திங்கள், 14 பிப்ரவரி, 2022

சவுதி அரேபியாவில் காதலர் தின சிவப்பு ஹார்ட்டின் அனுப்பினால் சிறை தண்டனை

red heartin

நக்கீரன் செய்திப்பிரிவு  :  உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் வேளையில், சவுதி அரேபியாவில் சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை மற்றவருக்கு அனுப்புவது குற்றமாகக் கருதப்படும் என அந்தநாட்டு நிபுணர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள ஆன்டி பிராடு அஸோசியேஷன் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்புவது அந்நாட்டு சட்டப்படி துன்புறுத்தலாகக் கருதப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் சிவப்பு நிறத்திலான இதய எமோஜியை அனுப்புபவர் மீது வழக்கு தொடரப்பட்டால், அனுப்பியவருக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் சவுதி ரியால்கள் வரை அபராதமும், 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: