தினத்தந்தி : விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்துக்கு மக்கள் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளச்சாராயம் விற்றவர்கள், கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய போலீசார் மீது கடும் நடவடிக்கைகளை அரசு தற்போது எடுத்து உள்ளது.
இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக நேற்று உயர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.
செவ்வாய், 16 மே, 2023
கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்வு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவு
மம்தா காங்கிரசுக்கு ஆதரவு .. 200 தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவு?
Maalaimalar - Paramasivan : கொல்கத்தா சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 36 ஆண்டுக்கு பின் அங்கு 137 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை. அதேபோல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.
சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க தயாராகும் டிகே சிவக்குமார்? .. கர்நாடக...
tamil.oneindia.com - Mani Singh S : பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை யாருக்கு என்பதை கட்சி மேலிடம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய சித்தராமையாவிற்கு வாழ்த்துக்கள் என்று முதல்வர் பதவிக்கு போட்டி போடும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
திங்கள், 15 மே, 2023
கள்ளச்சாராய விற்பனை.. தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் அதிரடி!
Kalaignar Seithigal - Prem Kumar : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.5.2023) விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து, ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்திட அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஒன்பது நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் வகுருநாதன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Siddaramiah CM? கர்நாடக புதிய முதலமைச்சராக திரு .சித்தராமையாவுக்கே அதிக வாய்ப்பு
மாலைமலர் : கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.
ஆனால் முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இவர்களில் யாரை முதல்-மந்திரியாக தேர்வு செய்வது என்பது குறித்து நேற்று பெங்களூரில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது.
5 நட்சத்திர ஓட்டலில் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் யாரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று எழுத்து பூர்வமாக எழுதி தரும்படி கேட்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் பதவிக்கு வரப்போவது யார்? காங்கிரஸ் தலைமை யாரை தேர்ந்தெடுக்கும்?
![]() |
BBC News - அபிநவ் கோயல் ; கர்நாடகாவில் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும் பான்மையை அளித்துள்ளனர். தற்போது காங்கிரஸ் முழு பெரும் பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
முடிவுகள் வந்துவிட்டபோதிலும் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வார்கள் என்ற ஒரு கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தப் பந்தயத்தில் மூன்று பெயர்கள் அடிபடுகின்றன.
அவர்கள் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
ஞாயிறு, 14 மே, 2023
இஸ்லாமிய சமூகம் பற்றிய நல்ல படங்களுக்கு ஆரம்ப புள்ளி ‘ஃபர்ஹானா’: நெல்சன்
ஏற்கனவே கேரளா ஸ்டோரி திரைப்படம் பற்றிய விவாதங்கள், எதிர் போராட்டங்கள் நடைபெற்றுவந்த நிலையில் வெளியான ’ஃபர்ஹானா’ திரைப்படமும் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு சுழலில் சிக்கி கொண்டது.
அதன் விளைவாக ஃபர்ஹானா திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். ஃபர்ஹானா மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல!
இந்நிலையில், அப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “எங்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கைதி, அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.
திருமாவளவன் : பா.ஜனதா கூட்டணியை அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும்-
மாலைமலர் : விடுதலை சிறுத்தைகள் பிரசாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது என்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
கர்நாடகாவில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. பா.ஜ.க.வின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர்.
கர்நாடக படுதோல்வி அடைந்த 14 பா.ஜ.க அமைச்சர்கள் - பெயர் பட்டியல்!
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது.
இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும்15 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
அதேபோல் பா.ஜ.க கட்சி 48 இடத்திலு வெற்றி பெற்று 16 இடங்களில் முன்னிலை. மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மம்தா பானர்ஜி : 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பம் -
137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
சனி, 13 மே, 2023
கர்நாடகத்தில் காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள் (மகளிர் இலவச பேருந்து பயணம் உட்பட )
கலைஞர் செய்திகள் - Lenin : கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 10ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 137 இடங்களிலும், பா.ஜ.க 62 இடங்களிலும், ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது.
கர்நாடகத்தில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்.. முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேறும் 5 முக்கிய வாக்குறுதிகள்
கர்நாடகாவில் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி
மின்னம்பலம் - christopher :; கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் வாக்குகளை தன் பக்கம் கவர்ந்த காங்கிரஸ் பகல் 1 மணி நேர நிலவரப்படி 38 தொகுதிகளில் வெற்றியுடன் 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம் கர்நாடகவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
அதே வேளையில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றியுடன் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றியுடன் 22 இடங்களிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
வெள்ளி, 12 மே, 2023
கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவானது. இதனால் மசோதா நிறைவேறியது.
இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது.
உதயசந்திரன் இடத்தில் முருகானந்தம்? அமைச்சரவையைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம்!
அதிலும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மாற்றம் செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல் தான் கோட்டை வட்டாரத்தை ஹாட் ஆக்கியிருக்கிறது. ஈரோடு கலெக்டர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் போன்ற பதவிகளில் இருந்தபோது தனது துடிப்பான பணிகளால் தமிழ்நாடு முழுதும் பேசப்பட்டவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.
நவீன் பட்நாயக் : எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி இல்லை.. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி- நவீன் பட்நாயக்
மாலை மலர் : புதுடெல்லி பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.
அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.
அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தன்னிலை விளக்க அறிக்கை
Palanivel Thiaga Rajan : கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன்.
முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும்,
நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம்.
இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.
வியாழன், 11 மே, 2023
அன்றே சொன்னார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்! இன்றைய அரசியல் பற்றி முன்னாள் நிதி அமைச்சர்
பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் : என்ன ஒரு மாற்றம் செய்தாலும் பயங்கரமாக எதிர்ப்பு வருகிறது!
அந்த எதிர்ப்பை எல்லாம் தாண்டி எதையாவது சாதிக்கணும்னா முதலமைச்சருடைய முழு ஆதரவு இல்லாமல் நம்பிக்கை இல்லாமல் கையையும் காலையும் லெப்ட் றைட்ன்னு நகர்த்த முடியாது.
இதுதான் இன்னைக்கு இருக்கிற அரசியல் உண்மை!
ஒரு நடுநிலையான பேரவை தலைவராக இருந்தார் பி டி ராஜன்
அப்பா சொல்வார் அதுமாதிரி இருந்திருந்தார்ன்னா அதுக்கு முழு காரணம் கலைஞர் அவர்கள்
ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு சுதந்திரத்தோடு செயல்பட விட்டார்
அதே மாதிரி நான் இந்த இடத்தில் உட்கார்ந்த போது அன்றைக்கு இருந்த நிதி செயலர் எனக்கு கோர்ட் புக் கொடுத்தார்
இந்த இருக்கையோட சக்தி .. தனிப்பட்ட பலம் என்னானு படிச்சு பாருங்கன்னார் ..
என்ன சொல்லுது?
ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட எல்லா இடத்தையும் தாண்டி வந்த ஒரு கோப்பு நீதித்துறைக்கு வந்து பின்பு,
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு - பின்னணி என்ன? - BBC News தமிழ்
bbc.com :; பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து நிதித்துறை பறிப்பு - பின்னணி என்ன?
தமிழக அமைச்சரவை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்பட்டிருக்கிறார். நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான பட்டியல் வெளியானதும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!
minnambalam.co- christopher : பறை இசை கருவிகள் எடுத்து வந்த கல்லூரி மாணவியை பாதி வழியிலேயே கீழே இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துனர் இன்று (மே 11) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதா. இவர் திருநெல்வேலியிலுள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊரில் இருந்து பறை இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார்.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த இசைக்கருவிகளை பேருந்தில் எடுத்து செல்வதற்காக திருநெல்வேலி புதிய நிலையத்தில் மதுரை செல்லும் அரசு பேருந்தில் அவர் ஏறியுள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் உள்பட 4 பேர் இலாகா மாற்றம்- புதிய நிதி மந்திரி தங்கம் தென்னரசு
மாலை மலர் : சென்னை - புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.
அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார்.
இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
\கர்நாடக கருத்து கணிப்பு தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு
![]() |
tamil.indianexpress.com : : Karnataka Exit Polls 2023 : 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி நியூஸ் நேஷன் நடத்திய கருத்துக் கணப்பில் பா.ஜ.க.வுக்கு 114 தொகுதிகளும், காங்கிரஸிற்கு 86 தொகுதிகளும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குமாரசாமி கட்சிக்கு 21 கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் உயரிய விருதை பெற்ற தமிழ் பிரெஞ்சு படைப்பாளி திருமதி மதன கல்யாணி CHEVALIER MADANAKALYANI அவர்கள் காலமானார்
![]() |
ஆனால் கமலுக்கு முன்பே தமிழ் பேராசிரியர் ஒருவருக்கு பிரெஞ்சு அரசு இந்த விருதை வழங்கியது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆனால், கமலுக்கு பல வருடங்கள், முன்பே தமிழ் பெண்மணி ஒருவர் இந்த விருதை பெற்றார் என்பதை அனைத்து தரப்புமே கவனிக்க தவறிவிட்டது. அந்த பெண்மணி பெயர் மதன கல்யாணி.
1995ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, பிரான்ஸ் அரசு, செவாலியர் விருது அறிவித்தபோதுதான், அதன் கவுரவம் குறித்து தமிழர்கள் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
புதன், 10 மே, 2023
5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்- நிதி அமைச்சில் மாற்றமில்லை !
Maalaimalar : சென்னை:தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நாளை பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது. அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது.
உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்
tamil.newsbytesapp.com : இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து,
கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவர் இது குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.
அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும்"



