ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்த வேனில் டூல்ஸ் அடங்கிய பெட்டி

hindu tamail 

புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் திருமயம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்திருப்பதாக திமுக வேட்பாளர் நேற்று புகார் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

இந்தப் பகுதியில் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர், ஆயுதப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தவிர, வேட்பாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, வாக்கு எண்ணும் மையத்தில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதி நேற்று வாக்கு எண்ணும் மையத்தையும், சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருமயம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கான வெளிப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை.

இதனால் அந்த வழியாக வெளியாட்கள் உள்ளே வர வாய்ப்பு உள்ளது. எனவே, பழுத டைந்த கேமராவை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியிடம் புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என் றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை: