மேனனுக்கும் தயாரிப்பாளர்
எல்ரெட் குமாருக்கும் பண பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு கோர்ட் வரை
சென்றது. தொடர்ச்சியாக கோர்ட்டும் அவர் சொத்துக்களை ஏலத்துக்கு விடுவதாக
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Digital ஆயிரத்தில் ஒருவன் 100 தியேட்டரில் ரிலீஸ் !
எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில்
ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ்,
நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர்.
பி.ஆர்.பந்துலு இயக்கினார்.
இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம்
மற்றும் கேரளாவில் வருகிற 14–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கலர்
மெருகேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் புதுப்பித்து உள்ளனர். மொத்தம் 100
தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ்
சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தன.
நிஜமாகவே 20 தொகுதிகளில் BJP ஓட்டுகளை பிரிக்குமா? கருத்து கணிப்பு வியாபாரிகள் அறிவிப்பு ?
பாராளுமன்ற
தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது.
பாரதீய ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல்
நீடித்து கொண்டே இருப்பதால் வேட்பாளர்கள் அறிவிப்பதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
இது தவிர கம்யூனிஸ்டு கட்சிகளும் தனியாக களத்தில் குதிக்கிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
தற்போது அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 35 தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.
இந்த இரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக பாரதீய ஜனதா கூட்டணி உருவாகி வருகிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இடம் பெற்றுள்ளதால் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பா.ஜனதா கூட்டணி சற்று பலம் பெற்று உள்ளது.
இதனால் ஆரணி, விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய தொகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக உருவாகி உள்ளது.
இது தவிர கம்யூனிஸ்டு கட்சிகளும் தனியாக களத்தில் குதிக்கிறது. காங்கிரசும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் 5 முனை போட்டி உருவாகி உள்ளது.
தற்போது அ.தி.மு.க., தி.மு.க. மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் 35 தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.
இந்த இரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக பாரதீய ஜனதா கூட்டணி உருவாகி வருகிறது. பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இடம் பெற்றுள்ளதால் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பா.ஜனதா கூட்டணி சற்று பலம் பெற்று உள்ளது.
இதனால் ஆரணி, விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய தொகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக உருவாகி உள்ளது.
கம்யூனிஸ்டு கட்சிகள் 12 தொகுதிகளில் போட்டி
அ.தி.மு.க.வுடனான
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இந்திய கம்யூனிஸ்டு மற்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து விடப்பட்டுள்ளன. இந்த 2
கட்சிகளும் கூட்டாக சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு
செய்துள்ளன.
10 அல்லது 12 தொகுதிகளில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளையும் அவர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர்.
இதன்படி, வடசென்னை, கோவை, திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட 2 கம்யூனிஸ்டு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருச்சியில் வருகிற 15–ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுவதுடன், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக் கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
10 அல்லது 12 தொகுதிகளில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளையும் அவர்கள் கண்டறிந்து வைத்துள்ளனர்.
இதன்படி, வடசென்னை, கோவை, திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட 2 கம்யூனிஸ்டு கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருச்சியில் வருகிற 15–ந்தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுவதுடன், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக் கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் போட்டி ! வாசன் போட்டியிடவில்லை !
காங்கிரஸ்
கட்சியின் வாக்கு வங்கி பாரம்பரியமிக்க ஒன்று. தமிழகத்தில் காங்கிரஸ்
கட்சிக்கு நிரந்தரமான கணிசமான வாக்கு வங்கி எப்பொழுதும் உள்ளன. காங்கிரஸ்
கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
தமிழகத்தைப்
பொறுத்தவரையில் சர்ந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ்
கட்சியுடன் கூட்டணி அமைக்காத கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர்
வருத்தப்படும். காங்கிரஸ் கட்சியில் சேருபவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு ?தமிழக அரசியலில் நகைச்சுவைக்கு தற்போது நல்ல இடம் கிடைத்துள்ளது. தா பா ஒருபக்கம் சோகம் கலந்த நகைச்சுவையை அள்ளி வீசுகிறார் .தற்போது வாசனும் நல்ல ஒரு ஜோக் ஸ்டாண்ட் எடுத்துள்ளார்!.
வடிவேலுவின் தென்னாலிராமனுக்கு இமான் அந்தகால வாசத்தோடு இசை
தயாளன் இயக்கத்தில் தெனாலிராமனாகவும், மன்னராகவும் வடிவேலு இரட்டை
வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம். ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். ராஜா
காலத்து கதை என்பதால் அரண்மனை, கோட்டைச்சுவர், நகர அமைப்பு என அனைத்தும்
மிகப்பெரிய பொருட்செலவில் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி
முடித்துள்ளனர்.
கலை
இயக்குனர் M.பிரபாகரிஅனின் மிகப்பெரிய அரங்குகளும், ஒளிப்பதிவாளர்
ராம்நாத் ஷெட்டியின் தத்ரூபமான ஒளிப்பதிவும், கலைவித்தகர் ஆரூர்தாஸின்
சிரிப்பும், சிந்தனைகளும் கலந்த வசனங்களும், டி.இம்மானின் இசையும்
அற்புதமாக அமைந்து தெனாலிராமன் திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கும்
என்று முழு நம்பிக்கையில் இருக்கின்றனர் படக்குழுவினர்.கல்பாத்தி
S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில்
உருவாக்யிருக்கும் இத்திரைப்படம் சித்திரை மாதம் திரைக்கு வருகிறது.
படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது பின்னணி இசைச்சேர்ப்பு பணிகள்
நடந்து வருகின்றன. திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்: அழகிரி ! அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கெல்லாம்போட்டியிட வாய்ப்பு !
பெற்றுக்கொண்டே திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முன்னாள்
மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி
தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் என்றும், பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், மதுரை சிறப்பு நிருபர் கோகுல் வண்ணனுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில் அழகிரி கூறியிருப்பதாவது:
வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள். வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் என்றும், பெரும்பாலான தொகுதிகளில் திமுகவுக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ், மதுரை சிறப்பு நிருபர் கோகுல் வண்ணனுக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில் அழகிரி கூறியிருப்பதாவது:
வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள். வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாடா' மூடில் பா.ம.க., - பா.ஜ., 48 மணி நேர கெடு ?
தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, எட்டு தொகுதிகள் மட்டுமே
ஒதுக்க முடியும்; அதை ஏற்று, 12ம் தேதிக்குள், கூட்டணி முடிவை வெளியிட
வேண்டும் என, அக்கட்சிக்கு, பா.ஜ., கெடு விதித்துள்ளது. அதேநேரத்தில், 12
தொகுதிகள் கேட்டு, பட்டியல் கொடுத்த, பா.ம.க., தற்போது, 10 தொகுதிகள்
வேண்டும் என்றும், அந்த பத்தும், அக்கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை
நிறுத்தியுள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என்றும், ஒற்றைக்காலில்
நிற்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு, தீர்வு காண, 12ம் தேதி வரை,
அக்கட்சிக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.நீண்ட இழுபறிக்கு பின்,
தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி இறுதி வடிவம் பெற்றுள்ளது.
தே.மு.தி.க., - ம.தி.மு.க.,வுடன் தொகுதிகள் உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது. விஜயகாந்த், பா.ம.க. இரு கட்சிகளுமே கூட்டணியில் இல்லை என்றால்
நல்லது....ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடக்காது....தேய்ந்து வரும்
இரு கட்சிகளையும் திரும்பவும் வளர்த்து விட்ட பாவம் பா.ஜ.க. மீது
விழும்....இரு கொள்ளியில் நல்ல கொள்ளி எது என்றால், பெரும்பாலான
பா.ஜ.க.வினரின் விருப்பம் விஜயகாந்தே....ஆகவே, ராமதாஸ் கட்சியை வெளியேற்ற
சந்தர்ப்பம் கிடைத்தால், ரொம்ப நல்லது, போயிட்டு வாங்க என்று அனுப்பி
வையுங்க.....புண்ணியமா போகும்
100 வீதம் ஸ்டாலின் முடிவின்படியே வேட்பாளர்கள் ! தி.மு.க.,வில் பணம் படைத்தவர்களுக்கு 'ஜாக்பாட்
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய ஐந்து தொகுதிகள் போக, மீதமுள்ள, 35
தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று
வெளியிட்டார். இந்த வேட்பாளர்கள் பட்டியலில், பணம் படைத்தவர்களுக்கே இடம்
அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேட்பாளர்கள் பட்டியலில், 100க்கு, 100
சதவீதம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'கை' ஓங்கியுள்ளதால், இரண்டாம்
கட்டத் தலைவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்
35 தொகுதிகளுக்கு...:தமிழகம்
மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றின், தி.மு.க.,
கூட்டணியில் இடம் பெற்றுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம்
மற்றும் திருவள்ளூர் என, இரண்டு தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு,
மயிலாடுதுறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, வேலூர் தொகுதியும்,
புதிய தமிழகத்திற்கு, தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டன.இந்த ஐந்து
தொகுதிகள் போக, மீதமுள்ள, 35 தொகுதிகளுக்கான, வேட்பாளர்கள் பட்டியலை,
தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று வெளியிட்டார். திருஷ்டி சுத்தி போடணும். எல்லோரும் கோடி கோடியா சேத்து வச்சிருக்காங்க.
காங்., தனித்து விடப்பட்டதற்கு ஆசாத்தே காரணம்'ஆத்திரத்தில் TN Congress தலைவர்கள்
கூட்டணி எப்படியும் அமைந்துவிடும் என்று, கடைசி வரை, நம்பிக்கை
கொண்டிருந்த சூழ்நிலையில், தங்களை கழற்றி விட்டுவிட்டு, வேட்பாளர்
பட்டியலை, தி.மு.க., அறிவித்து விட்டதால், காங்., ஏமாற்றமும்,
அதிர்ச்சியும் அடைந்துஉள்ளது. கூட்டணி அமையாமல் போனதற்கு, குலாம்நபி
ஆசாத்தின், குளறுபடியான அணுகுமுறையே காரணம் என்றும் தெரியவந்துள்ளது உச்சகட்ட வேலைகள்:பொதுக்குழுவில்,
என்ன தான் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று, தி.மு.க., அறிவித்தாலும்,
கடைசி நேரத்தில், எப்படியும் சூழ்நிலைகள் மாறும் என்று,
எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலின் மட்டுமே, கடும் எதிர்ப்பு காட்டிக்
கொண்டிருந்தாரே தவிர, தி.மு.க.,வின், பிற அதிகார மையங்களில், காங்கிரசுடன்
இணக்கமான போக்கையே கடைபிடிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.பெரிதும்
எதிர்பார்த்த தே.மு.தி.க., பா.ஜ., அணிக்கு சென்றுவிட்ட நிலையில், காங்கிரசை
சேர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளில், தீவிரமாக இறங்கினர். கடந்த இரண்டு
நாட்களாக, இதற்கான உச்சகட்ட வேலைகள், இருதரப்பிலும், தீவிர மாக நடைபெற்று
வந்தன. ஆனால், நேற்று மதியம், தி.மு.க.,வோ, திட்டமிட்டபடி, வேட்பாளர்
பட்டியலையே அறிவித்துவிட்டது. இது, காங்கிரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி
உள்ளது.
திங்கள், 10 மார்ச், 2014
சுயமரியாதையை இழந்த கம்யுனிஸ்டுகள் தங்கள் கட்சிகளை கலைக்க வேண்டும் ?
மொழிவாரி மாநிலம் பிரிவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் மதராஸ் ராஜதானியில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவானது கம்யூனிஸ்ட் இயக்கம். 1964ம் ஆண்டு இடது வலது என்ற பிரிவினைக்கு பின்னாலும் கூட வலுவான இயக்கமாகவே இருந்து வந்தனர் இடதுசாரிகள்.
எந்த மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், முதலில் வீதிக்கு வருவது செங்கொடி இயக்கமே. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்று எப்போதும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே.
உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இயக்கங்களை கண்ட கம்யூனிஸ்டுகள் இன்று அதே தாராளமயமாக்கலால் நீர்த்துப் போய், தங்கள் விழுமியங்கள் அனைத்தையும் இழந்த நிற்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நிறுவுவது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு மாறி மாறி கூட்டணி வைத்து சோரம் போனதன் விளைவே, இன்று இவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.
மதவாத சக்திகளைத் தடுப்பது என்ற ஒற்றைக் முழக்கத்தை வைத்துக் கொண்டு, கூச்சமே இல்லாமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
டாக்டர் முத்துலட்சுமி: பத்திரிகைகளின் ‘தந்திரம்
வே.மதிமாறன்
பல நூற்றாண்டுகளாக பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை எதிர்த்து போராடி அதை ஒழித்துக் கட்டியவர் டாக்டர் முத்துலட்சுமி.
அப்போது தேவதாசி முறையை ஆதரித்தும் டாக்டர்
முத்துலட்சுமி அம்மையா் கொண்டு வந்த மசோதாவை எதிர்த்தும் காங்கிரஸ்காரரான
சத்தியமூர்த்தி அய்யர்,
”மனித குலம் தோன்றியது நம்முடைய காலத்தில்
அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு
வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக்கிறது.
இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான்
கவலைப்படப் போவதில்லை. தாசிகளை ஒழித்தால் பரத நாட்டியக் கலை
அழிந்துவிடும்.“ என்றார்.
அப்படியானால், இனி அந்த புனிதமான வேலையை
உங்கள் சமூகப் பெண்களை வைத்துக் செய்துகொள்ளுங்கள் என்று பணிவோடு பதிலடி
கொடுத்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
அம்மாவின் சொல்படி தாபா கட்சி தனித்து போட்டி ! வேற வழி ?
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று சென்னை
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதன்
பொதுச்செயலாளரான சுதாகர் ரெட்டியின் தலைமையில் நடைபெற்றது. அப்போது
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது எனவும் ஒரு சில தொகுதிகளில்
திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சி
தமிழக தலைவரான தா.பாண்டியன் தெரிவித்தார்.
தாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு
எதிராக செயல்படும் கட்சிக்கு வாக்களிக்க உள்ளதாகவும் தா.பாண்டியன்
கூறினார்.maalaimalar.com
நெப்போலியன் கேள்வி: என்ன குற்றம் செய்தார் அழகிரி ?
நெப்போலியன் கேள்வி என்ன குற்றம் செய்தார் அழகிரி ?
இன்னுமா புரியல்ல சாமி ?
ஸ்டாலின் தலைமையில் திமுகவும் இன்னொரு அதிமுகவாகி கொண்டுவருகிறது . அங்கு அம்மா இங்கு தளபதி. திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சுயமரியாதை சமுக நீதி பற்றிய எந்த கொள்ளகை விளக்கும் கிடையாது . வெறும் ஜால்ராக்களை வைத்து கொண்டு ஏஜென்சி நடத்துவதற்குதான் லாயக்கு.
இன்னுமா புரியல்ல சாமி ?
ஸ்டாலின் தலைமையில் திமுகவும் இன்னொரு அதிமுகவாகி கொண்டுவருகிறது . அங்கு அம்மா இங்கு தளபதி. திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சுயமரியாதை சமுக நீதி பற்றிய எந்த கொள்ளகை விளக்கும் கிடையாது . வெறும் ஜால்ராக்களை வைத்து கொண்டு ஏஜென்சி நடத்துவதற்குதான் லாயக்கு.
அழகிரி: ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே புதிய கட்சி முடிவு
மு.க.அழகிரி. | கோப்புப் படம்
ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை, பம்மலில் உள்ள பம்மல் நல்லதம்பியை சந்திக்க அவரது வீட்டிற்குச்
சென்றார் மு.க.அழகிரி. உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள நல்லதம்பியை சந்தித்து
நலம் விசாரித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி அவர்களது
பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
குறிப்பாக, மீண்டும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி உருவாகும் சூழ்நிலை
நிலவுவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் இப்போது தி.மு.க.வில்
இல்லை என்றார் அழகிரி. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு
எதிராக நிச்சயமாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய கட்சி தொடங்கவேண்டும் என தொண்டர்கள் ஆர்வம் காட்டினாலும்,
ஆதரவாளர்களுடன் தீர ஆலோசித்துவிட்டு 2 மாதங்களுக்குப் பின்னரே முடிவு
எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். tamil.thehindu.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







