வியாழன், 10 செப்டம்பர், 2020

உலகம் சுற்றுவதை கண்டுபிடித்த அய்யன் திருவள்ளுவர் .. காப்பர்னிக்கஸ்சுக்கே முன்..

Nnicolaus Copernicus .Born: February 19, 1473, Torun, Poland Died: May 24, 1543, Frombork, Poland

Sundar P : தமிழ் அறிவோம் - 3 : உலகம் சுழல்கிறது என்று யாரோ
கண்டுபிடித்தார்கள் என்றுதான் நமக்குச் சொல்லப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவன் சொன்ன வாசகம் இது. “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை." - ( குறள் எண் : 1031 )

இந்த உலகம் தன்னைத் தானே சுற்றி சுழன்றுகொண்டிருந்தாலும், உழவுத் தொழிலான விவசாயத்தின் பின்னால் நடந்து வருகிறது. எனவே உயிர்காக்கும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழில்.  (உழந்து – உடல்; உயிருக்கு ஆதாரமான பொருள்)

உலகம் உருண்டை என்பது மட்டுமல்ல, அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதனை பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்கு இன்னொரு குறள் ஆதாரமாக விளங்குகிறது...

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து…” - ( குறள் எண் : 1032 )

இதன் பொருள்: உழவுத்தொழிலை செய்பவர்தான் உலகத்துக்கு அச்சாணியைப் போன்றவர்கள்.  ஏனென்றால், வேறு தொழிலகளைச் செய்துகொண்டிருக்கும் மக்களையும் இவர்களே தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். என்பதே.

இங்கே அச்சாணி என்னும் சொல்லை வள்ளுவர் ஆண்டிருக்கிறார் என்பதை உற்று நோக்குங்கள்.   உலகம் ஒரு அச்சாணியில் சுழல்கிறது. அந்த அச்சாணி வேறு எதுவும் இல்லை; உழவுத்தொழில் செய்யும் உழவர்களே அந்த அச்சாணியைப் போன்றவர் என்றல்லவா வள்ளுவர் உரைக்கிறார். 


இந்தி தெரியாது போடா’ வாசகத்துடன் டி-சர்ட்டுகள்: திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்

‘இந்தி தெரியாது போடா’ வாசகத்துடன் டி-சர்ட்டுகள்: திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்
இந்தி தெரியாது போடா வாசகத்துடன் கூடிய டி-சர்ட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.   திருப்பூர் :   
திருப்பூரில் ஆடை தயாரிப்பு தொழிலை பெரும்பாலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கே உகந்த பாணியை கடைபிடித்து ஆடை தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இருப்பினும் இளம் வயதினர் பலர் இந்த தொழிலை செய்து வருவதால், அவர்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் விஷயங்கள் மற்றும் சம்பவங்கள், காட்சிகள் போன்றவற்றை இந்த இளம் வயதினர் எடுத்துரைக்கும் வகையில் டி-சர்ட்டுகளை தயார் செய்து வருகிறார்கள்.

நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 45. maalaimalar :நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தினால் முடங்கியதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   ொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதியில்லாததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.   
45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: வழக்கை செப்-22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Kangana in social media 

  maalaimalar :நடிகை கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான
வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: வழக்கை செப்-22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு மும்பை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று நடிகை கங்கனா விமர்சித்ததால் ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். 

ஆனால் மும்பை உயர் நீதிமன்ற தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நரிக்குறவர் மொழியான வாக்ரிபோலியில் திருக்குறள்

 M
aha Laxmi
: நரிக்குறவர் மொழியான 'வாக்ரி'க்கு அகராதி உருவாக்கிய சீனுவாச வர்மா! நாடு முழுவதும் பேச்சு வழக்கில் மட்டுமே இருக்கும் பல மொழிகள் நாளடைவில் மறைந்து போகும் நிலையில் உள்ளது. எழுத்துருக்கள் இல்லாமல் வெறும் வாய்மொழியாக மட்டுமே இருக்கும் அப்படிப்பட்ட பல மொழிகளில் நரிக்குறவர்களின் வாக்ரி மொழியும் ஒன்று. தமிழகம், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நரிக்குறவர்கள் நிலையான இருப்பிடமில்லாமல் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழும் இவர்கள் தமிழகச் கலாச்சார ஒடையினின்றும் ஒதுங்கியே வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கை, மொழி, சமயம் ஆகியவற்றை ஆராய்வது மிகவும் கடினமான முயற்சி.

சீனுவாச வர்மா மற்றும் ராஜகோபாலன், சிரோமணி முதலிய ஆய்வாளர்கள் முதலில் இம்முயற்சியில் ஈடுபட்டனர். கள ஆய்வுகள் மூலம் இதுவரை தெரியாத பல உண்மைகள் அதன் மூலம் தெரிய வந்தது. அவர்கள் பற்றிய கற்பனைக் கதைகளே, இதுவரை அவர்களது யதார்த்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றும்படி வெளியிடப்பட்டு வந்தன. நேரடி ஆய்வுகளை, மானிடவியல் அறிவினால் ஆராய்ந்து, நரிக்குறவர் வாழ்க்கையில் சில அம்சங்களின் உண்மையான செய்திகள் விஞ்ஞான முடிவுகளாக இவர்கள் கண்டு உணர்ந்து
கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி.. ..நடராசன் மூலமாக பயனடைந்து..

Kandasamy Mariyappan : நாம் தமிழர் கட்சி... இளைஞர்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூண்டி, வளர்க்கப்பட்ட நிறுவனம். இது மக்களுக்கான கட்சி அல்ல! பல நாடுகளில் கிளைகளை திறந்து, ஈழத்தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களை பணம் காய்க்கும் மரமாகவே பார்த்து, பணம் பெருக்கும் நிறுவனமாக மட்டுமே இருந்துள்ளது நாம் தமிழர் கட்சி என்பதை, இரண்டு நிர்வாகிகள் மூலமாக நாம் உணர முடிகிறது! 

எங்களுக்கு பின்னே பல இளைஞர்கள் இருக்கின்றனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி, மா. நடராசன் மூலமாக பயனடைந்து திமுகவிற்கு எதிராக களமாடியது...
நாம் தமிழர் கட்சி!

பல இளைஞர்கள் அங்கே இருப்பதாக தவறாக புரிந்துகொண்ட RSS/BJP, அதன் பங்குக்கு அந்த நிறுவனத்தை தூண்டிவிட்டு திமுக/ அதிமுகவிற்கு எதிராக களமாட வைத்தது.
மற்ற மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பெற்ற நிலையில் தமிழ்நாடு மட்டும் முன்னேறவில்லை என்று பல இளைஞர்களை நம்ப வைக்க, அந்த நிறுவனத்தை பயன்படுத்திக் கொண்டது!

இலங்கையில் பசுவதை தடைச் சட்டம் - என்ன நடக்கிறது? BBC

இலங்கையில் சர்ச்சை தோற்றுவிக்கும் பசுவதைத் தடைச் சட்டம் இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும், இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் என்ற ரீதியிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

புதன், 9 செப்டம்பர், 2020

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி விலகல்

tamil.oneindia.com  - Mathivanan Maran சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றவர். அண்மையில் நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தம்முடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தாம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். அதில், அது ஒரு பேரின்ப கனாக்காலம் ...!! அனைவருக்கும் நன்றிFolded hands நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்!! என தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி.


அரியலூர் மாணவன் தற்கொலை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? - மு.க.ஸ்டாலின்

dailythanthi.com : நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் மாணவன் தற்கொலை செய்துள்ளான். இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தேர்வு அச்சம்; அரியலூர் மாணவன் தற்கொலை: இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? - மு.க. ஸ்டாலின்

சென்னை,அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் விக்னேஷ் (19) மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஞாயிறன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் விபரீத முடிவு எடுத்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

maalaimalar : மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை: தமிழகத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்
மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை- வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

minnambalam:ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது. 

சென்னை: கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சரண்யா, விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிடுவதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டன.     விதிகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரியர் பாஸ் விவகாரத்தில் தமிழக அரசு மீது ஸ்டாலின் கடும் தாக்கு .. அவசரம் - அரைவேக்காட்டுத்தனம்

Velmurugan P -tamil.oneindia.com : சென்னை: சுயவிளம்பர மோகத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்க வேண்டாம் என்று அரியர் பாஸ் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கண்டித்துள்ளார்.

 முக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிற இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, தன்னுடைய குழப்பமானதும் குளறுபடியானதுமான செயல்பாடுகளால், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.       மாணவர்களின் எதிர்காலக் கனவுகளிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'அரியர்ஸ்' தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததிலிருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்குப் பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதுகுறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை. அரியர் மாணவர்களுக்கு தேர்வு வைக்க தயார்.. தமிழக அரசு அறிவிப்பு.. கலக்கத்தில் மாணவர்கள்! 

நாம் தமிழர் கட்சியின் பிளவு நாட்டுக்கே பேராபத்தானது .. சமூக வலையில் ஒரு ஆய்ஆய்வு

 Sivakumar Nagarajan : காலைலயே கண் கலங்க வைத்த பதிவு அண்ணன் கரிகாலன் கலைஞரிஸ்ட் அவர்கள் பதிவு 

நாம் தமிழர் கட்சியில்  நிகழ இருக்கும் பிளவு பேராபத்தானது...  பலர் இதை சாதாரணமாக எண்ணிக் கடக்கிறார்கள். அவர்களை எச்சரிக்கிறேன். இது ஆசியப் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல...   சீனம் இந்தியா ருஷ்யா பலநாடுகள் வீழ்ச்சி அடையும்.      அவ்வளவு ஏன் இது மனித குலத்துக்கே பேரிடி.    மில்கிவே காலக்ஸி தடம் புரளும்.     யூஎஸ் யூஸ்லெஸ் ஆகிவிடும். இங்கிலாந்து சொங்கிலாந்தாகி விடும்.       புதன் முதல் புளூட்டோ வரை தரை மட்டமாகும். பூமியை சுற்றும் கோள்கள் (கோள்களின் மையம் பூமிதான் என்ற பாரிசலன் கூறறை நினைவு கூருங்கள்). புஸ்வானமாகும்...    யாராவது தடுத்து நிறுத்துங்கள்...

இந்திய பகுதியை நோக்கி முன்னேறும் சீன வீரர்கள்... ஈட்டிகளுடன் கிழக்கு லடாக்கில் அத்துமீறல்

.hindutamil.in/  :இந்தியா- சீனா கட்டுப்பாடு எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டது சீன ராணுவம்தான் என்று இந்திய ராணுவம் தெரிவித்து இருந்தநிலையில் சீன ராணுவ வீரர்கள் கைகளில் கம்புகளுடன் முன்னேறி வரும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.   கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்காக் ஏரிப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் கட்டுப்பாடு எல்லைக்கோட்டை மீறி அத்துமீறி நடந்து கொண்டு, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு சீன ராணுவமும் பதில் நடவடிக்கை எடுத்தது என்று நேற்று இரவு சீன ராணுவத்தின் மேற்குபடை கமாண்டர் ஹாங் சுலி குற்றம்சாட்டியிருந்தார்.சீன ராணுவத்தின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்து, அதற்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளது. இந்திய ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தனித்துவிடப்படுகிறதா அதிமுக?

 டிஜிட்டல் திண்ணை:  தனித்துவிடப்படுகிறதா அதிமுக?

minnambalam : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.  “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் இங்கே முக்கியமான முதன்மையான போட்டி நடைபெறும், மூன்றாவது அணி என்பதெல்லாம் அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்துமே தவிர தேர்தலுக்குப் பிறகான ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படியாக இருந்ததில்லை.

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலை திமுக ஏற்கனவே அமைத்துள்ள கூட்டணியோடு சந்திக்கிறது என்பதே இப்போதைய நிலைமை. திமுக கூட்டணியில் பிரச்சினை என்று வருமானால் அது தொகுதிகள் ஒதுக்கீடு அடிப்படையில் காங்கிரஸோடு ஏற்படும் முரண்பாடாகத்தான் இருக்கும். காங்கிரஸைக் கழற்றிவிடுமாறு திமுகவுக்கு பாஜகவின் அழுத்தங்கள் அதிகமாக இருந்தபோதும்... திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இப்போதுவரையில் பிரச்சினை இல்லை. பிரச்சினை என்று வந்தால்கூட அடுத்து வரக் கூடிய தேர்தலில் தங்களது வெற்றியை அது பாதிக்கக் கூடும் என்ற வகையில் திமுகவும் சரி, அந்தக் கூட்டணிக் கட்சிகளும் சரி எச்சரிக்கையோடே காய் நகர்த்துகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்: ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா அறிவிப்பு BBC

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். "விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு" ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

திமுக-வில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி?

மாலையாமலர்  : திமுக-வில் ஆ.ராசா மற்றும் பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக-வில் ஆ.ராசா, பொன்முடிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி? பொன்முடி, ஆ. ராசா தி.மு.க.வில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் என மூன்று பேர் துணை பொதுச்செயலாளராக உள்ளனர். திமுக கட்சி விதியின்படி 3 பேர்தான் துணைப் பொதுச்செயலாளராக இருக்க முடியும். தற்போது ஆ. ராசா, பொன்முடி ஆகியோருக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் மூன்று பேர் என்ற விதியை ஐந்து பேர் என மாற்றியமைக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமான் பேட்டி : கல்யாண சுந்தரமும் ராஜீவ்காந்தியும் நயவஞ்சகர்கள்,சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள்.

கல்யாண சுந்தரமும் ராஜீவ்காந்தியும் நயவஞ்சகர்கள்,சூழ்ச்சிக்காரர்கள், துரோகிகள். இருவரும் என் தோளில் ஏறி என் வாயில் மூத்திரம் அடித்து விட்டார்கள் tamil.samayam.com  : நாம் தமிழர் கட்சிக்குள் நீடித்து வரும் குழப்பங்கள் குறித்து பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் உயிரிழந்தால்தான் கட்சியை உடைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் சீமான் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம் அண்மை காலங்களாக அளித்து வரும் பேட்டிகள் பேசுபொருளாகி உள்ளது. குறிப்பாக அக்கட்சிக்குள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

 கல்யாண சுந்தரத்தை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.       ஆனால், இதுகுறித்து சமயம் தமிழுக்கு அளித்த நேர்காணலில் அந்த தகவல்களுக்கு கல்யாண சுந்தரம் மறுப்பு தெரிவித்திருந்தார்.      “கருத்து வேறுபாட்டால் இந்த கட்சியில் இருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். யார் சென்றாலும் கட்சி இருக்கும். தனி மனிதர்களால் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. 

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

விமானங்களில் வைரஸ் மற்றும் கிருமிகள் 99.97 சதவீதம் வரை கொல்லப்படுகிறது... ஹெச்.இ.பி.ஏ. பில்ட்டர் கொண்டு

maalaiamalar: விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை.

இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைக்கிறது. இவற்றில் வான்வழி செல்லும் விமான பயணம் மற்ற போக்குவரத்துகளை விட அபாயகரமானது என்ற எண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது.       பொதுவாக விமானங்களில் சிறு இடத்தினுள் பலர் மிக அருகில் அமர வைக்கப்படுவர். இத்துடன் விமானத்தினுள் காற்றோட்டத்திற்கான வசதி இருக்காது. இதனால் விமான பயணம் செய்யும் ஒருவருக்கு சளி, இருமல் போன்றவை இருந்தாலும், மிக எளிதில் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்த கூற்றில் துளியும் உண்மையில்லை என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.

இந்திய கடல் எல்லைக்குள் நகரத்தப்பட்டுள்ள நியூ டயமன் கப்பல் வெடிக்கும் ஆபாய கட்டத்தில் . இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

ilakkiya .net : இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் நகரத்தப்பட்டுள்ள நியூ டயமன் கப்பலில் மீண்டும் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் தீயினால் எந்த நேரத்திலும் கப்பல் வெடிக்க கூடிய அபாயம் உள்ளதாக, இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். 

 கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் பயணித்த குறித்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. நீண்ட போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் நேற்று மாலை இரண்டாவது முறை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த இந்திய, இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். கப்பல் வெடித்தால் இலங்கை கடற்பரப்பிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை கடற்படையினர் 2000 கிலோ கிராமிற்கும் அதிகமான திரவ வகை ஒன்றை விமான மூலம் வீசி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆராய்வதற்காக வெளிநாட்டில் இருந்து ஆய்வு குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த கப்பலில் 27 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

`இந்தி தெரியாது’ டி-ஷர்ட் பின்னணி .. கனிமொழி டிசைன் செய்த டி ஷர்ட்கள்

வே.கிருஷ்ணவேணி- vikatan :
“யுவன் சார் போட்ட போட்டோ முதலில் வைரல் ஆனது. ஆனால், இந்திய அளவில் அது ட்ரெண்ட் ஆகும்னு கனிமொழி மேடமோ, நாங்களோ எதிர்பார்க்கலை.” இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, `மெட்ரோ’ பட நடிகர் சிரிஷ் இருவரும் `I am a தமிழ் பேசும் Indian’, `ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்திருந்த புகைப்படங்களை அண்மையில் அவர்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்தப் படங்கள் அடுத்த சில நிமிடங்களில் செம வைரல் ஆகவும், `ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. பலரும் தொடர்ந்து பதிவுகளை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிடவே, அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும், `ஹிந்தி தெரியாது போடா’ டி ஷர்ட்

அணிந்த படங்களைப் பகிர ஆரம்பித்தனர். நடிகர் சாந்தனு – கீர்த்தி தம்பதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களின் டி ஷர்ட் புகைப்படங்களைப் பகிர்ந்துவந்தனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.” என்று ஞாயிறு இரவு குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் தொழிலுக்காக கடத்தப்படட ஆந்திரா பெண்கள் .. கண்விழித்து பார்த்தபோது அனைவரும் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தார்கள் .

 பிபிசி   :நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" "நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை. ஆந்திர பிரதேச ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக, மும்பை, டெல்லி, புனே ஆகிய பெருநகரங்களுக்கு பல தசாப்தங்களாக விற்கப்பட்டு வரும் பெண்களின் கதை இது. செளதி அரபியாவுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவது குறித்து அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை உள்ளூர் காவல் துறை, தொடர்ந்து மறுத்து வருகிறது.

இப்படியான சூழலில் பிபிசி செய்தியாளர் ஹிருதயா விஹாரி அனந்தபூர் மாவட்டத்தில், பாலியல் தொழிலிருந்து மூன்று பெண்களை சந்தித்து உரையாடினார். இந்த பெண்கள் தாங்கள் எவ்வாறு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறத்தப்பட்டோம் என்று விஹாரியுடன் பகிரிந்து கொண்டார்கள்.

இனி அந்த பெண்களின் வார்த்தைகளில்:

அரியர் ரத்து வழக்கு: ஏஐசிடிஇ பதிலளிக்க உத்தரவு!

minnambalam.com :தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளித்த விவகாரத்தில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ ) மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு(யுஜிசி) பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அரியர் மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவும், அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் கூறி வருகின்றனர். இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் அரியர் ரத்து தொடர்பாக அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கலை மற்றும் அறிவியல், எம்.சி.ஏ, பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.    இதனால் கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகத்தின் மதிப்பு கெடும். அதோடு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது படித்து தேர்ச்சி அடைந்தவர்களைச் சோர்வடையச் செய்யும். 20 படங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்ச்சி அளிப்பதன் மூலம் கல்வியின் தரம் குறையும்.

கன்னட திரையுலக போதை மருந்து சர்ச்சை: நடிகை சஞ்ஜனா கல்ரானி கைது

.hindutamil.in :கன்னட திரையுலகில் போதை மருந்து பயன்பாடு குறித்து விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், நடிகை சஞ்ஜனா கல்ரானியை கைது செய்துள்ளனர். ஏற்கனவே, பெங்களூரு நகரத்தில் பார்ட்டிகளில் போதை மருந்து விநியோகம் செய்த குற்றத்துக்காக, நடிகை ராகினி த்விவேதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.         செவ்வாய்க்கிழமை காலை அன்று, சஞ்ஜனாவின் வீட்டில், உரிய அனுமதி பெற்ற பின் மத்தியக் குற்றப் பிரிவினர் சோதனை செய்தனர். தொடர்ந்து சஞ்ஜனா விசாரணைக்காக, குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகியிருக்கும் ராகுல் என்பவர் சஞ்ஜனாவின் நண்பர். ராகுலின் கைதிலிருந்தே சஞ்ஜனா கண்காணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடிகை கங்கணா ரணவத், பாலிவுட்டில் போதை மருந்து கும்பலுக்கு, பெரிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

சீமான் கட்சியில் வெளிநாட்டு வசூல் தகராறு .. ஆளுக்கு ஆள் ... சீமானை மிஞ்சிய வசூல்வேட்டை

சீனி மாணிக்கம்  : வணக்கம் திரு.சீமான் அண்ணா அவர்களே... தமிழ்தேசியத்தின் முகமும் முகவரியுமாக அடையாளப்படுத்தப்படும் உங்களின் தம்பிகள், திரு.கல்யாண சுந்தரம் மீது திடீரென்று வீசுகின்ற விமர்சனக் கற்கள் உங்கள் கவனத்திற்கு வரமாலிருக்க வாய்ப்பில்லை... 

அந்த வகையில், கடந்த தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக கல்யாண் மீது குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா??? கையாடல் செய்ததால் தான் 5 மாதமாக பேசாமல் அவரை (கல்யாண்) புறக்கணித்ததாக நாம் எடுத்துக்கொண்டால் கூட, கருமாயப்பட்டு வெளிநாட்டில் உழைத்து அனுப்பிய ஈழத்தமிழர்களின் 38 லட்சம் பணத்தை கையாடல் செய்ததற்கு தண்டனை வெறும் புறக்கணிப்பு மட்டும் தானா???

அது உங்களின் சொந்த பணமாக இருக்கும் பட்சத்தில் பெரிய மனதோடு மன்னிக்க உங்களுக்கு உரிமையிருக்கலாம், ஊராரின் பணத்தை ஒருவர் கையாடல் செய்ததற்கு புறக்கணித்து மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது?      கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?

கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா??