திங்கள், 8 ஜூன், 2020

ரஜினி YES பேங்க் சிக்கலிலும் வருமானவரி மிரட்டலிலும் ரஜினி சிக்கி கொண்டார் ?

Mohamed Saleem.  : ரஜினிகாந்த் ஒரு சூழ்நிலைக் கைதி என்றே நினைக்கின்றேன்..
ரஜினியின் வாயிலிருந்து வருவதெல்லாம் உள்ளத்திலிருந்து வருவதல்ல..
என் கணிப்பு உங்களுக்கு கேலியாகக் கூட தெரியலாம்..
பொதுவாக ரஜினி ஒரு பலஹீன மனிதர்.. அதைவிட. அவர் அதிக பணத்தாசை கொண்டவர்...
1996 ரஜினி திமுக, தமாக கூட்டணிக்கு ஆதரவு தந்து ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் அரசியல் ஹீரோவானார்..
அவர் நேரடியாக அரசியலுக்கு வராததன் காரணம் பணத்திற்கும், புகழுக்கும் தந்த முக்கியத்துவத்தை பதவி, அதிகாரத்தில் இழக்க விரும்பவில்லை.. பல வருடகாலம் கஷ்டப்பட்டு சேமித்தவை அல்லவா..
அரசியல் எதிர்பார்ப்புக்கு உள்ளான ரஜினியை துக்ளக் சோ தனது பார்ப்பணிய அரசியலுக்கு இழுத்துப்போட காய் நகர்த்தினார்.. ஆனால் ..
தனது புதிய அரசியல் இமேஜை படங்களின் வெற்றிக்கு பயன்படுத்த நினைத்த ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்றும் ஆரம்பிக்க மாட்டேன்.என்றும் தெளிவாகச் சொல்லாமல் எல்லோரையும் பைத்தியமாக்கி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

ஒருவழியாக காலங்கள் ஓடி தனது வேஷத்தைக் கலைத்து இனி அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொல்ல முடிவெடுத்த ரஜினியின் போதாத நேரம் பாஜக என்னும் ஒரு அடக்குமுறை கட்சி அதிகாரத்துக்கு வந்தது..
இதுவரை போலியாக ரஜினி போட்டு வந்த அரசியல் நாடகத்தை உண்மைபடுத்த பாஜக திட்டம் போட்டது.. அதற்காக அது எடுத்துக்கொண்ட அங்குசம் தான் YES பேங்க்கில் மைத்துனர் மூலமாக ரஜினி வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் .. வங்கி திவாலாகப் போகும் நிலையை எடுத்துச்சொல்லி பணம் வேண்டுமா .. வேண்டாமா என்று ரஜினி மிரட்டப்பட்டார்..

அதற்கு மேலும் கணக்கில் வராத மற்ற பணங்களினால் I T department க்கு அஞ்சி நடுங்க வைக்கப்பட்டார்...
வகையாக சிக்கிக் கொண்ட ரஜினி பாஜகவின் டைரக்சனுக்கு ஆக்டிங் பண்ண சம்மதித்தார்.. ஆனால் விருப்பமில்லா மனிதர் மூலம் தங்கள் ஆர்எஸ்எஸ் அஜென்டாக்களை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்த பாஜக ரஜினி என்ற தலைவரின் கீழ் தங்களது ஆட்களை வைத்து ஆட்சி செய்ய வியூகம் வகுத்தது..
அதற்காகத்தான் தலைமை ரஜினிக்கு , பதவி மற்றவர்களுக்கு என்ற திட்டத்தைத் தீட்டியது.. அதுதான் தொடர்கிறது..
உண்மையில் தூத்துக்குடியில் ரஜினி பேசிய பேச்சும், CAA தொடர்பான கருத்தும்., கொரோனா சம்பந்தமான அறிக்கைகளும் ரஜினிக்கு சொந்தமானவையே அல்ல.. அவர் ஒரு சூழ்நிலைக் கைதி..
வயதான காலத்தில் நிம்மதியற்று தவிக்கும் அப்பாவி பணக்காரன்..
அதனால் என்றும் புறக்கணிக்கப்பட வேண்டிய சுயநல மனிதர் ரஜினி.

கருத்துகள் இல்லை: