வியாழன், 26 ஏப்ரல், 2012

Prasanna Sneha ஜோடியின் உன்னத தானம்


நடிகர் பிரசன்னாவிற்கும் நடிகை சினேகாவிற்கும் மே மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் இந்த ஜோடி கலை நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகவே சென்று வருகின்றனர்.சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த பென்னிதயாளின் இசை கச்சேரிக்கு இருவரும் வருகை தந்தனர். கச்சேரி முடிந்ததும் மேடையில் பேசும்போது சினேகா “நானும் பிரசன்னாவும் எங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்யப்போகிறோம். இறந்த பின்பு உடலை மண்ணிற்கும், நெருப்பிற்கும் கொடுப்பதை விட மனிதர்களுக்கு கொடுத்தால் அவர்களது குறை தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று தான் இந்த முடிவை திருமண வேலைகளில் இவர்கள் இருவரும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களது நண்பர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் திருமண பத்திரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: