செவ்வாய், 9 ஜூன், 2020

தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து ; மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் : முதல்வர் அறிவிப்பு

   dhinakaran : சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு
பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும்  மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்

நியூ ஸிலாந்தில் கொரோனா தொற்றுடையோர் எவருமில்லை! பிரதமர் ஜெசிந்தா நடனம்

metronews. lk :நியூ ஸிலாந்தில் தற்போது கொரோனா தொற்றுடையோர் எவரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படவுள்ளன. தனது நாட்டில் தற்போது கொரோ தொற்றுடையோர் எவரும் இல்லை என தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் தான் சிறிது நடனமாடியதாக நியூ ஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நியூ ஸிலாந்தில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய விதிகளின்படி, பாடசாலைகள், வேலைத்தளங்கள் அனைத்தும் திறக்கப்படும். திருமண வைபவங்கள், மரணச்சடங்குகள், பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகியன கட்டுப்பாடு எதுவுமின்றி நடத்தப்பட முடியும்.

தமிழக கொரோனா உயிரிழப்புகள் மர௦க்கப்படுகிரது?

மரணக் கணக்கு மறைக்கப்படுகிறதா? அறப்போரின் ஆவணப் புகார்!மின்னம்பலம் : தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளையும், ஒவ்வொரு நாளும் ஏற்படும் உயிரிழப்புகளையும் தினந்தோறும் ஒரு நாள் கூட விடாமல் பட்டியல் போட்டு வெளியிட்டு வருகிறது தமிழக அரசு. சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோரின் பத்திரிகையாளர் சந்திப்புகள் மூலமாகவோ அல்லது செய்திக் குறிப்புகள் மூலமாகவோ வெளியிடப்படுகின்றன.
இந்நிலையில், இந்த தினசரி புள்ளி விவரங்களில் இறப்புக் கணக்குகள் குறைத்துக் காட்டப்படுகின்றன என்று அறப்போர் இயக்கம் ஒரு வீடியோவை தனது ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “கொரோனா தொற்று காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மே 28 ஆம் தேதி 50 வயதுடைய ஆண் ஒருவர் இறந்துவிட்டார். இதற்கான ஆவணத்தில் மரணத்துக்கான காரணம் என்ற இடத்தில் கொரோனா பாசிடிவ் என்று எழுதி மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் ஜூன் 8 ஆம் தேதி வரையிலான அரசின் புள்ளிவிவரப் பட்டியலில் ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்த 50 வயது ஆண் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை.

புலி வதை முகாம்களில் சிக்கிய அப்பாவிகளின் கதைகள் .. டாக்டர் நோயல் நடேசன்

ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட  மனநோயாளிகளல்ல-6 
 by noelnadesan : கைதிகளுக்கு காலை உணவாக பாண் தரப்படும் என முன்னரே சொல்லி இருந்தேன் அல்லவா? அந்தப் பாண் கொண்டு வரப்படும் பெட்டிகளில் பேக்கரியின் பெயரும் துணுக்காய் என்று எழுதப்பட்டதையும் பார்த்து இப்பகுதி துணுக்காய்க்கு சமீபத்தில் இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் உதவியாளர் நெல்லிநாதன் என்பவர் துணுக்காய் பகுதியில் அமைந்துள்ள இக்காட்டு முகாமில் ஒரு துணியும் இல்லாமல் நிர்வாணமாக வைக்கப்பட்டிருந்தார்.
யோசனையாலும் சித்திரவதைகளாலும் மண்டையில் அடிப்பதாலும் ஐந்து கைதிகளுக்கு மனநோய் பிடித்துக்கொண்டது. இவர்கள் பைத்தியமாக நடிப்பதாக சொல்லி மேலும் மேலும் அடிப்பார்கள். உணவு கொடுக்க மாட்டார்கள். முகாமில் ஒரு பகுதியில் இருந்த சகதிக்குள் பைத்தியம் பிடித்தவர்களை கட்டிவிடுவார்கள். சில நாட்களின் பின் ஒரு நாள் அவர்களை எங்கேயோ அழைத்துச் சென்றார்கள்.
https://noelnadesan.com/
அழைத்துச் சென்ற சுமார் பதினைந்து நிமிடங்களின் பின் துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. பைத்தியமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் முகாமுக்கு திரும்பவும் கொண்டுவரப்படவில்லை.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் விசாரணை முடிந்து திரும்பி வரும்போது நடக்க முடியாமல் தான் வருவார்கள். சிலர் பெரிய இரத்தக் காயங்களுடன் தான் வருவார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது எனக்குப் பயமாக இருந்தது. இது ஆரம்ப விசாரணை என்றும் மீண்டும் ஒரு விசாரணை இருக்குமெனவும் பேசிக்கொண்டார்கள்.

சர்க்காரியா கமிசன் என்றொரு சதி கமிசன் .. வரலாறு

Ravindirandmk  : வரலாறு புவியியல் தெரியாது ... ஆனால் திமுக வ குறை சொல்ல மட்டும் தெரியும் என்ற வாட்ஸ் அப் குரூப்.. பாரதிய ஜல்சா பார்ட்டி.. மற்றும்
நடுநிலை என்ற பெயரில் பார்ப்பானியத்துக்கும்.முரட்டு முட்டு கொடுப்பவர்களுக்கு ஆன பதிவு..
சர்க்காரியா கமிசன் ஊழலுக்காக போடப்பட்டதா?
100% சத்தியமா இல்லை
1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு கோரி இந்திரா பலமுறை தூதுவர்கள் அனுப்பியும் கலைஞர் தீவிரமாக எமர்ஜென்சியை எதிர்த்தார்
ஸ்டாலின்,மாறன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் கலைஞர் பணியவில்லை
இறுதியாக கலைஞரின் புகழை துவம்சம் செய்ய முடிவெடுத்த இந்திரா பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்.
1972 ல் MGR மூலம் பக்தவச்சலம் தயாரித்து கொடுத்த ஊழல் பட்டியலை 1976 ல் தூசித்தட்டி எடுத்து கலைஞரின் மக்கள் செல்வாக்கை துடைக்க பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன்
கோபாலபுரம் வீட்டிற்கு வருமான வரி அலுவலர்கள் வந்து கலைஞரிடம் துளைத்து எடுத்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் துழாவி எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினர்
முரசொலி அலுவலகம் சென்றனர். சோதனை என்ற பெயரில் நாசம் செய்தனர். எதுவும் கிடைக்கவில்லை

ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம் தொடர் ..84 - 85

  NAPA : ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்  தொடர் 84 *
அதிகார வர்க்கத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர் அவர்களுக்குள் ஒரு இணைப்பை ஆர்எஸ்எஸ் உருவாக்கி வைத்துள்ளது
அதோடு ஐபி ரா போன்ற புலனாய்வு துறைகளிலும் ஆர்எஸ்எஸ் தனிப்பட்ட நபர்களோடு இரகசியத் தொடர்பை வைத்துள்ளது
இந்த உளவு நிறுவனங்களும் எதிரிகளின் முகாம்களில் ஊடுறுவதற்கு ஆர்எஸ்எஸ்காரர்களின் உதவியை பயன்படுத்திக்கொள்கிறது
நூற்றுக்கணக்கான காஷ்மீர் மாநில ஆர்எஸ்எஸ் பார்ப்பன இளைஞர்கள் (பண்டிட்டுகள்) தனிநாடு கேட்கும் முஸ்லிம்கள் அமைப்பில் ஐடி மற்றும் ரா நிறுவனங்களின் சார்பில் உளவாளிகளாக ஊடுருவியுள்ளனர்
இந்த இளைஞர்களுக்கு எல்லாம் இஸ்லாம் முறைப்படி பேசுவது தொழுகை நடத்துவது போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் இந்த உளவு நிறுவனங்கள் தருகின்றன
இவர்களில் சிலரை முஸ்லிம் போராளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டனை அளித்துள்ளனர்
நான் நமோஸ் செய்வேன் குர்ஆன் ஓதுவேன் ஆனாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்து தண்டனை அளித்து சித்திரவதை செய்தார்கள் என்று வித்யார்த்தி பர்சித் அமைப்பை சார்ந்த ஒரு மாணவர் அவுட்லுக் பத்திரிக்கையாளரிடம் ஒப்பு கொண்டுள்ளார்.

திங்கள், 8 ஜூன், 2020

பார்க்கவே பயந்து கொண்டிருப்பவர்களை எப்படி மருத்துவர்கள் என்று அழைப்பது?

சாவித்திரி கண்ணன் : இவர்கள் மருத்துவத் தொழிலுக்கே தகுதியற்றவர்கள் என்ற தெளிவுக்கு நாம் உடனடியாக வந்தாக வேண்டும்!
பகை நாடு படை எடுத்து வரும் போது தொடை நடுங்கி ஒளிந்து கொள்பவனை நாம் எவ்வாறு வீரன் என்று ஏற்கமுடியாதோ…,
அது போல, உபாதைகளில் தவித்தும்,உயிருக்கு போராடியும் வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்தவர்களை,பார்க்கவே பயந்து கொண்டிருப்பவர்களை எப்படி மருத்துவர்கள் என்று அழைப்பது? ’
பிரசவ வலியோடு துடிக்கும் கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு பதிமூன்று மணி நேரமாக, ஏழு மருத்துவமனை அலைந்தும் எங்கும் கொரோனா பயத்தால் ஏற்கமறுத்ததால், அப் பெண் உயிரிழந்துள்ளார்’ என்ற சம்பவம் ஒன்றே போதும்..இன்று மருத்துவத் துறை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள!
கடந்த இரண்டரை மாதங்களாக லட்சக்கணக்கான நோயாளிகள் எந்த சிகிச்சையும் தரப்படாமல் மறுக்கப்பட்டுள்ளனர் என்றால்,இவர்கள் எதற்கு மருத்துவத் தொழிலுக்கு வர வேண்டும்…?ஆஸ்பத்திரி கட்ட வேண்டும்?
உங்க யோக்கியதை தான் தெரிந்துவிட்டதே இன்னும் ஏன் நீங்களெல்லாம் மருத்துவர்களாகத் தொடர வெண்டும்…?தயவு செய்து உங்கள் மருத்துவமனைகளை அரசிடம் ஒப்படைத்து அதற்கான விலையை பெற்றுக் கொள்ளலாமே!

ஜெ அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

DMK MLA from Chennai J Anbazhagan health condition currently is described as criticalVelmurugan - tamil.oneindia.com: சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல் நிலை மோசம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரேலா மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (61வயது) உடலி நலக்குறைவு காரணமாக ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா
அவருக்கு கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 3ம் தேதி முதல் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் அன்பழகனின் உடல் நிலை இருந்தது.

சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து? - அலட்சியத்தில் தொற்றின் தீவிரம் புரியவில்லை.

Nilabharathi : சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து - அலட்சியத்தில் மக்கள்.
மக்களுக்கு தொற்றின் தீவிரம் புரியவில்லை. சினிமா பார்த்து மரத்து போன மண்டைகள். தமிழக நிலவரம்  கொரோனாவில் மகா மோசமாக சென்று கொண்டிருப்பது சாதாரண விஷயமாக படவில்லை. உயிர்பலிகள் அதிர வைக்கின்றன‌
சென்னை இதுவரை மகா சிக்கல்களை, மிரட்டல்களை சந்தித்த நகரம் அல்ல. முதல் உலகபோரில் ஜெர்மன் நீர்மூழ்கி குண்டு வீசியதை தவிர எந்த மிரட்டலும் வந்ததில்லை.மழை வெள்ளம் மட்டும் மிரட்டும், வேறு எந்த பெரும் மிரட்டலும் பாதிப்பும் இதுவரை வந்ததில்லை
ஆனால் கொரோனா சென்னை வரலாற்றிலே மிகபெரும் சவாலாக உருவெடுத்து நிற்கின்றது, திரும்பும் இடமெல்லாம் கொரோனா என அது மிகபெரும் திகிலை கொடுக்கின்றது. அணுவெடிப்பு வேகத்தில் அதன் பரவல் இருப்பதுமிகபெரும் ஆபத்து.
குழந்தைக்கு கொரோனா,17 வயது மாணவி மரணம் இன்னும் சில பிரமுகர்கள் ரகசிய சிகிச்சையில் இருக்கின்றார்கள் என்பது கலங்க வைக்கும் விஷயம்
சென்னையிலும் இதர தமிழகத்திலும் மிக வேகமாக‌ பரவி கொண்டிருக்கும் கொரொனா தொற்று உலகை அதிர வைக்கின்றது, இந்திய அரசே சிறிது பதற்றத்தில் இருக்கின்றது.

கோயிலில் நுழைந்ததற்காக 17 வயது தலித் இளைஞர் சுட்டுக் கொலை; உத்தர பிரதேசம்

ஸ்பெல்கோ : உயர் ஜாதியினரின் தடுத்ததை மீறி உத்தரப் பிரதேசத்தின் கோயிலில் வழிபட்ட 17 வயது தலித் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அம்ரோஹா மாவட்டம் தும்காரா கிராமத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன் விகாஸ் குமார் ஜாத்தவ். ஏழை விவசாயியான ஓம் பிரகாஷ் ஜாதவ் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் அந்த கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்களுக்கு கிராமத்தின் மையப்பகுதியில் வசிக்கும் உயர் ஜாதியினர் கட்டிய சிவன் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுத்து, கோவிலுக்குள் நீ போகக் கூடாது என்று உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் எதிர்த்துள்ளனர். அதை மீறி விகாஸ் குமார் இக்கோயிலில் கடந்த 1 ஆம் தேதி வழிபட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனையில் இடமில்லை: ஆம்புலன்சிலேயே இறந்த கர்ப்பிணி பெண்


BBC : உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நீலமும் அவரது கணவர் விஜேந்தர் சிங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்கள்.
30 வயதாகும் நீலம் எட்டு மாத கர்ப்பிணி. இவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.
வெள்ளிகிழமையன்று நீலமுக்கு வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸில் ஏற்றி, அரசு மருத்துவமனை உட்பட எட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.
ஆனால் எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லாத காரணத்தினால் அவர் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளார்.
“முதலில் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். பின்னர் ஷார்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

கோட்டையிலே கொரோனா ..தலைமை செயலகத்தில் . டாஸ்மார்க் .. கோயம்பேடு .. அள்ளிக்கோ அள்ளிக்கோ ..

கோட்டையை உலுக்கும் கொரோனாமின்னம்பலம் : தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இயங்கி வருகிறது. 11 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில்தான் தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள தொழில் துறைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 8) பரபரப்பாக கிருமி நாசினி தெளித்து மூடியிருக்கிறார்கள் என்ற தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் பரவியது. ஓரிரு நாட்களுக்கு முன் தொழில்துறைச் செயலாளர் முருகானந்தம் தனது அலுவலகத்தில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே இன்று தொழில் துறைச் செயலாளரின் அலுவலகத்தை மூடியிருக்கிறார்கள். அந்த அலுவலகத்தில் இருக்கும் தொழில் துறைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபட்டிருக்கிறார்கள்

தெலுங்கான .பத்தாம் வகுப்பில் ஆல் பாஸ்: முதல்வர்

மின்னம்பலம் : தமிழகத்தில் பத்தாம் வகுப்புத்
தேர்வை ரத்து அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே சமயத்தில் பல்வேறு மாநிலங்களிலும் தேர்வு நடைபெற்றதாகத் தெரிவித்து, ஜூன் 15 ஆம் தேதி தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாகத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் 11 மாநிலங்கள் பொதுத் தேர்வை நடத்தி முடித்து விட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 8) தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதுபோன்று தமிழகத்தில் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது மாநில மாணவர்களின் நலன் கருதி முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
தெலங்கானாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் ‘மோடி கிச்சன்’ தம்பதி கைது!.. பால் சப்ளை செய்தவர்களிடம் 32 லட்சம் மோசடி!

incident cuddalore

.nakkheeran.in - சுந்தர பாண்டியன் : கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் பாவாடை. விவசாயியான  இவர் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு பைத்தம்பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தொடர்பு கொண்டு தவளக்குப்பத்தில் குடியிருக்கும் தனது மகள் சுதா, மருமகன் செல்வகுமார்
ஆகியோர்  பைத்தம்பட்டியில் நடத்தி வரும்  பால் சொசைட்டிக்கு பால் சப்ளை செய்ய  கேட்டுக் கொண்டுள்ளார். அதனடிப்படையில் இதை நம்பிய பலரும் பாவாடையை ஏஜென்டாக கொண்டு பால் சப்ளை செய்து வந்துள்ளனர். குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டும் பணம் வழங்கி வந்த நிலையில், அதன் பின்னர் உரிய பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்! – பொதுத்தேர்வு குறித்து மு.க.ஸ்டா

வெப்துனியா :தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் நடைபெற உள்ள நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஜூன் முதல் தேதியில் தொடங்குவதாக இருந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது,
அதற்கான அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டும் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்தியும் திருநாவுக்கரசும் கபடி

ksa
நக்கீரன் : கரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளைச்
செய்து வருகின்றன அரசியல் கட்சிகள்! காங்கிரஸ் கட்சியிலும் இத்தகைய நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது சொந்த மாவட்டமான கடலூரைத் தவிர்த்து வேறு எங்குமே செல்லவில்லை. அவரவர் மாவட்டங்களில் நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதோடு வீட்டிலேயே இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இந்தச் சூழலில், ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ள தொகுதிகளில் அதிரடி விசிட் அடித்து மக்களுக்கான நிவாரண உதவிகளை செய்தார்.

தமிழ்நாட்டின் இன்றய தொழில் வளர்ச்சிக்கு கலைஞர் எப்படி ஒரு முக்கியமான காரணமாக இருந்தார்.?

How- Kalaingar karunanidhi- became-the-reason-for-tn-development
சுபகுணராஜன், : .fbcd n.net : தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு
கருணாநிதி எப்படி ஒரு முக்கியமான காரணமாக இருந்தார்.? சிறப்புக் கட்டுரை
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தொழில் துறை வளர்ச்சிக்கு என்ன செய்தன என்று கேட்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அந்நாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய உணவு அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியனின் சுயசரிதையைப் பரிந்துரைக்கும் பழக்கம் எனக்குண்டு. வெறும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் மட்டுமே 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை; வேலைவாய்ப்பின்மைக்கும் பஞ்சத்துக்கும் பசி பட்டினிக்கும் அதில் ஒரு முக்கியமான பங்குண்டு என்பதை அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்!
குஜராத் - தமிழகம் ஒப்பீடு
பண்டைய தமிழகத்தின் வணிகப் பெருமைகளுடன் நவீனத் தமிழகத்தை ஒப்பிட முடியாது. நவீன இந்தியாவின் பொருளாதாரம் என்பது குஜராத்திகளின் பொருளாதாரம். குஜராத்திகள் குஜராத்திலும் பின்னர் மஹாராஷ்டிரத்திலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டதால், இந்த இரு மாநிலங்களே இந்தியாவின் தொழில் துறையைக் கையில் வைத்திருக்கின்றன. ஒரு ரிலையன்ஸுடன் அம்பானியுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல நிறுவனங்களை ஒன்றுசேர்த்தால்கூட அது சுண்டைக்காய்க்குச் சமானம்தான்.

ஆபாச அஸ்வமேத யாகம் ... அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்

thathachariyar.blogspot.com : அசுவமேதயாகத்தின்  ஆபாசங்கள் கொடூரங்கள் இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3
வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம். குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம். சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.
எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

கருணா பிரபாவுக்கு எழுதிய கடிதம் : 32 இயக்க பொறுப்பாளர்களில் ஒருவர் கூட மட்டக்களப்பு அம்பாரை ... கிடையாது

Reginold Rg : மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட சிறப்பு தளபதி கேணல் கருணா அம்மானால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 2004 ஆண்டு எழுதப்பட்ட கடிதம்.....
மதிப்புக்குரிய தலைவர் அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன் பொதுவாக எமது போரில் வரலாற்றில் எங்கள் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவருமே மறுக்கவோ மறைக்கவோ முடியாது அது மட்டும் அல்ல பல படுகொலைகளையும் அழிவுகளையும் எங்கள் மாவட்டங்கள் சந்தித்துள்ளன இதுவரை நடந்த போராடதில் 6800 மட்டக்களப்பு அம்பாரை போராளிகள் களத்தில் வீரச்சாவு அடைந்துள்ளார்கள் இவர்களில் கிட்டதட்ட 4000 வீரர்கள் உங்களின் கட்டளையை ஏற்று வந்து யாழ் வன்னி மண்ணில் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்
நாங்கள் வன்னி களமுனையில் போரிட்டு கொண்டிருந்த போதெல்லாம் பல பல பிரதேசவாத கருத்துக்களையும் சிக்கல்களையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டு வந்திருக்கிறோம்
இவைகள் யாவும் உங்களுக்கு தெரிந்த விடயங்கள் இருந்தாலும் உங்கள் மீதுள்ள பக்தியின் காரணமாக எல்லா விடயங்களையும் சமாளித்தே வந்திருக்கிறோம் தற்போது இந்த பிரச்சினை பெரிதாகி விட்டுள்ளது
இதற்காக காரணத்தையும் உங்களுக்கு தெளிவாக்க கடமை பட்டுள்ளேன்

ரஜினி YES பேங்க் சிக்கலிலும் வருமானவரி மிரட்டலிலும் ரஜினி சிக்கி கொண்டார் ?

Mohamed Saleem.  : ரஜினிகாந்த் ஒரு சூழ்நிலைக் கைதி என்றே நினைக்கின்றேன்..
ரஜினியின் வாயிலிருந்து வருவதெல்லாம் உள்ளத்திலிருந்து வருவதல்ல..
என் கணிப்பு உங்களுக்கு கேலியாகக் கூட தெரியலாம்..
பொதுவாக ரஜினி ஒரு பலஹீன மனிதர்.. அதைவிட. அவர் அதிக பணத்தாசை கொண்டவர்...
1996 ரஜினி திமுக, தமாக கூட்டணிக்கு ஆதரவு தந்து ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் அரசியல் ஹீரோவானார்..
அவர் நேரடியாக அரசியலுக்கு வராததன் காரணம் பணத்திற்கும், புகழுக்கும் தந்த முக்கியத்துவத்தை பதவி, அதிகாரத்தில் இழக்க விரும்பவில்லை.. பல வருடகாலம் கஷ்டப்பட்டு சேமித்தவை அல்லவா..
அரசியல் எதிர்பார்ப்புக்கு உள்ளான ரஜினியை துக்ளக் சோ தனது பார்ப்பணிய அரசியலுக்கு இழுத்துப்போட காய் நகர்த்தினார்.. ஆனால் ..
தனது புதிய அரசியல் இமேஜை படங்களின் வெற்றிக்கு பயன்படுத்த நினைத்த ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்றும் ஆரம்பிக்க மாட்டேன்.என்றும் தெளிவாகச் சொல்லாமல் எல்லோரையும் பைத்தியமாக்கி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

பார்ப்பனிய ஆதரவில் அந்நாள் சீமான் ம.பொ.சி, இந்நாள் ம.பொ.சி சீமான் ! 😀

Saraboji எனினும் அது தமிழ்த் தேசிய உணர்வாக இல்லாமல் திராவிட இயக்க எதிர்ப்புத் தமிழ்த் தேசிய உணர்வாக இருந்தது.
அதனால் தான் 1950-51 முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை ம.பொ.சி நடத்தினார். அம்மாநாடுகளில் விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்றோர் திராவிட இயக்கம் குறித்தும்
அதன் தலைவர்கள் குறித்தும் மிகவும் தரக்குறைவாகப்(இப்போது சீமான் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டு ஒருமையில் பேசுவது போல) பேசியுள்ளனர்.
அம்மாநாடுகளுக்கு கள்ளக்குறிச்சி வழக்குரைஞர் தாத்தாச்சாரி போன்ற பணக்காரப் பார்ப்பனர்கள் நிதியுதவி செய்துள்ளனர்.
திராவிட இயக்க எதிர்ப்பு என்பது பெரியாரையோ, திராவிடர் கழக்கத்தையோ எதிர்ப்பது என்று பொருள் கொள்ள முடியாது. பார்ப்பனிய ஆதரவே திராவிட இயக்க எதிர்ப்பாக வெளிப்பட்டுள்ளது.
சீமான் எப்படி தெலுங்கர்களை, மலையாளிகளை ஒதுக்கி விட்டு மாறாகப் பார்ப்பனர்கள் தமிழர்கள் தான்(சங்கரப்பா😂) என்பதும் திமுகவைத் தீவிரமாகத் திட்டுவதும் மற்றக் கட்சிகளுக்குக் காதல் கடிதம் எழுதுவதுவமாக இருக்கிறாரே,மருத்துவ பட்ட மேற்படிப்பில் OBC இட ஒதுக்கீடு பறிபோனது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லையே!

ஞாயிறு, 7 ஜூன், 2020

தங்கம்..வாங்க ஆளைக் காணோம்.இன்னும் தள்ளுபடி அதிகரிக்குமா?

வெறிச் சோடிக் காணப்படும் ஷோரூம்கள்
தேவை குறையும்தள்ளுபடிகள் கைகொடுக்கவில்லைtamil.goodreturns.in மும்பை: கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் கொடிய அரக்கனால் மக்கள் பலியாகி வரும் நிலையில், பொருளாதாரம், இந்தியாவின் முதுகெலும்பாய் உள்ள பல வணிகங்களும் முடங்கி போயுள்ளன.
இதனால் மக்கள் இன்றும் கூட கையில் பணமில்லாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு புறம் மக்கள் கையில் பணப்புழக்கம் இன்மை. வேலையின்மை, வேலையிழப்பு என பாடாய் படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மக்கள் கையிலும் பணப்புழக்கம் என்பது அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரம், தங்கம் விற்பனையாளர்கள் நலிவடைந்துள்ள விற்பனையை அதிகரிக்க பல அதிரடியான தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகின்றனர்.
என்ன தான் ஜூவல்லரி நிறுவனங்கள் தள்ளுபடியை வாரி வழங்கி வந்தாலும், மக்கள் கையில் பணப்புழக்கம் இன்மையால் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் விற்பனையானது அவ்வளவாக அதிகரித்ததாக தெரியவில்லை. எனினும் சிங்கப்பூரில் தங்கத்தின் தேவையானது சற்று அதிகரித்து வருவதாகவே இடி செய்திகள் கூறுகின்றது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஷார்ஜா (39 வயது) திடீர் இறப்பு


tamil.indianexpress.com: கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. சீரஞ்சீவி சார்ஜா மறைவுக்கு நடிகை பிரியாமனி, நடிகர் அல்லு சிரீஷ், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இன்று மதியம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். கன்னட நடிகர் சீரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால உயிரிழந்தது கன்ன திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தமிழ் நடிகை மேக்னாவின் கணவர். மேலும், சீரஞ்சீவி சார்ஜா நடிகரும் இயக்குனருமான அர்ஜூன் சார்ஜாவின் உறவினர்.

தமிழக 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது

சென்னை:   தினகரன் :தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு பேட்டி அளித்துள்ளார். மக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக விலையேற்றம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ,667: இது வரை உயிரிழப்பு 269

தினமலர் : சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 8 வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக இன்று (7 ம் தேதி), 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667ஆகவும், மேலும் 18 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 269ஆகவும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் இன்று ( 7ம் தேதி) 1,515 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,671மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,92, 970 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதன் மூலம் 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (7ம் தேதி) 18 பேர் உயிரிழந்துள்ளனர். 13503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். latest tamil news தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் ஆண்கள். 19,634 பேர் பெண்கள்12,016 பேர் 12 வயதுவரை உள்ளவர்களில், 1,699பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்