சனி, 27 நவம்பர், 2010

Kamala கலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.

இந்தத் தம்பதிகளின் மகள் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து,கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப்பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.
கடந்த 3 வாரங்களாக அரசு தலைமை வழக்கறிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Manipay கத்தி, வாள், கைத்துப்பாக்கி சகிதம் முகமூடி அணிந்து வந்த நபர்கள் வீடுகளில் கொள்ளை: மானிப்பாய், சுன்னாகம்

மழையைப் பயன்படுத்தி  இரவு நேரம் மூ ன்று வீடுகளுக்கு கத்தி, வாள், கைத்துப்பாக்கி சகிதம்  முகமூடி அணிந்துசென்ற கொள்ளைக்கோஷ்டியினர் கணவன்மார் முன்னிலையில் ஆயுதங்களைக் காட்டி பெண்களைப் பயறுத்தி அவர்கள் அணிந்திருந்த 40 பவுண் தங்கநகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இத் திகிலூட்டும் சம்பவம் புதன்கிழமை இரவு மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிவுகளிலுள்ள சங்குவேலி, மானிப்பாய், சுன்னாகம் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.
இரு மணி நேரத்திற்குள் ஆயுத முனையில் திட்டம்போட்டு நடைபெற்ற இத்துணிகரக் கொள்ளைகள் பற்றி தெரியவருவதாவது: மானிப்பாய்  ஆனந்தன் வீதியில் தோட்டவெளியில் உள்ள சுகந்திரகுமார் என்பவரின் வீட்டிற்கு இரவு 8 மணிபோல் சமையலறைக் கதவைத் திறந்துகொண்டு முகமூடிகளுடன் கத்தி, வாள், கைத்துப்பாக்கியுடன் சென்ற நால்வர் கணவன் முன்னிலையில் மனைவியை ஆயுதங்களைக் காட்டிப் பயறுத்தி, அவர் அணிந்திருந்த 6 பவுண் எடையுள்ள சங்கிலி, காப்பு, தோடு ஆகியவற்றைப் பலாத்காரமாக அபகரித்துச் சென்றுள்ளார்கள்.
சங்குவேலியிலுள்ள ஆசிரியை   ஒருவரின் வீட்டிற்கு இரவு 8.30 மணிபோல் ஆயுதங்களுடன் சென்ற கொள்ளையர்,  கேற் பூட்டச்சென்ற கணவரை உள்ளே அழைத்துச் சென்று   மனைவியைப் பயறுத்தி    அவரும் தாயாரும்   அணிந்திருந்த 10 பவுண் எடையுள்ள   தங்க நகைகளை உருவிச்சென்றுள்ளார்கள்.
இதேவேளை, உடுவில் தெற்கில் வசிக்கும் மணியம் என்பவரின் வீட்டிற்கு இரவு 10.30 மணிபோல் கேற்றுக்கு மேலால்  ஏறி உள்ளே சென்ற இரு கொள்ளையர், கணினி பார்த்துக்கொண்டிருந்த இரு இளம் பெண்களையும் பயறுத்தி அவர்கள் அணிந்திருந்த அட்டியல், காப்பு, சங்கிலி தாய் அணிந்திருந்த  தாலிக்கொடி உட்பட சுமார் 25 பவுண் எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
அட்டியல் அணிந்திருந்த ஒரு பெண்ணுக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் ஒருவருக்கும் அன்று பகல் பதிவுத் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியுடனான பேச்சில் திருப்தியில்லை-தமிழ்அரங்கம்!

தமிழ் அரங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பூரண திருப்பதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்றையதினம் தமிழ் அரங்க பிரதிநிதிகள் வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ விஸ்தரிப்பு, குடிபரம்பல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதன்போது சில விடயங்களை செய்வதற்கு ஜனாதிபதி உறுதி தெரிவித்துள்ளபோதும், அது கூட நடந்து முடிந்ததன் பின்னரே தெரியும். இனப்பிரச்சினை தீர்வு விடயத்திற்கு சகல தமிழ்கட்சிகளையும் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும், அவ் குழு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை ஆராயும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளர். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்ட விடயம் என்றும் இதனை கூறுகிய காலத்திற்குள் செய்யமுடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளாராம்.
இவ்வாறு பல குழுக்கள், மகாநாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றபோதும், அதில் காணமுடியாத இணக்கத்தை இனிமேல் அமைய போகும் குழுக்கள் மூலம் சாதிக்கலாம் என்பது கேள்வி குறியே. இவை எல்லாம் இழுத்தடிப்பதற்கான காரணிகளாகவே தென்படுகின்றன என்றும், ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றிய பின்னரே எது குறித்தும் நம்பிக்கை கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கவிஞர் வாலி : மயக்கமா கலக்கமா’ ் பாடலின் ஒவ்வெரு வரியும் எனக்கு தன்னம்பிக்கைய் தந்தது. வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக

கவிஞர் வாலி :
ஜெமினியும் நானும் திருச்சிக்காரர்கள். ஜெமினியை கஞ்சன் என்று கூறுவார்கள். ‘கஞ்சன்’ என்றால் ‘பிரம்மா’ என்றொரு பொருளும் உண்டு. பிரம்மா போல், ஜெமினியும் பல கதாபாத்திரங்களை படைத்தவர்.ஜெமினி கருமி அல்ல. உண்மையில் அவர் ஒரு தருமி. நான் கூறுவது திருவிளையாடல் தருமி அல்ல. அவர், யாருக்கும் தெரியாமல் எவ்வளவோ செய்திருக்கும் தருமி.


இன்று உலக நாயகன் என்று கொண்டாடும் கமலை, பாலசந்தரிடம் ‘இவன் நல்ல திறமையானவன்’ என அறிமுகப்படுத்தி வைத்தவர் ஜெமினி. இவர் அறிமுகப்படுத்தி வைத்ததால்தான் நமக்கெல்லாம் ஒரு உலகநாயகன் கிடைத்தார். பாசமலர் படத்தில் ஆரூர்தாஸ் வசனம் எழுத இவர்தான் காரணம். இதுபோல் எத்தனையோ பேர் திரைத்துறைக்கு அறிமுகமாக இவர் காரணமாக இருந்துள்ளார்.
நான், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு ஒரு சில பாடல்கள் எழுதியிருந்தபோதும் சரிவர வாய்ப்புகள் இல்லாது இருந்த காலம்... எனது நண்பர் ஒருவர், மதுரைக்கு வந்துவிடு உனக்கு 3000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித்தருகிறேன் என அழைத்தார். நானும் சரி மதுரைக்கே போய்விடலாம் என்று முடிவெடுத்திருந்தேன். அப்போது பி.பி. ஸ்ரீனிவாஸ், நான் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்தார்.
அவரிடம், சமீபத்தில் என்னப் பாடல் பாடியிருக்கிறாய் என கேட்டேன். அதற்கு ஸ்ரீனிவாஸ், ஜெமினி நடித்த ‘சுமைதாங்கி’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ என்றப்பாடலை பாடியிருப்பதாக கூறி, பாடியும் காட்டினார்.அந்தப் பாடலின் ஒவ்வெரு வரியும் எனக்கு புது உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தது. அது என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
மற்றொரு சமயம் கண்ணதாசனிடம் இது பற்றி பேசும் போது, “என்னை, உமது பாடலே உனக்கு ‘சத்ரு’வாக்கியது” என்று கூறியிருக்கிறேன்.
ஜெமினி கணேசன் ஒரு நாடகம் எடுப்பதாக இருந்தது. அதில் ஏ.எம்.ராஜாதான் கதாநாயகன். ஆனால் கதாநாயகி கிடைக்கவில்லை. என்கிட்ட அதுபற்றி கேட்டதற்கு, “பாரதியாரின் ‘குயில்’ நாடகத்தில் நடித்த பொண்ண அறிமுகப்படுத்தி, இந்தப் பொண்ணு நல்லா நடிக்கும். உனது நாடகத்தில் நடிக்க வை,” என்றேன். அதேமாதிரி அந்தப் பொண்ணே நடிக்க முடிவாகி ஒத்திகை நடந்துகிட்டிருந்தது. ஒரு நாலு நாள் கழித்து, “என்ன நாடகம் எடுத்தாச்சா, அந்தப் பொண்ணு எப்படி நடிக்கிறது.” என்று கேட்டேன். அதற்கு ஜெமினி, “நாடகம் எடுக்கவில்லை. அந்தப் பொண்ணும் இனிமே நடிக்காது. நானே அந்தப் பொண்ண கல்யாணம் கட்டிக்கப்போறேன்” என்றார். இப்படி நாலுநாள் ஒத்திகையின் போதே நடிக்க வந்தப் பொண்ண மனைவியாக்கி கொண்ட காதல் மன்னன்தான் ஜெமினி கணேசன்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

நயன்தாரா: ’நம்பி வந்த என்னை மோசம் செய்து விட்டீர்களே’


           ஜெயம் ரவி-ஹன்சிகா மோட்வானியை ஜோடியாக வைத்து ’எங்கேயும் காதல்’ என்ற படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது எங்கேயும் காதல். இதன் படப்பிடிப்பில் ஹன்சிகாவும் பிரபுதேவாவும் நெருக்கமாகி விட்டதாக கிசு கிசு பரவியது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது இருவரும் சேர்ந்து சுற்றினர். ஓட்டல்களிலும் ஒன்றாக தங்கியதாக படக்குழுவினர் முணுமுணுத்தனர்.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹன்சிகாவுக்காக சிறப்பு விருந்துக்கும் பிரபுதேவா ஏற்பாடு செய்தாராம். இந்த விருந்து விஷயம் நயன்தாரா காதுக்கு எட்டியதும் உடனடியாக கேரளாவில் இருந்து விமானம் பிடித்து ஐதராபாத் போய் இறங்கியுள்ளார். பிரபுதேவா-ஹன்சிகா இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஆவேசமாக திட்டி தீர்த்தார். பிரபுதேவாவுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
’நம்பி வந்த என்னை மோசம் செய்து விட்டீர்களே’ என்று நயன்தாரா தலையில் அடித்து அழுததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரபு தேவா நயன்தாராவை கழட்டிவிட்டு ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் ஆந்திர திரையுலகம் பேசிக் கொள்கிறது. 

ரமலத்தின் சாபம் சும்மா விடுமா நயன்தாராவை! அட, அதை விடுங்க... சிம்பு வீட்ல வெடி வெடிக்கிறாரே சத்தம் காதுக்கு கேக்குதா...            

மாநிலங்களவையில் திமுக எம்பிக்கும், அதிமுக எம்பிக்களுக்கும் தள்ளுமுள்ளு கைகலப்பு!

ஜெயலலிதாவை கைது செய்யக் கோரி மாநிலங்களவையில் பதாகையை காட்டிய திமுக உறுப்பினரை, அதிமுக உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம், இன்று மாநிலங்களவையில் கொடநாடு எஸ்டேட்டில் அரசு நிலத்தை கொள்ளையடித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பதாகை ஒன்றினை காட்டினார்.

அப்போது அதிமுக உறுப்பினர்கள், கே.பி. ராமலிங்கத்தை சூழ்ந்து கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த பதாகையையும் பறிக்க முயன்றனர். இதையடுத்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தலையிட்டு திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை விலக்கிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநிலங்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து கே.பி.ராமலிங்கம் கூறியதாவது, இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியவுடன், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியபோது, திமுக உறுப்பினராகிய நான், தொடர்ந்து அமளியில் ஈடுபடும் ஜெயலலிதா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கொடநாட்டில் அரசு நிலத்தை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா என்று பதாகையை அவை முன்னவரிடம் காட்டினேன். ஊழலைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் அதிமுகவினர் என்று சொன்னபோது, அதிமுக உறுப்பினர்கள் பாலகங்காவும், இளவரசனும் அந்த பதாகையை பறிக்க வந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது என்றார்.

Vijayakumar's. வனிதா சிறப்பு பேட்டி மிகவும் குழப்பம் மிகுந்த குடும்பம்

நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலில், இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம் என அவரது மகள் வனிதா ஆவேசமாக தெரிவித்தார்.

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. தனது மூத்த கணவர் மூலம் பிறந்த 9 வயது மகன் ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து விஜயகுமார் பறிக்க முற்பட்டதாக வனிதா குற்றம்சாட்டினார். இப்பிரச்னையில் தன்னை தாக்கியதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரில், ஆனந்த ராஜ் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் குறித்து தினமலர் இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், கடந்த 2 நாட்களாக தான் இதுவரை எந்த நாளிதழுக்கோ, அல்லது டி.வி.,க்கோ பேட்டி ஏதும் அளிக்கவில்லை என்றும், தனது பிரச்னைகளை தாண்டி, தனது கணவரை மீட்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் மட்டுமே போராடியதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை ஒரு சுனாமி வந்த தாக்கி அடித்து நொறுக்கியது போல் உணர்ந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஜெயிலில் இருந்து தனது கணவர் ஒருநாளில் வீடு திரும்புவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில், தான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்ததாகவும், இதற்கு காரணம் தனது நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்த வனிதா, கடந்த 30 ஆண்டுகளில் தான் பல பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும், அந்த பிரச்னைகளில் எப்போதுமே தனக்கு ஆதரவாக தனது குடும்பம் இருந்ததில்லை என்றும், தனது நண்பர்கள் மட்டுமே தன்னுடன் கூடஇருந்ததாக தெரிவித்துள்ளார். தனது கணவரை வீட்டில் வந்து சேர்த்த பின்னரே, தனது நண்பர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றதாக கூறும் வனிதா, இந்த விஷயத்தில் இனிமேல் தான் பிரச்னை ஆரம்பம் என ஆவேசமாக தெரிவித்தார்.

கணவரே முக்கியம்: தற்போது விஜயகுமாருடனான இந்த பிரச்னை நிச்சயமாக குடும்பப்பிரச்னை அல்ல என்றும், அதையும் தாண்டிச்சென்று விட்டதாக கூறும் வனிதா, தனது தந்தையே, தன்னைப்பற்றியும், தனது கணவரைப்பற்றியும் தவறான புகாரை போலீசில் அளித்ததுடன், தனது கணவரை கைது செய்ய வைத்துள்ளதாகவும் ஆவேசமாக தெரிவித்தார். இது தன்னையும், தனது குடும்பத்தையும் மிகவும் பாதித்து விட்டதாகவும், இந்நிலையில், எனது குடும்பமாக, அப்பாவா அம்மாவா என்றெல்லாம் தன்னால் பார்க்க முடியாது என்றும், தனக்கு தனது கணவரே மிகவும் முக்கியம் என்றும் வனிதா தெரிவித்தார். தனக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், தனது கணவர் தனக்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருவதாகவும், இந்த விஷயத்தில் தன்னை யாரும் சமரசப்படுத்த முடியாது என்றும், தனக்கு தனது கணவரும் குழந்தைகளுமே மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்பமே குழப்பமயமானது: விஜயகுமாருடன் என்னதான் பிரச்னை என அவரிடம் கேட்டபோது, தனக்கே அது தெரியவில்லை என்றும், தன்னுடைய குடும்பமே மிகவும் குழப்பம் மிகுந்த குடும்பம் என்றும், ஆனால் இதுவரை வெளியில் வரவில்லை என்றும் தெரிவிக்கிறார் வனிதா. இதற்கெல்லாம் தனது தந்தை விஜயகுமாரின் தவறான அணுகுமுறையே காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். தனது தந்தைக்கு இரண்டு மனைவி. ஒரு மனைவி கிராமப்புறத்தில் இருந்து வந்தவர். மற்றொருவர் நடிகை. தனது தந்தையுடனான திருமணத்திற்கு முன்பே தொழில்ரீதியாக பலருடன் தனது தாய்க்கு தொடர்பிருந்ததாக வனிதா தெரிவித்தார். விஜயகுமார் திரையுலகில் பலரது பிரச்னைகளை தீர்த்து வைத்தார் என்று மீடியாக்கள் சொல்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் தனது மகளுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. இதுவே உண்மை என்றும் தெரிவித்தார்.

கொலைக்கும் தயார்: நடந்த பிரச்னை தனது குழந்தை சம்பந்தப்பட்டது. தனது குழந்தைக்கு யாரேனும் பிரச்னை கொடுக்க நேர்ந்தால், அவர்கள் யாராகினும் கொலை கூட செய்ய தயங்க மாட்டேன் என்றும் வனிதா தெரிவித்தார்.

மிரட்டிய விஜயகுமார்: தனது குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அவரது பெற்றோர் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் எனது தந்தையோ, கையை சொடுக்கிக்கொண்டு, “நான் விஜயகுமார். இந்த தமிழ்நாட்டில் நீ தலை தூக்கி நடக்க முடியாது. தமிழ் நாட்டில் நீ இருக்க முடியாது” என்று மிரட்டியதாக வனிதா தெரிவித்தார். அவருக்கு எதிர் சவால் விட்ட நான், இந்த தமிழ்நாட்டில் உங்கள் முன் தலைதூக்கி வாழ்ந்து காட்டுவதாக கூறியதாக வனிதா தெரிவித்தார். ஆண்டவன் ஒருவன் உள்ளான். தான் தமிழ்நாட்டில் தலைதூக்கி வாழ்கிறேன். வாழ்வேன் என்றும் வனிதா ஆவேசமாக தெரிவித்தார்.

ஹன்ஸிகாவுடன் பிரபுதேவா புதுக் காதல்... ஹோட்டலில் நயன்தாரா சண்டை

Prabhu Deva and Hansikaஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, நயன்தாராவுடன் கள்ளக் காதல், திருமணத்துக்கு முயற்சி என வேறு ரூட்டில் பயணித்து வருகிறார்.

இதனை எதிர்த்து பிரபருதேவா மனைவி ரம்லத் நீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்காக தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளில் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் அனுப்பப்பட்ட சம்மனுக்கே இன்னும் பதில் தராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார் பிரபுதேவா. நயன்தாரா தனது சென்னை இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், நயன்தாராவுடனான காதலும் பிரபுதேவாவுக்கு சலித்துவிட்டது போலிருக்கிறது.

இப்போது தனது எங்கேயும் காதல் படத்தில் நாயகியாக நடிக்கும் ஹன்ஸிகா மோத்வானி மீது அவருக்கு புதிய காதல் பிறந்துள்ளதாம். இருவரும் இப்போது ஒன்றாகச் சுற்றத் தொடங்கியுள்ளார்களாம். ஹன்ஸிகாவை ஷாப்பிங் அழைத்துப்போனாராம் பிரபுதேவா. வெளியிடங்களில் இருவரும் தங்கும் அளவு முன்னேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரபு தேவாவிடம் கடுமையாக சண்டை போட்டாராம் நயன்தாரா.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே சண்டை முற்றியதால், பக்கத்திலிருந்தவர்கள் என்னவோ ஏதோவென்று வந்து விசாரிக்கும் அளவுக்கு விபரீதமாகப் போய்விட்டதாம் நிலைமை.

Mannar வழங்குநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பு எண்ணெய் அகழ்வு

வழங்குநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய்க் கிணறுகளை அகழ்வதற்குத் தேவையான பொருட்கள், சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். முதற் கட்டத்தின்போது மன்னார் கடற்பரப்பில் மூன்று எண்ணெய்க் கிணறுகளை அகழ்வது தொடர்பில் கெயான் லங்கா கம்பனியுடன் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கம்பனிக்கு ஆய்வு செய் வதற்கு 3,000 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவு வழங்கப்பட்டுள்ளது. செயான் லங்கா கம்பனி ஆய்வுபூர்வ அகழ்வு நடவடிக்கைகளை 2011 அக்டோபர் 15ஆம் திகதி பூர்த்தி செய்ய வேண்டும். இதேவேளை, இலங்கையின் தெற்கு கரைகடந்த பிரதேசத்தில் வண்டல் படுக்கையில் எண்ணெய் வளம் இருப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மேலதிக தரவுகள் திரட்டப்படவுள்ளன. செய்மதித் தரவுகள் மூலம் இரு பிரதேசங்கள் அடையாளங் காணப் பட்டன. இதன்படி 740 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தரவுகள் திரட்டப் பட்டன.
கார்த்திகை 26, 2010

சில புலி நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை

இன்று காலை இனந்தெரியாத சில புலி நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் காணால் போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் தலைவர் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுடரை ஏற்றும் வகையிலான புகைப்படத்துடனேயே மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன. இதனிடையே பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளில் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது இது குறித்த தகவல்களை தெரிவிக்கவோ மறுத்து விட்டது. புலி செயற்பாடுகள் இருக்கும்வரை இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால தடைசட்டம் நடைமுறையில் இருக்கும். மக்களே சிந்தியுங்கள் புலி பயங்கரவாதத்தை இல்லாத செய்தால் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத 15 கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் பொலிஸாரினால் சுற்றிவளைப்பு

சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த 15 கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களை குற்றத் தடுப்பு பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இவற்றில் 14 கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தவை என தெரிவிக்கப்படுகிறது.
சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் நாட்டில் இரண்டு கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களே இயங்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கேபிள் தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்த வேண்டுமாயின் தொலைதொடர்பு ஆணையகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளாத பல கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இயங்கி வரும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி நிறுவனங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய நிகழ்ச்சிகள் கூட ஒளிஒலிபரப்புச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கேபிள் தொலைக்காட்சி சேவையை நடாத்தி வந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Mullaithivu படையினரின் 16 சடலச்சிதைவுகள் இனங்காணப்பட்டன


முல்லைத்தீவில் தோண்டியெடுக்கப்பட்ட படையினரின் 16 சடலச்சிதைவுகள் இனங்காணப்பட்டன
இறுதிக்கட்ட யுத்த காலத்தில் முல்லைத்தீவு, வல்லிபுனத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அரச படையினரின் சடலங்கள் புதைக்கப்பட்ட இரு இடங்கள் 60 நிபுணர்கள் அடங்கிய தடவியல் குழுவொன்றினால் நேற்று வியாழக்கிழமை தோண்டப்பட்டு சடலங்களின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 16 சடலங்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும்  புலிகள் இயக்க சந்தேக நபர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் மூலம் இச்சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.முல்லைத்தீவு –  பரந்தன் பிரதான வீதியில் 28 கிலோமீற்றர் தொலைவில், 9 கிலோமீற்றர் தூரத்திலுள்ள  காட்டுப்பகுதியிலுள்ள விக்டர் 1 முகாமில்  இச்சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படையினர் 16.01.2009 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக மேற்படி சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார். புலிகளின் பிரதிப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ரட்ணம் மாஸ்டரினால் நடத்தப்பட்ட விக்டர் பேஸ்-1 முகாமில் 8 இராணுவத்தினரும் 18 கடற்படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மீட்கப்பட்ட எலும்புகளும் சாம்பலும் 24 சாக்குகளில் சேகரிக்கப்பட்டன. இவை கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு சடலங்களுக்குரியவர்களை உறுதிப்படுத்துவதற்காக தடவியல் சோதனைகள் நடத்தப்படவுள்ளது. - தமிழ்மிரர்  (படம் : லங்காதீப)

ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற தமிழர்கள் இருவர் சிறையில் தற்கொலை முயற்சி!

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில் பேர்த் நகரத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் இருவர் கடந்த திங்கட்கிழமை குளிசைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
இவர்கள் உடனடியாக ரோயல் பேர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் குணம் ஆகி வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இவர்களின் தற்கொலை முயற்சி அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். இவர்கள் கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் மனம் உடைந்த நிலையிலேயே உயிரை மாய்க்க துணிந்து இருக்கின்றார்கள். நீண்ட நாட்களாக சிறுகச் சிறுக இம்மாத்திரைகளை சேர்த்து வந்திருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர் கிறிஸ்மஸ் தீவில் கடந்த வருடம் ஆப்கானியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவரென நீதிமன்றால் குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார்.

அமைச்சர் கிருஷ்ணா வருகை கூட்டு ஆணைக்குழு அமர்விலும் பங்கேற்பார்!

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கூட்டணைக்குழுவின் அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எஸ், எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
மேலும் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளõர். நாளை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் கிருஷ்ணா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கு சந்திக்கவுள்ளார்.
50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சியில் வடக்கு ரயில்வே வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் உயர்மட்டத்தினருடனான சந்திப்புக்களின்போது வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தமன்னா வாய்ப்பு மைனா அமலாவுக்கு

'மைனா' தனக்கு மூன்றாவது படமாக இருந்தாலும் அசத்தல் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் சிறகடித்து பறந்து வருகிறார் அமலா பால். இவர் அனுஷ்கா விக்ரம் நடிக்கும் 'தெய்வமகன்' படத்தின் இன்னொரு கதா நாயகியாக நடிக்கிறார். மைனா வந்ததோ இல்லையோ அதிலிருத்து அமலாவிற்கு வாய்புகள் கதவைத் தட்டுகிறது.
 

அடுத்து லிங்குசாமி இயக்க இருக்கும் 'வேட்டை' படத்திலும் அமலா தான் நாயகி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த அடிதடி படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் தமன்னா இப்போது 'வேங்கை' படத்தில் நடிக்க இருப்பதால் அமலா பாலை முடிவு செய்திருக்கிறார் லிங்கு சாமி. அதுமட்டும் இல்லை , மாதவன் அடுத்து நடிக்கும் படத்திலும் அமலா தான் நாயகி.

இதற்காக மைனா படத்தின் இயக்குனர் பிரபு சாலமோனுக்கு தன் நன்றிகளை சொல்லி வருகிறார் அமலா. ஆர்யா நடிக்கும் வேட்டை படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். அடுத்தடுத்து அமலாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்றே சொல்லலாம்... தமிழ் சினிமாவில் வளம் வரப் போகும் இன்னொரு மலையாள குருவி...

சடங்குகள் பணம் பறிக்கும் புரோகிதத் தந்திரம். அதற்கும் ஞானத் தேடலுக்கும்??

வேதங்களில் முக்கியமான அங்கம், சடங்குகள். இவை ஞானத்தேடல்களுக்கு ஒப்பாக வேதங்களில் மையப்பகுதியை வகிக்கின்றன. ஆனால் சடங்குகள் என்றாலே ஒரு வெறுப்பும் விலகலும் , அறிவுஜீவி தளத்திலும்  பொதுஜன புத்தியிலும் கடந்த இரு நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. காலனிய புரோட்டஸ்டண்ட் பார்வைக்குள் வர முடியாத எந்த விஷயத்தையும் மூட நம்பிக்கை என்பதாக வெறுத்து ஒதுக்க நமக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளது.
சடங்குகள் பணம் பறிக்கும் புரோகிதத் தந்திரம். அதற்கும் ஞானத் தேடலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவை அதிகாரங்களை நிலை நிறுத்திக்கொள்ள பூசகர்கள் உருவாக்கியுள்ள அதிகார அமைப்பு. புரோட்டஸ்டண்ட் மதத்தின் பிற பண்பாட்டு சித்திரிப்பில் இந்தப் ‘போலிச் சடங்குகளால் மக்களை ஏமாற்றும் பூசாரி வர்க்கம்” ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் சடங்குகளை பேணிய சாதியினர் காலனிய ஆட்சியின் போது அன்னிய வந்தேறிகளாகவும் இந்திய பூர்விக வாசிகளான திராவிடர்களை ஏமாற்ற அல்லது அடக்க இந்த சடங்குகளை அவர்கள் மீது திணித்ததாகவும் கூறப்பட்டது. சில அறிவாளிகள் இன்னும் அதிகமாக போனார்கள். ஆரியர்கள் நெருப்பு சடங்கு உடையவர்கள் திராவிடர்களான  நாமோ நீர்ச் சடங்குகளையே உடையவர்கள்.
ஆனால் நெருப்புச் சடங்கு மேடைகள் சிந்து-சரஸ்வதி பண்பாட்டு அகழ்வாராய்வு மையங்கள் பலவற்றிலிருந்தும் கிடைத்துள்ளன. குறிப்பாக தெற்கு நோக்கிப் பரந்த சிந்து-சரஸ்வதி பண்பாட்டு மையங்களிலே இந்த சடங்குகளுக்கான அகழ்வாராய்ச்சி ஆதாரங்கங்கள் அதிகமாக கிடைத்துள்ளன.
மொகஞ்சதாரோவில் ஒரு பிரதான அறை நெருப்பு சடங்குக்கான கோவிலாக இருந்திருக்க கூடுமென கருதப்படுகிறது. எதுவானாலும் வேத நெருப்புச் சடங்குகள் அன்னியப் படையெடுப்பாளாரால் கொண்டு வரப்பட்டவை அல்ல.
சரி. வரலாற்று விஷயங்களை இப்போது விட்டுவிட்டு பிறகு ஆழமாக பார்க்கலாம். இப்போது இச்சடங்கு எதைக் குறிக்கிறது என்பதைச் சிந்திக்கலாம். உதாரணமாக விவிலியத்தில் யஹீவா தேவன் என்கிற இனக்குழு இறைவனுக்கான இரையை மேடைகளில் வைத்து எரிப்பது உண்டு. அத்தகைய தெய்வங்களுக்கான இரை அளிக்கும் சடங்காக வேத வேள்வி அமைந்ததா?  நிச்சயமாக அக்னி இங்கு அளிக்கப்படும் அவி உணவை தேவர்களுக்கு கொண்டு செல்லும் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆனால் வேத வேள்வியின் மைய கருத்தியல்  மிகப்பழமையான ஒரு ஆதார உந்துதலைத் தனது இதயமாகக் கொண்டிருந்தது.
இறைவன் என்பது ஒரு ஆளுமை அல்ல; இயக்கம். இதுதான் வேத வேள்வியின் மையக் கருத்து. இறைவனே அனைத்தும் ஆகும் பிரபஞ்ச நிகழ்வின் சிற்றுருவாக்க சடங்கே வேத வேள்வி. இறை மறுப்பாளரும் இதில் இறை அனுபவத்தை அடைய முடியும் என்பது வேத சடங்காளர்களின் துணிவு.
பரிபாடல் வேத வேள்வியின் இத்தன்மையை விளக்குகிறது:
செவ்வாய் உவணத்து உயர்கொடியோரே
கேள்வியுள் கிளர்ந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ்இயைந்து இசைமறை உறுகனல் முறை மூட்டித்
திகழ்ஒளி ஒண்சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படு வாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு (பரிபாடல். 2:60-68)
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் இப்பாடல் வரிகள் சொல்லும் கருத்தை தருகிறார்:

காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே

நிதீஷ் குமாருக்கு மீண்டும் வாழ்த்துகள் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.

அதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது: சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்; சாலைகளைப் போட்டார்; ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்; கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.

சரியாக, ஐந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு

இரண்டு தேர்தல்களுக்குமுன் நடந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் கூட்டணிக்கு சரியாக மேண்டேட் கிடைக்கவில்லை. நிதீஷ் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டு ஆட்சியை அமைத்தார். ஆனால் காங்கிரஸ் தன் டகால்டி வேலைகளைச் செய்து மாஸ்கோவில் இருக்கும் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் கையெழுத்து வாங்கி அந்த ஆட்சியைக் கலைத்தது. தொடர்ந்து நடந்த தேர்தலில் நிதீஷ் குமார் + பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கமுடிந்தது.

நிதீஷுக்கும் பாஜகவினருக்கும் உரசல்கள் இருந்தாலும், ஆட்சி நடத்துவதில் சிக்கல் ஏதும் இல்லை.

ஆனால் ஒன்றுமே இல்லாத இடத்தில் சில முன்னேற்றங்களைக் காட்டுவது எளிது. வரும் ஐந்தாண்டுகளில் நிதீஷ் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் சவாலே. இந்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட தென் மாநிலங்கள் அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்கவேண்டி இருக்கும். அதற்குத் தேவையான மனித வளம் அவர்களிடம் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கும் பிகாரிகள் அனைவரும் அந்த மாநிலத்துக்குச் சென்றால்கூட இது மிகவும் கடினமானது.பார்ப்போம், என்ன செய்கிறார்கள் என்று.

காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும். பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக அவரை நினைத்துப்பார்ப்பதில் பெரும்பாலானோருக்கு சிக்கல் இருக்காது.

போலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்?

vijayakumar newsசென்னை:தமிழக டி.ஜி.பி.,யிடம், நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள புகாரை அடுத்து, நடிகர் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய, மேலிடத்து உத்தரவுக்காக போலீசார் இன்னமும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மூவரும் கைதுக்கு பயந்து, தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர், தனது இரண்டாவது கணவர் ஆனந்தராஜனுடன் நுங்கம்பாக்கம் கோத்தாரி நகரில் வசித்து வருகிறார். வனிதாவிற்கு முதல் கணவர் ஆகாஷ் மூலம் விஜய் ஸ்ரீஹரி (9) ஜோவிகா (5) என இரண்டு குழந்தைகளும், ஆனந்தராஜன் மூலம் ஜெயினிதா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 5ம் தேதி, தீபாவளியை ஒட்டி, மூன்று குழந்தைகளும், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி கோவில் தெருவில் உள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்தனர்.தீபாவளி முடிந்து 7ம் தேதி தன் குழந்தைகளை அழைத்து வருவதற்காக கணவருடன் வனிதா விஜயகுமார் சென்றார். விஜயகுமார், மஞ்சுளா இருவரும், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியை அனுப்ப மறுத்து, அறையில் அடைத்துள்ளனர். இதனால், வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
அப்போது விஜயகுமார் வீட்டிற்கு வந்த, அவரது மூத்த மனைவி முத்துக் கண்ணுவின் மகனும், நடிகருமான அருண் விஜய், வனிதாவை வயிற்றில் எட்டி உதைத்ததாக வனிதா புகார் கூறினார்.
அருண் விஜய் மீது மதுரவாயல் போலீசில் வனிதா விஜயகுமார், கணவர் ஆனந்தராஜனுடன் சென்று புகார் அளித்தார். புகாரின் மீது, போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், கடந்த 15ம் தேதி மருமகன் ஆனந்தராஜன் தன் கையை முறித்துவிட்டதாக மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். பெயிலில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் அவசர அவசரமாக வழக்கு பதிந்த போலீசார், கடந்த 23ம் தேதி இரவு ஆனந்தராஜனை கைது செய்தனர்.
இதை எதிர்த்து, நேற்று முன்தினம் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வந்த வனிதா விஜயகுமார், டி.ஜி.பி., லத்திகா சரணை சந்தித்து மனு அளித்தார். விஜயகுமாரை கைது செய்ய இப்போது வரை உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். ஆனால், நடிகர் விஜயகுமார், இரண்டாவது மனைவி மஞ்சுளா, முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் கைதாவதை தவிர்க்க தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. அவர்கள், தங்களுக்கு தெரிந்த வி.ஐ.பி.,க்கள் மூலம் தூது முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், அருண் விஜயை கைது செய்யாத வரை, இப்பிரச்னையை விடப்போவதில்லை என்றும், இதற்கு பின்னணியில் யாரோ இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
குடும்பச் சண்டை வீதிக்கு வந்த நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் நடிகர் விஜயகுமார் தரப்பு தற்போது தவித்து வருகிறது.இவர்கள் குடும்பத்துக்கு, "எல்லாமாக இருக்கும், "சூப்பர் நடிகரின் இப்பிரச்னை குறித்த நடவடிக்கை பற்றி, சினிமாக்காரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

2011 தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் "ஹீரோ': ஸ்டாலின்

""தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் '' என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் நேற்று மாலை தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., அரசு கட்சி பாகுபாடின்றி அனைவரையும் சமமக்களாக நினைத்து திட்டங்களை செயல்படுத்துகிறது. நேற்று பெய்த மழையில் முளைத்த கட்சிகள், மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன. நான் யாரையும் அடையாளம் காட்டி பேசவில்லை. அப்படி பேசுபவர்கள் இன்று, அகதிகளாக; அனாதைகளாக அலைகின்றனர். ஆனால், முதல்வர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று, தற்போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். இதே போல், வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

தமிழகத்திலுள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இந்தாண்டு துவங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் செயல்படுத்தும் இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தி குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு வீடுவழங்கும் திட்டத்தை முதல்வர் விரிவுபடுத்தியுள்ளார். வீடுகட்டும் பணிகள் நிதி வசதி இல்லாமல் தடைபடவில்லை, இயற்கை ஒத்துழைக்காததால் சில மாவட்டங்களில் தடைபட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். தி.மு.க., அரசை எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாததால், ஜெயலலிதா பொய்யான பிரச்னைகளை கிளறிவிடுகிறார். இதற்கு முடிவு சொல்லும் வகையில் 2011 சட்டசபை தேர்தல் முடிவு அமையும். இவ்வாறு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர்கள் பழனிச்சாமி, சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
லிஸ்ட் - இலவசனர்கோட்டை,இந்தியா
2010-11-26 06:21:34 IST
எனக்கு தேவையானவை: iPhone, Laptop, 100cc bike, LCD TV. MP தேர்தல் வரைக்கும் இது போதும்....
பச்சைத்தமிழன் சுரேஷ் - பரமக்குடிமலேசியா,இந்தியா
2010-11-26 06:02:37 IST
அடுத்து என்ன என்ன ஓசில கொடுக்க போறானுங்களோ! படிச்சவங்களுக்கு நல்ல வேல வாய்ப்பு கொடுங்கப்பா. அதவுட்டுட்டு வேல இல்லாதவனுக்கு ஊக்க தொகை தாறேன், ஓசில அடுப்பு தர்றேன், ஒரு ரூபா அரிசி தர்றேன், ஏமாததிங்க.......
குமார் - Singapore,சிங்கப்பூர்
2010-11-26 05:52:35 IST
தயவு செய்து யாராவது வழி சொல்லவும். இது நம் தாய்நாட்டை இது போன்ற ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றுவதர்காகத்தான். அடுத்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் இலவசம் என்று அறிக்கை விடாமல் இருக்க நீதிமன்றத்தில் தடை இப்போதே வாங்க வேண்டும். இலவசங்களை தவிர்த்து வேலை வாய்பு, கல்வி முன்னேற்றம், புதிய தொழிற்சாலை என்று வேண்டுமானால் அறிக்கை விட்டும். அடிமட்ட ஏழை மகளுக்கு இலவச உணவு பண்டங்களை தவிர எந்த ஒரு இலவசமும் எந்த ஒரு கட்சியும் அறிவிக்க கூடாது. இலவசங்களின் பெயரால் இந்த பண முதலைகள் பெருத்த பிறகும் ஆசை அடங்காமல் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மென்மேலும் பணக்காரர் ஆவார்கள், நாட்டு மக்கள் உழைப்பின் அருமையை உணராமல் சோம்பேறிகள் ஆஹி விடுவார்கள். நமக்கு பிறகு அடுத்த தலைமுறை இங்கு வாழ வேண்டும். அதற்கு இலவசங்கள் வழி செய்யாது. நாட்டு மக்களே நன்று யோசித்து உழைத்து வாழ வழி கேளுங்கள். இலவச மீன் சாப்பாட்டுக்கு பதில் மீன் பிடிக்க கற்று கொள்ளுங்கள். இலவசங்கள் ஒரு ஆட்கொல்லி. இலவசங்களால் நாடு அழிவு பாதையில் செல்லும் போது இந்த முதலைகள் வேறு நாட்டுக்கு ஓடிவிடும். பொதுமக்களாகிய நாம் தான் சாகவேண்டும் குடும்பத்தோடு. நன்கு நினைவில் வைத்து கொள்ளவும், நமக்கு பிறகு அடுத்த தலை முறை இங்கு வாழ வேண்டும். இலவசங்களை வாங்காதீர்கள். நான் ஒரு சாதாரண மனிதன், தனி ஆளாக நீதிமன்றம் செல்லமுடியாது. யாராவது வழி சொலவும், இபோதே இலவச அறிக்கைகளுக்கு நீதிமண்டரத்தில் தடை உத்தரவு வாங்க வழி சொலவும்....
தமிழ்செல்வன் - சென்னை,இந்தியா
2010-11-26 05:47:58 IST
ஊழல் திலகங்களே நீங்கள் சொல்லாதை பல செய்துள்ளீர்கள் !! செப்க்ட்ரும் ஊழல்,அரசு கேபிள் ஊழல்,மணல் கொள்ளை ஊழல்,அரிசி கடத்தல் ஊழல்,சேது சமுத்திரம் ஊழல்,தேசிய நெடுஞ்சாலை ஊழல்,மேம்பால ஊழல்,வாக்களர்களுக்கு பணம் குடுத்து ஒட்டு வாங்கியது(திருமங்கலம் பார்முலா),எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை i பணம் கொடுத்து வாங்கியது,மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி ஆக்க நினைத்தது,மதுரையில் தினகரன் ஊழியர் மூவரை உயிர் உடன் கொன்றது,தா கிருடின்னனை வெட்டி கொன்றது, போன்ற முக்கிய சாதனை எல்லாம் மறந்து விடாதீர்கள் !! உங்களது சாதனைகளை பார்த்து பிரதமர் மற்றும் சோனியா கட்டுமான துறை எதுவும் திமுகவிற்கு இல்லை என முடிவு எடுத்து விட்டார்களே !! உங்கள் குடும்பத்தில் பல டிக்கெட்டுகள் டெல்லியிலும்,சென்னையிலும் பதவியில் இருந்து கொள்ளை அடியுங்கள். உங்கள் கொள்ளை வெளியில் தெரிந்தால் ராஜா போன்ற கூஜாக்கள் (இளிச்ச வாயர்கள்) பல உள்ளார்கள் அவர்களை மாட்டிவிடலாம் !! உங்கள் சாதனைகளால் கூட இருந்த காங்கிரஸ் பீகாரில் ஜீரோ வாங்கி விட்டது !! வரும் உங்கள் ஊழல் சாதனை தேர்தல் அறிக்கை தான் ஹீரோ !! மக்கள் தரப்போவது ஜீரோ !!! மூட்டையை கட்டி தயாரா இருங்கள் !!...
selva - sydney,ஆஸ்திரேலியா
2010-11-26 05:23:56 IST
Deputy CM Of Tamilnadu, everything is ok, where is 2G spectrum scandal money this is the hero of now....
இளமாறன் - சென்னை.,இந்தியா
2010-11-26 05:18:17 IST
இலவச மனை, இலவச கட்டிங், இலவச பிரியாணி, நூறு நாள் வேலை உத்தரவு திட்டத்தில் இலவச பணம், ஒரு ரூபா அரிசி எல்லாம் சூப்பர். நாங்கள் எங்களுக்கு கிடைத்த இலவச பணத்தில் டாஸ்க்மாக் சரக்கு அடித்துவிட்டு, ஒரு ருபாய் அரிசியில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு சுகமாக இருக்க உடம்பு சுகத்திற்கும் ஒரு இலவச விலைமாது கொடுத்தால் நான் சாகும் வரை என் ஒட்டு தி மு கா விற்குதான்....
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-11-26 05:13:26 IST
முதலில் சட்டம் ஒழுங்கு பற்றி கவனம் செலுத்துங்கள் தலைவரே. கலைஞர் குடும்பத்தின் வாரிசுகளின் நண்பர்கள் என பல பேர் அராஜகம் செய்து தி மு க விற்கு உலை வைக்கின்றனர். இனியும் மக்களை குறைத்து எடை போட வேண்டாம்....
அருண் - சென்னை,இந்தியா
2010-11-26 04:23:50 IST
மக்களே, இனியும் ஏமாற வேண்டாம் !!! இவங்க அடுத்து செல் போன் இலவசம் நு சொல்ல போறாங்க !! வீட்டுக்கு ஒரு லேப்டாப் நு சொல்லுவாங்க !! போதும் !! இவர்கள் கொள்ளை அடித்தது போதும் !!! இவை அனைத்தும் மற்ற பொருட்களின் விலையை மறைமுகமாக உயர்த்தும் !! தமிழகம் விற்கப்படும் !! சட்டம் என்பது இருக்காது !! மன்னர் ஆட்சி வந்து விடும் !!!...
subramanian - Trichy,இந்தியா
2010-11-26 04:12:32 IST
திமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் அல்ல லஞ்சத்திலும் முதல் இடம் தான். அரசு அதிகாரிகளை கண்டிக்க தவறிய திமுக...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-11-26 03:49:40 IST
தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஜீரோவாக இருக்கும் '' என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் ஏமாற்றி வருகிறார். சொல்வதை செய்யமாட்டோம் செய்வதை சொல்லமாட்டோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிப்போம் என்று சொல்லாததையும் செய்து வருகிறார், ஒரு வீடு கட்ட ஆறு மாதம் ஆகும், ஆனால் மூன்று லட்சம் வீடுகள் டிசம்பர் மாதத்திற்குள் அறையும் குறையுமாக, தரம் இல்லாமல் கட்டி முடித்து, திமுகவினருக்கே கொடுக்கும் அரசு திமுக அரசு ஒன்று தான். அடிக்கல் நாட்டு விழாவும், திறப்பு விழாவும் ஒரே நாளில் நடத்தும் கட்சி திமுக கட்சி தான். வரும் தேர்தலில் அறிக்கையில் எல்லாருக்கும் இலவசமாக மூன்று வேலை சாப்பாடு இலவசம், சாப்பிட்டு குடிக்க மது இலவசம், மாது இலவசம், நீங்கள் வேலைக்கே போகதேவை இல்லை, வீட்டிலே உட்கார்ந்து கொண்டு நாங்கள் கொடுக்கும் இலவசங்களை வைத்து காலத்தை கழிக்கலாம், அது போன்ற ஒரு தேர்தல் அறிக்கை வர போகிறது. இவ்வாறு துணை முதல்வர் பேசினார். எங்கள் தலைவர் கருணாநிதி கூறினார், யாரும் யோசிக்கவிடகூடாது, அவர்களை இலவசங்கள் கொடுத்து பிச்சை காரர்களாக வைத்து கொள்ள வேண்டும் அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும் என்று... அதனால் அதிக பட்ச இலவசங்களுடன் தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டுள்ளது, யாரும் வருத்த படாதீர்கள். கோவிலில் அன்னதானம் கொடுப்பது போல தினமும் எல்லாருக்கும் இலவசம் அளிக்க படும் அதற்காக தான் ஸ்பெக்ட்ரம் பணம் வைத்துள்ளோம்....
த.செல்வன் - திருநெல்வேலி,இந்தியா
2010-11-26 03:28:13 IST
நீங்க எதிபார்க்கிற முடிவை 2011 ல் நிச்சயமாக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.இன்னும் இலவசம் கொடுத்து,பணத்தை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என கனவு காண்கிறிர்கள் பீகார் மக்களை விட தமிழக மக்கள் மோசமில்லை.தமிழக மக்களும் வைராக்கியம் உள்ளவர்கள்தான் என்பதை 2011 ல் உங்களுக்கு புரியவைப்பார்கள்.இவ்வளவு கொள்ளை,கடத்தல்,கொலை,ஊழலோ ஊழல்.தலை முதல் கால் வரை ஊழல்.எந்த திட்டமாவது உங்க குடும்பத்துக்கு உதவாத திட்டம் போட்டிருக்கிரிர்களா?எல்லா திட்டங்களிலும் ஊழல்,கமிசன்.ஆசியாவின் முதல் பணக்காரனாக உங்கள் குடும்பம் ஆனது எப்படி என்பதை தயவு செய்து தமிழக மக்களுக்கு சொல்லுங்கள் பாவம் தமிழக மக்களும் பிழைத்து போகட்டும்.சொல்ல முடியுமா?...
சாமி - பாங்காக்,தாய்லாந்து
2010-11-26 03:16:08 IST
இனிமே ஒரு கூட்டம் பஞ்சு முட்டாயில இருந்து பஞ்சு தலைகாணி வரைக்கும் எப்ப வந்து விழும்னு கையில ஒரு சட்டிய வச்சுக்கிட்டு காத்து கிட்டு இருக்கும். ஸ்டாலின் நீங்க சொன்னதுல நிறைய உண்மை இருக்குங்க. அதாவது சொல்றத மட்டும் இல்லாம சொல்லாததையும் செய்வீங்கன்னு சொன்னிங்க பாருங்க. அங்க தான் நீங்க நிக்கறிங்க. உதாரணத்துக்கு ஸ்பெக்ட்ரம், அரிசி கடத்தல், மணல் கடத்தல். ரவுடி, திருடன எல்லாம் மந்திரி , சட்ட மன்ற உறுப்பினர் ஆக்குவது. ரவுடிகளா பாத்து பொறந்த நாளைக்கு வெளியில உடறது. ஒரு வார்டு கவுன்சிலர் கூட மிக பெரிய கலவரத்தை உங்க ஆட்சியில மட்டும்தான் உண்டு பண்ண முடியும். அப்புறம் நாலஞ்சு முதல்வர்கள் ஆளுகின்ற மாநிலம் என்ற நற் பெயர் வங்கி கொடுத்தது. கஞ்சி குடிக்க வழியில்லாத நிலையில் இருந்து எந்த தொழிற்சாலையோ, தொழில்களோ இல்லாத நிலையில் அரசியல் மூலமாக மட்டுமே ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கொடிகளை சேர்க்க முடிந்தது. கேட்டால் கதை வசனம் ezhuthi சம்பாதித்தது என்று திரும்ப ஒரு கதை viduvathu....
கதிரவன் - Namakkal,இந்தியா
2010-11-26 03:15:44 IST
ஆமாம்!! ஆமாம் !!! நீங்கள் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து தமிழகத்தின் பெருமையை உலக அளவில் கின்னஸ் புக் இல் இடம் பெற செய்து விட்டீர்கள் !!! அதனால் சத்தியமாக DMK (உங்கள் தந்தை மற்றும் உங்கள் குடும்ப மற்றும் கழக பெருச்சாளிகள்தான்) தான் ரியல் ஹீரோக்கள் !!!!! ஏன் சொல்ல மாட்டார் உள்துறை அமைச்சர் சிதம்பரம்,, யாரால் முடியும் தோற்று விற்ற MP யை ஜெயித்து விட்டதாக தேர்தல் அதிகாரியையே அறிவிக்க சொல்ல உங்கள் தந்தையை தவிர !!! சும்மா சொல்ல கூடாது சிதம்பரத்தின் நன்றி விசுவாசத்தை, தான் எப்பொழுது தமிழகம் வந்தாலும் மஞ்சள் துண்டை பார்க்காமல் தன் வீட்டிற்கே போவதில்லையாம் !! ஆனால் அந்த நன்றி விசுவாசத்தில் கொஞ்சமாவது வோட்டு போட்ட மக்களுக்கு காட்டுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும் ... ... இந்த வருடம் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கும் முன்னர் தயவு செய்து கொஞ்சம் உங்கள் இயக்கத்தின் முன்னோடி "பேரறிஞர் அண்ணா" மற்றும் "பெருந்தலைவர் காமராஜர்" ஆகியோரின் அரசியல் கொள்கையை படித்து விட்டு செயல்படுங்கள் அப்பொழுதாவது கொஞ்சமாவது தன்னலம் மறந்து மக்களுக்கு சேவை செய்ய எண்ணம் பிறக்கும்....
வைகை Selvan - Periyakulam,இந்தியா
2010-11-26 02:51:03 IST
அட்லீஸ்ட் அடிச்ச 1.76 லட்சம் கோடி பணத்துல 50 % வச்சாலும் 88 ஆயிரம் கோடி இருக்கே. இலவசங்கள அள்ளிவிடுங்க. பாமர மக்கள் அத பாத்து ஒட்டு போட்டுருவாங்க.. பாவம் தமிழ் நாடு.. தமிழ் நாட்டு மக்கள்.....
பாஸ்கர் - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-11-26 02:38:39 IST
2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை தான் ஹீரோ , மற்ற கட்சிகள் வில்லன்ஸ் - 2011 ஆம் ஆண்டு நீங்க சொன்ன மாதிரி தேர்தல் அறிக்கை தான் ஹீரோ , ஆனல் வில்லன்ஸ் - மக்கள் - எப்போ சொல்லுங்க ...நீங்க ஜெய்க்க முடியுமா?...
sathish - melbourne,ஆஸ்திரியா
2010-11-26 02:22:15 IST
ஊழலின் விளக்கமே,,, ஊழலின் பிறப்பிடமே,, ஊழலின் ஊற்றே ,,,,ஊழலியே பிறந்து,,,ஊழலிலே வளர்ந்து,, ஊழலிலே ஊறி கொண்டு இருக்கும் தமிழகமே,,, வாய் பந்தல் போடுவதற்கும் ஒரு சாமர்த்தியம் கண்டிப்பாக வேண்டும்,,, ஒரு ரூபாயில் திருட்டு ரயில் தான் ஏறி வந்தேன் என்று பெருமையாக பீத்தி கொள்ளும் தந்தையின் வாரிசும் அதே போல்தான் பீத்துகிறது,, மூணு லட்சம் வீடுகள் ,,,கொஞ்சம் ஓய்வாக வீட்டிற்கு போயி உட்க்கார்ந்து யோசிச்சால் தெரியும் ,,எவ்வளவு முட்டாள் தனமாக மக்களை முட்டாள் ஆக்கி கொண்டு இருப்பது,,, {{{இந்த குடிகார ,,இலவச வெறி கொண்ட மக்கள்,,இல்லை,,இல்லை,,அறிவு கெட்ட மாக்களுக்கும் இது தான் தேவை எனபது தான் உண்மை,,,}}} தெரியும்,,புரியும்,, குடும்பஅரசினால் இந்தியாவின் தரம் உலக அரங்கில் எவ்வளவு தாழ்ந்து போயி இருப்பது உங்களை போன்ற அறிவிலிகளால் எப்படி உணர முடியும்,,, தேர்தலுக்கு முன் உங்கள் கேடு கெட்ட இலவச ஊழல் அறிவுப்புகள்தான் ஹீரோ,,,,,,, சந்தேகமே வேண்டாம்,,,,,, ஆனால் தேர்தலுக்கு பின் மக்கள் தகுந்த பாடம் உங்களுக்கு கற்பித்து உங்களின் ஊழலின் சாம்ராஜ்யத்தையே,,,, ஜீரோ ,,,,ஆக்க போகிறார்கள்,,,உங்கள் பொடி தூசி கூட காணாமல் போகிறது,,,ஆனால் ஒன்று நீங்கள் கொள்ளை அடித்த கோடி கோடி கணக்கான ஊழல் பணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்,,, பகல் இருந்தால் ,,,,அடுத்து வருவ

நடிகர் சத்யராஜ்,நடிகை ரோகிணி பங்கேற்ற நடைபயணம்


பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற நடைபயணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 25ம் தேதி பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று ஐநா அறிவித்தது.
 
இதையொட்டி சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து களங்கரை விளக்கம் வரை நடைபயணம் நடைபெற்றது.

இதில் நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி பங்கேற்றனர்.  

நடிகை ரோகிணி,   ’’ஒரு நாளு சுவற்றுக்குள் நடக்கும்போது எந்த அளவிற்கு பெண் அபலையாக இருப்பாள் என்று உணர்ந்திருக்கிறேன். 

பெண்களுக்கு மன தைரியம் வேண்டும்.   வெளியே வந்து உங்கள் குடும்பத்தை பற்றியோ, எங்களுக்கு எதிராக  நடக்கும் பிரச்சனைகள் பற்றி சொல்வதால் எந்த குடியும் கெட்டுப்போகாது’’என்று தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தின் பேது பெண்களுக்கு எதிரான வரதட்சணை, பாலியல்கொடுமைகள், பெண் சிசு கொலைகள் மற்றும் பெண் சிசு குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன.

Internet உங்களுக்கென்று ஒரு பிரத்யேக இன்டர்நெட் முகவரி வியாபாரத்தைப் பெருக்க

புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது என்பது இன்றைய உலகில் கடினமானதாக மாறி வருகிறது. போட்டி மிகுந்த உலகத்தில் வெல்ல வேண்டுமானால் ஒரு வியாபாரி பாரம்பரியத் திறமைகளையும், அதேசமயம் நவீன தொழில்நுட்பத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏனோ புதிதாக தொழில் தொடங்கும்போது இன்டர்நெட்டுக்கு நாம் முக்கியதுவம் கொடுப்பதில்லை. ஆனால் அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறி விட்டது இன்டர்நெட் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விடுகிறார்கள். உண்மையில், இன்டர்நெட் வியாபாரத்திற்கு பெரிதும் உதவும்.

வியாபாரத்தை இணையதளம் என்ற பிளாட்பாரத்திற்கு ஏற்றி வைத்தால், அது மேலும் பல படி வளரவும், முன்னேறவும் வாய்ப்பு ஏற்படுகிறது. விளம்பரம், விற்பனை, இமேஜ் உருவாக்கம், வாடிக்கையாளர்கள் தொடர்பு, நம்பகத்தன்மை ஊக்குவிப்பு, ஆன்லைன் பரிமாற்றம் என பல நன்மைகள் இதில் இருக்கிறது.

இணையதளத்தில் இருப்பது என்றால் பிளாக் வைத்திருப்பது அல்ல. ஆன்லைனில் இருக்க பிளாக் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிளாக் வைத்திருப்பதில் சில சிக்கல் உள்ளது. பிளாக் நம்முடையது என்றாலும், டொமைன் நேமும், பிளாட்பார்மும் வேறு ஒருவருடையது. அதனால் விதிமுறையை மீறினால் எந்த நேரத்திலும் பிளாக் முடக்கப்படும். மேலும், அதிலுள்ள தகவல்களும் கிடைக்காமல் போய் விடும்.

அதேசமயம், நமக்கே நமக்கென்று சொந்தமாக ஒரு டொமைன் நேம் வைத்துக் கொள்வது தான் உங்கள் வியாபாரத்திற்கு ஆன்லைனில் தனித்துவம் அளிக்க சிறந்த வழி. இது எப்படி என்றால் நாமே நமக்கென்று சொந்தமாக வீடு கட்டிக் கொள்வது போல. பிளாக் என்பது வாடகை வீடு போலத்தான்.

டொமைன் நேம் என்பது உங்களின் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் உங்களின் தயாரிப்புகளையோ அல்லது சேவைகளையோ இணையதளத்தில் தேட உதவும் ஒரு முகவரி.

டொமைன் நேம் பிளாக் போன்று இல்லை. இது பதிவு செய்பவருக்கே உரியது. மேலும், யாரும் உங்களது டொமைன் நேம் போல் மற்றொன்றை உருவாக்க முடியாது. டாட் இன், டாட் எடு, டாட் ஓஆர்ஜி, டாட் நெட் என பல்வேறு டொமைன்கள் இருந்தாலும் வர்த்தகத்திறகுச் சிறந்தது டாட் காம் தான்.

முதலில் தொடமைன் நேமைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் வியாபாரத்தின் பெயர் டாட் காம் அல்லது பிரான்ட் பெயர் டாட் காம் போன்று உருவாக்கி பதிவு செய்யவும். உங்கள் இணையதளத்தின் நம்பகத்தன்மை நீங்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பதிவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்துள்ளது.

கூகுள் உள்ளிட்ட இணையதள ஜாம்பவான்களுக்கு உங்கள் இணையதளத்தின் நம்பகத்தன்மையை உணர்த்த நீண்டகாலத்திற்கு டொமைன் நேமை பதிவு செய்யவும்.

டொமைன் நேமை பதிவு செய்து உருவாக்கியவுடன் உங்களுக்கென்று தனியாக மின்னஞசல் முகவரியை உருவாக்கவும். சொந்தமாக டொமைன் நேம் வைத்திருப்பதால் சாப்ட்வேரை கட்டுக்குள் வைக்க முடியும். நீங்கள் ஹெச்டிஎம்எல் பக்கங்களை பயன்படுத்தி பிரத்யேக பிரதிகளை அதிகரிக்கவும், வேர்டுபிரஸில் போடுவது உள்ளிடவைகளை செய்ய முடியும்.

இதன் மூலம் உங்கள் இமேஜை நீங்கள் நினைத்தவாறு உருவாக்கலாம். இன்னும் ஏன் தாமதம் உடனே பதிவுசெய்து உங்கள் வியாபாரத்தைப் பெருக்குங்கள்

ஆபாச இணையத் தளங்களை வடிவமைப்போர் மீது தண்டனை

அறியாமையால், விருப்பமின்றி அல்லது காட்சிப்படுத்தும் நோக்கமின்றி ஆபாச இணையத்தளங்களில் தோற்றியுள்ள நபர்களின் இரகசியத் தன்மையினைப் பேணி அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு கோட்டை நீதவான் செல்வி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (25) தெரிவித்தது. அந்த நபர்களின் புகைப்படங்கள் பிரசித்தி ப்படுத்தப்பட மாட்டாது எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது. ஆபாச இணையத் தளங்களிற்கு காட்சியளிக்கும் புகைப்படங்களை பிரசித்தப்படுத்துவதற்கு முன்னர் தேவையான வர்களுக்கு அந்தப் புகைப்படங்களை வந்து பார்வையிடுவதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகம் மற்றும் காலி, கண்டி, நீர்கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, அநுராதபுரம், அம்பாறை ஆகிய தொகுதி காரியாலயங்களில் இரகசியமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது. ஆபாச இணையத் தளங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற நபர்களின் புகைப்படங்களை நீதிமன்ற அனுமதியின் மீது பத்திரிகைகளில் பிரசுரித்ததன் பின்னர் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் சிறுவர் மற்றும் பெண்கள் பணி யகத்திடம் ஆஜரானதாகவும், மேலும் ஒன்பது பேர் தொடர்பாக அனாமதேய அழைப்புக்கள் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணியகம் நேற்று (25) நீதவானிடம் தெரிவித்தது. ஆபாச இணையத் தளங்களை வடிவமைத்து இணையத்தில் சேர்த்து பணம் உழைப்போர் தொடர்பாக தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் கூட்டாக அல்லது தனிப்பட்ட முறையில் நிறுவனங்களை நடத்திச் செல்வது அல்லது பங்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் கூறுகின்றது.

முறிகண்டி பிள்ளையார் கோவில் விவகாரம்;

 ஜனவரியில் விசாரணை
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்  பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட கோவிலை  தன்னிடமே தருமாறு கோரிக்கை
முறிகண்டி பிள்ளையார் கோவிலை பரம்பரை தர்மகர்த்தாவிடம் ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது. ஏ – 9 வீதியில் அமைந்துள்ள மேற்படி கொவிலின் முன்னாள் தர்மகர்த்தா மணிவண்ணன், கோலியின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அதனை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்து கலாசார விவகார திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் தனது சொத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு வேண்டியே நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தன்னிடமிருந்து குறித்த கோவிலை பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதால் அதன் பின்னர் தான் இந்தியாவுக்குச் சென்றதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியடைந்த நிலையில் மேற்படி கோவிலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென உரிய அதிகாரிகளிடம் கோரிய போதிலும் அதனால் எவ்விதப் பயனும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த கோவிலுக்குச் சேரவேண்டிய பணம் இந்து கலாசார விவகார திணைக்கள பணிப்பாளர் மேற்பார்வையில் கொழும்புக்கு அனுப்பப்படுவதாகவும் முன்னாள் தர்மகார்த்தா தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு லண்டனில் வசிக்கும் தமிழர் உபவேந்தராக நியமனம் ?

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தற்போது லண்டனில் வசிக்கும் கலாநிதி எஸ்.திருச்செல்வம் நியமிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட கல்லாறு என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் வேந்தராக முன்பு கடமையாற்றியிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரதியமைச்சர் முரளிதரன் பிரிந்துசென்ற வேளையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் இவர் லண்டனுக்கு சென்றிருந்தார். இந்தவேளையில் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் அதனை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகத்தின் அக்கறையுள்ள மாணவர்கள் மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன், தமிழ் தேசிய கூடடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்த நிலையில் இது தொடர்பில் எமக்கு லண்டனில் இருந்து கருத்து தெரிவித்த கலாநிதி எஸ்.திருச்செல்வம், தம்மை மீள பல்கலைக்கழகத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

சினிமா எடிட்டிங் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பிலிம்களை கையில் வைத்துக் கொண்டு

அத்தியாயம் 7
சினிமாவில் இப்போதெல்லாம் டெஸ்ட் ஷூட் என்று சொல்லப்படுகிற ஆடிஷனும் எடுக்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றியடைந்த சுப்ரமணியபுரம், நாடோடிகள், லேட்டஸ்டாக வெளிவந்த இனிது இனிது படங்களுக்கு இந்த முறையை கடை பிடித்திருக்கிறார்கள். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து படம் எடுப்பது. சாதாரண வீடியோ ஷூட்டிங்தான் இது என்றாலும் நடிப்பே வராத, அல்லது அந்த கேரக்டருக்கு பொருந்தாத நடிகர் நடிகைகளை அங்கேயே கழற்றிவிட இந்த முறை பெரிதும் உதவுகிறது. இந்த ஆடிஷன் ஒரு மினி ஷூட்டிங் போலவே நடப்பதால் நிச்சயம் உதவி இயக்குனர்களின் பங்கு நிறையவே இருக்கும்.
சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த சண்முகராஜ் தற்போது ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார் இவர். தான் எடுக்க நினைத்த படத்தை சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்து பீட்டா கேமிரா உதவியுடன் படமாகவே எடுத்துவிட்டார். இதில் பாடல் காட்சிகளும் கூட அடக்கம். எடுக்கப்பட்ட காட்சிகளை முறையாக எடிட் செய்து இரண்டரை மணி நேர படமாகவே உருவாக்கிவிட்டார் இவர்.
படப்பிடிப்புக்குத் தேவையான பெப்சி தொழிலாளர்கள்தான் பங்கு பெறவில்லையே தவிர, உதவி இயக்குனர்கள் அத்தனை பேரின் உதவியுடன் இந்த படம் உருவானது. தற்போது யூனிட், மற்றும் ஒளிப்பதிவாளர் துணையுடன் இந்த படத்தை திருவண்ணாமலை அருகே படமாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு முயற்சியை இதற்கு முன்பு யாரும் செய்யவில்லை என்று கம்பீரமாக சொல்லும் இவர், தனது உதவி இயக்குனர்கள் இல்லையென்றால் அது சாத்தியமே இல்லை என்கிறார்.
பூஜையின் போதே இது எந்த மாதிரி படம் என்று மக்களுக்குச் சொல்லவும், விநியோகஸ்தர்களின் பார்வையைத் தம் பக்கம் திருப்பவும் செய்யப்படும் மிகப்பெரிய செலவுதான் இந்த படத் துவக்க விழா. அழைப்பிதழ் விநியோகத்தில் துவங்கி, துவக்க விழா நடைபெறுகிற இடத்தில் வாழை மரமோ, கலர் கொடியோ கட்டுகிற வரைக்கும் இந்த வேலைகள் உதவி இயக்குனர்களின் தலையில்தான்! இந்த துவக்க விழாக்களில் பிரஸ் மீட் இருந்தால் அதற்கு தேவையான பிரஸ் கிட், மற்றும் போட்டோ சிடிகளை தயாரிக்கிற பணியை பிஆர்ஓ வுடன் சேர்ந்து செய்வதும் இந்த உதவி இயக்குனர்கள்தான். பின்பு பத்திரிகைகளில் வரும் அந்த செய்திகளை வெட்டி தனியாக ஒட்டி ஒரு ஆல்பமாக்கி தருகிற வேலைஆயும் இவர்களுக்குதான்.
படப்பிடிப்புக்குப் பின்….
படப்பிடிப்பு முடிந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும்? இதுவரை ஓடியது ஒரு ஓட்டம் என்றால் இப்போது ஓடப்போகிற ஓட்டம் சற்று வித்தியாசமானது. ஓட்டம் இருக்கும். ஆனால் இது ட்ரெட் மில் ஓட்டம். லேப், மற்றும் ஸ்டியோக்களுக்குள் அடைந்து கிடந்து கவனிக்கிற வேலை.
எடுத்த வரைக்குமான படத்தை டெலி சினி செய்ய வேண்டும். சினிமா எடிட்டிங் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பிலிம்களை கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்து வெட்டுவதெல்லாம் பழைய ஸ்டைல். இப்போது இந்த டெலி சினி செய்யப்பட்ட பகுதிகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதிலிருந்தே வெட்டிங், ஒட்டிங் செய்வதுதான் புதிய யுக்தி. இந்த முறைக்கு டெலிசினி ரொம்பவே உதவுகிறது.
இப்படி டெலிசினி செய்யப்பட்ட பிலிம்களை மறுபடியும் ஸ்கேன் செய்வார்கள். இந்த ஸ்கேன் செய்யப்பட்ட பகுதிகள்தான் டிஜிட்டல் இன்டர் மீடியேட் செய்யப்படும் என்பதால், இதை உயர்ந்த குவாலிடியோடு ஸ்கேன் செய்கிறார்களா என்பதையும் உதவி இயக்குனர் கண்காணிக்க வேண்டும். அதென்ன டிஜிட்டல் இன்டர்மீடியட்?
படத்தில் இடம்பெறக் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குகிற பகுதிதான் இது. கதையை உருவாக்கும்போதே எந்தெந்தக் காட்சிகளை கிராபிக்ஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிடுவார்கள். பின்பு அந்தக் காட்சிகளுக்கு மட்டும் கிராபிக்ஸ் செய்வார்கள். இந்தப் பணி வேறொரு இடத்தில் நடந்து கொண்டிருக்கும். உதவி இயக்குனர்கள் அடிக்கடி சென்று கண்காணிக்க வேண்டும். கிராபிக்ஸ் வல்லுனர்களின் கற்பனை, காட்சியோடு சரியாக பொருந்துகிறதா, அல்லது குழந்தைகள் கிறுக்குவது போல சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறதா என்று பார்ப்பது இவர்களின் வேலை. இந்தப் பணிக்கு இரண்டு அல்லது மூன்று உதவி இயக்குனர்களை அனுப்பி வைப்பார் இயக்குனர்.
உதாரணத்திற்கு ஹீரோ ஹீரோயின் இருவரும் தாஜ்மஹால் உச்சியில் நின்று கொண்டு ஆடுவதாக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே எங்காவது புல்வெளியிலோ மைதானத்திலோ இவர்கள் ஆடியிருப்பார்கள். அந்த பிம்பத்தை வெட்டியெடுத்து இந்த தாஜ்ஹால் உச்சியில் நிறுத்த வேண்டியது கிராபிக்ஸ் டிசைனரின் உழைப்பு. அப்படி உருவாக்கப்பட்டிருக்கிற அந்த தாஜ்மஹால், நம்ம ஊர் திருவிழாவில் நாலணாவுக்கு விற்கப்படுகிற பொம்மையின் தரத்துக்கு இருந்தால் ரசிகர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். இங்கிலீஷ் படத்துல எல்லாம் என்னமா பண்றாங்க. இவங்களும் பண்ணியிருக்காங்களே… என்பார்கள் கூசாமல். அது ஒரிஜனல் தாஜ்மஹாலை போல இருக்கிறதா என்பதை கவனித்து இயக்குனரிடம் ஒப்பீனியன் செல்வது இந்த உதவி இயக்குனர்களின் வேலை.
இந்த இடத்தில் பட்ஜெட்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். ஒரு வினாடிக்கு இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயம் செய்வார்கள் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு. பல இடங்களில் துட்டுக்கேற்ற தோசைதான். உதவி இயக்குனர் அதிகமான பர்பெக்ஷனுக்கு ஆசைப்பட்டிருப்பார். ஆனால் உங்க பட்ஜெட்டுக்கு இதுதான் முடியும் என்பார்கள் அந்த நிறுவனத்தில். இந்த நேரத்தில் பிடிவாதமாக சண்டை போடுவதை விட விஷயத்தை டைரக்டரிடம் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான் உதவி இயக்குனர்களுக்கு நல்லது.
இந்த டிஜிட்டல் முறையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் ஒளி அளவை கூட்டலாம். குறைக்கலாம். படம் முழுக்க ஒரு டோன் ஏற்படுத்தலாம். பாடல் காட்சிகளில் மழை பொழிய வைக்கலாம். நீல வானத்தை இன்னும் நீலமாக்கலாம். முக்கியமாக ஃபைட் சீன்களில் இவர்களின் கற்பனை அலாதியாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும். ஒரு படத்தில் கோபம் வரும்போதெல்லாம் ஹீரோவின் நரம்புகள் முறுக்கேறும். புடைக்கும். அந்த நரம்பு புடைப்பு ஏதோ நீலகிரி எக்ஸ்பிரஸ் வேகத்தில் மணிக்கட்டில் புறப்பட்டு கழுத்து பகுதியில் வந்து முடிவதை பார்த்திருப்பீர்கள். அந்தப் புண்ணியம் இந்த டிஜிட்டல் கலைஞர்களின் கற்பனைக்கும் உழைப்புக்கும்தான் போய் சேர வேண்டும்!
இப்படி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளை படத்தில் இணைத்ததும் நெகட்டிவ் கட்டிங் என்று சொல்லப்படும் அடுத்த கட்ட பயணத்திற்கு தன்னை உட்படுத்துவார் உதவி இயக்குனர். இந்த நேரத்தில் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதிய உதவி இயக்குனர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றவர்களும் கவனிக்கலாம். எடுக்கப்பட்ட ஷாட்டுகளை எடிட்டர் எப்படி பயன்படுத்துகிறார். அந்த ஷாட்டுகளை எந்த அளவில் கட் பண்ணுகிறார் என்பதை தெரிந்து கொள்ள இது உதவும். அது மட்டுமல்ல, சாதாரணமாக எடுக்கப்பட்ட ஒரு ஷாட்டை கூட சாஃப்ட்வேர் உதவியால் எப்படியெல்லாம் விதவிதமாக மாற்றுகிறார் எடிட்டர் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்படி மாற்றும்போது அந்த ஷாட்டில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
கல்யாண வீட்டில் வீடியோ கிராபர்களின் ஆனந்த தாண்டவத்தை நாமெல்லாம் கவனித்திருப்போம். நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் திரையில் ஏதேதோ ஜாலம் காட்டுவார்கள். திடீரென்று நட்சத்திரத்தில் தோன்றுவார் மணப்பெண். அப்படியே அவரை ஒரு ரோஜா பூவிற்குள் கொண்டு போய் பொருத்துவார்கள். எல்லாம் சரி. தாலி கட்டுகிற நேரத்திலும் கூட ஏதேதோ ஜிக்ஜாக் செய்து அந்த காட்சியையே துவம்சம் செய்துவிடுவார்கள் சிலர். சில எடிட்டர்களிடம் கூட அதை பார்க்கலாம். அதனால் உதவி இயக்குனர்கள் கவனிக்க வேண்டியது இதுதான். எடிட்டர் செய்யும் யுக்திகள் அர்த்தத்தோடு அமைந்திருக்கிறதா? காட்சியை அது எந்த விதத்திலும் சிதைக்காமல் இருக்கிறதா? இது குறித்து எடிட்டரிடம் விவாதிக்கிற அதிகாரம் உதவி இயக்குனர்களுக்கு இல்லையென்றாலும், கோ டைரக்டரிடமோ, டைரக்டரிடமோ சொல்லி அந்த பகுதியை கவனிக்க சொல்லலாம்.
-தொடரும