வியாழன், 27 ஜூன், 2024

2 மாதத்தில் $2 பில்லியன்.. தமிழ்நாட்டின் வளர்ச்சி !

2 மாதத்தில் $2 பில்லியன்..தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து வாயை பிளக்கும் கர்நாடகா,மகாராஷ்டிரா..!

tamil.goodreturns.in - Prasanna Venkatesh  :  சென்னை: இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் டெக்ஸ்டைல், பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள், ஐடி சேவை ஆகியவற்றைத் தாண்டி தற்போது வேகமாக வளரும் துறையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி உள்ளது.
5 வருடத்திற்கு முன்பு சிறிய அளவிலான ஏற்றுமதி மட்டுமே கொண்டிருந்த இத்துறை தற்போது வருடம் 10 பில்லியன் டாலர் அதாவது 80000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.


இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு. பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா டெக்னாலஜிஸ் என ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளது. சமீப காலமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் இதர சப்ளை செயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் துவங்கி வருகிறது.
2 மாதத்தில் $2 பில்லியன்..தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து வாயை பிளக்கும் கர்நாடகா,மகாராஷ்டிரா..!

இந்த நிலையில் 2025ஆம் நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை உயர்வைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 36.66% பங்களிப்பாகும்.

கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு 9.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 12 பில்லியன் டாலருக்கும் மேலாக ஏற்றுமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி பூங்காக்கள் அமைந்துள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துறை நிறுவனங்களுக்குச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன், தொழில் துறையினருக்கு மானியங்களையும் வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாடு மின் துறை ஏற்றுமதியில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது.
2 மாதத்தில் $2 பில்லியன்..தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து வாயை பிளக்கும் கர்நாடகா,மகாராஷ்டிரா..!

தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் 1.99 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்து முதல் இடத்தில் இருக்கும் வேளையில், 2வது இடத்தில் கர்நாடகா 1.04 பில்லியன் டாலருடனும், 3வது இடத்தில் உத்தரப்பிரதேசம் 903.81 மில்லியன் டாலருடனும் உள்ளது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா 564 மில்லியன் டாலர், குஜராத் 339.13 மில்லியன் டாலர், டெல்லி 122 மில்லியன் டாலர், ஹியானா 78.43 மில்லியன் டாலர், தெலுங்கானா 77.54 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இந்த 2 மாதத்தில் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: