ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

அம்பேத்கரை மட்டுமே முன்னெடுப்போம் என்போர் கொஞ்சம் ஆபத்தான பேர்வழிகள்? பாசிசத்தின் செல்லப்பிள்ளைகள்

 ஆலஞ்சியார் : நீலம்..  இங்கே அம்பேத்கரை முன்னிறுத்துவதில் தவறில்லை ஆனால் அம்பேத்கரை மட்டுமே முன்னெடுப்போம் என்போரை கொஞ்சம் தள்ளியே வைக்கவேண்டும்..
அம்பேத்கர் மீது நமக்கு மரியாதை உண்டு ஆனால் சமூக புரட்சியை செய்திட முடிந்ததா என்ற கேள்வி எழும் போது மௌனம் பதிலாய் வரும் ..
தாழ்த்தபட்ட மக்களை அவர் முன்னேற்றபாதைக்கு கொண்டுச் செல்லவேண்டுமென்பதில் அக்கறை கொண்டவர்தான்
ஆனால் வடமாநிலங்களில் அவர்கள் நிலை இப்போதும் எப்படி இருக்கிறதென்பதை காட்சிகள் நமக்கு சொல்கிறது..
..வெகுமக்களிடத்தில் அவரது பயணம் இருந்ததா .. மக்களை புரட்சிபாதையில் தயார்படுத்தினாரா .. இடஒதுக்கீடு மட்டுமே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தவர் அவர்களை isolation லிருந்து வெளியேற என்ன தீர்வு கண்டார்  
அதை பின்பற்ற யாருமே முன்வருவதில்லை.. தீண்டாமை "பாவசெயல் " படித்தால் மட்டும் போதுமா என்ற கேள்வி தொடர்ந்து நம்மை துரத்துகிறது..
..இங்கே சிலர் பெரியாரை தவிர்த்து புரட்சி பேச வருகிறார்கள் .. அம்பேத்கரை மட்டுமே பேசுவோம் என்போரை கவனமாக கூர்ந்து கவனியுங்கள் அவர்கள் பாசிசத்தின் செல்லப்பிள்ளைகள் .. 

பெரியாரை மறுத்து இங்கே குறிப்பாக தமிழகத்தில் எதுவும் நடக்காது .. பெரியாரை பிற்படுத்தபட்ட மக்களின் தலைவர் என்ற குறுகிய வட்டத்தில் அடைக்க நினைப்பது கூட சரியானது அல்ல.. அவர் மானுட புரட்சியாளர்.. ஒடுக்கபட்டமக்களை மட்டுமல்ல பார்ப்பனீயத்தால் பாதிக்கபட்ட உரிமைகள் மறுக்கபட்ட அனைவருக்குமானவர் .. அவர்கள் மக்களை சமூகபுரட்சிக்கு ஒருங்கிணைத்தார் .. சுயமாக சிந்தையை வளர்க்க சொன்னார்
அறிவுக்கொண்டு பார் என்றார் .. படிப்பு வராதுன்னு சொன்னவன் முன்னால படித்து முன்னுக்கு வந்துகாட்டு என்றார்.. சமூகத்தின் இடைவெளியை வெகுவாக குறைத்தார் .. அதனால் தான் தலித்கள் மீதான தாக்குதல்கள் இங்கே வடமாநிலங்களை விட குறைவாக பதிவாகிறது.. அது கூட சில சாதிவெறியர்களின் தூண்டுதலாலேயே நடத்தபடுகிறது..
..
திாவிடத்தை வீழ்த்தவேண்டும் அல்லது திராவிடம் என்ன செய்தது என சில நீலசங்கிகள் பரப்புரை செய்கிறார்கள் .. படிப்பும் கலையும் உனக்கில்லை என்ற பார்பனீயத்தை உடைத்து படிப்பு எல்லோருமானதென நீதிக்கட்சி காலத்திலேயே முன்னெடுத்து இன்று கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம்
ஒரு சேதி போதும் .. 1904.ல் சென்னை மகாண சபைக்கு எதெல்லாம் தேவை என்பதை பரிந்துரைப்பதற்காக சென்னை விக்டோரியா ஹாலில் நடந்த கூட்டம் தஞ்சை ராமமூர்த்தி அய்யரெல்லாம் கலந்துக்கொண்ட சபையில் அயோத்திதாசர் மூன்று கோரிக்கைகளை வைத்தார்.. கோவிலுக்கு எங்களையும் அணுமதியுங்கள் என்ற முதல்கோரிக்கை உடனே தஞ்சை அய்யர் அதுதான் உங்களுக்கு தனி கோவில் உள்ளதே இதில் எல்லாம் வரகூடாது ஆகமவிதிப்படி தவறு எனச் சொல்லிவிட்டு இதை ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன்இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கு தரும் பதிலையும் ஏற்க வேண்டும் என்றார் ..இரண்டாவது  கோரிக்கை எங்கள் குழந்தைகளை நான்வது வரையிலாவது படிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் .. அதற்கு பிறகு பிரச்சனையாகி அயோத்திதாசர் வெளியேற்றபட்ட வரலாறெல்லாம் படியுங்கள்..
..
ஐம்பதாண்டு கழித்து ஏறக்குறைய அதே கோரிக்கையோடு (எங்கள் பிள்ளைகளை நான்காவது வரை) சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் அன்றைய முதல்வர் ராஜகோபாலச்சாரியரிடம் வைக்கபட்டபோது  அவர் என்ன சொன்னார் தெரியுமா .. துறை ரீதியாக கேளுங்கள் சவுக்காரம் துவைக்க படித்துறை தண்ணீர் என கேளுங்கள் என பேசியதெல்லாம் வரலாறு .. இடையில்  நீதிக்கட்சி ஆட்சியில் அனைவருக்கும் கல்வி என்றால்தான் இனி பள்ளிகளுக்கு அனுமதி என்று அரசாணை 1924 ல் வந்தது தாழ்த்தபட்டவர்களை தனியே அமர வைக்கிறோம் அனுமதி தாருங்கள் என்ற போது அனுமதி மறுத்தது நீதிக்கட்சி என்பது வரலாறு ..
..
இன்றைக்கு பெரியார் வந்தபிறகு தான் அதிலும் திராவிடம் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சமூகநீதி நிலைநாட்டபட்டதும், இன்றைக்கு கருத்துசுதந்தரம் என்ற பெயரில் சிலர் வந்து உளறவும் முடிகிறது..
பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்றைய குஜராத்தை போலதான் இருந்திருக்கும் .. வடமாநிலங்களைப்போல தலித்கள் வேட்டையாடபட்டிருப்பார்கள் .. சுயமரியாதையோடு சுரணையோடு மானத்தோடு வாழ வழிசெய்தது திராவிடம்..
..
நன்றி! திராவிடப் பெருஞ்சுவராய் காத்துநின்ற எம் தலைவர்கள்
பேராசான் பெரியார் பேரறிஞர் அண்ணா பேரருளாளன் கலைஞர்..
..

கருத்துகள் இல்லை: