சனி, 28 ஏப்ரல், 2012

பிரபல நடிகர்விக்னேஷ். ரூ 20 கோடி நில மோசடி

Vignesh ரூ 20 கோடி நில மோசடி: உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்ததாக சான்றிதழ் வாங்கிய பிரபல நடிகர்!

 
சென்னை: ரூ 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க, உயிரோடு இருக்கும் 85 வயது மூதாட்டியை இறந்துவிட்டதாக சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார் நடிகர் விக்னேஷ்.
சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள் (85). இவருக்கு கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் உள்ளது. அதன் இன்றைய சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய். வீரம்மாளுக்கு சின்னத்தம்பி என்ற மகன் இருந்தார். அவர் இறந்து விட்டார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது

Nithyanandaமீனாட்சி அம்மன் கோயிலை மதுரை ஆதீனத்துக்குள் கொண்டு வருவார் நித்யானந்தா! - மதுரை ஆதீனம்

மதுரை: இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மதுரை ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார், என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், மதுரை ஆதீனம் பட்டம் சூட்டினார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள், வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பந்தா பரமசிவம் படத்தின் Hindi ரீமேக் ஹவுஸ்புல் 2 House full

இந்தியில் 100 கோடி! தமிழில் 2 கோடி!தமிழில் ரிலீஸாகி சரவெடி வெடித்த படங்கள், ஒரு சில சமயங்களில் இந்தியில் ரிலீஸாகும் போது புஸ்வானம் ஆகிவிடுகின்றன.தற்போது இந்தியில் ரிலீஸாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் “ஹவுஸ்புல் 2”. 
இந்த படம் ரிலீஸான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாம். இதற்கும் தமிழ் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்றால், இந்த படம் 2003ல் தமிழில் வெளியான “பந்தா பரமசிவம்” என்ற படத்தின் ரீமேக் என்கிறார்கள். பந்தா பரமசிவம் ஒரு காமெடி படம். பந்தாபரமசிவம் படத்தின் பட்ஜெட் 2 கோடி ரூபாய் தான். அந்த படத்தை இந்தியில் 79 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்து 130 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து விட்டார்கள். ஆனால் ’பந்தா பரமசிவம்’ படமும் ’மாட்டுப்பெட்டி மச்சான்’ என்ற மலையாள படத்தின்ரீமேக்காம்.;"வெளிநாடுகளில் அதிக அளவில் திரையிடப்பட்ட நான்காவது பெரிய படம் என்ற அந்தஸ்தத்தை ஹவுஸ்புல் 2 பெற்றுள்ளது.

சுயமரியாதைத் திருமணம் அற்புதமான வாழ்வியல் சிந்தனை

தஞ்சையில் உலக புத்தக நாளை முன்னிட்டு சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் நூல் அறிமுக விழா!

எஸ்.எஸ்.இராஜ்குமார் சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் நூல் வெளியிட முனைவர் ரெ.கணேசன், நூலகர் வி.சிவகாமி, ஆசிரியர் ந.கலைச்செல்வி, கண்ணன், தி.மு.க. தொ.அருளானந்தசாமி, சி.அமர்சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் பதவாளர் முனைவர் மு.அய்யாவுதஞ்சை, ஏப். 27-உலக புத்தகநாள் விழாவை முன்னிட்டு தஞ்சையில் 23.4.2012 அன்று மாலை 6.30 மணியளவில் ந.பூபதி நினைவு பெரியார் படிப் பகம் சார்பில், படிப்ப கத்தில் சுயமரியாதைத் திருமணம் தத்துவதும் வரலாறும் நூல் அறிமுக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் மோடிக்கு விசா இல்லை; அமெரிக்கா அறிவிப்பு


வாசிங்டன், ஏப். 26- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது.
மோடிக்கு விசா வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க எம்.பி. வால்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விக்குப் பதி லளித்த அமெரிக்க வெளி யுறவுத்துறைச் செய லாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது 2005 ஆம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. அதில் எந்த ஒரு மாற்ற மும் இல்லை என்றார்.

8 வயது மாணவியை 35 வயது பேராசிரியர் திருமணம் செய்தார் சட்டம் தூக்கம்

8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த பேராசிரியர்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்தமானியம் மண்டலம் தாடிமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுனில்ரெட்டி என்பவரது 13 வயது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இந்த பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரமேஷிடம் சென்றும் அறிவுரை கூறினர். இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ரமேஷூக்கு, தங்களது மகளை திருமணம் செய்து வைப்பதில் மாணவியின் பெற்றோர் பெரிதும் விரும்பினர்.

வீரபாண்டியார்: திமுக தலைவராக யார் வந்தாலும் ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்

சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்பட்டி பகுதி, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார். அப்போது அவர், தி.மு.க., தலைவராக யார் வந்தாலும் நான் ஆதரிக்கத் தயாராகவே உள்ளேன். ஆனால், உள்ளூரில் எனக்கு எதிராக சதி வலை பின்னுகின்றனர்.

லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலின்போது, பதவி வேண்டி என்னைச் சந்திக்க வருபவர்களைக் காட்டிலும், கட்சிக்காக உண்மையாகத் தொண்டாற்றக்கூடிய நீங்கள் தான் எனக்கு முக்கியம்.நான் மாவட்டச் செயலராக வந்தால் தான், இங்கு மேடையில் அமர்ந்து இருப்ப வர்கள், மீண்டும் மேடையில் அமர முடியும். வேறு யாராவது வந்தால், வேறு யாராவது தான் மேடையில் அமருவர்’’என்று கூறினார்

தி.மு.க.,வில் முடிவுக்கு வந்தது "நோட்டீஸ்' பிரச்னை: தயாளுவால்

தி.மு.க.,வில் அனைவரும் கருணாநிதி ஆட்கள் தான்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறியதன் மூலம் "சகோதர யுத்தத்தால்' சர்ச்சையை ஏற்படுத்திய "நோட்டீஸ்' விவகாரம் முடிவுக்கு வந்தது.

கட்சி பொருளாளர் ஸ்டாலின் ஏப்.,14, 15ல், மதுரை மாவட்டத்தில் நடத்திய இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு, பொதுக்கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என, சர்ச்சை எழுந்தது. அழகிரி ஆதரவு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஸ்டாலின் வலியுறுத்தியதால், 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு, "அழகிரி ஊரில் இல்லாதபோது, அவருக்கு தகவல் தெரிவிக்காமல், ஸ்டாலின் வந்ததால் நாங்கள் பங்கேற்கவில்லை' என தலைமைக்கு விளக்கம் அளித்தனர்.

Stink ஆயுத பேர ஊழல் வழக்கில் BJP பங்காரு லட்சுமண் குற்றவாளி

புதுடில்லி: தெகல்ஹா இணையதளம் அம்பலப்படுத்திய, போலி ராணுவ ஆயுத பேர ஊழல் வழக்கில், பா.ஜ., முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் குற்றவாளி என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2001ல் பா.ஜ., தலைவராக இருந்தவர் பங்காரு லட்சுமண், 72. தெகல்ஹா என்ற இணையதளத்தைச் சேர்ந்த சிலர், தங்களை பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான, "வெஸ்ட் என்ட் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி, அப்போது பங்காரு லட்சுமணை அணுகினர். டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பங்காருவை இவர்கள் சந்தித்தனர். அப்போது, "எங்கள் நிறுவனத்தால் அதிநவீன பைனாகுலர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு வாங்கும்படி, ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பொய்யாகக் கூறினார். இதை நம்பிய பங்காரு லட்சுமண், இதற்காக அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

Automatic கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு

Automatic Cars
 
ஆட்டோமேட்டிக் கார்கள் என்றால் அலர்ஜியாக இருந்த இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது தங்களது விருப்பதை மாற்றிக்கொண்டுள்ளனர். தற்போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில்தான் ஆட்டோமேட்டிக் கார்கள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில், இந்தியாவிலும் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக மைலேஜ் தராது என்பதால், இந்தியாவில் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களே விற்பனையில் சாதித்து வந்தன. ஆனால், நிலைமை தற்போது வேகமாக மாறி வருகிறது.

50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை

Sperm
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

கிரிமினல் கும்பல்கள் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்

மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கனிமங்களையும் இரும்புத்தாதுவையும் ஏற்றிவந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்திய நரேந்திரகுமார் எனும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது சுரங்க மாஃபியாக் கும்பல் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளது. சுரங்க முறைகேட்டைத் தடுக்க உயரதிகாரிகளிடம் நரேந்திரகுமார் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. கொள்ளையர்கள் பா.ஜ.க. ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் அஞ்சாமல் கொள்ளையைத் தொடர்ந்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் சட்டவிரோத சுரங்கக்கொள்ளை நடத்துவதாக முன்னாள் காங்கிரசு முதல்வர்  திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா 1250 ஏக்கர் நிலம் அனைத்து சொத்துக்களையும் நித்தி



பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.
மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியானார்!

சச்சின் டெண்டுல்கரைப் போலவே மாஜி நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார். அவரது பெயரையும் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பியாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இவர்களைப் போலவே பழம்பெரும் இந்தி நடிகை ரேகாவையும் அக்கட்சி ராஜ்யசபை எம்.பியாக்கியுள்ளது.

கனிமொழியின் income list அமலாக்கப் பிரிவிடம் தாக்கல்!

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியின் சொத்து விவரங்கள் என்ன என்பது குறித்த பட்டியல் டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குநர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் கனிமொழியின் வங்கிக் கணக்கு அறிக்கைகள், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரம், முதலீடு விவரம், பங்குப் பத்திரம், நிதி ஆதார ஆவணம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு திட்டமிட்டு சம்மனும் அனுப்பியது.
இந்த நிலையில் நேற்று கனிமொழி சார்பில் அவரது சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.கனிமொழியை இயக்குநராக கொண்டுள்ள கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி கடன் தொகை வந்தது குறித்த சர்ச்சையில்தான் கனிமொழி கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்ததப் பணம் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. ஆனால் இது கடன் தொகை மட்டுமே, இதையும் கூட திருப்பிக் கொடுத்து விட்டோம் என்பது கனிமொழி தரப்பிலன் வாதமாகும்

மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு! தா.பாண்டியன் இ.கம்யூ., கட்சியை dismantle

தா.பாண்டியன் இ.கம்யூ., கட்சியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை! மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு! புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். அவர் கார் விபத்தில் மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதிமுக திடீரென தனது வேட்பாளரை அறிவித்தது. இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், விபத்தில் உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இடைத்தேர்தலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரையோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரையோ போட்டியிட வைத்திருக்கலாம்.

மக்கள் நலப் பணியாளர் வழக்குகள் முடிவுக்கு வந்தன

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏறத்தாழ 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான வழக்குக்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அவர்கள் அனைவர்க்கும் ஐந்து மாத கால ஊதியம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்திரவாதத்துடன் வழக்குக்களை முடித்துக்கொள்ள பணியாளர்கள் ஒத்துக்கொண்டனர்.
எதிர்வரும் மே மாதத்துடன் அவர்கள் பணிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில் அவர்களை நீக்கியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், பணிக்காலம் முடிவடைந்த பிறகு அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பினையும் அரசிடமே விட்டுவிடுவதாகக் கூறி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் எம்.வேணுகோபால்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

Ajith:நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்!

நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு! 
 என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார்.
சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...
செல்ப் புரமோஷன் கிடையாது...
"நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும்.

நடிகை புவனாவின் தியேட்டரைப் பறிக்கப் பார்த்த கோஷ்டி-போலீஸ் வலைவீச்சு!

Bhuvana
கோவையைச் சேர்ந்த சினிமா நடிகை ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கிய சிலர், அந்த வீட்டோடு இணைந்துள்ள நடிகையின் தியேட்டரையும் அபகரிக்க முயன்றனர். அதைத் தட்டிக் கேட்க முயன்ற நடிகைக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் இதுதொடர்பாக ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் புவனா என்கிற புவனேஸ்வரி.

நடராஜனா? சொக்கத் தங்கமாச்சே!சிக்னல்’ வந்துவிட்டதா?

தஞ்சை போலீஸை வெலவெலக்க வைத்த ரங்கா!

நடராஜன் விவகாரத்தில் சென்னையில் இருந்து ‘சிக்னல்’ வந்துவிட்டதா என்ற குழப்பம் திடீரென ஏற்பட்டுள்ளது. காரணம், நடராஜன்மீது புகார் கொடுத்த ஒருவர் திடீரென, “நடராஜன் மீது தவறு ஏதுமில்லை என்று இப்போதுதான் புரிந்து கொண்டேன். எனது பழைய மனுவை வாபஸ் பெற்றுக்  கொள்கிறேன்” என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கிறார். இவருக்கு இந்தி திடீர் ஜானோதயம், சும்மா வந்திருக்க முடியாதே ?

உறவுக்கு அழைத்த புருஷன் மார்பில் குத்தி 'விளையாடிய' மனைவி கைது!

திருச்சி: புதிதாக திருமணமான ஜோடிகள் காதல் களியாட்டத்தில் ஈடுபடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருச்சி அருகே ஒரு ஊரில், கணவன் அடிக்கடி தன்னுடன் கூட நினைத்ததால் எரிச்சலைடந்த ஒரு பெண் கணவன் கண்ணைக் கட்டி விட்டு அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றுள்ளார்.
உப்பிலியாபுரம் ஒக்கரை என்ற ஊரைச் சேர்ந்தவர் 30 வயதான நடராஜன். இவர் வாத்தியாராக இருக்கிறார். இவருக்கும் 23 வயதேயான சுபா என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
புதிதாக திருமணமானவர் என்பதால் மனைவியைச் சுற்றிச் சுற்றியே வந்துள்ளார் நடராஜன். இது அவரது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

Chithra Subramaniam:போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?

டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார்
Veteran journalist Chitra Subramaniam -- who blew the whistle on the infamous kickback deal on the Bofors guns, leading to the defeat of the Congress party in the 1989 general elections, and won her the 1990 Asian award for excellence in journalism -- at her office in New Delhi on March 30, 1990.

ஸ்டாலின் Predict: அதிமுக அரசு நீடிக்காது!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் உதகையில் 28.04.2012 அன்று நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதற்காக நீலகிரி மாவட்டம் சென்ற அவருக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். ன்னர் பேசிய அவர், தலைவர் கலைஞர் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்து, இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களும், மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சியும் நிறைவேற்றப்பட முடியாத சாதனைகளையெல்லாம் நிறைவேற்றினார். 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. 5 வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் வரும். ஆக தேர்தல் நடந்தது 2011. மீண்டும் எப்போது தேர்தல் வரும் என்று கேட்டால், 5 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் வரும்.ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியின் அக்கிரமத்தை பார்க்கிறபோது, 2015ல் வருமா, 2014ல் வருமா அல்லது 2013ம் ஆண்டே வந்துவிடுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது என்றார்.

முல்லைப் பெரியாறு அணை அபார பலத்துடன் உள்ளது ஐவர் குழு அறிக்கை

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும்.
முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது.

Prasanna Sneha ஜோடியின் உன்னத தானம்


நடிகர் பிரசன்னாவிற்கும் நடிகை சினேகாவிற்கும் மே மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் இந்த ஜோடி கலை நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகவே சென்று வருகின்றனர்.சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த பென்னிதயாளின் இசை கச்சேரிக்கு இருவரும் வருகை தந்தனர். கச்சேரி முடிந்ததும் மேடையில் பேசும்போது சினேகா “நானும் பிரசன்னாவும் எங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்யப்போகிறோம். இறந்த பின்பு உடலை மண்ணிற்கும், நெருப்பிற்கும் கொடுப்பதை விட மனிதர்களுக்கு கொடுத்தால் அவர்களது குறை தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்