செவ்வாய், 12 ஏப்ரல், 2022

அரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு மகிந்த ராஜபக்ச வேண்டுகோள்

 நக்கீரன் செய்திப்பிரிவு    :  இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, பெட்ரோல். டீசல், சமையல் எரிவாயு, விலைவாசி, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,
பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
விடிய விடிய நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.
தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


முன்னதாக, இலங்கையில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் தேசிய அரசு அமைக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் முயற்சியில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், நாட்டு மக்களிடையே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (11/04/2022) இரவு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றவிருக்கிறார். அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கை அதிபரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: