சனி, 25 பிப்ரவரி, 2012

கல்லூரி Admissionகளில் ஆயிரக்கணக்கில் சம்பாதித்தான்.கொள்ளை தலைவன் வினோத்குமார்

சென்னை: உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காகவே கொள்ளைத் தொழிலுக்கு வங்கிக் கொள்ளை கும்பலின் தலைவன் வினோத்குமார் மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வினோத்குமாரின் வாழ்க்கை
மேற்கு வங்காளத்தில் இருந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க சென்னை வந்தவன் தான் வினோத்குமார்.
காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படித்தான்.
வெளி மாநிலமாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தான். கல்லூரிகளில் சேர விவரம் தெரியாமல் வருவோருக்கு வழி காட்டினான். அவர்களை தனக்கு தெரிந்த கல்லூரிகளில் சேர்ந்து விட்டு ஆயிரக்கணக்கில் சம்பாதித்தான்.
உல்லாச வாழ்க்கை
அந்தப் பணத்தை உல்லாச வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டான். உள்ளூர் அழகிகள் தொடங்கி மும்பை அழகிகள் வரை அனுபவித்தான்.
சுகம் தொடர பணம் தேவைப்பட்டது! விளைவு கொள்ளையில் போய் முடிந்தது!
தம்மை நாடிவந்த பீகார் இளைஞர்களை இணைத்துக் கொண்டு கொள்ளை கும்பலை உருவாக்கினான் வினோத்!
சென்னை புறநகர்களான பெத்தேரி, காட்டாங்குளத்தூர் பகுதியில் வினோத்குமார் நன்கு பரிட்சயமான மாணவனாகவே இருந்திருக்கிறான்.
அப்பகுதி மாணவர்கள் என்கவுண்டர் பற்றியும் மாணவர் வினோத் குமார் பற்றியும் நேற்று பேசிக் கொண்டனர்.
அவர்களது பேச்சின் மூலம் அவர்களுக்கு வினோத்குமார் நன்கு பரிட்சயமானவர் என தெரிய வந்தது.
வினோத்குமார் கையில் எப்போதும் ஆயிரக்கணக்கில் பணம் புழங்கும். உல்லாச விரும்பி, அழகிகளுடன் உல்லாசமாக இருப்பது பிடிக்கும் என்று சில மாணவர்கள் பேசிக் கொண்டனர்.

வினோத்குமார் படம் பத்திரிகை, டெலிவிஷன்களில் பார்த்த பொத்தேரி பகுதி ஆட்டோ டிரைவர்கள், இவனை அடிக்கடி தாங்கள் பார்த்ததாகவும் இந்த பகுதியில் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவன் என்றும் கூறிக்கொண்டனர்.
புரோக்கர் கமிஷன்
வினோத்குமார் ஒரு மாணவரை கல்லூரியில் சேர்த்து விட ரூ. 50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக ஒரு மாணவர் கூறினார்.
இதற்காக வட மாநிலங்களில் பல ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்கள் தங்கள் பகுதி மாணவர்களை அழைத்து வந்து வினோத்குமாரிடம் விட்டு விடுவார்கள்.
அவன் எல்லா வேலையையும் செய்து முடித்து கமிஷன் வாங்கி விடுவான். கல்லூரி கட்டணத்துக்கு ஏற்ப 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றுக் கொள்வான்.
மாணவர்கள் என்பதால் போலீசார் அவர்களை சரி வர கண்காணிப்பதில்லை. வாடகைக்கு வீடு தரும் உரிமையாளர்களும் கைநிறைய வாடகை-அட்வான்ஸ் கிடைக்கிறதே என்று சரியாக விசாரிக்காமல் வீடு கொடுக்கிறார்கள்.
மாணவர்கள் போர்வையில் குற்றவாளிகள் தங்கி விடுகிறார்கள். இது சென்னை நகர மக்களின் அமைதியை கெடுக்கிறது.

கருத்துகள் இல்லை: