சனி, 25 பிப்ரவரி, 2012

வீரப்பன் சதாம் உசேன் கடாபி என்கவுண்டர் மனோபாவம்


எந்தவொரு கிரிக்கெட் பந்து வீச்சாளரும் பொறாமைப்படும் வகையில் காவல் துறை தனது என்கவுண்டர் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்தெடுத்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரத்தைப் பாருங்கள். 2008ம் ஆண்டு 5 முறை குண்டு வீசி ஆறு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். 2009ல் இரண்டுக்கு இரண்டு என்னும் செட் கணக்கில் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. 2010ல் நல்ல முன்னேற்றம். ஐந்து வாய்ப்புகள், ஏழு விக்கெட். 2011ல் மேட்ச் நடைபெறவில்லை. 2012 அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது. இரு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், ஒரே நாளில், ஐந்து விக்கெட்டுகள்.
‘சென்னை மக்கள் பலரும் இதனை சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளனர்.’ கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   தமிழகத்தின் மிகப் பெரிய என்கவுண்டர் இதுவே என்று கண்டறிந்து கொட்டை எழுத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். அதே சமயம், வங்கிக் கொள்ளையர் ஐவரையும் ‘மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக’  சொல்லும் காவல்துறையின் வாதங்களில் உள்ள ஓட்டைகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

சோ Encounter .ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ ஆட்டோ சங்கரோ


சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களும் நல்லவர்களோ, நாட்டுக்காக உழைத்தவர்களோ அல்ல திருடர்கள் அதனால் இந்த என்கவுன்டர் தவறானது இல்லை, தமிழக அரசு மீது தேவையில்லாமல் அவதூறு செய்கிறாரகள் என்று பத்திரிகையாளர் சோ குறிப்பிட்டிருக்கிறாரே,
-கி. சரவணன்.
கொள்ளை, கொலை எதுவாக இருந்தாலும் உரிய முறையில் விசாரித்து தண்டனை தரவேண்டும் என்பதற்காகத்தான் நீதி மன்றம்.
வங்கி கொள்ளைக்கே என்கவுன்டர் செய்யவேண்டும் என்று சொல்கிற நடிகர் சோ, ‘சங்கரராமனை கொலை செய்த, ஜெயேந்திர சரஸ்வதியை ஏன் தேவையில்லாமல் விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவரையும் என்கவுன்டரில் போட்டு இருக்கலாமே.
அன்றைக்கே அவரை என்கவுன்டரில் போட்டிருந்தால், இன்றைக்கு அவர் சாட்சிகளை களைப்பது, நீதிபதியிடமே பேரம் பேசுவது போன்ற செயல்களை செய்திருப்பாரா?’ என்று கேட்பார் போல் தெரிகிறது. சோ இப்படி கேட்டால் அது நியாயம் இல்லை.
நம்மை பொறுத்தவரை அது ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ கொலை, கொள்ளை செய்த யாரையும் என்கவுன்டரில் சுட்டு சாகடிக்கக் கூடாது.
முறைப்படி விசாரித்துதான் தண்டனை தரவேண்டும்.

760 girls per 1,000 boys..Son-producing” clinics in Gujarat busted

From R. Vasudevan—Reporting from New Delhi
New Delhi, 25 February (Asiantribune.com):
When district officials in Mehsana in Gujarat. studied records of gynaecologists recently, they were stunned to find out that many were virtually running son-producing centres.
Mehsana town is infamous with its ratio at just 760 girls per 1,000 boys - the lowest in the country.
Some of the doctors in the region have individual ratios of just 600 per 1,000 boys in the past few months. Alarmed, government officials have started monitoring the individual sex ratios of doctors.
District collector Rajkumar Beniwal suspended the licence of 15 gynaecologists for three months because of the high number of boys they were delivering at their clinics.
One doctor, for instance, delivered just 250 girls in comparison to 334 boys between April and November 2011. Despite strict requirements of the Pre-Conception & Pre-natal Diagnostic Techniques Act , many have been accused of underreporting number of expecting mothers who have undergone sonography at their clinics.
"If a doctor delivers 50 babies every month, the sonography machine has to be used at least 100 times," Beniwal said. "But these doctors have informed us of only 10 instances where the machine is used." Chief district health officer Deepak Jagani says Mehsana has hit the lowest ebb on the gender index, according to the Census 2011 figures.
- Asian Tribune

35th Chennai Book Fair Student Documentary



சென்னையில் ஆண்டுதோறும் தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருவிழாக்களையொட்டி நடத்தப் பெறும் தமிழ்ப் புத்தகங்களின் கண் காட்சியில், இவ்வாண்டு 57 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன; பல கோடி ரூபாய்களுக்கான  விற்பனை மூலம், தமிழ்ப் புத்தக வெளியீட்டா ளர்கள் பலரும் பயன் பெற்றுள்ளனர்.

சசிகலா வளையத்தில் இருந்து பிரேமலதாவுக்கு வந்த சூட்கேஸ்!


Viruvirupu.comசங்கரன்கோவில் இடைத்தேர்தல் எரவுன்ட்-த-கார்னரில் தயாராக நிற்கும் நேரத்தில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-வின் தீவிர கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது விஜயகாந்தின் தே.மு.தி.க.! என்ன காரணம்? ஒருவேளை தே.மு.தி.க. ஜெயித்து விடலாம் என்ற பயமா?
அதெல்லாம் கிடையாது. வேறு வேறு விவகாரம்.
தமிழக அரசியல் அடுத்து எப்படித் திரும்பப் போகின்றது என்பதற்கான பதில், தே.மு.தி.க.-வின் சில நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது என்கிறார்கள்.
தனித்துப் போட்டியிடுவதாக (ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது) தே.மு.தி.க. வெளிப்படையாக கூறினாலும், உள்ளே வேறு ஒரு டீல் ஓடிக்கொண்டு இருக்கிறதா என்ற சந்தேகம், அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளுக்கு உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் இருந்த விஜயகாந்தை போட்டியில் குதிக்க வைத்தது, ஜெயலலிதாவின் சட்டசபை ‘உசுப்பேற்றல்’ பேச்சு மட்டுமல்ல.
அதையும் தாண்டி, இதில் வேறு ஒரு விவகாரமும் உள்ளது.

Sasikala:ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள்

Jayalalitha and Gangai Amaran

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்காகவே இயக்குநர் - இசையமைப்பாளர் கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று 3-வது நாளாக தனிக்கோர்ட்டில் ஆஜரானார்.

ரசிகர்கள் கொலவெறி - ஹன்சிகா ஆவேசம்!

சில நாட்களுக்கு முன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியின் விழாவிற்கு சென்றிருந்தார் ஹன்சிகா மோத்வானி. விழாவை சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு விழா முடிந்ததும் கிளம்பியிருக்கிறார். விழாவிற்கு வரும்போது இருந்த கவனிப்பு கிளம்பும் போது இல்லையாம்.
கோபத்தோடு வெளியே வந்து பார்த்த ஹன்சிகாவிற்கு தலைசுற்றிவிட்டது. கிட்டத்தட்ட ஆயிரம் ரசிகர்கள் ஹன்சிகாவைக் காண திரண்டுவிட்டார்களாம். அவர்களை கடந்துசெல்ல முயன்ற ஹன்சிகா ரசிகர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டுவிட்டார்.
கூட்டத்தில் மூச்சுத் திணறிய ஹன்சிகாவை போலிஸார் காபாற்றுவதற்குள் பல ரசிகர்கள் ஹன்சிகாவை தொட்டுப் பார்க்கும் ஆசையை தீர்த்துக் கொண்டுவிட்டார்களாம். 
சில ரசிகர்கள் சந்தோஷத்தில் செய்வதறியாமல் ஹன்சிகாவின் உடலில் நகக் கீறல்களை போட்டு விட்டார்கள். ஒரு வேளையாக போலீஸார் கடும் முயற்சியால் ஹன்சிகாவை மீட்டெடுப்பதற்குள் ஹன்சிகா பல காயங்களுக்கு ஆளாகிவிட்டிருந்தார்.இது பற்றி பேட்டியளித்த ஹன்சிகா “ ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். அவர்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. இனி செக்யூரிட்டி இருந்தால் தான் எங்கும் செல்வேன். அன்று போலீஸ் இல்லையென்றால் என் கதி அவ்வளவு தான்” என்று கூறியிருக்கிறார்.போன முறை சென்னையில் இது போல் நடந்த போதே உஷாராகியிருக்கலாம் என்கின்றனர் சென்னை ரசிகர்கள்.

கல்லூரி Admissionகளில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தான்.கொள்ளை தலைவன் வினோத்குமார்

சென்னை: உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காகவே கொள்ளைத் தொழிலுக்கு வங்கிக் கொள்ளை கும்பலின் தலைவன் வினோத்குமார் மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வினோத்குமாரின் வாழ்க்கை
மேற்கு வங்காளத்தில் இருந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க சென்னை வந்தவன் தான் வினோத்குமார்.
காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்தான்.
வெளி மாநிலமாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தான். கல்லூரிகளில் சேர விவரம் தெரியாமல் வருவோருக்கு வழி காட்டினான். அவர்களை தனக்கு தெரிந்த கல்லூரிகளில் சேர்ந்து விட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்தான்.

நிதிஷ்குமார்: என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல

சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் 5 பேருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அதைவிடுத்து என்கவுன்ட்டர் மூலம் கொல்வது சரி அல்ல என்று பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த வங்கி கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் சந்திரிகா ரே, ஹரிஷ்குமார், வினய் பிரசாத், வினோத்குமார் ஆகிய 4 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அபய்குமார் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் தகவலை தெரிவித்த போலீசார், 5 பேரின் முகவரிகளையும் வெளியிட்டனர்.

என்கவுன்டர்' விடை தெரியாத கேள்விகளால் மர்மம்

வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் விசாரணையில், உண்மை நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் நுழைந்து, வங்கி மேலாளரை மிரட்டி, கேஷியரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் பிற்பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கிமுனையில், மிரட்டி 14 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். சம்பவம் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளை வைத்து இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள

‘வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும். நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?
சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.
இந்த வட்டாரத்தில் பெருமளவு சுறுசுறுப்பாக வியாபாரம் நடப்பது இந்தக் கடையில்தான்.

சாமியாருடன் பெண் ஓட்டம் ; வெளிநாட்டு கணவர் அதிர்ச்சி

பரங்கிப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (40). இவர் வெளி நாட்டில் வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர் அடிக்கடி பரங்கிப்பேட்டை அருகே உள்ள பள்ளி வாசல் தெருவில் குறி சொல்லும் சாமியார் தாமரைச்செல்வனிடம் சென்று குறி கேட்டு வந்தார்.
குறி கேட்பதற்காக அடிக்கடி சென்று வந்த விஜயலட்சுமிக்கும், சாமியார் தாமரைச்செல்வனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு முதல் விஜயலட்சுமியையும், சாமியார் தாமரைச் செல்வனையும் காணவில்லை. இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த சுப்பிரமணியன், தனது மனைவியையும், சாமியாரையும் தேடி உள்ளார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சுப்பிரமணியன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறி கேட்க சென்ற பெண், சாமியாரோடு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கு முன் இலங்கையில் விற்பனைக்கு வரும் பஜாஜ் குட்டி

ஆர்இ60 என்ற பெயரில் பார்வைக்கு கொண்டு வந்த 4 வீல் பயணிகள் வாகனத்தை இந்தியாவுக்கு முன்னதாக இலங்கையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகன உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆட்டோரிக்ஷா தயாரிப்பிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் ஆர்இ60 என்ற பெயரில் தனது முதல் 4 வீல் பயணிகள் வானத்தை பார்வைக்கு அறிமுகம் செய்தது.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பிகினி உடையில் லட்சுமிராய்!

Lakshmi Rai in Bhiniதெலுங்குப்படமொன்றில் பிகினி உடையணிந்து நடித்திருக்கிறார் நடிகை லட்சுமிராய். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிராய், புதிய தமிழ்ப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்குப்பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போயிருக்கும் லட்சுமிராய், நடிக்கும் அதிநாயகடு படத்தை டைரக்டர் பரச்சூரி முரளி இயக்குகிறார்.  படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டுள்ளதாம். தெலுங்கில் கொடி கட்டிப் பறக்கும் அனுஷ்காவும், பிரியாமணியும் ஏற்கனவே பிகினியில் வந்து டோலிவுட் ரசிகர்களை அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி

சென்னை: "உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார். மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, "திராவிட நல் திருநாடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 1912ம் ஆண்டு தோன்றிய, "மெட்ராஸ் யுனைடெட் லீக்' சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. "சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை' என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், "திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே' என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை! மிர்ரர் ஏட்டில் வெளிவந்த கடிதம்!

 இந்திய மக்களின் மிதமிஞ்சிய கடவுள் நம்பிக்கையைப் பற்றி, அயல்நாட்டில் வளர்க்கப்பட்ட ஒருவர் என்ன நினைக்கிறார் ?
இந்தியாவுக்கு கடவுள் நம்பிக்கை நல்லதை விட, தீமைகளைத் தான் அதிகமாக செய்திருக்கிறது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த நாட்டிலும்...
நான் எந்த நாட்டிலிருந்து இங்கு வந்துள்ளேனோ அங்கேயும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது. இந்தியாவில் நடப்பது போல, அங்கே கடவுளைப் பற்றி அதிகமாகக் கதை அளப் பதும் இல்லை; கடவுளைப் பற்றி அஞ்சு வதும் இல்லை. எனினும் என்னுடைய நாட்டிலே வாழ்க்கை இனிமையாக நடந்து வருகிறது.நேர்மையும் நல்லன்பும் உள்ள மக்களைத்தான் காணுகின்றேனே தவிர, நயவஞ்சகர்களைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை.

பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பதில் கண் மூடித்தனமான வெறி ஏன்?

கலி.பூங்குன்றன்
(Females activists of Durga Vahini, the women wing of Bajrang Dal are being imparted weapons and sword training at its camps for taking part in future activities against minorities.)
இந்த வன்முறைப் பயிற்சிகள் பற்றி சோவாளின் பேனா வாய் திறந்ததுண்டா?
ஆனந்த விகடனின் கேள்வி (1.2,2012): ஜெயலலிதாவையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பார்ப்பன லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்று சொல் லப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
சோவின் பதில்: நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டால் நான் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிடுவேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் எல்லாம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரி கள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படியெல்லாம் நான் நம்பவேண்டும். நீங்களே சொல்லுங்கள். அவ்வளவு பெரிய மடையனா நான்?
ஒரு லாபி என்றால் அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்?

30 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்த தாவரத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்

மாஸ்கோ, பிப். 22-  ரஷியாவின் சைபீரியா பகுதி பனிபிரதேசமா கும். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'சலேனே ஸ்டெனோ பில்லா' என்ற அரிய வகை தாவரம் இருந்தது. தற்போது அவை அழிந்து விட்டது. இந்த நிலையில் சைபீரியாவின் கொலிமா ஆற்றங்கரையில் ஒரு அணில் இறைக்காக நிலத் தில் தோண்டியபோது சலேனேஸ்டெனோபில்லா' குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் விதைகள் கிடைத்தன.
அவற்றை உயிரி இயற் பியல் துறை விஞ்ஞானி டேவிட் கிலிசின்ஸ் தலை மையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த தாவரம் அழிந்த நிலையில் சைபீரியா பனிக்கட்டிக்குள் 30 ஆயி ரம் ஆண்டுகள் உறைந்து கிடந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அதில் உள்ள பிளா சென்டல் திசுக் களை எடுத்து பரிசோதனை கூடத்தில் வைத்து விஷே சமான சத்துக்கள் நிறைந்த கலவையில் ஊறவைத் தனர். பின்னர் அவற்றை தரமான விதைகளாக மாற்றி மண்ணில் நட்டு பயிரிட்டனர்.

டில்லிக்கு இத்தாலியின் தடாலடி!இந்திய மீனவர் கொலை

இத்தாலியக் கப்பலில் இருந்து இந்திய மீனவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகலை ஏற்படுத்தும் கட்டத்துக்கு சென்றுள்ளது.
கேரள மாநில போலீஸ் இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்வதற்கோ, இந்திய நீதிமன்றம் ஒன்று விசாரணை நடத்துவதற்கோ அதிகாரம் ஏதும் கிடையாது என்று இத்தாலிய அரசு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இரு இத்தாலியக் கடற்படையினரின் சார்பில் இத்தாலிய அரசு, கேரள ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமது கடற்படையினர் மீது இந்த விவகாரத்தில் இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

மாதவன்: படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்

படத்திற்கு தேவைப்பட்டால் தெரிவில் நிர்வாணமாகவும் ஓடுவேன் என்று நடிகர் மாதவன் தெரிவி்த்துள்ளார்.
நடிகர் மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது,ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்ல பையனாக நடித்து, நடித்து போர் அடித்துவிட்டது. அதனால் இந்த படத்தில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான். படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகக் கூட ஓடுவேன்.

CBIநீதிமன்றம் பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம்-ஊழல்-தீர்ப்பு
பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர்.
முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
மிகவும் கறாரான தீர்ப்பாக ஊடகங்கள் இதனைச் சித்தரித்த போதிலும், இத்தீர்ப்பு நடந்துள்ள ஊழலைப் பற்றியதல்ல. உரிமங்கள் வழங்கும் முறையில் சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மட்டுமே இத்தீர்ப்பு குறிப்பிடுகிறது. மற்றபடி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா முதல் அதிகாரிகள் வரையிலான பலரின் குற்றத்தையும், குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டுமா என்பதையும் முடிவு செய்யவேண்டியது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்தான் என்று கூறியிருக்கும் இத்தீர்ப்பு, நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்திருக்கிறது.

Jeya Cho மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!


மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்-1மாட்டுக்கறி களங்கத்திற்காக குமுறுபவர்கள், எம்.ஜி.ஆர். இறந்தவுடன் உடன்கட்டை ஏறப்போவதாகச் சொல்லி தனக்குத்தானே களங்கம் கற்பித்துக் கொண்டார் செல்வி ஜெயலலிதா, அந்தக் ‘களங்கத்தை’ எந்த நீதிமன்றத்தில் கழுவுவார்கள்?








ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

மாணவர்களை புரோக்கர்களாக்கும் கல்லூரிகளால்தான் குற்றங்கள் பெருகின்றது

சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்த்து விடுவோருக்கு கணிசமான தொகை புரோக்கர் கமிஷனாக தரப்படுவதால் சென்னை நகரில் வட மாநில மாணவர்களால் பல குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு புரோக்கர் மாணவர்தான் இன்று இரு வங்கிகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளான்.
தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆனால் இந்த வியாபாரம் இன்று கடும் போட்டியும், குற்றச் செயல்களும் நிறைந்ததாக மாறி தமிழக கல்வித்துறைக்குப் பெரும் சாபக்கேடாக மாறி நிற்கிறது.

SRM மாஜி மாணவன்!கொள்ளைக் கும்பல் தலைவனான

சென்னை வங்கிக் கொள்ளைகளுக்கு மூல காரணமாக, தலைவனாக செயல்பட்டு தற்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவன், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்த வினோத்குமார் என்பது தெரிய வந்துள்ளது.
வினோத்குமார் குறித்த தகவல் போலீஸாருக்கு தற்செயலாகத்தான் கிடைத்தது. கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் துப்பு துலங்குவது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் போலீஸாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. இரு வங்கிகளிலும் ஒரே மாதிரியாக கொள்ளை நடந்திருப்பதால் நிச்சயம் நோட்டம் பார்த்துதான் இந்தக் கொள்ளையில் திருடர்கள் இறங்கியிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.

தில் இருந்தா சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ணுங்க -இளைய நடிகர்களுக்கு சேரன் சவால்

பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(21.02.12) காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் திரு சண்முக சுந்தரம், T.K.ராமமூர்த்தி, T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், திருமதி P.சுசீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரு ராம்குமர் கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் சேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.