வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு! தா.பாண்டியன் இ.கம்யூ., கட்சியை dismantle

தா.பாண்டியன் இ.கம்யூ., கட்சியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை! மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு! புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். அவர் கார் விபத்தில் மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதிமுக திடீரென தனது வேட்பாளரை அறிவித்தது. இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், விபத்தில் உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இடைத்தேர்தலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரையோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரையோ போட்டியிட வைத்திருக்கலாம்.
ஏனென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆதரவு தருவதாக அறிவித்தார். தேமுதிகவையும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, அவர்களின் ஆதரவை வாங்கித் தருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர்.இடைத்தேர்தல் பேச்சு ஆரம்பித்தவுடனேயே அதிமுக தலைமையை நேரடியாக தா.பாண்டியன் சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்புகிறது என்று தெரிவித்திருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. அதிமுக தலைமையோ தா.பாண்டியன் எதுவும் சொல்லமாட்டார் என்று தங்களது கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதற்கிடையே கண்துடைப்புக்காக புதன்கிழமை அன்று மாநில நிர்வாகி இந்திரஜித்தை வைத்து, அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மறுநாளான இன்றோ, மேலோட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி, இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று தா.பாண்டியன் அறிவித்துவிட்டார். பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் இதனை அவர் அறிவித்துள்ளார். அதிமுக உறவு வேண்டும் என்று நினைக்கும் அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காப்பாற்றி, அதற்கு பலம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கே சீட் வாங்க தெருவோரம் பல நாள் இரவு பகலாக காத்திருந்தோம். பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் என்ன பதில் சொல்வார் தா.பாண்யன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்<

கருத்துகள் இல்லை: