செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மீண்டும் மருத்துவர்கள் போராட்டம்... .. தமிழகம் முழுவதும்

தமிழகம் முழுவதும் மீண்டும் மருத்துவர்கள் போராட்டம்!மின்னம்பலம் : பணியிட மாற்றம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப் படுத்த வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 1868 ஆக உயர்வு

தினத்தந்தி :  பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,868- ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436 ஆக உள்ளது. வைரஸ் தாக்குதலின் வீரியம் தற்போது குறைய தொடங்கி இருப்பதாக சீன தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலின் மையப்பகுதியான உகானில், பாதிப்பின் வேகம் கடந்த மாதம் 28-ந் தேதி 32.4 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 15-ந் தேதி அது 21.6 சதவீதமாக குறைந்திருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்தியாவை பின்னுக்கு தள்ளி திருப்பூருக்கும் டஃப்.. வங்கதேசம் விஸ்வரூபம்.. அபார பொருளாதார வளர்ச்சி

பாலகணேசன் அருணாசலம் : இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சி.. திருப்பூருக்கும் டஃப்.. வங்கதேசம் விஸ்வரூபம்
டெல்லி: ஹென்றி கிஸ்ஸிங்கர், 1970 களில், வங்கதேசத்தை "ஒரு சர்வதேச பேஸ்கெட் கேஸ்" என்று அழைத்தார். உண்மைதான். அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளால் தத்தளித்தது அந்த நாடு. ஆனால் இன்று? வங்கதேசம் வேறு நாடு.
வங்கதேசம் பற்றி ஆழ்மனதில் பதிய வைத்துள்ள மோசமான கருத்தை உல கம் மாற்றிக்கொள்வதில், சோம்பேறித் தனம் இருக்கலாம். ஆனால் 1970களின் வங்கதேசம் இல்லை அது, என்ற
உண்மை, விரைவில் பல நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்படும்.
இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சமீபத்தில் "இந்தியா ஒரு வேளை அவர்களுக்கு குடியுரிமை வழங் கினால் வங்கதேசம் பாதி காலியாக மாறிவிடும்" என்று கிண்டலாக கூறியி ருக்கலாம்.ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வங்க தேசம், வாழ்க்கைத் தரத்தை நிர்ண யிக்கும் குறியீடுகளில் பலவற்றில் மிகச் சிறப்பாக முன்னேறிவிட்டது என்பது பாவம் ரெட்டிக்கு தெரியுமோ தெரியா தோ!
 செம_வேகம்
வங்கதேசம் நாம் பொறாமை கொள்ளும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அவர் கள் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% க்கு கீழே போய்க்கொண்டு இருக்கி றது. ஆனால், வங்கதேசம் 8%க்கு மேல் உள்ளது. கார்ப்பரேட் வரியை குறைத்து, சீனாவை விட்டு வெளியேறும் முதலீட்டை ஈர்க்க நிர்மலா சீதாராமன் ஒருபக்கம் தீவிரமாக செயல்படுகிறார். ஆனால், உண்மையில், அந்த பலனை அனுபவிப் பது வங்கதேசம். லண்டன் மற்றும் நியூயார்க்கில் வங்கதேசத்தில் தயாரான ஆடைகள் உடுத்தப்படுகின்றன. தமிழகத் தின் திருப்பூரிலும், பஞ்சாப்பின் லூதியானாவிலும் தயாராகும் ஆடைகள் இப்போதெல்லாம் அங்கே அதிகம் விற்பனையாகவில்லை.

ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு சமுகவலையில் எழுந்த .. காரசார விவாதங்கள் ... தொகுப்பு

ராஜா ஜி : என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதை புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காக செய்த நலத்திட்டங்களை எடுத்து கூறுவதே ஆகும். - ஆர். எஸ். பாரதி எம்.பி. அமைப்புச் செயலாளர், திமுக
Don Ashok : · இதுல ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலித்துகள் என சொல்லிக்கொள்வோருக்கும் ஜாதி வெறி பீறிட்டு வரும். வர்ணாசிரம தர்மத்தின் டிசைன் அப்படி.!
Gokul Narayan : ஒரு மோசமான கருத்துக்கு எதிர்வினை இப்படித்தான் இருக்கவேண்டுமா? திமுக தரப்பிலிருந்து யாராவது அப்பட்டமாக நியாயப்படுத்தியிருக்கிறார்களா? அப்படி இல்லாமலிருந்தும் காலகாலமாக கருணாநிதியின் தனிப்பட்ட சிறுபான்மையின ஜாதியின் மீது மட்டும் பேய் இறங்கியதுபோல ஆவேசமாக தாக்குவது எப்படிமுடிகிறது?
ஆர்.எஸ்.பாரதி செயலை கண்டிக்கும் அதேநேரத்தில் இந்தமாதிரியான லும்பன்களை ஆதரித்துவிடாதீர்கள். அது அவர் பேசியதைக்காட்டிலும் அருவருப்பானது.
பதிவுக்கு சொந்தக்காரர் கவனத்துடனே கருணாநிதியின் மேல் வைக்கப்படும் இன்னொரு கேவலமான நாவிதர் வசைமொழியை எடுத்தாளாமல் விட்டுள்ளார்.
அது சமுநீதியின் கண்ணோட்டமல்ல ஒருவித பயம். அந்த கவனமின்றி பொருப்பில்லாமல் தவறாக பேசியதற்க்கு ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களில் வருத்தம் தெரிவித்தபின்னரும் இவர்களுக்கு கருணாநிதி ஜாதியை தெருவுக்கு இழுப்பதில் தான் ஆசுவாசம் கொள்கிறார்கள் எனில் மாறவேண்டியது ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல.
Adv Manoj Liyonzon : · ஊர் ஊராக தவில் அடித்துக் கொண்டும், நாதஸ்வரம் ஊதிக் கொண்டும், கோயிலில் தேவதாசியாக இருந்தும் வந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக முடிந்ததும், அவரது குடும்பமும் அரசியல் பதவிகளை வகிக்க முடிகிறது என்றால், அது தந்தை அம்பேத்கர் போட்ட "பிச்சை" என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாளல்ல. அது தந்தை அம்பேத்கர் வரையறுத்த இந்திய அரசியலமைப்பு மூலம் நமக்கு நாமே வழங்கிக் கொண்ட உரிமை ஆகும் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களே.
Karthick M : திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியது சாதி வெறி மிக்க வன்மம் மிக்க கருத்து என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் இதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் Adv Manoj Liyonzon அவர்கள் சர்காஸ்டிக்கா பேசிய இப்பதிவும் சாதிய வன்மம் மிக்க பதிவே! பதிலுக்கு ஆர்எஸ் பாரதி அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தால் கூட பிரச்சனை இல்லை அவர் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனாலும் விமர்சிக்கலாம் I. can not agree with u! கலைஞரை சாதிய ரீதியில் மறைமுக நகைச்சுவையாக விமர்சித்த இப்பதிவின் நோக்கம் என்ன? ??? சில காலம் முன்னர் வைகோ விமர்சித்த அதே தொனி இப்பதிவில் தெரிகிறது.

திங்கள், 17 பிப்ரவரி, 2020

இது பாகிஸ்தான் ! ...அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த இது இந்தியா அல்ல ... பாகிஸ்தான் நீதிமன்றம்

https://thewire.in/south-asia/india-pakistan-sedition-protests-islamabad-high-court-athar-minallah
Karthikeyan Fastura : · மன்சூர் பஸ்தீன் என்ற மனித உரிமை செயல்பாட்டாளரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி தொழிலாளர் கட்சியும், பிடிஎம் இயக்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தில் 23 தொழிலாளிகளை இஸ்லாமாபாத் போலீஸ் கைது செய்தது .
அந்த வழக்கில் வழக்கில் பாகிஸ்தான் நீதிபதி "இது பாகிஸ்தான், இந்தியா அல்ல. அப்படியெல்லாம் ஒருவரின் அரசியலமைப்பு கொடுத்த அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது "என்று மறுத்துள்ளார். இதை விட யாராலும் பிஜேபி அரசை கேவலப்படுத்தி விட முடியாது. Everyone’s constitutional rights will be protected. This is Pakistan, not India,” Justice Minallah reportedly said in court. He was hearing the bail petitions of 23 workers of the Awami Workers Party (AWP) and Pashtun Tahaffuz Movement (PTM), who were arrested by the Islamabad Police on January 28 for protesting the arrest of PTM chief and well known human rights activist Manzoor Pashteen....

சீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா?

சீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா?மாலைமலர் : சீனா சென்றுவிட்டு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சக்திகுமார்
அறந்தாங்கி:புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமாக சீனாவுக்கு சென்றிருந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சீனாவில் சிக்கித்தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்தபோது, அதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரும் வந்தனர்.

ரயிலில் சிவனுக்கு மினி கோயில்!

ரயிலில் சிவனுக்கு மினி கோயில்! மின்னம்பலம் : புதிதாக இயக்கப்பட்ட ரயிலின் ஒரு பெட்டியில் கடவுள் சிவனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாரணாசி, மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன், இந்தூர் அருகேயுள்ள ஓம்காரேஸ்வர் கோயில் ஆகிய மூன்று புனிதத் தலங்களையும் இணைக்கும் நாட்டின் மூன்றாவது தனியார் ரயிலான ‘மகாகால்’ எஸ்பிரஸின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நேற்று துவக்கிவைத்தார்.
இந்த நிலையில் புதிய ரயிலில் கடவுள் சிவனுக்கு மினி கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் குளிரூட்டப்பட்ட மூன்றாவது வகுப்பு பி5 பெட்டியில் 64ஆவது பெர்த்தில் சிவனுடைய படம் வண்ணத் தோரணங்களுடன் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. புனித தினங்கள் மற்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெர்த்தில் பயணிகள் யாரும் முன்பதிவு செய்ய முடியாது எனவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

எச்சரிக்கையை மீறி சீனாவிலிருந்து வந்த கப்பல் அனுமதிக்கப்பட்டதா?’ தூத்துக்குடி துறைமுகம்

சீனாவிலிருந்து வந்த சரக்குக்கப்பல்
சரக்கு கப்பலில் சீன ஊழியர்கள்vikatan.com - இ.கார்த்திகேயன் : சீனாவிலிருந்து வந்த சரக்குக்கப்பல்
மத்திய கப்பல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்குள் சீனாவிலிருந்து வந்த சரக்குக் கப்பலை அனுமதித்ததுடன், அக்கப்பலில் வந்த 14 சீனர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு சோதனை நடத்தப்படவில்லை எனவும் புகார் கிளம்பியுள்ளது.
சீனாவில் கொரானா வைரஸ் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சீனாவைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் வைரஸ் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும், பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கடும் விமர்சனம் .. அவர் பேசியது ... வீடியோ .

மின்னம்பலம் :   பட்டியலினத்தோர் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியவை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "திராவிட இயக்கம் ஒழிந்தால்தான் தமிழகத்திற்கு நன்மை என்று பேசுகிறான் என்று சொன்னால் அவனுக்கு அந்த தைரியத்தை தந்தது யார்? இந்தியாவிலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்கப் பார்க்கிறார்கள். திமுகக்காரன் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் அய்யருக்கு வருமானமே இல்லை. திமுகவின் வட்டச் செயலாளர் கோயிலுக்கு போனால் 100 ரூபாய் போடுவான். கவுன்சிலர் போனால் 500 ரூபாய் போடுவான். எம்.எல்.ஏ போனா ஆயிரம் ரூபாய் போடுவான். ஏன் நான் கூட கையில் கயிறு கட்டியிருக்கிறேன்” என்றவர் தனது பேச்சை பத்திரிகையாளர்களை நோக்கி நகர்த்தினார்.

CAA க்கு எதிராக பேரவையில் விவாதிக்க மறுப்பு ... ஸ்டாலின் கோரிக்கை நிராகரிப்பு

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் விவாதிக்க முடியாது- தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிப்பு தினத்தந்தி : சிஏஏவுக்கு எதிராக சட்டசபையில் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் சிஏஏ-வுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். தடியடி நடத்துவதற்கு யார் தூண்டி விட்டார்கள்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பற்றி மட்டும் சபையில் பேசலாம் என்றும், சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் பற்றி தற்போதைய கூட்டத் தொடரில் விவாதித்து நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். மேலும் பேரவை விதிகளை சுட்டிக் காட்டிய சபாநாயகர் தனபால், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக போராட்டம்தினத்தந்தி :  சென்னை  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13-ந் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வருகிற 28-ந் தேதி வரை சென்னை நகரில் போலீசாரின் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களை நடத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் பாதிக்கப்படலாமாம்.....

/tamil.goodreturns.in : உலகெங்கிலும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம், உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது என்று கூறலாம். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது. நாம் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில், இன்னும் பலர் கொரோனா பற்றிய தாக்கத்தினை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.  இதை எப்படியேனும் தடுத்து விட முடியாத என போராடி வரும் சீனாவினையே என்ன சேதி என்று கேட்டுள்ள இந்த கொடிய வைரஸால், இது உலகளாவிய தொற்று நோயாக மாறக்கூடும் என்று பீதியை கிளப்புகின்றனர் ஆய்வாளர்கள்.< குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஹார்வர்ட் தொற்று நோயியல் நிபுண மார்க் லிப்சிட் உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கணித்துள்ளாராம். மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், எத்தனை பேர் இதன் அறிகுறிகளை காண்பிப்பார்கள் என்றும் கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.< ஹாங்காங் பல்கலைக் கழகம் கருத்து இதுவே ஹாங்காங் பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார மருத்துவத்தின் தலைவரான கேப்ரியல் லியுங், தி கார்டியனிடம், உலக மக்கள் தொகையில் 60% பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளாராம்.

சீனாவில் 1,770 பேர் உயிரிழப்பு .. கோவித் 10 வைரஸ் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் ..?


தினமலர் : பீஜிங்: அண்டை நாடான சீனாவில், 'கோவிட் - 19' எனப்படும், 'கொரோனா' வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை, 1,770 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன், சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
 சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பரில் பரவிய கோவிட் - 19 என்ற வைரஸ், அந்த நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங், கிழக்காசிய நாடான ஜப்பான் ஆகியவற்றிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடான சீனா, இந்த வைரஸ் தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மரண பீதியில் உள்ளனர்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

கல்யாண பாட்டு சத்தத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை .. தெலுங்கான ...


தினமணி : நிஜாமாபாத்: திருமண ஊர்வலத்தில் ஒலித்த உச்ச கட்ட 'டி.ஜே' இசையின் காரணமாக மாரடைப்பில் மணமகன் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தின் போத்தன் நகரில் கணேஷ் (25) மற்றும் ஸ்வப்னா (24) இருவருக்கும் சனிக்கிழமையன்று திருமணம் நடைபெற்றது. மாலை திருமண நிகழ்வின் ஒருபகுதியான 'பாரத்' என்னும்  ஊர்வலத்தின்போது டி.ஜே இசையமைப்பில் பாடல்கள் உச்ச ஸ்தாயியில் ஒலிபரப்பப் பட்டன. 
 கார் ஊர்வலத்தில் பாடல்களுக்கு அவரது உறவினர்கள் நடனமாடத் தொடங்கினர். ஆனால் இசையின் அதிகபட்ச ஓசையின் காரணமாக காரில் அமர்ந்திருந்த கணேஷ் அசவுகரியமாக உணர்ந்துள்ளார். அதனால் காரை விட்டு இறங்காமலேயே இருந்தார். ஆனால் சிறிதுநேரத்தில் அவரும் காரை விட்டு இறங்கிவந்து சிறிது நேரம் நடனத்தில் சேர்ந்து ஆட முயற்சித்தார். பின்னர் அவர் மிகவும் சோர்ந்து ஊர்வலத்திலேயே சரிந்து விழுந்தார்.

விக்கிரவாண்டி தலித் இளைஞா் அடித்து கொலை... வன்னிய ஜாதி வெறியர்கள் ....


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் : விழுப்புரம் அருகே தலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 24 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவுப்பணிக்கு சென்ற அவர், புதன்கிழமை, காலை வீட்டிற்கு வந்து படுத்துள்ளார்.
சிறிதுநேரத்தில், சக ஊழியரிடமிருந்து போனில் அழைப்பு வந்துள்ளது. ஆதார் அட்டை, போட்டோ எடுத்துக்கொண்டு உடனடியாக ஆபிஸ் வருமாறு நண்பர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மதியம் 1.30 மணியளவில், அவர் ஆபிஸ் புறப்பட்டு சென்றார். இருசக்கர வாகனத்தில் குறைந்த அளவு பெட்ரோலே இருந்துள்ளது. சமாளித்து விடலாம் என்று வண்டியை எடுத்து சென்றுள்ளார். ஆனால், பாதிவழியிலேயே வண்டி நின்று விட்டது. செய்வதறியாது தவித்த அவர் 2 கி.மீ. தொலைவிற்கு வண்டியை உருட்டியே சென்றுள்ளார். பாட்டிலில் பெட்ரோலை கொண்டு வரலாம் என வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றுகொண்டிருந்தார். வயிறு ஒருமாதிரி இருக்கவே, மலம் கழிக்கலாம் என சாலை ஓரத்தில் ஒதுங்கியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்களாக மாற்றப்படும் சென்னை பள்ளி மாணவர்கள்

 Students of Chennai School who are converted into Nirmala Sitharamans Students of Chennai School who are converted into Nirmala Sitharamans நக்கீரன் : மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் சென்னை பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை ‘அட்சய பாத்ரா’ என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்படுத்துகிறார்கள். அட்சய பாத்ரா என்பது இஸ்கான் (ISKCON) என்ற அமைப்பின் துணை நிறுவனமாகும்.  இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த அமைப்பின் சார்பில் இத்திட்டம் அரசு உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, அட்சய பாத்திரத்துக்காக க்ரீம்ஸ் சாலையில் 20ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. பெரம்பூர்  பேரக்ஸ் ரோடு பகுதியில் மேலும் 35 ஆயிரம் சதுர  அடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். தொடக்க விழாவில், ஆளுநர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
பள்ளிகளில் உணவு வழங்குவது என்பதில் தமிழ்நாடு முன்னோடியான மாநிலமாகும். 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகள்-உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சிக்காலத்தில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு, விரிவாக்கமும் செய்யப்பட்டது. கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு மாணவ-மாணவியரின் உடல்நலனுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில்  கலவை சோறு அளிக்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது.

சிஏஏ: நூலகத்தில் புகுந்து படிக்கும் மாணவர்களை தாக்கிய போலீசார்.. சி சி டி வி வீடியோ


 மின்னம்பலம்:  ஜாமியா பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் புகுந்து மாணவர்களை போலீசார் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டெல்லி ஜாமியா மிலியா, அலிகார் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். டிசம்பர் மாதம் 15ஆம் தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தடியடி பிரயோகங்களில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இதனால் கொந்தளித்த மாணவர்கள் நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக தீவிரப் போராட்டங்களைக் கையிலெடுத்தனர்.
இந்த நிலையில் சிஏஏ போராட்டத்திற்குப் பிறகு ஜாமியா பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது காவல் துறையினர் கொடூர தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CAA - NRC Protest: தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு ( ஆர் எஸ் எஸ் ? ) அதிகாரிகள்

BBC :தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர், என்.சி.ஆர்.க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை தமிழக டிஜிபி திரிபாதி நியமித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் பல கட்டங்களாக நடந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த போராட்டத்தில் வெள்ளியன்று காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர்.
வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடியை எதிர்த்து தற்போது பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வண்ணாரப்பேட்டையில் கூடியுள்ள பெண்கள் பலர், தெற்கு டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக ஷாஹீன்பாக் பகுதியில் நடைபெறும் தொடர் போராட்டம் போலவே தாங்களும் குழந்தைகளுடன் வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
e>இந்நிலையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த, போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்கவும் டிஜிபி ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடகா கம்ப்பாலா வீரர் சீனிவாசா கவுடா !


மாலைமலர் : புதுடெல்லி: கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான கம்பாளாவில் வேகமாக ஓடும் எருமை மாடுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் உடன் ஓடுவார்.
இந்த போட்டியில் 2013-ம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுடா கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே, கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற கம்பாளா போட்டியில் மொத்த தூரமான 142.5 மீ., 13.62 வினாடிகளில் கடந்தார். 100 மீ., தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
2017-ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த  உசைன் போல்ட்டின் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்தார். இதுவே இதுவரை உலக சாதனையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், கம்பாளா வீரர் சீனிவாச கவுடா 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கம்பாளா வீரர் சீனிவாச கவுடா போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

சென்னையில்300 கோடி ரூ மதிப்புள்ள 20,000 சதுர அடி நிலம் ஹரே கிருஷ்ணவுக்கு (ISKCON) தாரைவார்ப்பு ...

Krishnavel T S நேற்று முதல்வர் எடப்பாடியால் சென்னையில் கிரீம்ஸ் இஸ்கான் ( பழைய பெயர்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ) அமைப்புக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. (இந்த இயக்கம்தான் RSS இன் சர்வதேச ஏஜென்ட் என்பது பலருக்கு தெரிந்திருக்காது )
ரோட்டில் 20,000 சதுர அடி அரசு நிலம்
அங்கே அவர்கள் ஒரு சமையலறை கட்டி கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக கொடுக்க போகிறார்கள். ( இஸ்கானில் வழங்கப்படும் உணவில் வெங்காயம் , பூண்டு எதுவும் கண்டிப்பாக சேர்க்கப்படாது)
இதற்காக முதல்கட்டமாக கவர்னர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்
முதலமைச்சர் மேலும் ஒரு 35 ஆயிரம் சதுர அடி உள்ள இடத்தை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்
மாணவர்களுக்கு காலை உணவு கொடுப்பது நல்ல விஷயம் தான்
அதை ஏன் இஸ்கான் மூலம் கொடுக்க வேண்டும்
அதற்கு ஏன் இத்தனை prime property நிலங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்
ஏற்கனவே இருக்கும் சத்துணவுத் திட்டத்தின் கட்டமைப்பை பயன்படுத்தி அந்தந்த பள்ளிகளிலேயே கொடுத்து விடலாம்.

பின்குறிப்பு: க்ரீம்ஸ் ரோடில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.30 கோடி 20,000 சதுர அடி என்பது சுமார் 10 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி
பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.20 கோடி 35,000 சதுர அடி என்பது சுமார் 15 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி


கபிலன் காமராஜ் : ISKCON என்ற இந்துத்துவ அமைப்பின் தலைமையிடம் இருப்பது அமெரிக்கா. அங்க உட்கார்ந்துகிட்டு மேற்கத்திய மக்களிடம் மதமாற்றம் செய்யும் கூட்டம் தான் ISKCON.
மேற்கத்திய நாடுகளில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மாட்டுக்கறி, பன்றிக்கறி, காய்கறி என அனைத்தையும் மதியஉணவாக கொடுத்து திடகாத்திரமான சந்ததிகளை வளர்க்கிறார்கள்.
அங்கே போய் “குழந்தைகளுக்கு மாமிசம் கொடுக்காதீர்கள்” என ISKCON பேசமாட்டார்கள்.
இங்கே இந்தியா போன்ற வளரும் நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழும் நிலை. இந்த சூழலிலும் பள்ளியில் குழந்தைகளுக்கு மதியஉணவில் வாரம் 5முட்டைகள் கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்கும் தமிழ்நாடு.
அருகே கர்நாடகத்தில் மதியஉணவை வழங்க ஒப்பந்தம் செய்திருக்கும் ISKCON அங்கே உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்காததால் குழந்தைகள் உணவை உண்பதில்லை என்ற குற்றசாட்டு இன்னமும் தீர்க்கப்படவில்லை.
அதற்குள் அடிமை அதிமுக அரசு தமிழகத்தில் அதே ISKCON அமைப்பிற்கு பள்ளியில் காலை உணவை வழங்க ஒப்பந்தம் கொடுக்கிறது. அவன் அதே ‘சுத்த சைவம்‘ என பூண்டு வெங்காயம் சேர்க்காத ‘அவாள்’ உணவை நம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.
5 மற்றும் 8ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொது தேர்வை எதிர்த்தது போல இதையும் எதிர்க்க வேண்டும்.
இல்லையேல் இந்த அயோக்கியர்கள் அனைத்தையும் நாசம் செய்து நம் குழந்தைகளின் ஊட்டச்சத்தை சீர்கெடுத்துவிடுவார்கள்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- ஒரு Flashback கட்டுரை ..

maattru.blogspot.com :  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு விமர்சனம். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.
> பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
“வாழுங்கலை சர்வதேச மையம்” என்பது நடக்கிறது. “வேதவிஞ்ஞான மகாவித்யா பீடம்” இருக்கிறது. வேதப் பாடல்கள் எல்லாம் இவருக்கு விஞ்ஞானம்தான்! இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் இந்தியாவில் மட்டுமல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணையதளம் விவரித்துக் கொண்டே போகிறது.

கொரொனோ வைரஸ் சீனா உண்மைகளை மறைகிறது .. பேரழிவு ? அதிர்ச்சி தரும் வீடியோ

Jeevan Prasad : · சீன மக்கள் தொகையில் 15 லட்சம் மக்கள் கொரோனா நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களில் 2.1 சதவீதத்தினர் தினசரி இறந்து வருவதாக சொல்லப்படுகிறது. சீனா உண்மையை மறைத்து வருவதாக குற்றச் சாட்டுகளும் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை

தினமலர் :  வாஷிங்டன்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா, விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில், கொடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால், அவரை அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது, இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவுக்கு தலைமை ஏற்றவர் சவேந்திர சில்வா. இறுதிக்கட்ட போரின் கடைசி ஒரு மாதத்தில் மட்டும் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின்போது, ஈழத்தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விடாமல் சவேந்திர சில்வா தடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கும் கிராமிய தமிழ் பாடல்... மறந்துபோன மண்ணின் தமிழ்


Herbert Rajan : கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கிராமிய தமிழ் பாடல்.அந்த பாடலுக்கும்,குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைபகுதியில் வசிக்கும் தமிழக பூர்வீகக்குடி தாய் நஞ்சம்மா.
மலையாள திரையுலகமும்,மீடியாக்களும் அவரை போற்றிக்கொண்டு இருக்கிறது இப்போது.கேரளா அரசும் கிராமிய பாடலுக்கான விருதை கொடுத்து கௌரவித்து இருக்கிறது."அய்யப்பனும் கோஷியும் " என்ற மலையாள திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ,பாடிய அவரின் சொந்த பாடல் இன்று கேரளாவின் சூப்பர் ஹிட் பாடலாக அங்கே ஒலித்துக்கொண்டு இருக்கிறது.சினிமாவை பற்றி ஏதும் தெரியாத அந்த பாமர தமிழ் குயிலின் குரல் உலகமெங்கும் ஒலிக்க என் ஆசை.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.
பாடலை கேட்டுப்பாருங்கள் நிச்சயம் உங்களை அறியாமல் உங்கள் தலையும்,கைகளும் மனமும்...அசைந்தாடும்.பாடலின் தமிழ் உச்சரிப்பும்,வார்த்தைகளும் நமக்கு புரிய சற்று சிரமமாக இருக்கும் ஏனென்றால் நாம் நாட்டுப்புற தமிழை மறந்து பல ஆண்டுகள் ஆகிப்போனது.


கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ் ...தூத்துக்குடியில் 11 பேர் கொலை .. சென்னை வண்ணாரபேட்டையில் 3 பேர் கொலை

Kalai Selvi : · Dismiss this Murderer in Uniform Kapil Kumar
Sarkkar Ips who Killed Three Indian citizens who are all Protesting against CAA in Chennai Vannarpet yesterday & this North Hindian Sargel officer is also responsible for 13 people death in Tuticorin Sterlite Protest

கனிமொழி எம் பி : சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சிஏஏ / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக யாக இருந்தவர் கபில்குமார்..
கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அதிமுக அரசு. வண்ணாரப் பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, கபில் குமார் சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் . இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.