சனி, 13 மே, 2023

கர்நாடகாவில் காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி

மின்னம்பலம்  - christopher  :; கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆரம்பம் முதலே பெரும்பான்மையான தொகுதிகளில் வாக்குகளை தன் பக்கம் கவர்ந்த காங்கிரஸ் பகல் 1 மணி நேர நிலவரப்படி 38 தொகுதிகளில் வெற்றியுடன் 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம் கர்நாடகவில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
அதே வேளையில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றியுடன் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றியுடன் 22 இடங்களிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பகல் ஒரு மணிக்கு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், காங்கிரஸ் கட்சி 3 வெற்றியுடன் 132 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 மற்றும் பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

கிறிஸ்டோபர் ஜெமா 


minnambalam.com  -  monisha :; கர்நாடகாவில் வெற்றி: சோனியா, ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், ராகுல், சோனியா உள்ளிட்ட தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. 1 மணி நிலவரப்படி காங்கிரஸ் 38 தொகுதிகளில் வெற்றியுடன் 130 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 16 தொகுதிகளில் வெற்றியுடன் 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களில் வெற்றியுடன் 22 இடங்களிலும், பிற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோனிஷா

கருத்துகள் இல்லை: