Vigneshkumar - tamil.oneindia.com : டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில்,
மாநில அரசுகளுக்கு தனியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உடனடி கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
செவ்வாய், 20 ஏப்ரல், 2021
நேற்று ஸ்டாலின் கடிதம்.. இன்று மத்திய அரசு அறிவிப்பு.. இனி மாநில அரசுகளில் நேரடி தடுப்பூசி கொள்முதல்
சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல்: 39 பேருக்கு கொரோனா!
![]() |
minnambalam : சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் ஊழியர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தினமும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பெரிய வணிக வளாகங்கள், துணிக்கடைகள், கோயம்பேடு சந்தை போன்ற பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் பணியாற்றும் 360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சனிக்கிழமை 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள், 19 ஏப்ரல், 2021
மும்பை ஓடிவரும் ரெயிலின் முன்பு பாய்ந்து சென்று குழந்தையை காப்பாற்றிய மனித நேயன்
![]() |
அதில் இரண்டு விஷயங்கள்.
அம்மா அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முனையவில்லையே என்ற கேள்வி ஒன்று. திகிலடித்துப் போயிருக்கலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், அந்தத் தாய் பார்வையற்றவர். அதனால்தான் பையனின் குரலைக் கேட்டு எங்கே எங்கே என்று தடுமாறுகிறார். (செய்தியில் பார்த்தேன்.)
இன்னொரு விஷயம் என் ஊகம். வீடியோவை கவனமாகப் பார்த்தபோது அதை கவனித்தேன் —
விழுந்தது தெரிந்ததும் ஓடி வருகிறார்.
ஆனால் ஓடிவரத் துவங்கியபிறகு தன் உயிர் பற்றிய அச்சம் வருகிறது.
ஒரு கணம், ஒரே ஒரு இமைப்பொழுது, தண்டவாளத்திலிருந்து அந்தப்பக்கம் போய்விடலாம் என்று நினைக்கிறார்.
ஆனால் மனதுக்குள் தொலைவையும் ரயில் வேகத்தையும் கணக்கிடுகிறார். காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.
மறுபடி ஓடுகிறார். அந்த நான்கைந்து விநாடிகளுக்குள் என்ன வேகமாக அவருடைய மனது கணக்குப் போட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அபாரமான presence of mind.
அந்த ஒரு கணத்தின் தடுமாற்றத்தை, அதை வென்று அவர் ஓடுவதை, வீடியோவில் 18-19ஆம் நொடிகளில் கவனிக்கலாம்.
#salute_mayur_shelke
மன்சூர் அலிகான் பேட்டியில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது?
![]() |
பெரியார் ஈ.வெ.ரா சாலை : 4 அடியில் எழுதப்பட்டிருப்பதை அழித்து 40 அடிக்கு!
![]() |
வேலூர் அடுக்கம்பாறையில் ஆக்சிஜன் குழாய் வெடித்தது . ஐந்து நோயாளிகள் உயிரிழப்பு!@ அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
tamil.samayam.com : வேலூர்மாவட்டம்,
அடுக்கம்பாறையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும் குழாய் திடீரென வெடித்தது
உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளின் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது.
அமித்ஷா : கொரோனாவைவிட தேர்தல் அரசியலே எங்களுக்கு முக்கியம் : பத்திரிகையாளர் சந்திப்பில் உண்மையை ..
kalaingarseythikal : தேர்தல் பிரச்சாரத்தையும், கொரோனா பரவல் அதிகரிப்பையும் இணைத்து பேசாதீர்கள்” என கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் அபாயகரமான பரவல் காரணமாக தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் 80 முதல் 82 சதவீத புதிய நோயாளிகள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதேவேளையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போதிய கட்டுப்பட்டாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது
வாக்கு எண்ணிக்கை 2ந்தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கும்- தேர்தல் அதிகாரி தகவல்
![]() |
maalaimalar : வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எங்கும் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். சென்னை: தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. எங்கும் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலையில் ஆலோசனை வழங்க உள்ளது.
திமுக கூட்டணிக்கு 205 இடங்கள்.. ஐபேக் நடத்திய எக்சிட் போல்!
வாக்குப் பதிவுகளுக்கு பிந்தைய கணிப்பான எக்சிட் போல் எனப்படும் முடிவுகளை வெளியிட ஏப்ரல் 29 வரை தடை இருப்பதால் முன்னணி செய்தி நிறுவனங்களுக்காக காத்திருக்காமல், கட்சிகளும் தங்களுக்குத் தாங்களே ஏஜென்சிகள் மூலமாக அந்த வேலையைச் செய்து வருகின்றன.... எக்சிட் போல் விஷயத்தில் ஐபேக் தனது அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளது. இது தொடர்பாக ஐபேக் வட்டாரத்தில் பேசியபோது,’ “இதற்கு முன்பு நடந்த தேர்தலில் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எத்தனை ஓட்டுகள் இருக்கின்றன, எத்தனை ஓட்டுகள் பதிவாகின, அவற்றில் எந்தக் கட்சிக்கு எத்தனை ஓட்டுகள் விழுந்தன என்ற டேட்டா வெளிப்படையாகவே கிடைக்கிறது. இதன் அடிப்படையில் 2011, 2016 சட்டமன்றத் தேர்தலிலும்,2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு பதிவாகியிருக்கிறது, யார் யாருக்கு எத்தனை ஓட்டுகள் பதிவாகியிருக்கிறது என்பதை எடுத்து வைத்துக் கொண்டோம்.
நடிகர் விவேக் திடீர் மரணம்... தடுப்பூசி சர்ச்சை... உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?
![]() |
vikatan க.சுபகு ணம் : நடிகர் விவேக் மரணத்துக்கும், இறப்பதற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரங்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை? நடிகர் விவேக் மரணம், தடுப்பூசியால் நிகழ்ந்திருக்குமா என்பதே இப்போது பலருடைய கேள்வியாக இருக்கிறது. விவேக், அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, ''விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும், நேற்று அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று டாக்டர்களை முன்னிலையில் பேட்டியளித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று (17 ஏப்ரல் 2021) அதிகாலையில் விவேக் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பிறகு, அவருடைய மரணத்தையும் கொரோனா தடுப்பூசியையும் இணைத்து ஆங்காங்கே விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சனாதானத்தை எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டு திமுகவை எதிர்ப்பதும்.. இவர்கள் எதை நிறுவ துடிக்கிறார்கள்?
ஞாயிறு, 18 ஏப்ரல், 2021
அம்பேத்கரை மட்டுமே முன்னெடுப்போம் என்போர் கொஞ்சம் ஆபத்தான பேர்வழிகள்? பாசிசத்தின் செல்லப்பிள்ளைகள்
ஆலஞ்சியார் : நீலம்.. இங்கே அம்பேத்கரை முன்னிறுத்துவதில் தவறில்லை ஆனால் அம்பேத்கரை மட்டுமே முன்னெடுப்போம் என்போரை கொஞ்சம் தள்ளியே வைக்கவேண்டும்..
அம்பேத்கர் மீது நமக்கு மரியாதை உண்டு ஆனால் சமூக புரட்சியை செய்திட முடிந்ததா என்ற கேள்வி எழும் போது மௌனம் பதிலாய் வரும் ..
தாழ்த்தபட்ட மக்களை அவர் முன்னேற்றபாதைக்கு கொண்டுச் செல்லவேண்டுமென்பதில் அக்கறை கொண்டவர்தான்
ஆனால் வடமாநிலங்களில் அவர்கள் நிலை இப்போதும் எப்படி இருக்கிறதென்பதை காட்சிகள் நமக்கு சொல்கிறது..
..வெகுமக்களிடத்தில் அவரது பயணம் இருந்ததா .. மக்களை புரட்சிபாதையில் தயார்படுத்தினாரா .. இடஒதுக்கீடு மட்டுமே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தவர் அவர்களை isolation லிருந்து வெளியேற என்ன தீர்வு கண்டார்
அதை பின்பற்ற யாருமே முன்வருவதில்லை.. தீண்டாமை "பாவசெயல் " படித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வி தொடர்ந்து நம்மை துரத்துகிறது..
..இங்கே சிலர் பெரியாரை தவிர்த்து புரட்சி பேச வருகிறார்கள் .. அம்பேத்கரை மட்டுமே பேசுவோம் என்போரை கவனமாக கூர்ந்து கவனியுங்கள் அவர்கள் பாசிசத்தின் செல்லப்பிள்ளைகள் ..
குஜராத்தில் சோமாலியாவை விட மோசமான மருத்துவத்துறை அம்புலன்ஸ்களில் இறக்கும் நோயாளிகள்
![]() |
கொடியன் குளமும் ஜெயலலிதாவின் சுதாகரன் திருமண நிகழ்ச்சியும் .. ஜெயலலிதா ஒரு அறிக்கை கூட விடவில்லை.
![]() |
Seshathiri Dhanasekaran : கொடியன்குளம் சம்பவம் 31 Aug 1995 அன்று நடக்கிறது
18பேர் கொல்லபட்டு ஒரு கிராமமே சூரையாடப்பட்டு மக்கள் தங்கள் உடைமைகளை தொலைத்து நின்று கொண்டிருந்த வேளையில்,
ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
07 Sep 1995 அதாவது சம்பவம் நடந்து வெறும் 7நாட்களில்.
இந்த இந்தியாவே இதுவரை கண்டிராத அளவுக்கு தன் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நடத்தினார். 75000sqft அளவில் ஒரு பிரமாண்டமான செட், விருந்தினர்கள் தங்குவதற்கு 1000 ரூம்கள் நடசத்திர ஹோட்டலில்,
2லட்சம் தாம்பூலம் தட்டுகளுடன் நடத்தினார்.
ஜெயலலிதா ஒரு அறிக்கை கூட விடவில்லை. . நாம் நினைப்பதை
விட மோசமானவர் JJ.
புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்த வேனில் டூல்ஸ் அடங்கிய பெட்டி
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் திருமயம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்திருப்பதாக திமுக வேட்பாளர் நேற்று புகார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனவாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி நடப்பவை ... EVM Hacking? .. WiFi ஆன்டெனா வுடன் உலா வரும் கன்டைனர்கள்...
![]() |
![]() |
கண்ணீர் விடும் மும்பை டப்பாவாலாக்கள்..! வாழ்க்கை மொத்தமாக நின்றுவிட்டது.. 130 ஆண்டுகால பாரம்பரிய தொழில்
GoodReturns Tamil : இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மிகவும் பழமையான மற்றும் பெரிய அளவிலான டெக் உதவிகள் இல்லாமல் இயங்கும் ஒரு சிறப்பான டெலிவரி நெட்வொர்க் தான் மும்பையின் புகழ்பெற்ற டப்பாவாலா.
டப்பாவாலா டெலிவரி சேவை முறை சுமார் 130 வருடங்களாக இயங்கி வருகிறது,
இதில் பணியாற்றுவோர் தினமும் சுமார் 2,00,000 மதிய உணவு டப்பாக்களைச் சைச்கிள், லோக்கல் ரயில் ஆகியவற்றின் உதவிகளுடன் டெலிவரி செய்யும் மாபெரும் டெலிவரி நெட்வொர்க்.
ஆனால் கொரோனா தொற்றும், அரசு அறிவித்து வரும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஆகியவை டப்பாவாலா-க்களின் வர்த்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. குறிப்பாக டப்பாவாலா-க்கள் வாழ்க்கை தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
-நடிகர் விவேக் குடும்பத்தினர் பேட்டி! இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்''
தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு- அரசு அறிவிப்பு
அண்ணே இந்தாங்க..இதை வைச்சு பொண்ணு கல்யாணத்தை நடத்துங்க'.. விவேக் பேருதவி.. தழுதழுத்த அமரர் குமரிமுத்துவின் வைரல் வீடியோ
Vigneshkumar சென்னை: தனது மகளின் திருமணத்திற்கு விவேக் செய்த உதவி பற்றி, சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்ன கலைவானர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக்கிற்கு (59) நேற்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மயங்கி நிலையில் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எக்மோ கருவி பொருத்தப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது
மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தமிழக அரசு சார்பில் அவரது உடல் முழு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக்கின் பழைய நேர்காணல்கள், பேச்சுகள், அவரது புகழ்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவுக்கு பலி - 3-வது நாளாக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
dailythanthi : இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக 2 லட்சத்துக்கு அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன. கடந்த ஆண்டு புரட்டியெடுத்த முதல் அலையில் கூட, நாளொன்றுக்கு 1 லட்சம் பாதிப்பு என்ற சோகத்தை எட்டவில்லை. ஆனால் இந்த 2-வது அலையோ 2 லட்சத்துக்கு அதிகமான பாதிப்புகளை சமீப நாட்களாக அளித்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கூட 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் ஆகும்.
நடிகர் விவேக் 2016 இல் மறைந்த தன்னுடைய மகனைப் பற்றி இணையத்தில் எழுதியது
![]() |
தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805! ஆங்கிலேயே ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரர்
![]() |
தமிழக தேர்தல் பிந்திய கருத்து கணிப்பு திமுக 145- 173 - இழுபறி தொகுதிகள் திமுக-09..
![]() |













