ஞாயிறு, 30 ஜூன், 2024

India become champion! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

 தினத்தந்தி :  பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.
9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர்.
இதில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியாவுக்கு, 2-வது ஓவரை வீசிய கேஷவ் மகராஜா இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரில் ரோகித் 9 ரன்களிலும், பண்ட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அவரைதொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

மிஷல் ஒபாமா US அதிபர் தேர்தலில் - ஜோ பைடனுக்கு பதில் இவர் தேர்தல் வேட்பாளராக கூடும்!

 தினமலர் :  வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், அதிபர் ஜோ பைடன், 81, சொதப்பினார். இதனால், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது.

இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சனி, 29 ஜூன், 2024

சுப்புலட்சுமி ஜெகதீசன்! சங்கிகளின் கங்காணி சீமான் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம்

தமிழ்க்கவி  :   சீமான்டியனின் போலி ஈழப் பாசம்!!!
2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் துணை பொதுச் செயலளார் அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகராக பதவியேற்பார் என்ற நிலையில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளரிடம் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கிறார்.
அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈழ விடுதலைக்காக, போராளிகளுக்காக ஆதரவளித்ததற்காக ஜெயலலிதாவின் அதிமுக அரசால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடூர அடக்குமுறைக்கு ஆளானவர் என்பது வரலாறு.
தன் பயணத்தை அதிமுகவில் ஆரம்பித்தாலும் எம்ஜிஆரை தீவிரமாக எதிர்த்து, திமுகவுடன் தொடர்ந்து சமரசமின்றி பயணம் செய்த ஒரு சமூகநீதி போராளி அம்மா சுப்புலட்சுமி.

பட்டாசு ஆலை வெடி விபத்து.. சாத்தூர் ... உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம்!

 மின்னம்பலம் - Kavi :  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று பந்துவார்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மருந்து கலவை செய்து கொண்டிருக்கும் போது ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் இன்டர்போல்... சட்டமன்றத்தில் CM.ஸ்டாலின் அறிவிப்பு!

 மின்னம்பலம் - Selvam  :  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 29) சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் இன்று பதிலளித்து பேசினார். தொடர்ந்து மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “மிக முக்கியமான வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்கு தெரிவிப்பதை எனது கடமையாக கருதுகிறேன்.
கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படை வீரரை அடித்து கொன்ற தமிழக மீனவர்கள்? 10 மீனவர்கள் மீது இலங்கையில் வழக்கு

 தினத்தந்தி :  இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் 10 பேர் மீது வழக்கு
கடற்படை மாலுமி உயிரிழந்த விவகாரத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 24-ந்தேதி இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்து, அவர்களின் படகை பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின்போது இந்திய மீனவர்கள் தப்ப முயன்றதாகவும், அப்போது இலங்கை கடற்படை மாலுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலைய மேற்கூரை வீழ்ந்து 3 பேர் பலி. கனமழை பாதிப்பு

thinakaran.LK :  தலைநகர் டெல்லியில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல்.

வெள்ளி, 28 ஜூன், 2024

சுனிதா வில்லியம்ஸ்- பூமிக்கு திரும்பி வருவதில் சிக்கல்.. விண்வெளியில் சிக்கிய...

மாலை மலர்  :  நாசா இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்த இவர், 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 2006 மற்றம் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் அதிகநேரம், அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

வியாழன், 27 ஜூன், 2024

குழந்தைகளை கடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த கும்பல்;சிக்கியது - கர்நாடகாவில்

 தினமணி  : கர்நாடகத்தில் குழந்தைகள் விற்கும் கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் குழுந்தை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த செவிலியர் கல்லூரியின் நிர்வாக இயக்குநர், செவிலியர், டாட்டூ கலைஞர், ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரை கர்நாடக காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் புதிதாகப் பிறந்த குழந்தைகளை சுமார் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பெற்று விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், விற்கப்பட்ட 9 குழந்தைகளில் 5 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கடலூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கடித்து கொன்ற தெரு நாய்!

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த மூவலூர் இராமாமிர்தம் நினைவு நாள் ஜூன் 27. (1962)

 சு.குமாரதேவன் :  தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த மூதாட்டி
மூவலூர் இராமாமிர்தம் நினைவு நாள் ஜூன் 27. (1962)
* பெண்களுக்கு எதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசி ஆக்குவது.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது.
கோவிலில் நடனம் ஆட வேண்டும்.
உயர்சாதியாருக்கு உடன்பட வேண்டும்.
அந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள், நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.
* இக்கொடுமையை மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில், கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார்.
அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883-ம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.

2 மாதத்தில் $2 பில்லியன்.. தமிழ்நாட்டின் வளர்ச்சி !

2 மாதத்தில் $2 பில்லியன்..தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து வாயை பிளக்கும் கர்நாடகா,மகாராஷ்டிரா..!

tamil.goodreturns.in - Prasanna Venkatesh  :  சென்னை: இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் டெக்ஸ்டைல், பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள், ஐடி சேவை ஆகியவற்றைத் தாண்டி தற்போது வேகமாக வளரும் துறையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி உள்ளது.
5 வருடத்திற்கு முன்பு சிறிய அளவிலான ஏற்றுமதி மட்டுமே கொண்டிருந்த இத்துறை தற்போது வருடம் 10 பில்லியன் டாலர் அதாவது 80000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

புதன், 26 ஜூன், 2024

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குஷ்பு ஆய்வு!

நக்கீரன் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உட்பட 61 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜாதி வாரி கணக்கெடுப்பை “உடனே ஆரம்பிங்க”.. பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், இன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள திர்மானத்தைச் சுட்டிக்காட்டியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை – இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

  பிபிசி தமிழ் : வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என விரும்பும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தான். குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன.
தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு!

 tamil.asianetnews.com  -   Balan :  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 18வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

விஷ சாராயம்: குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு!

 தினத்தந்தி  :  கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பெண்கள் அடங்குவர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சபாநாயகர் தேர்தல் - BJP ஓம்பிர்லா VS Congress கொடிக்குன்னில் சுரேஷ்! ‛இந்தியா’ கூட்டணி வெல்ல வாய்ப்பு?

 tamil.oneindia.com - Nantha Kumar R :  டெல்லி: இந்தியா சுதந்திர அடைந்ததில் இருந்து இதுவரை லோக்சபா சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
ஆனால் முதல் முறையாக தற்போது பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் தேர்தல் எப்படி நடக்கும்?,
பாஜக கூட்டணியை வீழ்த்தி ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர்களால் வெல்ல முடியுமா? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 25 ஜூன், 2024

விக்கிலீக்ஸ் - ஜூலியன் அசாஞ்ச் விடுதலை

  BBC News தமிழ் -, பெர்ண்ட் டெபுஸ்மேன் : நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 52 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.

ஹஜ் - 1300-ஐ கடந்த உயிரிழப்புகள்.. திணறும் சவுதி அரேபியா

 வீரகேசரி : ஹஜ் புனித பயணத்தில் சோகம்.. 1300-ஐ கடந்த உயிரிழப்புகள்.. திணறும் சவுதி அரேபியா
“ரியாத்:சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு ‘ஹஜ்’ புனித பயணம் செல்கின்றனர்.
அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

வேல்முருகன் : சபாநாயகர் அப்பாவு மீது பகிரங்க குற்றச்சாட்டு.. சட்டமன்றத்தை அலறவிட்ட

 tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் :  சென்னை: சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் தான் பேசுவதை தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் தங்களை பேசவிடுவதில்லை என்று அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

நவீன் பட்நாயக் அதிரடி : No more Support to BJP - இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை !

Hindu tamil :

 hindutamil.in  : நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது: பிஜு ஜனதா தளம் அறிவிப்பு
புவனேஸ்வர்: "நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. என்டிஏவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே" என நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்துவந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல் மக்களவை தேர்தலிலும் பிஜேடி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜேடி ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.

மதுவால் தமிழகத்தில் விதவைகள் அதிகரித்துள்ளது! .. ஆய்வில் வெளிவந்த தகவல்!

tamil.oneindia.com  -   Vignesh Selvaraj  :  மதுரை: தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரிக்க காரணம் மதுபானமே என்றும், தமிழகத்தில் உள்ள கைம்பெண்களில் 38 சதவிகிதம் பேரின் கணவர்கள் மதுவால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு நடத்தினர்.

சீமான் : குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாதான்.. குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சமா?

 மாலை மலர்  : கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள் கட்சி போராட்டமும் கொலைகளும்

வெற்றிசெல்வன்  :  தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் உள் கட்சி போராட்டமும் கொலைகளும்
ரூபன் படுகொலை இறுதிப் பகுதி
மனித நேயம் இன்றி அரசியல் பக்குவம் இன்றி தமது புரட்சிகர கடமை பற்றிய புரிந்துணர்வு இன்றி வெறுமனே ஆயுதம் தாங்கி தலைமையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து குறிபார்த்து சுடும் போராளிக்கும் சிங்கள ராணுவ வீரனுக்கும் கூலிப்படையின் எனக்கும் என்ன வேறுபாடு இத்தகையவர்கள் மனித மேம்பாடு உடைய புதிய சமுதாயத்தை உருவாக்க தகுதியுடையவர்கள் தானா?
       எல்லாவற்றுக்கும் மேலாக போராளிகளுக்காக தம்மையும் ஒறுத்து ஆதரவும் தந்து அவர்களை நம்பி வாழும் தமிழ் மக்களிடமிருந்து இயக்கத்தின் உண்மை நிலைமை எவ்வளவு காலம் மறைத்து வைப்பீர்கள் . நீங்கள் மௌனம் சாதிப்பது ஊழல் நிறைந்த உங்கள்தலைமையுடன்சமரசம் செய்து அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அனுசரணையாக இருப்பதற்கு சமமாகும்
இயக்கத்தில் இருக்கும் பல உண்மை போராளிகளை போலவே தமிழ் மக்களும் பல தியாகங்களை செய்து உள்ளார்கள் பலர் பலியாகி விட்டார்கள்