சனி, 8 பிப்ரவரி, 2025

பாஜக கும்பலை கண்ணின் இமை போல பாதுகாத்த எளிமை ஊதுபத்திகள் .. கலாம் சகாயம் ....

May be an image of 2 people

ராதா மனோகர் : அப்துல் கலாம், சகாயம், அன்னா ஹாசாரே இன்னும் பல சங்கி முகமூடிகள் காலத்திற்கு காலம் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்
இவர்கள் எல்லோரும் பார்ப்பன பனியா கும்பல்கள் மீது எந்த தூசியும் படிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இருப்பார்கள்
உத்தர பிரதேச முதலமைச்சார் யோகி ஆதித்தனார் போன்ற கொடூர சங்கிகளை நம்மால் அடையாளம் கண்டுவிட முடியும்
.ஆனால் இவர்கள்  அந்த கொடூர சங்கிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வெறுமையாக  ஊழல் நேர்மை போன்ற ஊதுபத்திகளை மட்டும் வைத்தே,
மக்களை தள்ளி கொண்டு போய் சங்கிகளின் கொட்டைகளில்  அடிமாடுகளாக கட்டிவிடுவார்கள்!
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை சகாயம் சகாயம் என்றொரு உத்தமன் இருந்தார் .
தமிழர்களின் கையிலிருந்த கிரானைட் தொழிலை அப்படியே மார்வாடிகளின் கைகைளில் கொண்டு போய் தாரைவார்க்கும் வரைக்கும் அவருக்கு விளம்பர வெளிச்சம் அளவு கணக்கில்லாமல் கிடைத்தது  



வெளிநாடுகளில் இருக்கும் சங்கி ரசிகர்களையும் பறந்து பறந்து போய் ஊழல் ஊதி பத்தியை கொழுத்தி போட்டு உற்சாகம் ஊட்டினார்
சகாயம் விளம்பர பீல்டில ஆக்டிவாக இருந்த காலத்தில சீமான்கூட கொஞ்சம் மங்கி போயிருந்தார் .
அந்த அளவுகு சகாயம்  கலாம் என்ற மாயமான்கள் வரிசையில் வலம் வந்தார்.

மீள் பதிவு : மறைந்த பெரியவர் அப்துல் கலாம் அவரகள் இந்துத்வாக்களின் ஒரு டார்லிங்காகத்தான் இருந்திருக்கின்றார் .
அவரை பற்றி பேசும் பொழுது பாஜகவின் கண்களில் தெரியும் பளபளப்பு இருக்கிறதே?
அடேயப்பா , . குஜராத் படுகொலைகள் வெறியாட்டம் நடந்து உலகம் முழுதும் இந்துத்வாககளின் சாயம் போய் கொண்டிருந்த பொழுது,
 பதவிக்கு வந்து கல்லுழி மங்கன் போல மௌனம் காத்தது மனசாட்சி உள்ள மனிதர்கள் யாரும் செய்ய கூடிய செயலா?
குடியரசு தலைவர் பொறுப்பில் இருந்தவருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பொழுது கொஞ்சம் கூட இவர் மனம் நோகவில்லையே?
இவரது வாயை மூடியது எது?
வரலாறு விளக்கம் கேட்கிறது.
கேட்க நாதி இல்லாமல் உயிரை கையில் பிடித்துகொண்டு ஓலக்குரல் எழுப்பிய குஜராத் மக்களின் ஈனக்குரல் இவருக்கு கேட்கவில்லை .
குஜராத் கலவரங்களை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க கூடிய ஸ்தானத்தில் இவர் அன்று இருந்தார் .
ஆனால் இவரோ பாஜகவுக்கு வெள்ளை அடிக்கும் White Wash சேவையில் அல்லவா அன்று ஈடு பட்டு இருந்தார்

.இவரது மௌனத்தின் அர்த்தம் அதுதான் .இவர் பகவத் கீதையின் ரசிகராக பஜககாரனை விட ஆழமாக இருந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது .
ஏனெனில் அதில்தான் யுத்தத்தில் எதிரி மட்டுமே இருக்கிறான்
அங்கே உறவினர் உற்றார் நண்பர் என்று எதுவும் இல்லை என்ற பாசிச கருத்து உள்ளது.
இவர் அதை அன்று கடைப்பிடித்து காட்டி உள்ளார்.
அது போகட்டும் இவரை சார்ந்த ராமேஸ்வரம் மீனவரகளுக்காக என்றாவது ஒரு சிறு குரலாவது கொடுத்துள்ளாரா?

ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க கூடிய மனசாட்சி துளி கூட இல்லாத இவர் மக்களே கனவு காணுங்கள் கனவு காணுங்கள் என்று கூறுவது பாஜகவின் கனவுகளைத்தான் ...
வரலாறு அதைதான் காட்டுகிறது.

இதே பார்முலாவில் இன்னொரு போலி திரு சகாயம் ஐ ஏ எஸ்!
திரு .சகாயம் பற்றி 22 பெப்ரவரி 2021 இல் இட்ட பதிவை பாருங்கள்
திரு சகாயம் அவர்களின் கட்சி தொடங்கும் விழா காணொளியை கண்டேன் .
 மிகவும் பொறுமையாக முழுவதும் பார்த்தேன்   மிகுந்த ஏமாற்றம் அளித்தது.
சகாயம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்தவர் .ஆனால் தமிழகத்தை பற்றி எந்த விடயமும் தெரியாத ஒருவர் பேசியது போல இருந்தது .
பேசிய பலரும் வெறும் அப்பாவிகளாக அல்லது வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிப்பவர்களாகவே தெரிந்தனர்.
ஊழல் என்ற ஒற்றை மந்திரமே போதும் தங்களை கரைசேர்த்து விடும் என்று கருதுவதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் கல்வி களவு போகிறதே  அதை பற்றி ஒரு வார்த்தை ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புக்கள் களவாடாப்படுகிறதே அதை பற்றி ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் வியாபாரங்கள் திட்டமிட்டு மார்வாடிகள் கைக்களுக்கு போகிறதே அதை பற்றி ம்ம்ம்
தமிழ்நாட்டின் மீது ஒரு பொருளாதார போர் நடக்கிறதே அதைப்பற்றி ..ம்ம்ம்ம்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு சாவு மணி அடிக்கிறார்களே  .. அதைப்பற்றி ம்ம்ம்ம்ம்
தமிழ்நாட்டில் மீண்டும் பார்ப்பனீயம் சமஸ்கிருதம் எல்லாம் நுழைகிறதே? அதை பற்றி ம்ம்ம்ம்ம்
பணமதிப்பு இழப்பு பற்றி ம்ம்ம்ம்ம்   
ஜி எஸ் டி வரி பற்றி ம்ம்ம்ம்ம்
இவை எல்லாம் கொஞ்சம் சாம்பிள்தான்  இன்னும் என்னன்னவோ கேள்விகள் இருக்கின்றன .
சகாயம் குழுவிடம் நல்ல நோக்கமும் கிடையவே கிடையாது.
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர அன்னா ஹாசாரே போன்றோர் எடுத்த காவடியை தமிழ்நாட்டில் திரு சகாயம் ஐ ஏ எஸ் மூலம் பாஜக முன்னெடுக்கிறது என்பதில் சந்தேகமே கிடையாது.
முடிவாகவே தெரிகிறது  சகாயம் இன்னொரு ஆர் எஸ் எஸ் அடியாள்தான்.
ஆனால் ஒரே ஒரு சந்தேகம் மட்டுமே உள்ளது .
ஒருவேளை இந்த அடியாள் இதை கூட புரிந்து கொள்ள முடியாத ...
இன்னொரு ஆட்டுக்கார அண்ணாமலை ரேஞ்சாக இருக்கலாமோ?

கருத்துகள் இல்லை: