சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து
புதுமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர்
சங்கம்' பாக்ஸ் ஆபீஸ் திரைப்படமாக நூறு நாட்களைக் கடந்துள்ளது.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் தயாரிப்பில்
வெளிவந்த இந்தப் படம் ஒரு முழு நீள காமெடி திரைச்சித்திரம் ஆகும். இந்தப்
படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் நடிகர் சிவகார்த்திகேயனின் திரை
வாழ்விலும் புதிய உயரத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் நூறாவது நாள் குறித்து தனது மகிழ்ச்சியை இணையதளத்தில்
வெளிப்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இதில் நடித்த நடிகர்,
நடிகைகள் அனைவருக்கும் மற்றும் திரைத்துறை குழுவினருக்கும் தனது நன்றியைத்
தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 6-ம்தேதி திரையிடப்பட்ட இந்தப் படம் தொடர்ந்து
அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. 'கேடி பில்லா கில்லாடி
ரங்கா' மற்றும் 'எதிர் நீச்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'வருத்தப்படாத
வாலிபர் சங்கம். நடிகர் சிவகார்த்திகேயனின் மூன்றாவது வெற்றிப்படமாகும்.
சனி, 14 டிசம்பர், 2013
ஏ.ஏ.ராஜ் ! காணாமல் போய்விட்ட ஒரு உன்னத இசையமைப்பாளர் ! ஒரு தலைராகத்தின் நிஜமான இசையமைப்பாளர்
ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது. ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம். பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது. ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை
ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ் அதன்பின் இரண்டு படங்களுக்கு இசையமைத்தார். ரஞ்சித் என்பவர் இயக்கத்தில் 1981ல் வெளிவந்த உதயமாகிறது என்ற படம் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெளியாகவேயில்லை. ஆகவே இசை எவராலும் கவனிக்கப்படவில்லை. நாங்கள் அன்று அப்படத்தைக் கேள்விப்படவேயில்லை.
ஒருதலைராகம் படத்தை தயாரித்த மன்சூர் புரடக்ஷன்ஸின் இ.எம்.இப்ராகீம் தயாரித்து இயக்கிய தணியாத தாகம் என்றபடத்திற்கு ராஜ் அதன் பின் இசையமைத்தார். அந்த இரண்டு வருடங்களுக்குள் ராஜேந்தர் அவரது அதிரடிகள் வழியாக பெரும்புகழ் பெற்றுவிட்டிருந்தார். அவர் இசையமைத்து இயக்கி வெளிவந்த ரயில் பயணங்களில் ஒருதலைராகத்தையே கொச்சையான ஜனரஞ்சகத்தன்மையுடன் எடுத்தது போல இருந்தது. அது பெருவெற்றி பெற்றிருந்தது.
தணியாத தாகம் இரண்டுவருடம் தயாரிப்பில் கிடந்தது. பெரும் பொருளாதார நெருக்கடிகளுடன் கோர்வையில்லாமல் எடுக்கப்பட்டது. ஈ.எம்.இப்ராகீம் இதை இயக்கியதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் ஒளிப்பதிவாளரும் கதாசிரியரும் சேர்ந்துதான் இதை இயக்கியிருந்தனர். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=s0L6OK-MQy0
[பூவே நீ யார்சொல்லி]
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OvahUM0qTkQ
ப.சிதம்பரம் :லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை் கிடைக்காது.!
மும்பை: லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மையும் கிடைக்காது..அப்படி
அமையும் ஆட்சியும் நிலையாக இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர்
ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய சிதம்பரம். நாம்
தேர்தலுக்காக காத்திருக்கிறோம். லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்கும் என்று என்னால் நிச்சயமாகக்கூற முடியவில்லை.
அதேபோல் நிலையான ஆட்சியும் அமைந்துவிடாது.
இந்திய ஜனநாயகம், சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.நமது அரசு
நிர்வாகத்துக்கு, சில அமைப்புகளிள் எல்லை மீறுதல் முட்டுக்கட்டையாக
அமைந்துள்ளது. நாடாளுமன்றமே கிட்டத்தட்ட முழுமையாக முடங்கிப்போகிறது.
நமது பிரச்சினைகளுக்கு நீதித்துறை மூலமாக தீர்வு கண்டுவிட முடியும் என்று
தவறான, கவர்ச்சிகரமான கருத்து நிலவுகிறது.
அரசாங்கத்தின் மூன்று கிளைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது
அவசியமான முன்நிபந்தனை. நாம் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுதந்திர இந்திய
வரலாற்றின் மிக மோசமான முனையில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் அதில்
இருந்து கடந்து வர வேண்டும் என்றார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்த அ.இ.முஸ்லிம் முன்னேற்ற கழகம்
தமிழகத்தில் முதல் முறையாக பாரதீய ஜனதாவுடன், முஸ்லிம்
கட்சியான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கூட்டணி சேர்ந்துள்ளது.
பாராளுமன்ற
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில்
பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள்
நடந்து வருகின்றன.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்
இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.
சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில்
சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில்
சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில்
அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. இந்த கட்சியின்
தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு
கடிதத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள்
இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன்,
செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நடிகர்திலகம் வைகோவும் டபுள் ஸ்ரீ காபரெட் சாமியும் கருத்து பறிமாற்றம் !சீக்கிரம் தமிழ்நாடு அமெரிக்கவாகிடும்
மதுரை: வாழும் கலை அமைப்பின் தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜியை
மதுரையில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
ம.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை பசுமலையில் தங்கியிருந்த பண்டிட் ரவிசங்கர் குருஜியை இன்று வைகோ காலை
9.30 மணிக்கு சந்தித்து, அவருக்கு பூங்கொத்து வழங்கினார். பண்டிட்
ரவிசங்கர் குருஜி வைகோவுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இருவரும் 45
நிமிடம் தனிமையில் நாட்டு நிலைமைகள் குறித்தும், ஈழத் தமிழர்கள் குறித்தும்
கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பண்டிட் ரவிசங்கர் குருஜியுடன் வைகோ சந்திப்பு
வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து
மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத்துதல்,
நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை தருதல், உடல் நலம் காக்க மூச்சு பயிற்சி
கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவச பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய
சேவை செய்து வருகிறது. அடேங்கப்பா பில்ட் அப் ? நாட்டு நிலைமை மற்றும் ஈழத்தமிழர்களை பத்தியெல்லாம் டபுள் ஸ்ரீ யும் வைகோவும் பேசினாங்களாம் ?
Congress: ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகளை ஆராய்ந்து பதில் அளிக்கப்படும்
டெல்லி துணை நிலை
ஆளுநரை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால், தங்களது கட்சியின் நிலைபாடுகளை எடுத்துரைத்தார். மேலும் 10 நாள் அவகாசம் கேட்டதாக செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். மேலும் டெல்லியில் உள்ள பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனைகளை ஆராய்ந்து பதில் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது டெல்லி அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரவிந்த கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக் கூறுகிறது. ஆனால் நான் நிபந்தனை விடுக்கிறேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி ஆக்கப்பூர்வமான ஆதரவு தருவதாகக் கூறியுள்ளது. என் கடிதத்திற்கு பாஜகவின் பதில் என்ன. இரு கட்சிகளும் அனுப்பும் பதில்களை மக்கள் முன் வைப்பேன். ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை ஆம் ஆத்மி கட்சி செய்யும் என்றார்
இளையராஜா: புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன்
சென்னை: புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை.
புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன், என்று இளையராஜா பேசினார்.
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும்
படம் 'ஒரு ஊர்ல'.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேபில் நடந்தது.
பொதுவாக தான் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டுக்களுக்கு கூட போகாத
இசைஞானி இளையராஜா, முற்றிலும் புதியவர்கள் உருவாக்கியுள்ள இந்தப் பட இசை
விழாவுக்கு வந்திருந்தார்.
புதியவர்களே, வாருங்கள்... நான் இருக்கிறேன்! - இளையராஜா
விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் பேசுகையில், "என்னை
தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். என்று சொல்வதை விட இளையராஜா அவர்களின்
ரசிகன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை. அவரால் உருவாக்கப்பட்ட
இயக்குநர்கள் ஏராளம்.
தமிழ் சினிமாவில் நிறைய தயாரிப்பாளர்கள் நிறைய முதலீட்டில் படங்கள்
தயாரிக்கின்றனர். ஆனால் போட்ட பணத்தை எப்படி திருப்பி எடுப்பது என்பது
யாருக்கும் புரிய வில்லை.
சபரிமலையில் பக்தர்கள் 19 பேர் நெஞ்சுவலி காரணமாக மரணம் ! நம்பியோர் கெதி இப்படியாப்பா?
திருவனந்தபுரம், டிச.13- கேரளாவில் உள்ள
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநி லங்களில்
இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கி றார்கள். இவர்களில்
பெரும்பாலானவர்கள் பம்பையில் இருந்து நடந்தே சபரிமலை செல் வது வழக்கம்.
அவ்வாறு போகும்போது மலை யில் ஏறும்போது ஏற்படும் ரத்த அழுத்தம்
காரணமாகவும் உடல் நலக்குறைவு ஏற்படுவது வழக்கம். அவர்களுக்கு சிகிச்சை
அளிக்க பெருவழி நடை பாதை முழுவதும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள்
அமைக்கப்பட்டு நோய் வாய்ப்படும் பக்தர்களுக்கு உடனே முதல்உதவி சிகிச்சை
அளிக்கப்பட்டு அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி
வைக்கப்படுவார்கள்.
இம்முறை சபரி மலையில் கோவில் நடை திறந்த
பின்பு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் அய்யப்பன் கோவிலுக்கு வந்த வண்ணம்
உள்ள னர். ஆனால் எப்போதும் இருப்பதை விட இம் முறை கேரளாவில் பருவ மழையும்,
குளிரும் நில வியதால் பக்தர்கள் பல ரும் பாதிக்கப்பட்டனர்.
போலீசாருக்கு சலுகைகள் ! 312 அறிவிப்புகள் போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் மாநாட்டில் ஜெயலலிதா
புதிய அறிவிப்புகள்
இந்த 3 நாட்கள் மாநாட்டிலும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முழுமையாக கலந்து கொண்டு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாநாட்டின் நிறைவையொட்டி மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக 312 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கூடுதல் அதிகாரம்
சென்னை போலீஸ் துணை கமிஷனருக்கு இருக்கும் அதிகாரம் போல், குற்ற விசாரணை முறைச்சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 107, 108, 110 ஆகிய பிரிவுகளின்படி, அனைத்து நகர துணை கமிஷனர்களுக்கும் மாஜிஸ்திரேட்டு அதிகாரம் அளிக்கப்படும். ஜெயாவின் கட்சியும் சரி ஆட்சியும் சரி போலீசு மயம்தான் அது ஏன் ? மக்களைபார்த்து பயம்!
Jeyamohan: ஒருதலைராகம்! தமிழ் சினிமாவின் புதிய அலையை திறந்த ராபர்ட் ராஜசேகர் !அதை மூழ்கடித்த ராஜேந்தர்
1955 இல் வெளிவந்த பதேர் பாஞ்சாலி இந்தியாவில் கலைப்பட இயக்கத்தை ஆரம்பித்துவைத்தது. [கலைப்படம் என்ற சொல்லாட்சியை பின்னாளில் மாற்றுத்திரைப்படம் என்று மாற்றிக்கொண்டார்கள். ஆனால் எனக்கு முதல் சொல்லில்தான் அவ்வியக்கத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது என்று படுகிறது] அதன்பின் இந்தியாவில் வங்கம், இந்தி,மராத்தி, கன்னடம், மலையாள மொழிகளில் அவ்வியக்கம் இருபத்தைந்தாண்டுக்காலம் நீடித்து இந்தியா பெருமைகொள்ளும் படைப்புகளை அளித்தது.
இந்திய திரைவரலாற்றில் சத்யஜித் ரே முதல் ரிதுபர்ணோ கோஷ் வரையிலான வங்காள திரைமேதைகளின் இடம் மிகமுக்கியமானது. நாம் இந்திய சினிமா என உலகை நோக்கி முன்வைக்கவேண்டிய படைப்புகளை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.
தனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம் பறிபோகும் அபாயம்
அரசு ஆவணங்களை, தனியார் மூலம், கணினி மயமாக்கும் திட்டத்தால், அரசின்
முக்கியமான ரகசிய தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசின், அனைத்து துறைகளின் அன்றாட செயல்பாடு மற்றும் திட்டங்களை கணினி மயமாக்கும், மின் ஆளுமை திட்டம், தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. பாதுகாப்பில் எந்த பிரச்னையும் கிடையாது. இவைகளை பின்பற்றினால் : 1. Data Encryption / தகவல் மறையாக்கம், அது நிச்சயம் மென்பொருள் வல்லுனர்கள் செய்திருப்பார்கள்/செய்வார்கள் 2. அரசு ஊழியர்களை அந்த வேலையில் இருந்து முடிந்தவரை தவிர்ப்பது. 3. தனியாரிடம் இருந்து பணிக்கு வரும் நபர்களின் அலைபேசி, வெளி தொடர்பு சாதனங்கள், கேமரா, Data Cards - இவைகளை உள்ளே அனுமதிக்க கூடாது. லாக்கரில் பூட்டி வைத்து டோக்கன் கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு செல்லும் பொது, டோக்கனை பெற்று சாதனங்களை திரும்ப கொடுக்க வேண்டும். 3. பனி செய்யும் இடத்தில், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் வேலை செய்யும் அளவிற்கு ஒவ்வொருவரின் Cubicle அமைக்க படவேண்டும். 4. பனி செய்யும் ஒருவருக்கு இன்றைக்கு செய்த பனி, நாளைக்கு தொடர கூடாது. Shuffle செய்ய வேண்டும். 5. ஒவ்வொரு கணினியிலும் Local Storage கூடாது. Thin Client Server Storage Concept பின்பற்ற வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு தான். 6. 5 நாட்கள் இறுதியில் Cloud Storage யில் தகவல்களை சேமிக்கவேண்டும். 6. கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு cubicle க்கு இருந்தால் மிக நல்லது. 7. பணியாளர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், நிச்சயம் வாக்காளர் அட்டை வைத்திருக்க வேண்டும். \\\\ மின் ஆளுமை திட்டம் என்பது நிச்சயம் தேவை. அப்போது தான் ஆவணங்கள், தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும், எத்தனை வருடம் ஆனாலும் கிடைக்கும் எதையும் எரிக்க முடியாது.
தமிழக அரசின், அனைத்து துறைகளின் அன்றாட செயல்பாடு மற்றும் திட்டங்களை கணினி மயமாக்கும், மின் ஆளுமை திட்டம், தீவிரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. பாதுகாப்பில் எந்த பிரச்னையும் கிடையாது. இவைகளை பின்பற்றினால் : 1. Data Encryption / தகவல் மறையாக்கம், அது நிச்சயம் மென்பொருள் வல்லுனர்கள் செய்திருப்பார்கள்/செய்வார்கள் 2. அரசு ஊழியர்களை அந்த வேலையில் இருந்து முடிந்தவரை தவிர்ப்பது. 3. தனியாரிடம் இருந்து பணிக்கு வரும் நபர்களின் அலைபேசி, வெளி தொடர்பு சாதனங்கள், கேமரா, Data Cards - இவைகளை உள்ளே அனுமதிக்க கூடாது. லாக்கரில் பூட்டி வைத்து டோக்கன் கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு செல்லும் பொது, டோக்கனை பெற்று சாதனங்களை திரும்ப கொடுக்க வேண்டும். 3. பனி செய்யும் இடத்தில், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் வேலை செய்யும் அளவிற்கு ஒவ்வொருவரின் Cubicle அமைக்க படவேண்டும். 4. பனி செய்யும் ஒருவருக்கு இன்றைக்கு செய்த பனி, நாளைக்கு தொடர கூடாது. Shuffle செய்ய வேண்டும். 5. ஒவ்வொரு கணினியிலும் Local Storage கூடாது. Thin Client Server Storage Concept பின்பற்ற வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு தான். 6. 5 நாட்கள் இறுதியில் Cloud Storage யில் தகவல்களை சேமிக்கவேண்டும். 6. கண்காணிப்பு கேமரா ஒவ்வொரு cubicle க்கு இருந்தால் மிக நல்லது. 7. பணியாளர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், நிச்சயம் வாக்காளர் அட்டை வைத்திருக்க வேண்டும். \\\\ மின் ஆளுமை திட்டம் என்பது நிச்சயம் தேவை. அப்போது தான் ஆவணங்கள், தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கும், எத்தனை வருடம் ஆனாலும் கிடைக்கும் எதையும் எரிக்க முடியாது.
நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கடிதம் ! அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கிறார் ?
70
உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 36 உறுப்பினர்களை கொண்ட கட்சி மட்டுமே
குறைந்தபட்ச மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியும். போட்டியிட்ட
கட்சிகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு ஆட்சி
அமைப்பத்தில் இழுபறி நிலை நடந்து வருகின்றது.
அதிக
இடங்களை கைப்பற்றிய கட்சி அடிப்படையில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை
நடத்துவதற்கு வருமாறு பா.ஜனதா கட்சிக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங்க்
அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று ஆளுனரை சந்தித்த பா.ஜனதாவின்
முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ்வர்தன், தங்களுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் பலம்
இல்லாததால் ஆட்சியமைக்க இயலாது என கூறினார்.
இதை
தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 2வது பெரிய கட்சியான
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சி அமைப்பது தொடர்பாக
ஆலோசனை நடத்தவருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.ஆட்சி அமைக்கிறார்
நக்சல்கொள்கையை பின்பற்றுகிறது ஆம்ஆத்மி ! சு. சாமி
மும்பை: ஆம் ஆத்மி, நக்சல் கொள்கைகளை பின்பற்றி வருவதாக பா.ஜ.,தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கைகள் என்பது இல்லை. அவர்கள் நக்சல் இயக்க சித்தாந்தங்களை பின்பற்றுகின்றனர். இந்த கொள்கையினால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது. ஆம் ஆத்மி கட்சி சிறிது காலமே இயங்க முடியும்.நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்காது
மேலும் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க போவதாக கூறிவருகிறார். இதுமக்களை ஏமாற்றும் செயல். ஏழை மற்றும் நடுத்தர மக்களை வசியப்படுத்தி அதன் மூலம் தன்னுடை இமேஜை உயர்த்திக் கொண்டு்ள்ளார். அவர் ஒரு போதும் ஊழலை ஒழிக்கப் போவதில்லை. அகில உலகத்திலும்,நேர்மையானவர், அப்பழுக்கற்றவர், பொய்யே சொல்லாதவர், முற்றிலுமாக அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் ஒருவர் உண்டு என்றால் அது திரு.சுப்ரமணிய சாமிதான்.
மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கைகள் என்பது இல்லை. அவர்கள் நக்சல் இயக்க சித்தாந்தங்களை பின்பற்றுகின்றனர். இந்த கொள்கையினால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது. ஆம் ஆத்மி கட்சி சிறிது காலமே இயங்க முடியும்.நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்காது
மேலும் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க போவதாக கூறிவருகிறார். இதுமக்களை ஏமாற்றும் செயல். ஏழை மற்றும் நடுத்தர மக்களை வசியப்படுத்தி அதன் மூலம் தன்னுடை இமேஜை உயர்த்திக் கொண்டு்ள்ளார். அவர் ஒரு போதும் ஊழலை ஒழிக்கப் போவதில்லை. அகில உலகத்திலும்,நேர்மையானவர், அப்பழுக்கற்றவர், பொய்யே சொல்லாதவர், முற்றிலுமாக அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுபவர் ஒருவர் உண்டு என்றால் அது திரு.சுப்ரமணிய சாமிதான்.
மணல் ரூ.2,500க்கு வாங்கி ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை ! மக்களை ஏமாற்றுகின்றனரா லாரி உரிமையாளர்கள்?
பொதுப்பணித் துறையின் நேரடி விற்பனையில், இரண்டு யூனிட், 2,500 ரூபாய்க்கு கொடுக்கப்படும் மணலை, லாரி உரிமையாளர்கள், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், அரசின் நேரடி விற்பனையின் பயன், மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்னை, "யார்டு' ஒப்பந்ததாரர்கள் முறைகேடு போன்ற காரணங்களால், தமிழகம் முழுவதும், 45க்கும் மேற்பட்ட அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. தட்டுப்பாடு காரணமாக, இரண்டரை யூனிட் மணல் வாங்க, 22 ஆயிரம் ரூபாய் வரை, பொதுமக்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பழையசீவரம், கள்ளபிரான்புரம் உள்ளிட்ட இடங்களில், அரசு மணல் குவாரிகளில், "யார்டு' நடத்த அனுமதி வாங்கியவர்கள், குவாரிகளில், அளவுக்கதிகமாக மணல் எடுப்பது, கூடுதல் விலைக்கு விற்பது என, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானது. அம்மா ஆட்சியில் பண புழக்கம் நன்றாக உள்ளது.. இனியும் நாம் பிச்சைகாரர்கள் போல் நடிப்பதில் அர்த்தம் கிடையாது...மாதம் லட்ச லட்சமாய் சம்பாதிக்கிறார்கள் ..Rs.25,000 என்பது பெரிய விஷயமா ?
வெள்ளி, 13 டிசம்பர், 2013
நடிகை சோனாவிடம் ஒரு வெங்கட் பிரபு ஒரு கோடி! சோனா முறையீடு
நடிகை சோனா இயக்குநர் வெங்கட்பிரபு மீது புகார்<
இயக்குநர் வெங்கட்பிரபு மீது நடிகர் சங்கத்தில் நடிகை சோனா புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில்,
‘’வெங்கட்பிரபு ‘கோவா’ படத்தை டைரக்டு செய்த போது அவரை அணுகி எனக்கொரு
படம் இயக்கித் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதித்தார். ‘கோவா’
படம் ரிலீசானதும் நான் தயாரிக்கும் படத்தை டைரக்டு செய்ய முடிவானது.
இதற்காக அவருக்கு ரூ. 1½ கோடி பணம் கொடுத்தேன். ஆனால் உறுதி அளித்தபடி என்
படத்தை அவர் டைரக்டு செய்யவில்லை.
வேறு
படம் எடுக்க போய் விட்டார். அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட போது
தரவில்லை. பல வருடங்களாக பணத்தை கேட்டு வருகிறேன். இதுவரையிலும் அவர்
தரவில்லை. வெங்கட் பிரபு தற்போது ‘பிரியாணி’ படத்தை இயக்கி உள்ளார். அந்த
படம் ரிலீசுக்கு முன் எனக்கு தர வேண்டிய பணத்தை வாங்கி தரும்படி கேட்டுக்
கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார். <
இதுகுறித்து
நடிகர் சங்கம் விசாரணை நடத்தியது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி
தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சரியா கை தட்டலையாம்.. மரண தண்டனை! வடகொரிய கிம் ஜாங் பதவியேற்பில் மாமா கை தட்டலை
சியோல்: ராணுவ புரட்சிக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்
பட்டு, வட கொரிய அதிபரின் உறவினரான முன்னாள் ராணுவ துணை தளபதிக்கு மரண
தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக உலக நாடுகளிடமிருந்து தொடர்ந்து
குற்றச்சாட்டுகளை வாங்கியபடி இருக்கிறது கொரியா. ஆனபோதும், அது தனது கடமையே
கண்ணாக தொடர்ந்து செயலாற்றிக் கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில், தற்போது வட கொரியா அதிபர் கிம்ஜாங்யுன்னின் தந்தை வழி
அத்தையின் கணவரும், வட கொரியாவின் ராணுவத் துணை தளபதியாகவும் பணியாற்றிய
ஜங்சாங்தயக் (67க்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது,
வடகொரிய கிம் ஜாங் பதவியேற்பில் மாமா சரியா கை தட்டலையாம்.. மரண தண்டனை!
அதிபருக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் அதிகாரம்மிக்கவராக செயல்பட்டவர்
ஜங்சாங். இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங்யுன்னிடம் இருந்து
ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப் பட்டார். அதிமுக mla மற்றும் ஆதரவாளர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் . அம்மா பேசறப்போ சரியா கைதட்டுங்க
லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின்
கால்நடை
தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ், 5
ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராஞ்சி றையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர்
ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். ஜாமீன் நிபந்தனைகளை விசாரணை நீதிமன்றமே
முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் கூறியது
ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ.க- ம.தி.மு.க. கூட்டணி உறுதி
டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை
டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் பாஜக-மதிமுக
கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு அனைத்துக்
கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் இந்த முறை அதே கூட்டணி
அமைக்குமா? அல்லது கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நான்கு தேர்தலில் பாரதீய ஜனதா பெற்றுள்ள இமாலய வெற்றியும் பல
அரசியல் கட்சிகளை யோசிக்கச் செய்துள்ளது. தமிழ் நாட்டிலும் பாரதீய ஜனதா
முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி
உள்ளது.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை
தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம்
தெரிகிறது என்று நான்கு மாநில தேர்தல் வெற்றி குறித்த அறிக்கையில் கூறி
இருந்தார்.
நான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: விஜயகாந்த்
சென்னை: தேமுதிகவில் தாம் எடுப்பதே முடிவு.. பிடிக்காதவர்கள்கட்சியைவிட்டு போகலாம் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். தேமுதிகவில் இருந்து அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிய நிலையில், அக்கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்பாக விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. ஆனால் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோர் பண்ருட்டி ராமச்சந்திரனை பற்றி மிகவும் விமர்சித்துப் பேசியிருக்கின்றனர். என்னை நம்பியே கட்சி.. நான் எடுக்கிறதே முடிவு.. பிடிக்கலையா போகலாம்..: விஜயகாந்த் பின்னர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், லோக்சபா தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே மகத்தான வெற்றிபெறும். தேமுதிகவில் இருந்து யார் போனாலும், எனக்குக் கவலை இல்லை. என்னை நம்பியே கட்சியைத் தொடங்கினேன். மக்களும் எனக்காகத்தான் வாக்களிக்கின்றனர். போகிறவர்கள் போகலாம்: கட்சி தொடர்பாக நான் எடுப்பதுதான் முடிவு. இதைப் பிடிக்காதவர்கள் கட்சியில் இருந்து போவதாக இருந்தால் போகலாம் என்றார்.
tamil.oneindia.in
அமெரிக்காவில் விசா மோசடி: கைதான இந்திய துணைத்தூதர் தேவயாணி ! குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் விசா மோசடி: கைதான இந்திய துணைத்தூதர் தேவயாணி ஜாமீனில்
விடுதலை
வாஷிங்டன்: விசா மோசடியில் கைதான அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர்
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கோப்ரகேட்டை, தனது வீட்டில்
வேலை செய்யும் பெண்ணிற்கு விசா பெறுவதற்காக போலியான ஆவணங்களை
சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
புகாரையடுத்து, தேவயாணி கோப்ரகேட்டை மீது விசா மோசடி, போலி ஆவணங்கள்
தயாரித்தல் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது
செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத்
தொடர்ந்து ரூ.15 லட்சம் பிணைத் தொகை விதித்து அவருக்கு ஜாமீன்
அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதர் தேவயாணி கோப்ரகோட்டை மீதான குற்றச்சாட்டு
நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
Kamal : கேட்கப்படும் சினிமா புரிகிறதென்றால் அது நல்ல சினிமா அல்ல! நம்மால் ஏன் உலக சினிமாவில் கலக்க முடியவில்லை?
ஒலி ஓசைகளால் நிரப்படுவது அல்ல சினிமா. ஷேக்ஸ்பியர் இப்போது வந்தாலும் தற்போது சினிமா சூழலுக்கு ஏற்ப திரைக்கதை அமைக்க கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.
பாலுமகேந்திரா: கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் எடுத்து அனுப்பப்படும் படங்களை இங்கே வாயைப் பிளந்து பார்க்கிறோம். நம் படங்களை அவர்கள் வாயைப் பிளந்து பார்ப்பது எப்போது? "பதேர் பஞ்சாலி' இன்னும் சர்வதேச அளவில் இடம் பிடித்திருக்கிறது; தமிழர்களாகிய நம்மால் ஏன் உலக சினிமாவில் கலக்க முடியவில்லை?
சென்னையில் 11-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை வியாழக்கிழமை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். விழாவின் ஒரு பகுதியாக இயக்குநர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்தார்.
ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முயற்சி ! உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகுதி கேள்விகுறி ?
புதுடெல்லி: ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க மத்திய அரசு முயற்சி
மேற்கொண்டுள்ளது. ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று உச்ச நீதிமன்றம்
நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்புக்கு கட்சிகளும், சினிமா பிரபலங்களும்,
விஐபி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி மத்திய சட்ட அமைச்சர்
கபில் சிபல் நேற்று கூறுகையில், ‘’டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பையே
செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.
ஓரினச்சேர்க்கையை குற்றமற்றது என நிச்சயம் மாற்றப்படும்’’ என்றார்.
வங்கதேசம் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார் ! ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான
50 லட்சம் லஞ்சம் கையும் களவுமாக பிடிபட்ட ADMK எம்.பி.க்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பொள்ளாச்சி சுகுமார் !
The website alleges that it has MPs from Congress, BJP, BSP, Janata Dal
United (JD-U) and AIADMK on videotape, willing to write letters of
recommendation for a fictitious Australian oil and gas exploration
company for cash payment ranging from Rs. 50,000 to Rs. 50 lakh. Six of these MPs, Cobrapost alleges, even wrote the letters for a fee.புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களில் கச்சா எண்ணெய் எடுக்க பரிந்துரை
செய்து சிபாரிசு கடிதம் அளிக்க ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 50 லட்சம் வரை
லஞ்சம் கேட்டு அதிர வைத்துள்ளனர் நமது எம்.பி.,க்கள்.
சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பெரும் வெற்றிக்கு தலைநகரில் பரவியிருக்கும் லஞ்ச லாவண்யமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ள மனமில்லாமல், தொடர்ந்து தமது பணிகளில் (!) கண்ணும் கருத்துமாக பணியாற்றி வருகின்றனர் நமது எம்.பி.,க்கள். கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணையதளம் நமது எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக போலியான எண்ணெய் நிறுவனம் ஒன்றின் பெயரில், வடகிழக்கு மாநிலங்களில் கச்சா எண்ணெய் எடுக்க பெட்ரோலியத்துறைக்கு சிபாரிசு செய்யும்படி சில லோக்சபா எம்.பி.,க்களை அணுகியுள்ளனர். "ஆபரேஷன் பால்கன் கிளா" என பெயரிடப்பட்ட இந்த செயல்பாட்டில், சில எம்.பி.,க்கள் கடிதம் தர மட்டுமல்லாது, அந்த கம்பெனிக்காக பெட்ரோலியத்துறையில் லாபி செய்யவும் தனியாக பேமென்ட் பேசி அதிர வைத்துள்ளதாக தெரிவிக்கிறது கோப்ரா போஸ்ட். இல்லாத நிறுவனத்திற்கு சிபார்சு அதற்கும் லஞ்சம் தலைமை எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே
சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பெரும் வெற்றிக்கு தலைநகரில் பரவியிருக்கும் லஞ்ச லாவண்யமே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ள மனமில்லாமல், தொடர்ந்து தமது பணிகளில் (!) கண்ணும் கருத்துமாக பணியாற்றி வருகின்றனர் நமது எம்.பி.,க்கள். கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இணையதளம் நமது எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக போலியான எண்ணெய் நிறுவனம் ஒன்றின் பெயரில், வடகிழக்கு மாநிலங்களில் கச்சா எண்ணெய் எடுக்க பெட்ரோலியத்துறைக்கு சிபாரிசு செய்யும்படி சில லோக்சபா எம்.பி.,க்களை அணுகியுள்ளனர். "ஆபரேஷன் பால்கன் கிளா" என பெயரிடப்பட்ட இந்த செயல்பாட்டில், சில எம்.பி.,க்கள் கடிதம் தர மட்டுமல்லாது, அந்த கம்பெனிக்காக பெட்ரோலியத்துறையில் லாபி செய்யவும் தனியாக பேமென்ட் பேசி அதிர வைத்துள்ளதாக தெரிவிக்கிறது கோப்ரா போஸ்ட். இல்லாத நிறுவனத்திற்கு சிபார்சு அதற்கும் லஞ்சம் தலைமை எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே
வியாழன், 12 டிசம்பர், 2013
தமிழ் TV சீரியல்களை டப்பிங் சீரியல்கள் ஓவர்டேக் செய்தது எப்படி ?
தமிழ் மெகா சீரியல்களை மாய்ந்து மாய்ந்துப் பார்த்த, அழுதும்
புலம்பியும் பார்த்த பெண்கள் இப்போது டப்பிங் மெகா சீரியல்களை விரும்பிப்
பார்க்கத் தொடங்கியதன் காரணங்கள்தான் என்ன?
90களில் நாடகங்கள் தொடர்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.
90களில் நாடகங்கள் தொடர்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













