புதன், 16 ஜூன், 2021

திமுக எம்பிக்களுக்கு.. டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியாகும் "தலை"கள்.. பிஸியில் அறிவாலயம்

 Hemavandhana - tamil.oneindia.com :    சென்னை: எல்லா எம்பிக்களும் டெல்லிக்கு வர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாம்..
இதனால் திமுக வட்டாரமே படுபிஸியாகி உள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முக ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்..
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நிர்வாக ரீதியாக ஒரு மணி நேரம் சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது..
அப்போது தமிழக நலன் சார்ந்த விஷயங்களை ஸ்டாலின் பிரதமருக்கு எடுத்துரைக்ககூடும். இதற்கு பிறகு இருவரும் தனியாக 10 நிமிடங்கள் வரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
 ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுக மூத்த தலைவரான எம்பி டிஆர்பாலு முன்னதாகவே டெல்லி சென்றுவிட்டார்..
இன்று அமைச்சர் துரைமுருகனும் செல்ல உள்ளார்.. அதேபோல, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏகேஎஸ் விஜயனும் இன்று இரவு டெல்லி செல்கிறார்.. இவர் நாளை முறைப்படி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.



அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ். அதிகாரி அமுதா, டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ளார்... பிரதமரை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசும்போது இவரும் உடனிருக்க வாய்ப்புள்ளது.. ஏனென்றால், தமிழக பிரச்சனைகள் குறித்து அமுதா நன்கு அறிந்தவர்..

மக்களவையில் குறைந்த பட்சம் 10 எம்பிக்கள் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் ஆபீஸ் அமைக்க இடம் ஒதுக்கப்படுகிறது... அதன்படி 2013-ல் திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது... டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக ஆபீசின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையும் ஸ்டாலின் சென்று பார்வையிடக்கூடும்.

இந்நிலையில், இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. டெல்லியில் முதல்வரை வரவேற்க திமுக எம்பிக்கள் தயாராகி வருகின்றனர்.. திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டிஆர் பாலு அனைத்து திமுக எம்பிக்களும் டெல்லிக்கு வர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது...

பாஜகவே மிரண்டு போகும் அளவுக்கு திமுக எம்பிக்கள் அவையில் கெத்து காட்டியவர்கள்.. இந்திய மாநிலங்களில் அதிக அளவு எம்பிக்களை கொண்ட கட்சிகளில் மிக முக்கியமானது திமுக.. இப்போது அனைவரும் திரண்டு தங்கள் தலைவருக்கு தலைநகரில் வரவேற்பு தர தயாராகி வருகிறார்கள்..!

கருத்துகள் இல்லை: