செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

ஹிஜாப் அரசியலை நேர்மையாக அணுகினேன்! சுய தெளிவும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

 Sharmila Seyyid : யமுனா ராஜேந்திரன் உங்களுக்கு இருப்பதை விடவும் அதிக தெளிவும் உரிமையும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேச எனக்கு இருக்கிறது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணி அனுபவம் பெற்றவள்.
இன்னமும் என் சமூகப் பணியை பெண்களுக்காக பல வழிகளில் தொடர்கிறேன்.
நான் வேலை செய்தது தமிழ் முஸ்லிம் பெண்களுடன். முஸ்லிம் பெண்களின் நாடி தெரிந்தவள் நான்.
என் 6 ஆம் வகுப்பில் இருந்து 23 வயதுவரையும் ஹிஜாப் அணிந்துள்ளேன்.
ஹிஜாப் அணிந்தால் எப்படி இருக்கும், இல்லாமல் எப்படி இருக்கும் என்று எனக்கு உணர்வுபூர்வமாகத் தெரியும்.
அதை அணிந்தால் சமுகம் எப்படிப் பார்க்கும் களைந்தால் என்ன சொல்லும் என்றும் தெரியும்.
முழுவதையும் அனுபவித்து அறிந்து தெளிந்து பேசுகிறேன்.
என் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் உளறுவதை விடவும் தெளிவாக முன்வைத்துள்ளேன்.

எம்ஜிஆர் முதல் விஷால் வரை .தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வேறு மாநில 8 ஹீரோக்கள்..

mgr

Thenmozhi  cinemapettai.com :  தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சில நடிகர்கள் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். தமிழ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்று தற்போது தமிழ் ஹீரோக்கள் ஆகவே மாறிவிட்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் என்று நினைத்திருக்கும் சில ஹீரோக்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
எம்ஜிஆர் : இந்தியாவில் தலைசிறந்த நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். இவர் ஸ்ரீலங்காவில் வாழ்ந்த மலையாளி குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தமிழர் இல்லை என்றாலும் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்.

பிரியங்கா காந்தி : என் சகோதரருக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன்

என் சகோதரருக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன் - பிரியங்கா காந்தி

தினத்தந்தி  : உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
டேராடூன்,  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்களாகவும் உள்ளன.
முன்னதாக, பிரியங்கா காந்திக்கும் அவரது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கும் இடையே பிளவு ஏற்படக்கூடும் என யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரான்ஸ் தமிழச்சி தரப்பு வாதங்கள் சமூகவலை லீக்ஸ்

May be an image of 1 person, standing and indoor

ThamizhachiAuthor  :  தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?
தமிழச்சி. கடந்த பத்து நாட்களாக தமிழ் இணையப் பரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்.
பல ஆண்டுகளாக இணையப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும்,
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதிலும்,
இப்போது மட்டும் தோழர் தமிழச்சி மீது அதிக வெளிச்சம் விழுந்திருப்பதன் காரணம் என்ன?
இதுவரை அவர் தன்னுடைய நாட்டிலிருந்து, பிரான்சிலிருந்து இவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், விவாதித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக நேரடியாக தமிழ்நாடு வந்து இதுவரை தான் கூறிவந்ததன் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகளையும்,

லூலு தேவ ஜம்லா தரப்பு வாதங்கள் சமூகவலை காரசார லீக்ஸ்

May be an image of 4 people, people standing and text that says 'பெரியாரின் கருத்தியல்களை கொண்டு பாலியல் சுரண்டல்களா.. THALAIVAR Whattsapp LIVE INTERVIEW கொதிக்கும் FRANCE தமிழச்சி... லூலூ GROUP பாலியல் சர்ச்சைகள்.. YouTube கொதிக்கும் FRANCE தமிழச்சி பெரியாரின் கருத்தியல்க... கொதிக்கும் FRANCE தமிழச்சி... youtu.be https://youtu.be/ bWSqN5tDWZU 6:31 pm டைம் இல்ல 6:32 6:32pm✓/ pm'
லூலு தேவ ஜம்லா  : “Lu Lu இந்தா இந்த வீடியோ பார்த்தீங்களா?”
“சாரி டயம் இல்ல! வீக்கெண்ட் முடிஞ்சி போச்சி!  ஆபீஸ் போகணும்!
ஆங் அதோட இப்டியே லெங்தியா வாய்லயே வடை சுட்டுட்டு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டு திரியாம, தெரட்டுன ஆதாரங்கள எல்லாம் வச்சி நம்ம மேல சட்டுபுட்டுன்னு கேஸ போட்டு உட சொல்லு! போ

லூலு தேவ ஜம்லா
  :  “வாங்கம்மா இந்த பாலியல் சுரண்டல் வழக்குல நீங்க திரட்டுன ஆதாரங்கள எல்லாம் அவுத்து உடுங்க பார்க்கட்டு எல்லாம்…”
“அவரு, அதான் கொளத்தூர் மணி, வாட்சாப்ல ஒரு பொம்பளையோட நிர்வாண படம் வச்சிருந்தாரு!
இந்தா இவ தனக்கு மனசுக்கு புடிச்சவனோட இரகசியமா செக்ஸ் வச்சிகிட்டா!
அந்தா அவன் தன் பொண்டாட்டியோட நண்பர் நண்பிகளோட நட்பா பழகுனான்!
தன் பொண்டாட்டியையும் கூட்டிட்டு அவங்களோட சேர்ந்து ஒண்ணா வெளிய எல்லாம் சுத்தினான்.

தீட்சிதரை தரிசனம் செய்யவிடாமல் மிரட்டும் சக தீட்சிதர்கள்? - சிதம்பரம் கோவிலில் பரபரப்பு

பறச்சின்னு சொல்லி திட்டினாங்க; 

தினகரன் :   சிதம்பரம் கோயிலில் சக தீட்சிதர் மீது தாக்குதல் தீட்சிதர்கள் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு: பெண் பக்தரும் போலீசில் புகார்
சிதம்பரம்:  சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர். இதுகுறித்து கோயிலைச் சேர்ந்த கணேஷ் தீட்சிதர் என்பவர் சக தீட்சிதர்களிடம் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேஷ் தீட்சிதர் (57) நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது சிற்றம்பல மேடை முன்பு சென்ற அவரை தடுத்து நிறுத்திய ராஜாசெல்வம் தீட்சிதர், சிவசெல்வம் தீட்சிதர் மற்றும் சபேஷ் தீட்சிதர் ஆகிய 3 பேரும் கோயில் விதிமுறைகளை மீறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் எப்படி சாமி கும்பிட வரலாம் என கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

திங்கள், 14 பிப்ரவரி, 2022

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

தினத்தந்தி : விழுப்புரம் வில்லியம் லேஅவுட் 2-வது தெருவை சேர்ந்தவர் சுசீந்திரன் (வயது 54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை பிரமிளா (52). இவரது கணவரான கமல், நடிகை ஊர்வசியின் தம்பி ஆவார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரமிளாவை விட்டு கமல் பிரிந்து சென்றார். இதனால் வாடகை வீட்டில் சுசீந்திரனும், பிரமிளாவும் வசித்து வந்தனர். போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் வறுமையில் வாடினர்.
இந்த நிலையில் சுசீந்திரன் வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே போலீசார், கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

சவுதி அரேபியாவில் காதலர் தின சிவப்பு ஹார்ட்டின் அனுப்பினால் சிறை தண்டனை

red heartin

நக்கீரன் செய்திப்பிரிவு  :  உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், சவுதி அரேபியாவில் சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை மற்றவருக்கு அனுப்புவது குற்றமாகக் கருதப்படும் என அந்தநாட்டு நிபுணர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள ஆன்டி பிராடு அஸோசியேஷன் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்புவது அந்நாட்டு சட்டப்படி துன்புறுத்தலாகக் கருதப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை அனுப்புபவர் மீது வழக்கு தொடரப்பட்டால், அனுப்பியவருக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் சவுதி ரியால்கள் வரை அபராதமும், 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மதவெறி கும்பல்களால் எரித்து கொலை செய்யப்ட்ட சுதந்திர சிந்தனையாளர்

 BBC News, தமிழ் : இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை: பாகிஸ்தானில் குரான் பக்கங்களை எரித்ததாக கும்பல் கொலை செய்யப்பட்ட நபர்
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்களை தீயிட்டு எரித்து மத நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவர் கும்பல் ஒன்றால் கொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் காவல் துறை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சனிக்கிழமை அன்று நடந்த இந்த கொலை தொடர்பாக 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவிக்கிறது.
பஞ்சாபின் கானேவால் மாவட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது. கானேவால் மாநிலத் தலைநகர் லாகூரில் தென்மேற்கே 275 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தேசிய பங்குச்சந்தை NSE நிர்வாகி சித்திரா ராமகிருஷ்ணன் வசமாக சிக்கினார் சாமியாரிடம் தகவல்களை பரிமாறினார்

Pugazharasi S - GoodReturns Tamil  :  தேசிய பங்கு சந்தையின் (NSE) முன்னாள் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக பங்கு சந்தை பற்றிய ரகசிய தகவல்களை பகிர்ந்து வந்தாக செபி தெரிவித்துள்ளது.
இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட்
இது குறித்து வெளியான அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் வசிக்கும் சாமியாரிடம் பொருளாதார ஆலோசனை மற்றும் பங்கு சந்தை ரகசியங்களை பகிர்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில் தான் செபியின் கட்டுப்பாட்டு வளையத்தில் சித்ரா சிக்கியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மீது தீட்சதர்கள் கொலைவெறி தாக்குதல்!

 நக்கீரன் செய்திப்பிரிவு : சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கரோனா தொற்று காரணமாகக் கோவிலின் கருவறை முன் உள்ள சித்சபையில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யக் கோவில் நிர்வாகம் தடைசெய்து இருந்தது.
ஆனால் சித்சபையில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் தவிர 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் எப்போதும் சித்சபையில் இருப்பார்கள்.
இதனைப் பார்த்துப் பொதுமக்கள் நீங்க மட்டும் ஏன் முககவசம் அணியாமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுகொள்ளாமல் கூட்டமாக இருக்கிறீர்கள். இதனால் எங்களுக்குத் தொற்று பரவாதா? எனக் கூறி கடந்த 6 மாதத்திற்கு முன்  வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.

உத்தர பிரதேசம் உத்தரகாண்ட், கோவா தேர்தல் ... இன்று வாக்குப்பதிவு!

 மின்னம்பலம் : உத்தரகாண்ட் கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 81,72,173 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மொத்தம் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

தனுஷ் ஐஸ்வர்யா இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற முடிவில்? சோகத்தில் ரஜினி

tamil.samayam.com : தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் சேர்வார்களா என்பது பற்றி புது தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.
தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான 'திடுக்' தகவல்
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே 6 ஆண்டுகளாக பிரச்சனையாக இருந்தது. அவர்கள் அப்பொழுதே பிரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறதே, தவிர தற்போது பிரிந்திருப்பது ஆச்சரியம் இல்லை என்று கோடம்பாக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

லு லு பற்றிய பிரான்ஸ் தமிழச்சி பேட்டி .. இங்கன ஈ கதா போவறது


ThamizhachiAuthor : திருச்சி பெரியார் சரவணன் எடுத்த நிர்வாண படங்களை 'THALAIVAR Whattsapp' இல் அனுப்பியதை கொளத்தூர் மணி அறிக்கை ஏன் பேசவில்லை?
 தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி நேர்மையாளர் என்றால்,
ஒன்றரை வருட கள்ள மௌவுனத்தை தளர்த்திவிட்டு தன் செயல்பாட்டிற்கான விளக்கத்தை மக்கள் முன் விளக்க வேண்டும்.
திவிக செயற்குழுவிடமும் 'வாட்ஸ் அப்' தகவல்களை அளித்து அறம்சார் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

பெரியார் பெயரை தங்கள் பெயராக போட்டுக்கொள்ளலாமா? ( உ+ம் பெரியார் சரவணன்)

Loganayaki Lona :  பெரியார் என்பது பெரியாருக்கே பெயர் கிடையாதே.
அது தங்களை மேம்படுத்தும் சிந்தனை கொண்ட மாமனிதராம் ஈ.வெ.ராமசாமிக்கு  பெண்கள் அங்கீகரித்துக் கொடுத்த பட்டம்  தானே.
அவர்க்கு முன்பாகவும், இணையாகவும் அவர் போன்ற உயர்ந்த  சிந்தனை கொண்டவர் தென்னாட்டில் இல்லாததால் அவர் பெரியார் ஆக்கப்பட்டார்.எங்கள் தந்தைக்கு ,தலைவனுக்கு  அரசியல் பெண்கள் கொடுத்த பொதுவாழ்வுக்கான சமூக   அங்கீகாரம் அது.
அடுத்தவர் பட்டத்தை திருடி தாங்கள் போடுவது சரியா?.
நான் டாக்டர் என எப்படி போட்டுக்கொள்ள முடியாதோ அது போல் நான் பெரியார் என  போட்டுக்கொள்ள பெரியாரிச அரசியலில் ஏன்  தடை இல்லை?
பெரியாரிய இயக்கங்கள் பெரியாரிஸ்டுகள் இவ்வாறு தாங்களே  பெயர் சூட்டிக்கொண்டு பொதுவாழ்வில் அவர் பெயரை கெடுக்க அனுமதிக்க கூடாது.
லோகநாயகி .(பெரியார் இல்லை.பெரியாரிஸ்ட்

கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டம்.. தடுப்பூசி விவகாரம்

 மாலைமலர் :தடுப்பூசி கட்டாயம், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.
பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது.

வினி ராமனை (தமிழ்) மணக்க இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்)

 மாலைமலர் : திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி அச்சிடப்பட்டுள்ளதால் இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் பெண்ணை மணக்க இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் - வைரலாகும் திருமண பத்திரிக்கை..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்
கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி.

மார்க்ஸியமென்பது பாட்டாளிகளுடையதல்ல! அது கீதையின் சாரமே!

May be an image of 7 people and text that says 'பூணுல் ஆட்சியின் மகிமை! ராமர் கோவிலோ, புதிய பாராளுமன்றமோ நாட்டின் முதல் குடிமகனுக்கு அழைப்புமில்லை; அனுமதியுமில்லை. #மனுநீதிஆட்சி...'

புகச்சோவ் : மதவாதிகளின்  சின்டிகாலிசம்.....!? 11)
அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்படுகிறவர்களுக்கும் இடையேவுள்ள கலாச்சார வேறுபாடானது, எவ்வளவு அதிதீவிரமானதாக இருக்கிறதோ, அவ்வளவு பரஸ்பர எதிர்ப்பை தூண்டியெழச்செய்கிறது. ஆதிக்க தரப்பு வெற்றிபெறுவதை தடுக்கிறது. அதுபோலவே,அந்த கலாச்சார வேறுபாடு குறைவாக இருந்தால், கலாச்சார ஒற்றுமை அதிகமாகவிருந்தால்! அடக்குமுறையின் கை ஓங்குகிறது, எதிர்ப்பும் குறைவாகப்போய்விடுகிறது. ஆதிக்க சக்திகளின் வெற்றியும் இலகுவாகிவிடுகிறது!
                                                                :  - பிரமிள்
அக்சிலிஸும், உலிசெஸும் ஒரு நூற்றாண்டு போரிட்டனரே ப்ரமிள்!?
ட்ராயின் சாம்பலை காண உலக மக்கட்தொகையில் 25% பேர் சண்டையிட்டு அழிந்துபோயினரே ப்ரமிள்...!?
அவர்களுக்குள் நெருங்கிய கலாச்சார தொடர்புண்டே ப்ரமிள்...!?
2500 ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, மாபெரும் தமிழகத்தை பிராமண்யத்திடம் விற்றனரே சேரசோழபாண்டியர்கள்! அவர்களிடத்தே நெருங்கிய கலாச்சார தொடர்பிருந்ததே ப்ரமிள்....!?

மாநில உரிமைகளைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும்: மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

மாநில உரிமைகளைக் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும்: மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

கலைஞர் செய்திகள்  : எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் மாநில அரசுகளின் திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்திவிட்டு மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி.

பேராசிரியர்கருணானந்தம் : கால்டுவெல் இல்லாவிட்டால் திராவிட மொழிகள் குடும்பம் என்பதே இல்லாமல் போயிருக்கும்

 கூடாரங்களில் வாழ்ந்தவர்களா அல்லது கோட்டைகளில் வாழ்ந்தவர்களா தொன்மையானவர்கள்?  பேராசிரியர். கருணானந்தம்  :
Mr Justice என்று அமெரிக்காவில் அழைப்பார்கள் .. இங்கே நாம் மை லார்ட் என்கிறோம் .. வழக்காடுபவர்கள்  பிச்சை எடுப்பவர்கள் போலவும் .. தீர்ப்பை கொடுப்பவர் பிச்சை அளிப்பவர் போலவும் ஒரு ஜனநாயக நாட்டில் .. நீதிக்கு உகந்ததுதானா?
தன்வழக்கு என்று வந்தால் தானே தீர்ப்பு அளிப்பதுவும் .. அடுத்தவர் வழக்கென்று வந்தால் பெரிய சம்பிரதாயங்களை பார்ப்பதுவும் ..
சில சமயத்தில் விபத்துக்களை போல நல்ல தீர்ப்புக்கள் வருவதுண்டு

ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல! கேரள ஆளுநர் ஆரிப் முகமத் கான் : குரானில் 7 முறை மட்டுமே ஹிஜாப்!

 Vishnupriya R   -   Oneindia Tamil : திருவனந்தபுரம்: ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட்
கர்நாடகா மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் (பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் இருக்கும்) ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்துத்துவா மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். சிலர் கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர்.

Rahul Bajaj -தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்.. முதன்முதலில் CEOவாக பதவியேற்ற இளம் இந்தியர்!

 கலைஞர் செய்திகள் : பஜாஜ் குழும முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 83. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ராகுல் பஜாஜ் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார்.
1938ஆம் ஆண்டு பிறந்த ராகுல் பஜாஜ் பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.
ராகுல் பஜாஜ், 1965ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் 1968ல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். இத்தகைய பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையையும் ராகுல் பஜாஜ் அப்போது பெற்றார்.

உக்ரைன் போர் பதற்றம் - . விளாதிமீர் புடினுக்கு, பைடன் எச்சரிக்கை

 மாலைமலர் : ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என்று பைடன், புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்கா பல வாரங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறும் வெள்ளை மாளிகை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெதிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்தார்.

பிரியதர்ஷினி டீச்சரின் வாழும் காதல்...

May be an image of 2 people, people standing and text

Michael Raj Y  பிரியதர்ஷினி ...  வாழும் காதல்...
பிரியதர்ஷினி டீச்சர் வேலை செய்யும் பொழுது ஒரு லோகோ பைலட்டை காதலித்தார்.  
மங்களூர்-சென்னை வழித்தடத்தில் டீச்சரின் காதலர் ட்ரெயின் ஓட்டினார்.
தலச்சேரி ஸ்டேஷனில் ட்ரெயின் நிற்கும்பொழுது இருவரும் சந்தித்து பேசிக் கொள்வார்கள்.
மொபைல் போன்கள் மிகவும் அரிதாக இருந்த அந்தக் காலத்தில் இவர்களின் காதல் அப்படி வளர்ந்தது.
டீச்சர் மிக அழகாக இருப்பார்கள்.
ஒருநாள் டீச்சர் காதலித்த ட்ரெயின் டிரைவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விஷயத்தை செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்துகொண்ட டீச்சருக்கு மனநிலை பாதித்தது.

உண்மையான தமிழ் தாத்தா ஜி.யு.போப் ..உ வேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து.... தமிழ் காத்த George Uglow Pope

May be an image of 1 person

Sundar P  :  முதல் தமிழ் தாத்தா ஜி.யு.போப் ...(ஜார்ஜ் உக்லோ போப்.)
உவேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து, சுவடிகள் திரட்டி புறநானுறை பதிப்பித்த ஜியு போப்தான் முதல் தமிழ் தாத்தா.
உவேசா 1894 ல் புறநானூறை இரண்டாம் பதிப்பு செய்தார்.
ஆனால் ஜியு போப் 1886 ல் முதல் பதிப்பு செய்தார்.
ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப்.....
அவரைப் பற்றி:
• கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820-ல் பிறந்தவர்.
• தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது.
• ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார்.
• கப்பலில் பயணம் செய்த அந்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.