Hindu Tamil : சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள், பல்வேறு நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து உடனடியாக பணிகளை தொடங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
தமிழகத்தில் 86,000 பேருக்கு பட்டா ! ஆட்பேசம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் :.. அமைச்சரவை ஒப்புதல்
மம்தா பானர்ஜி.கூட்டணி கணக்கை மாற்றினார்! டெல்லி தேர்தல் எதிரொலி! . “நாம் மட்டுமே போதும்”.!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக பிடிஐ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு சவாலாக உள்ளது.
2019, 2024 லோக்சபா தேர்தலில், அங்கு பாஜக, அதிக தொகுதிகளில் வென்றது. 2021 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 121 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.
கோகுல இந்திராவின் குமுறலுக்கு காரணம் என்ன?-'மரியாதை இல்லை?
அதன்படி, சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-
பெரியார் வேண்டும் என்றால் வெளியேறலாம் : சீமான் ஆவேசம்!
மின்னம்பலம் - christopher : பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம் என சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். seeman again angry on periyar
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களை சந்தித்தார்.
2026ல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!
அப்போது அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை.. அவ்வளவுதான்.
காசா’ வை அமெரிக்கா விலைக்கு வாங்க டிரம்ப் திட்டம் – மக்களை வெளியேற்ற தீவிரம்
மாலைமலர் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்ட படைகளை இஸ்ரேல் திரும்பப்பெற்றுள்ளது.
சீமான் குண்டர்கள் லண்டனில் அடாவடி - ஈரோட்டில் சீமான் கட்சியின் தோல்வியால் விரக்தி?
வி.சபேசன் : ஈரோடு கிழக்குத் தேர்தல் தோல்வியால் தம்பிகள் விரக்தி! -
லண்டனில் தாக்குதல் முயற்சி!
யாரும் போட்டியிடததால் ஈரோடு கிழக்குத் தேர்தலில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று வெளிநாட்டுத் தம்பிகள் நம்பியிருந்தார்கள்.
ஆகக் குறைந்தது ஐம்பதாயிரம் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்கள்.
ஆனால் பெரியார் பற்றி பேசி தம்பிகளின் கனவில் அண்ணன் சீமான் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் என்பதை அவர்கள் பாவம் அறிந்திருக்கவில்லை.
லண்டனில் இருந்து பனியிலும் குளிரிலும் உழைத்து அண்ணனுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தவர்களுக்கு 'மகிழ்ச்சி கிடையாது,
எப்பொழுதும் பயிற்சி மட்டும்தான்' என்கின்ற செய்தியை ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் சொல்லத் தொடங்கியிருந்தன.
திங்கள், 10 பிப்ரவரி, 2025
கும்பமேளா - 300 கிலோமீட்டர் தூரம் வரிசை கட்டிய வாகனங்கள் - உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம்:
மாலை மலர் : மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
மகா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெறும்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவுக்கு ரெயில் மற்றும் சாலை மார்கமாக பலவேறு இடங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கழக உடன்பிறப்புகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் - இருநூறு இலக்கு... தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு!”
கலைஞர் செய்திகள் பிரேம் குமார் : “வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும்” என கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
டெல்லி தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்... ஆர்.எஸ்.பாரதி அதிரடி
மின்னம்பலம் - Selvam : “எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே டெல்லி சட்டமன்ற தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார். Bharathi says Delhi Election
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “சில மாநிலங்கள் அவர்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “மத்திய அரசுக்கு தான் அற்ப சிந்தனை. தமிழ்நாடு அரசு 6.28 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரிப்பகிர்வு அளிக்கிறது. ஆனால், 56 ஆயிரம் கோடி மட்டுமே தமிழகத்திற்கு மத்திய அரசு திருப்பி அளிக்கிறது.
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025
ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள்- ஆம் ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா
மாலை மலர் : டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதன் முலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே களம் கண்ட நிலையில் இரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.
இதுதொடர்பாக காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.
சனி, 8 பிப்ரவரி, 2025
பாஜக கும்பலை கண்ணின் இமை போல பாதுகாத்த எளிமை ஊதுபத்திகள் .. கலாம் சகாயம் ....
![]() |
ராதா மனோகர் : அப்துல் கலாம், சகாயம், அன்னா ஹாசாரே இன்னும் பல சங்கி முகமூடிகள் காலத்திற்கு காலம் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்
இவர்கள் எல்லோரும் பார்ப்பன பனியா கும்பல்கள் மீது எந்த தூசியும் படிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இருப்பார்கள்
உத்தர பிரதேச முதலமைச்சார் யோகி ஆதித்தனார் போன்ற கொடூர சங்கிகளை நம்மால் அடையாளம் கண்டுவிட முடியும்
.ஆனால் இவர்கள் அந்த கொடூர சங்கிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வெறுமையாக ஊழல் நேர்மை போன்ற ஊதுபத்திகளை மட்டும் வைத்தே,
மக்களை தள்ளி கொண்டு போய் சங்கிகளின் கொட்டைகளில் அடிமாடுகளாக கட்டிவிடுவார்கள்!
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை சகாயம் சகாயம் என்றொரு உத்தமன் இருந்தார் .
தமிழர்களின் கையிலிருந்த கிரானைட் தொழிலை அப்படியே மார்வாடிகளின் கைகைளில் கொண்டு போய் தாரைவார்க்கும் வரைக்கும் அவருக்கு விளம்பர வெளிச்சம் அளவு கணக்கில்லாமல் கிடைத்தது
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ரெயில்வே - அந்த சைக்கோவை விடாதீர்கள்.. அரைமணி நேர சித்ரவதை..ஓடும் ரயிலில் நடந்தது என்ன?
tamil.oneindia.com -Yogeshwaran Moorthi : வேலூர்: வேலூரில் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணி பெண், அரை மணி நேரத்திற்கு மேலாக சைக்கோவுடன் போராடினேன் என்று கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலை நிறுத்துவதற்காக செயினை இழுக்க முயற்சித்த போதும் தன் கையை அடித்து உடைத்துவிட்டதாக அந்த கர்ப்பிணி கூறியுள்ளார்.
இதுபோன்ற சைக்கோக்களை வெளியில் விடக் கூடாது என்று கூறியுள்ள பெண், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அப்துல் கலாம் .. காங்கிரசின் அம்பேத்கார் ... சில சந்தேகங்கள்
![]() |
ராதா மனோகர் : பார்ப்பனர்கள் எந்த தொழிலில் பணியாற்றினாலும் அவர்களின் உச்ச பட்ச ஆணவம் தென்படுவது சட்டத்துறையில்தான்!
அப்பேற்பட்ட சட்டவியல் சகுனி மாமாக்கள் இந்திய அரசியல் சட்டத்தை ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்த அம்பேத்காரிடம் ஒப்படைத்திருப்பார்களா?
எனக்கென்னவோ குஜராத் கலவரத்தால் உலகம் முழுவதும் நெருக்கடிக்கு உள்ளான பாஜக அப்துல் கலாம் என்ற இஸ்லாமிய முகமூடியை அணிந்து கொண்ட தந்திரம் ஞாபகத்திற்கு வருகிறது!.
அப்துல் கலாம் சங்கிகளுக்கு ஏற்ற ஒரு ஆயத்த ஆடையாக எப்படி பணியாற்றினார் என்பது உலகம் அறிந்தது.
அம்பேத்கார் அப்துல் கலாமை விட எல்லா விதத்திலும் அறிவாளி என்பது உலகம் அறிந்ததுதான்
ஆனாலும் இந்திய ஒன்றிய அரசமைப்பு வரைவில் அவரின் பங்களிப்பு எந்த அளவு இருந்திருக்கும் என்பது மீளாய்வுக்கு உரியது என்று தோன்றுகிறது
ஒன்றிய அரசமைப்பு சட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன.
ஆனாலும் வழமை போல அதையும் புனித படுத்துதல் என்ற தொடர் நாடகம் நடக்கிறது!
டெல்லி 0 தேர்தல்க்குக்கு பிந்திய கணிப்பு - மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைகிறது?
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.
அமெரிக்காவுக்கு சவால் விடும் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா சென்பாம் (Claudia Chenbaum)
Aiyoob Azmin : மெக்சிகோ தேசத்தின் ஜனாதிபதி கிளாடியா சென்பாம் (Claudia Chenbaum) டிரம்பை நோக்கி உரையாற்றுகையில்:
டிரம்ப் அவர்களே நீங்கள் ஒரு சுவரைக் கட்ட வாக்களித்தீர்கள்...
சரி, அன்புள்ள அமெரிக்கர்களே, புவியியல் தொடபில் கொஞ்சம் அறிந்துகொள்ளுங்கள்,
அமெரிக்கா என்பது ஒரு கண்டமல்ல, அது ஒரு நாடு
அந்த நாட்டின் எல்லையில் நீங்கள் ஒரு மதில் கட்டுவதற்கு முன்னர்,
அதற்கான முதலாவது செங்கல்லை நடுவதற்கு முன்னர், அந்த மதிலுக்கு அப்பால் 7 பில்லியன் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய பரிபாஷையில் மக்கள் என்பதை விட அவர்களை வாடிக்கையாளர்கள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்,
நீங்கள் மக்கள் என்பதை உணரவோ அறியவோ மாட்டீர்கள்.
வியாழன், 6 பிப்ரவரி, 2025
தமிழ்நாட்டில் பார்ப்பன தர்ஹாக்கள்! முருக ராவுத்தரையும் சிவ ராவுத்தரையும் அறிவீர்களா?
![]() |
![]() |
சூர்யா சேவியர் தமிழ்நாட்டில் பார்ப்பன தர்ஹாக்கள்
"நெருங்கியவர்""நண்பர்" என்ற பொருளைத்தரும் "வலி"என்ற அரபுச் சொல்லின் பன்மையே "அவுலியா"அல்லது வலிமார்களாகும் .
உலகத்தில் ஒரே நேரத்தில் 440 வலிமார்கள் இருப்பார்கள். ஒருவர் இறப்பிற்குப் பிறகு அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் "வலி" அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவார்.
சைவத்தில் நாயன்மார்கள், வைணவத்தில் ஆழ்வார்கள், கிறிஸ்தவத்தில் புனிதர்கள் என்று அழைப்பார்கள். இவர்கள் இறையடியார்கள். இஸ்லாத்தின் இறையடியார்களை அவுலியாக்கள் என்ற வலிமார்கள். இத்தகைய வலிமார்களின் அடக்கஸ்தலம் தான் தர்ஹா என அழைக்கப்படுகிறது.தர்ஹா என்ற பாரசீகச்சொல்லுக்கு உறைவிடம் என்று பொருள்.ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட புதைகுழியை அரபு மொழியில் கபுறு என்பர்.புதைகுழி உள்ள இடம் கபுருஸ்தான் எனப்படும்.அதன் மேல் கட்டப்படும் சமாதி கோரி எனப்படும்.கோரியை மையமாக வைத்து சுற்றி எழுப்பப்படும் கட்டிடமே தர்ஹா. வலிமார்களுக்கு அதிசய சக்தியை இறைவன் அளிப்பதாக நம்புகிறார்கள். அதற்கு கராமத் என்று பெயர்.
அமேரிக்கா - வழி நெடுக பிணங்கள்.. அமெரிக்காவுக்குள் நுழைந்தது இப்படித்தான்! நாடு கடத்தப்பட்டவர்கள் பகிர்ந்த அதிர்ச்சி செய்தி
tamil.oneindia.com - Halley Karthik : சண்டிகர்: 104 பேர் நேற்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
அமெரிக்க வாழ்க்கையை எதிர் பார்த்து கிளம்பிய இவர்கள், முகவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்? என்கிற துயரத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் அமெரிக்காவுக்கு அதிகம் குடிபெயர்பவர்களில் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர்.
சில லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் உங்களை அமெரிக்காவுக்குள் கொண்டு சேர்த்து விடுவதாக வாக்குறுதியளிக்கும் முகவர்களால் எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
சங்கிலியால் கட்டி அழைத்து வந்தார்கள்.. அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட இந்தியர் தகவல்
மாலை மலர் : அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் விமானம் மூலம் திரும்ப அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் ஆவணமின்றி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அந்த விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்கியது.
மபொசியும் இலங்கை தமிழரசு கட்சியும் .. ஒரு வரலாற்று பார்வை
![]() |
![]() |
ராதா மனோகர் : 1965 இல் இலங்கை தமிழரசு கட்சியை ஐக்கிய தேசிய கட்சியோடு ஒரு கூட்டணி அரசை அமைத்தது
அதில் உள்ளூராட்சி அமைச்சராக திரு முருகேசு திருச்செல்வம் பதவி வகித்தார்
உண்மையில் அந்த அரசில் தமிழரசு கட்சியின் தலைவர் ராசமாணிக்கமும் தமிழரசு கட்சியின் நல்லூர் எம்பி நாகநாதனும் அமைச்சராக பதவி ஏற்பதற்கு பெரும் முயற்சி எடுத்திருந்தார்கள்
ஊர்க்காவல் துறை எம்பியும் தமிழரசு கட்சியின் மூளை என்று கூறப்படுபவருமான திரு வி .நவரத்தினம் அவர்கள்.இந்த முயற்சியை கடுமையாக எதிர்த்து இவர்களின் மந்திரி கனவுகளளை தவிடு பொடியாக்கி இருந்தார்
இவரை 1968 இல் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.
இலங்கை தமிழரசு கட்சியின் வீழ்ச்சி இதிலிருந்து ஆரம்பமானது.
டட்லியின் அரசில் அங்கமாக தமிழரசு கட்சி இருந்தமையானது தமிழ் காங்கிரஸ் கட்சியின் மீள்வரவுக்கு காரணமாகியது.
தங்களின் கடும் தமிழ் தேசிய ஆதரவு தளம் காலாவதியாகி கொண்டிருந்ததை அறிந்த தமிழரசு கட்சியினர் அதை மீண்டும் கவர்ச்சிகரமாக தமிழர்களுக்கு மீள் அறிமுகம் செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து பிரபல தமிழ் தேசியவாதியான சிலம்பு செல்வர் திரு மபொ சிவஞானம் அவர்களை அழைத்திருந்தார்கள்
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை -3 ஆசிரியர்கள் கைது- கிருஷ்ணகிரி
மாலை மலர் : கிருஷ்ணகிரி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து பள்ளியில் பணிபுரிந்த 3 ஆசிரியர்கள் மீது போலீசில் தாய் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை.
உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்தார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.
புதன், 5 பிப்ரவரி, 2025
நடனமாடிய பெண்களுக்கு பணம் கொடுத்த இளைஞர் சுட்டு கொலை - பிஹார் மாநிலம்
மாலை மலர் : பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் திலக விழாவின் போது இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திலக விழாவின் போது மேடையில் நடனமாடி கொண்டிருந்த பெண்களுக்கு 27 வயதான அஞ்சனி குமார் என்பவர் பணம் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். அஞ்சனி குமாரின் தலையில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவர் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2025
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
![]() |
BBC News, தமிழ் : மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர்.
திருப்பரங்குன்றத்தில் 144 தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி, பாஜகவினர் 200 பேர் கைது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.
குடைவரைக் கோயிலான இக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதேபோல், திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசல் உள்ளது.
இந்த கோயில் மற்றும் தர்காவுக்கு மத வேறுபாடின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், பொதுக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.
ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மின்னம்பலம் -Selvam : ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு இன்று (பிப்ரவரி 3) உத்தரவிட்டுள்ளது. tamilnadu government education loan
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972 – 1973 முதல் 2002 – 2003 வரையிலான காலங்களில் மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டது. அதேபோல, 2003 – 2004 முதல் 2009 – 2010 வரையிலான காலங்களிலும் கல்விக்கடன் வழங்கப்பட்டது.






