வியாழன், 17 ஜூன், 2021

யாகவா முனிவர் vs சிவ சங்கர் பாபா.. ஞாபகம் இருக்கா அந்த சண்டை.. பெண்ணால்தான் சிறைன்னு அப்பவே சொன்னார்

Veerakumar  - tamil.oneindia.com : சென்னை: சிவ சங்கர் பாபா பெண்கள் விஷயத்தால் சிறைக்கு போவார் என்று 23 வருடங்களுக்கு முன்பே, யாகவா முனிவர் கூறியுள்ளார்.
சன் டிவியில் அவர் கொடுத்த நேர்காணல் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. 1949 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் என்ற ஊரில் பிறந்தவர் தான் சிவசங்கர்.
சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேதியியல் துறையில் இளங்கலை படிப்பு மட்டும் போக்குவரத்து கையாளுதல் பிரிவில் முதுகலை படிப்பு படித்தவர்
சென்னை மண்ணடியில் லாரி புகிங் ஏஜன்ட் ஆக பணியை ஆரம்பித்தார். 1973 முதல் 1983 வரை ரியல் எஸ்டேட் ஒப்பந்தம், ஆவணப்படத் தயாரிப்பாளர் என பல விஷயங்களில் அடையாளப்படுத்திக் கொண்டார்.
சிவ சங்கர் ஆரூட நிலையம் சிவ சங்கர் ஆரூட நிலையம்
சென்னை அண்ணாநகர் ரோட்டரி கிளப், ஆந்திரா வர்த்தக சம்மேளன நிர்வாகக்குழு, இந்தியன் வங்கி நிர்வாக குழுவில் சிவசங்கர் இடம்பெற்றார்.
சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் பதவியையும் பிடித்தார்.
1980களில் சென்னை மண்ணடியில் சிறிய அளவில் ஆருடம் சொல்ல ஒரு நிலையத்தை தொடங்கினார் .

நடிகை ரோகிணி கிஷோர் கே.சாமி மீது போலீசில் முறையீடு : "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்"

BBC :தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில்சிறையில் அடைக்கப்பட்டார்.

7பேர் ... நீண்டகால பரோல் வழங்க தமிழக அரசு முடிவு?

puthiyathalaimurai.com : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதில், மத்திய அரசு முடிவெடுக்காத நிலையில், அவர்களுக்கு நீண்ட நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுவிப்பது என கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை செயல்படுத்த வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அதில் இதுவரை எவ்வித முடிவும் வெளியாகாத நிலையில், 7 பேருக்கும் நீண்டகால சிறைவிடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 7 பேரில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியாது என்பதால், அகதிகள் சான்றிதழ்களுடன், இலங்கை அகதிகளுக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

டெல்லியில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார் !

dailythanthi.com : மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார். பதிவு: ஜூன் 17, 2021 13:07 PM புதுடெல்லி, தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் : தமிழ்நாடு அரசு!

 விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் : தமிழ்நாடு அரசு!

minnambalam :விளை நிலங்களுக்கே நேரிடையாக சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர். மழையில் நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க ஆலோசனை'' - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :    தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள், கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பு சேர்க்கையும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் முழு விபர பட்டியல்

கலைஞர் செய்திகள் Vignesh Selvaraj :  : பிரதமர் மோடி உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரின் முன்வைத்த கோரிக்கைகள் குறித்துத் தெரிவித்தார்.
“கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடுக” - பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்!
 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமருடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வால் பாதிப்பு... பொதுமக்கள் கருத்து கூறலாம் - ஏ.கே. ராஜன் குழு அறிவிப்பு!

nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :
Impact of NEET exam; Public can comment - AK Rajan Committee announcement!

  நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர், ''சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்'' என தெரிவித்திருந்தார்.

பெண் பக்தரை வைத்தே வீசிய வலையில் சிக்கிய சிவசங்கர் பாபா

 /tamil.oneindia.com - Veerakumar :  டெல்லி: பாலியல் சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து தமிழக போலீசாரால் எப்படி கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உதவி செய்த பெண் பக்தராலேயே வளைத்து பிடிக்கப்பட்டுள்ளார் சிவசங்கர் பாபா
இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள காசியாபாத் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். டெல்லி நீதிமன்றத்தில் பாடி வாரண்ட் பெற்றுக்கொண்டு சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து வருவதற்கு காவல் துறை திட்டமிட்டுள்ளது.
பாலியல் சீண்டல் சில்மிஷ சாமியார், சிவ சங்கர் பாபா மீது அவர் நடத்தி வந்த சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்ததன் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம், சிவ சங்கர் உத்தரகாண்ட் மாநிலம் தப்பியோடிவிட்டதாக தகவல் கிடைத்தது. வெளி மாநிலங்களுக்கு போலீசார் செல்ல தேவையுள்ளதால் வழக்கு சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்! ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்!

ஸ்டாலின் டெல்லி பயணம்: முழு விவரம்!

 minnambalam :தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 17) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார். ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வரின் பயண விவரம்:

7.00 மணி: சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்குப் புறப்படுதல்.

7.20 மணி: சென்னை விமான நிலையத்தை அடைதல்.

7.30 மணி: சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்படுதல்.

காலை10 மணி: டெல்லி விமான நிலையம் அடைதல்.

வரவேற்புக்குப் பின் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் செல்கிறார். அங்கே தமிழக எம்.பி.க்களுடன் ஆலோசனை, அதிகாரிகளுடன் ஆலோசனை, மதிய உணவு, ஓய்வு...

நள்ளிரவில் சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா

நக்கீரன் -பி.அசோக்குமார் - ஸ்டாலின் :   பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர். ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
 இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.  இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

கிளப் ஹவுசில் அரசியல் கூத்து பட்டறை ? . தி விக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை!

தமிழர்களின் தன்மானத்தைக் காக்க திமுக வுக்கு ஆதரவு – கொளத்தூர் மணி அறிவிப்பு  – தமிழ் வலை

தோழர் கொளத்தூர் மணி  : - திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிடம் 2.0. (தற்போது அரக்கர் கூட்டம்) எனும் கூட்டம் குறித்து சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்.
இந்திய ஒன்றிய அரசும், அவர்களின் உளவுத்துறையும்,  பார்ப்பன ஆதிக்க சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தி பரப்பி வரும் அதே பாணியில், அதே மொழியில் திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் ஒளிந்துகொண்டு பரப்புரை செய்பவர்களின் நோக்கத்தை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கருதுகிறோம்.
உண்மையில் இவர்கள் திமுக ஆதரவாளர்களா ?
திமுக ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு கலைஞரிஸ்ட்  என்ற புது சொல்லால்  தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு திமுகவினுடைய கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், திமுகவிற்கு ஆதரவான தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பெரியார் இயக்கங்கள்,பெரியார் இயக்கத் தலைவர்களை இழிவுபடுத்தியும் பேசிவரும் திராவிடம் 2.0 (தற்போது அரக்கர் கூட்டம்)  எனும் கூட்டத்தினரின் உள்நோக்கம் இந்துத்துவவாதிகளின் நோக்கம் போலவே இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது.

புதன், 16 ஜூன், 2021

பாளையம் புதூர் ஊர் வலசு பட்டி புரம் பதி எல்லாம் ஊர்களின் பெயர்கள்

May be an image of text that says '1828 பாளையம் என முடியும் ஊர்கள் புதூர் என என முடியும் ஊர்கள் ஊர் என முடியும் ஊர்கள் வலசு என முடியும் ஊர்கள் 565 561 493 185 90 55 54 பட்டி என முடியும் ஊர்கள் புரம் என முடியும் ஊர்கள் பதி என முடியும் ஊர்கள் காடு என முடியும் ஊர்கள் கரை என முடியும் ஊர்கள் குட்டை என முடியும் ஊர்கள் மங்கலம் என முடியும் ஊர்கள் நல்லூர் என முடியும் ஊர்கள் புத்தூர் என முடியும் ஊர்கள் 33 33 26 18 10 ஒடு, தொழுவு, குறிச்சி, நிலை, பாடி, கயம், மி, வாவி என முடியும் ஊர்களும் உள்ளன. பயர்கள் உடையவை.'

Magudeswaran Govindarajan  : பாளையம், பட்டி என்று முடியும் ஊர்ப்பெயர்களைக் குறித்து அண்மையில் நானெழுதிய பதிவொன்று நினைவிருக்கலாம். கோவைப் பகுதி ஊர்ப்புறப் பெயர்கள் பெரும்பாலும் ‘பாளையம்’ என்றே முடியும் என்றும், கற்பனையாய் இப்பகுதியின் ஓர் ஊர்ப்பெயரைக் குறிப்பிட நேர்ந்தால் பட்டி என்பதனைவிடவும் பாளையம் எனல் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே “இங்கும் பட்டிகள் இருக்கின்றன. அவை குறைவாகத்தான் இருக்கும்.’ என்றிருந்தேன். இன்னோரிடத்தில் பத்துப் பாளையங்கள் இருக்குமிடத்தில் இரண்டு பட்டிகள் இருக்கின்றன என்றும் கூறியிருந்தேன்.
அந்தப் பதிவானது ‘திரைப்படத்தில் புனைவாய் ஓர் ஊர்ப்பெயர் வைப்பதைப் பற்றியது’ என்பதால் அதற்குமேல் நான் இடையீடு செய்யாமல் நண்பர்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஊர்ப்பெயர்களையும் மாவட்டத்து இணையத்தின் வழியாகச் சரிபார்த்தேன். இருநூற்றுத் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிப் பெயர்களில் ( ஓர் ஊராட்சியில் ஏழெட்டுச் சிற்றூர்கள் இருக்கும்) பாதிக்கும் அருகிலான எண்ணிக்கையில் பாளையங்கள் இருந்தன. நான் சொன்னதுபோலவே பத்துக்கு இரண்டு பட்டிகளும் இருந்தன. அதனை எடுத்தெழுத நேரமின்மையால் விடுபட்டுவிட்டது.

‘பப்ஜி’ மதன்.. தலைமறைவான யூடுப் பதிவர் ..மனைவியை கைது செய்து விசாரிக்கிறது போலிஸ்!

 கலைஞர் செய்திகள் :யூடியூபில் மிகவும் பிரபலமான கேமரான மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலிஸில் புகார் அளிக்கப்பட்டு, அவர் தலைமறைவான நிலையில், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி, ஃப்ரீ பயர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மன அழுத்தம், வன்மம் நோக்கித் தள்ளிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டாலும், வி.பி.என் மூலம் இன்னும் இந்த விளையாட்டு ரகசியமாக புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் எழுகின்றன.
அதே நேரத்தில் பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீ பயர் எனும் விளையாட்டு அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறி அதனை வீடியோவாக யூ டியூபில் பதிவிட்டு வருபவர் மதன்.

யாருக்கும் சொல்லாமல்.. முதல்வர் திடீர்... வந்திருப்பது CM ஸ்டாலின்.. .. பரபரத்த ரேஷன் கடை

 Veerakumar  - tamil.oneindia.com : சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களுக்கு உரிய வகையில் 14 வகை மளிகை பொருட்கள் சென்று சேர்கிறதா, 2000 ரூபாய் நிவாரணத் தொகை சரியாக கொடுக்கப்படுகிறதா என்பதை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரணத் தொகையாக அரசு சார்பில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஒரு தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டதுகொரோனா ஊரடங்கு காலத்தில் நிவாரணத் தொகையாக அரசு சார்பில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ஒரு தவணையாக 2000 ரூபாய் கடந்த மாதம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது

சிவசங்கர் பாபா டெல்லியில் கைது

 மாலைமலர் :சிவசங்கர் பாபாவை கைது செய்து அழைத்துவர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்தனர்.
புதுடெல்லி:    
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி பின்னர் கைது செய்து அழைத்துவர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் டேராடூன் விரைந்தனர்.

கோபிகான்னு அழைத்தால்.. அந்த மாணவியை அடையாமல் விடமாட்டார் சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பகீர்

மது

  Vishnupriya R  - /tamil.oneindia.com :  சென்னை: சிவசங்கர் பாபாவுடன் டேட்டிங் செல்ல விருப்பப்பட்டால் அதற்கென ஒரு தனி செஷனே இருக்கிறது என முன்னாள் மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் முன்னாள் மாணவி கூறுகையில் சிவசங்கர் பாபாவை கிருஷ்ணராக பக்தர்கள் பாவிக்கிறார்கள். மாணவிகள் அனைவரும் கோபிகாக்கள்.
இதில் கோபிகா என அவர் வாயை திறந்து கூப்பிட்டு விட்டால் அந்த மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்யாமல் விடமாட்டார்.
 இதில் யாரை அவர் அழைப்பார் என்றால், பொதுவாக சிவசங்கர் பாபா குறிவைப்பது சிங்கிள் மதரின் குழந்தையாக இருப்பார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகள், பயந்த சுபாவம் கொண்ட மாணவிகள் ஆகியோரைத்தான்.
சிவசங்கர் பாபா எப்போதும் மாணவிகளிடம் கூறுவது நான்தான் உனது தந்தை, நான்தான் உனது பாய் பிரண்ட், நான்தான் உனது கணவர், நான்தான் உனக்கு எல்லாமே என கூறுவார்.
பாபாவுடன் டேட்டிங் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு செஷனே இருக்கிறது.

சிவசங்கர் பாபா டேராடூன மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

 தினத்தந்தி : டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தப்பியோடியுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.  
இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு சட்ட மீறல் அல்ல. சட்ட வழிகாட்டுதலே.

May be an image of 1 person, map and text that says 'அகண்ட_பாரதம் பாரதம்'

Surya Xavier  :  ஒன்றிய அரசு என்று சொல்லக்கூடாது.
தமிழ்நாடு அரசு என்று சொல்லக்கூடாது.
அகண்ட பாரதம் அமைப்போம் என்று சொல்லலாமா?
அது சட்டவிரோதம் இல்லையா?
அகண்ட பாரதம் என்றால் என்ன?
1922இல் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சவர்க்கார் என்பவர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா என்பது. அதற்கு முன் அந்தச் சொல் புழக்கத்தில் இல்லை. இந்தியாவில் இரண்டே தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று இந்து, மற்றொன்று முசுலிம் என்ற பாகுபாட்டை அந்த நூல் கூறியது.
அந்த அடிப்படையில் சித்பவனப் பார்ப்பனர்களால்  இந்துமதவெறித் தத்துவம் தோற்றுவிக்கப்பட்டது. 1925இல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் எனப்படும் இயக்கம் உருவாக்கப்பட்டது. இதை உண்டாக்கியவர் சித்பவன் பார்ப்பனரான கேசவராம் பலிராம் ஹெட்கோவர்.

திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் "தலை"கள்.. பிஸியில் அறிவாலயம்

 Hemavandhana - tamil.oneindia.com :    சென்னை: எல்லா எம்பிக்களும் டெல்லிக்கு வர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாம்..
இதனால் திமுக வட்டாரமே படுபிஸியாகி உள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முக ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்..
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நிர்வாக ரீதியாக ஒரு மணி நேரம் சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது..
அப்போது தமிழக நலன் சார்ந்த விஷயங்களை ஸ்டாலின் பிரதமருக்கு எடுத்துரைக்ககூடும். இதற்கு பிறகு இருவரும் தனியாக 10 நிமிடங்கள் வரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
 ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுக மூத்த தலைவரான எம்பி டிஆர்பாலு முன்னதாகவே டெல்லி சென்றுவிட்டார்..
இன்று அமைச்சர் துரைமுருகனும் செல்ல உள்ளார்.. அதேபோல, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏகேஎஸ் விஜயனும் இன்று இரவு டெல்லி செல்கிறார்.. இவர் நாளை முறைப்படி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு!

 நக்கீரன் : தமிழ்நாட்டுக்கு 3,691 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய  அரசு!
இது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பில், "ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீட்டை ரூபாய் 3,691 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நீர்வள  அமைச்சகத்தின் 'தேசிய ஜல் ஜீவன் திட்டம்' தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 614.35 கோடியை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு இந்நீர் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ள ஒன்றிய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங், 2024- ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க தமிழ்நாட்டுக்கு  முழு உதவியும் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில்  மொத்தம் உள்ள 1.26 வீடுகளில், 40.36 லட்சம் வீடுகளுக்கு (31.80 சதவீதம்) குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15- ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கியபோது, 21.65 லட்சம் (17.06 சதவீதம்) வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதவீதம்) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வுக்கு இப்போது தேனிலவு காலம்- குஷ்பு சொல்கிறார்

MeToo campaign: Actress Kushboo Tweets supporting Sandalwood actor  Ravichandran

மாலைமலர் : கடந்த ஆண்டு மே மாதம் ஊரடங்கு தளர்வில் எடப்பாடி பழனிசாமி மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டதற்கு ஸ்டாலின் நடத்திய போராட்டம், விமர்சனம், வெளியிட்ட கார்ட்டூன்கள் மறந்து போகுமா?
பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ‘ஜூம்’ மூலம் தினமும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தி.மு.க. இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை முதல் 3 மாதம் வரை தேனிலவு காலமாக நினைத்து எதுவும் சொல்லமாட்டோம். அதே போல்தான் கட்சிகளுக்கும். ஆட்சிக்கு வந்ததும் தேனிலவு காலம் போல்தான். எனவே இப்போது விமர்சிப்பது சரியாக இருக்காது.
ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு எது தேவை? எது நல்லது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

செவ்வாய், 15 ஜூன், 2021

லியர் மன்னன் ராஜநாயஹம் : சாரு நிவேதிதா

May be an image of 5 people, including R.p. Rajanayahem, people standing and indoor

லியர் மன்னன்  ராஜநாயஹம்   : சாரு நிவேதிதா
25-05-2008
திருப்பூர் வரை சென்று வந்தேன். மரங்களே இல்லாத ஊரைப் பார்க்க மிக வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.
 பல வெளிநாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் மரங்கள் மிகவும் குறைவு.
நூற்றில் ஒரு மடங்கு கூட இல்லை என்று சொல்லலாம். அதன் காரணமாகவே இந்தியாவில் இயற்கை உற்பாதங்களும் அதிகமாக உள்ளன.
 ஆனால் எவ்வளவு அழிவு வந்தாலும் சரி , நாங்கள் திருந்த மாட்டோம் என்ற மனவுறுதி படைத்தவர்கள் இந்தியர்கள். திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளின் காரணமாகவே நொய்யல் நதி
சாக்கடையாகி செத்தே விட்டது.
இந்த ஊரிலிருந்துதான் மேல் நாட்டுக்காரர்களுக்காக சட்டை உற்பத்தியாகிப் போகிறது. படுபாவிகள், அதற்காக ஒரு நதியையே கொன்று விட்டார்கள்.
திருப்பூரில் பெயருக்குக் கூட ஒரு மரம் இல்லை. அடுத்த பயங்கரம் ஆட்டோ. ஒரு பர்லாங் தூரத்துக்கு 100 ரூ. கேட்டார்கள்.
நானும் நண்பரும் சாப்பிடச் சென்றோம். இருவருக்கும் சேர்த்து 450 ரூ. ஆயிற்று.
அது ஒன்றும் நட்சத்திர ஓட்டல் அல்ல. மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியே
இல்லாத ஊர் திருப்பூர்.

எம்ஜியார் பிரபா கூட்டாக அரங்கேற்றிய ஸ்ரீ சபாரத்தினம் உட்பட சகோதர போராளிகளின் படுகொலைகள் .

May be an image of 4 people and people standing

(தோற்றம் 28-08-1952  கொல்லப்பட்டதாக கருதப்படும் தேதி  06-05-1986.)

 செல்லபுரம் வள்ளியம்மை : :  ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .
அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது.
ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.
அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள்.
பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப டக்ளஸ் தேவனாந்தா ஆகியோர் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினர்கள்.
கொள்கை அளவில் இந்த இயக்கங்கள் இடையே கொஞ்சம் தனித்துவமான வேறுபாடுகள்  இருந்தன.
அவற்றின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகளை கூறப்புகின் அதுவே ஒரு பெரிய நூல் ஆகிவிடும்.
டெலோ இந்திய நலனை சார்ந்துதான் ஈழம் அமைய முடியும் என்ற அடிப்படை கொள்கையை கொண்டிருந்தது..இந்தியாவை விரோதித்து கொண்டு ஈழத்தை அமைத்து விட முடியாது என்ற  கருத்தை  மிகத் தெளிவாக வெளிப்படையாக  அறிவித்த ஒரே விடுதிலை இயக்கம்  டெலோ மட்டும்தான்  
ஈ பி ஆர் எல் எப் இயக்கமும் டெலோவை போலவே  இந்திய நலனை மீறி போராட்டத்தை தொடர முடியாது என்ற கொள்கையை ஓரளவு கொண்டிருந்தது.
புளட் , புலி .. ஈரோஸ் போன்றவரை வெளிப்படையாகவே இந்தியாவை நம்ப முடியாது என்று போராட்டம் தொடங்க முன்பே தெரிவித்து  கொண்டவையாகும்.

ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் விழாவில் திமுக அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?

May be an image of one or more people, people standing and text that says 'Venkat Prabu @venkateshprab.. ஆர் எஸ் எஸ் ஸின் தென்பாரத சேவாசங்க அமைப்பின் சார்பில் நடந்த விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு திமுக எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் தென்பாரத சேவாசங்க அமைப்பாளர் .பத்மகுமார் ஆகியோர் கலந்து கொண் விழாவை சிறப்பித்தனர் பாரத்ஹார்ட்புல்ளள் மயம்'
Shalin Maria Lawrence : தங்களின் உரிமைகளை நியாயமாக கேட்கும் பட்டியல் இன மக்களை சங்கிகள் என்று அவதூறாக தொடர்ச்சியாக பேசிவிட்டு இப்படி ஆர்எஸ்எஸ் நிகழ்வில் அரசின் சார்பில் கலந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்? ஆரியர்களின் பாரதமாதா தமிழ்நாட்டை காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கிறார் அது கூட புரியாமல் ஆதிதிராவிட அமைச்சர் படத்திற்கு சூடம் ஏற்றுகிறார். முடிந்தால் சனாதனம் என்றால் என்னவென்றும் திராவிடம் என்றால் என்னவென்றும் இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கு கட்சி சொல்லி கொடுக்கட்டும்.

Bilal Aliyar  :    ஆர்எஸ்எஸ் அமைப்பின், அதன துணை அமைப்பின்  விழாக்களில், அரசின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொள்ளலாமா?
தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களுக்கும், அனைத்து தரப்பினருக்குமானதே.
சேவாபாரதி போன்ற அமைப்புகள் உள் நோக்கம் கொண்டவையாக இருந்த போதிலும், மக்கள் சேவை என்ற ஒரு அடையாளத்தில் அமைச்சர்களை அணுகும் போது அவை மறுக்கப்படக்கூடாது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.