![]() |
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
![]() |
ராதா மனோகர் : 7 - 5 - 1959 - எஸ் டி சிவநாயகம் - சுதந்திரன்:
![]() |
![]() |
Esther Nathaniel : இப்புகைப்படத்தை பார்த்தபோது அழுகை வந்துவிட்டது சிங்கள தமிழ் அரசியல்வாதிகளால் வெறும் காகிதத்தாலே ஆன வாக்குக்கும் பணத்துக்கும் இவ் அழகிய திருமொழி தேசத்தை எத்தனையோ காலம்அங்கே ஆடுபுலி ஆட்டத்தில் பாகடையாக்கினார்கள் பிரித்தாண்டார்கள் .
சிங்களவன் கெட்டவன் தமிழன் கொலைக்காரன் கொட்டீயா(புலி) முஸ்லிம்அய்யோ அவன் தொப்பிப்பிரட்டீ கடும் தீவிரவாதி குண்டு வைப்பவன் இதைத்தானடா உள்ளத்திலௌ கசப்பின் வேர்களை நாட்டினீர்கள்
இலங்கையின் முப்பது வருடகால கடூர யுத்தம் மகிந்த ராஜபக்சவினால் முடிவுக்கு வந்ததும் அவரை சிங்கள மக்கள் தெய்வமாக்கினார்கள்.
தெருதெருவெங்கும் கட் வுட் பால்ச்சோறு தேநீர் தந்து தேசம் கொண்டாடித் தீர்த்தது .
எதுவரைக்கும் தன் வீட்டில் உள்ள வயதுப்போன தாய்க்கும் பாலகனுக்கும் பால்ச்சோறு அரிசி வாங்க சதொச வாசலில் கால்கடுக்க வரிசையில் நிற்கும் நிலை வரை.
கொழும்பு கொழும்பென்று கூலிக்காக வாழச் சென்ற சனம் அடுப்பெரிக்க முடியாது ஒரு சிகேஸ் வாங்க மாதக்கணக்காக காத்திருக்கும் வரை தேசம் சொல்லொண்ணா பஞ்சத்தில் நாடு விழுந்தது.
![]() |
![]() |
tamil.asianetnews.com - vinoth kumar : ஈரோடு நாடார்மேடு எழில் விதியை சேர்ந்தவர் ஹர்சினி. இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். தனியார் பொறியியல் கல்லுரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை வழக்கம்போல் கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
ஈரோட்டில் தனியார் கல்லூரி பேருந்தின் கதவு சரியாக மூடப்படாத நிலையில் பேருந்து வேகமாக வளைவு ஒன்றில் திரும்பும்போது கதவு திறந்துகொண்டு படிக்கட்டு அருகே நின்றிருந்த மாணவி சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மாலைமலர் : புரூக்ளின் . அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆடைகளில் ரத்தம் படிந்த நிலையில் கீழே விழுந்து கிடக்கும் பயணிகள் குறித்த புகைப்படங்களும் அவர்களுக்கு மற்றவர்கள் உதவுவதை காட்டும் புகைப்படங்களும் சமூக வளைதலங்களில் பகிரப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]() |
கலைஞர் செய்திகள் : ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு கேரள போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை கேரளாவின் தொடுபுழா போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
அண்மையில் தீவிர வயிற்று வலி காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் 17 வயதுடைய சிறுமி.
அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
நக்கீரன் செய்திப்பிரிவு : இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, பெட்ரோல். டீசல், சமையல் எரிவாயு, விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,
பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
விடிய விடிய நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.
தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நமது குடும்பம் : வருடம் 1965 - தீபாவளி.
Lulu Deva Jamla G : “பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் தேவையா?”
“பெண்கள் செக்ஸ் பத்தி ஓப்பனா பேசலாமா?”
“மதங்களை விட்டு பெண்கள் ஏன் வெளிய வரணும்?”
“பாலியல் தொழில் அங்கீகரிக்கப்படணுமா?”
“போர்னோகிராஃபி பத்தி...?”
- இப்டி நிறைய சிக்கலான கேள்விகளை எழுப்பி காரச்சாரமாக அலசும் லண்டனின் Fazil Freeman Ali Vs ஆஸ்திரேலியாவின் லூலு தேவ ஜம்லா...
முழு காணொளியை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...
பிகு:- லுலுவை கண்டமேனிக்கு கழுவிக்கழுவி ஊத்த வாய்ப்பு தேடிட்டு இருக்கிற எதிராளிகளுக்கு இது லட்டு ஜிலேபி ஜாங்கிரி treatஆ அமையும் கண்டிப்பா... ஸோ கமான் இஸ்டார்ட் மியூஜிக்
Rishvin Ismath : 'ராம் நவமி' எனப்படுகின்ற ராமன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் யாத்திரைகளைத் தொடர்ந்து இந்தியாவின் நான்கு மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன, பொலிசாரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், காயமடைந்த போலீசார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத ஒருவர் கொல்லப் பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்கள், வீடுகள், வாகனங்கள் தீயிடப் பட்டுள்ளன.
அத்துடன் மாமிச உணவை சாப்பிட்ட டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
நக்கீரன் செய்திப்பிரிவு : சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், இபிஸ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று (11/4/2022) ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தற்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.
அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர்.
மாலைமலர் : அமராவதி , ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு மந்திரி பதவி உறுதி செய்யப்பட்டது. புதியதாக பதவி ஏற்க போகும் மந்திரிசபை விரிவாக்கத்தில் ஏற்கனவே இருந்த மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த 10 பேரோடு புதிதாக 15 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர அமைச்சரவையில் இருந்த 11 பேரைத் தவிர மற்றவர்கள் ராஜிநாமா செய்த நிலையில், நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா உள்பட 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]() |
![]() |
நக்கீரன்-காளிதாஸ் : இந்தியாவில் சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எளிய விலையில் நவீனமான முறையில் ஒரு கிலோ விறகில் அதிகபுகை இல்லாமல் ஐந்து நபர்களுக்குள் இருக்கும் குடும்பத்திற்கு மூன்று வேளை உணவையும் சமைக்கும் வகையில் விறகு அடுப்பை உருவாக்கியிருக்கிறது மக்களை ஆச்சர்யமடையச் செய்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நரத்தில் சிலம்பநாதன் தெருவைச் சேர்ந்த இளைஞர் வேல்முருகன். இவர் 12- ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இவர் கவரிங் தொழில் மற்றும் விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்.
சுதந்திரன் : யாழ் நகரில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக மாநாட்டில் அகில இலங்கை அருந்ததியர் சங்கம் கலந்து கொள்கிறது
அகில இலங்கை அருந்ததியர் சங்க கமிட்டி கூட்டம் சென்ற 9 - 11 - 1957 ல் கொழும்பு கிரீன்ஸ் லேனில் உள்ள சங்க காரியாலயத்தில் திரு . மா மு. இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது
அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . திரு நல்லையா செனட்டராக நியமிக்க பட்டதற்கு இச்சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறது
2 . தமிழ் சமூகமெங்கு புரையோடி போயிருக்கும் தீண்டாமை தொழு நோயை வேரறுக்க யாழ் நகரில் இலங்கை
திராவிட முன்னேற்ற கழகம் டிசம்பர் 28 - 29 ஆகிய நாட்களில் நடத்தும் சமூக சீர்திருத்த மாநாட்டை இச்சங்கம் வரவேற்பதோடு பொதுச்செயலாளர் ஏ சுந்தரராசனின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவொன்றையும் அனுப்புவதென தீர்மானிக்கிறது
3 - கொழும்பு முழுவதற்கும் வட்டார கமிட்டி உறுப்பினர்கள் தெரிவு செய்து அருந்ததிய மக்களை சங்க அங்கத்தவர்களாக்குவதற்கும் சங்கத்தின் சார்பில் பத்திரிகை வெளியிடுவதற்கும் திருவாளர்களான பெ கி .சண்முகம் , மா செ .அருள் . சே சேதுபதி , சே. சங்கர் ஆகியோரை கொண்ட கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டது
![]() |
கால்களின் சிலம்பு = சிலப்பதிகாரம்.
இடையில் மேகலை = மணிமேகலை
கைகளில் வளை = வளையாபதி
மூக்குத்தி & சுருள்முடி = குண்டலகேசி
மணிமாலை = சீவகசிந்தாமணி
ராதா மனோகர் : மொழியாபிமானம் என்பது வெறும் அலங்கார பெறுமதி மட்டுமே உள்ள ஒரு விடயம் அல்ல.
ஒரு மொழி என்பது வரலாற்று சான்றுகள் நிரம்பிய ஒரு அகழாய்வுக்கு உரிய நிலம் போன்றது
மொழி உணர்வை புறந்தள்ளியதால் இந்திய உப கண்டத்தில் எத்தனை மொழிகள் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றன என்பது வெறுமனே உசுப்பேத்தும் மேடை பேச்சு விவகாரமல்ல.
அது ஒரு பொருளாதார வாழ்வியல் வீழ்ச்சியும் கூட என்பது பற்றி பலருக்கும் போதிய புரிதல் இல்லையென்றே கருதுகிறேன்
இந்திய திரையுலகம் உட்பட இதற்கான வலுவான சான்றுகள் புள்ளிவிபரங்கள் உள்ளன.
![]() |
கலைஞர் செய்திகளை : கர்நாடகாவில் வகுப்புவாதம் காரணமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் சமீபகாலமாக மத ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஹிஜாப் பிரச்சினை கடுமையாக வெடித்து இன்னும் ஓயாத நிலையில் இந்து கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டது.
நக்கீரன் : இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர் கனடா நாட்டின் டொரோண்டோவில் முதலாமாண்டு மேலாண்மை படிப்பை படித்து வந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தான் இவர் கனடாவுக்கு படிக்க சென்றுள்ளார். அங்கு ஒரு உணவகத்தில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சுரங்க ரயில் நிலைய பகுதியில் சென்றுகொண்டிருந்த இவரை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
பாலிமர் செய்தி : இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள்
இந்திய மனைவியின் வரி விவகாரம்: பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து அமைச்சர்
தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
2021 சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.3500 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டொலர்) என கணக்கிடப்பட்டுள்ளது.
மாலைமலர் : வீடு புகுந்து திருட்டு, கடைகளில் கொள்ளை, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி என்று தான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால பழமையான இரும்பு பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
69 அடி நீளம் கொண்ட இந்த பாலம் முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதற்காக என்ன செய்யலாம் என அவர்கள் யோசனை செய்தனர்.
தினத்தந்தி : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.
ஆனால், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
![]() |
Dhinakaran Chelliah : தாமிரபரணி நதி மற்றும் பாவநாசத்தின் அருமை பெருமைகளை கண்டபடி கட்டுக் கதைகளாக அள்ளிவிடுகிறது முக்களாலிங்க முனிவர் அருளிய பாவநாசத் தலபுராணம். இத் தலபுராணத்தினை வசனச் சுருக்கத்தில் இயற்றியவர் சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாசலக் கவிராயர் ஆவார்.
பாவநாசத்தின் எல்லைப் பகுதியைத் தொட்டாலே பிரம்மஹத்தி முதலிய கொடிய பாவங்கள் அகலுமாம்.
தாமிரபரணி நதியில் நீராடினால் மீதமுள்ள பாவங்கள் கரையும்.பாவநாசத்திற்குப் போகிறவர்கள் கொடிய பாவங்களைச் செய்தவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது பாவநாசப் புராணம். இனி யாராவது பாவநாசத்திற்குப் போனேன்,போகிறேன் என்றால் அவர்களை ஏற இறங்கப் பார்க்கவும். ‘என்னென்ன கொடுமையான பாவம் செய்தார்களோ?’ என மனதுக்குள் எண்ணம் எழுந்தால், அதுதான் இப்பதிவின் வெற்றி.