செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

சீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா வைரஸ் பாதிப்பால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

https://www.ccn.com/billionaire-whistleblower-wuhan-coronavirus-death-toll-is-over-50000/
Billionaire Whistleblower: Wuhan Coronavirus Death Toll Is Over 50,000. Exiled Chinese businessman Guo Wengui recently revealed leaks from Wuhan crematoriums. He claims based on the number of bodies their furnaces are burning, the death toll could be as high as 50,000. தினத்தந்தி  : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டைசேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. 'கொரோனா வைரசால் தற்போது வரை, 908 பேர் உயிரிழந்துள்ளனர்.  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்  என  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உகான் நகருக்குள் யாரும் நுழைய முடியாத படி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது.

டெல்லி ஆம் ஆத்மி 55 .. பாஜக 15 , காங்கிரஸ் 1 முன்னிலை நிலவரம் நேரடி ஒளிபரப்பு

விஜய்யை தியாகியாக்கினால்தான் தலைவனாக்க முடியும்- மனுஷ்ய புத்திரன்"

uyirmmai.com : விஜய் ஏன் மிரட்டப்படுகிறார் என்ற கேள்விக்கு இருட்டு அறையில் முரட்டுக்குத்துகளாக மனம்போன போக்கில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏன் இந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதற்கான தர்க்கரீதியான காரணங்கள் எங்கும் வைக்கப்படவில்லை.
நடிகர் விஜய்யை அரசியலுக்கு கொண்டுவர பா.ஜ.க நிர்பதிக்கிறது என நேற்று எழுதியிருந்தேன். அது இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. விஜய்யின் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலி என் எல் சி முன்பாக இன்று பா.ஜ.கவினர் படப்பிடிப்பு நடத்தவிடக்கூடாது என ஆர்பார்ட்டம் செய்திருக்கின்றனர். இந்த ஆர்பாட்டத்ற்கு ஏதேனும் அடிப்படை ஏதேனும் இருக்கிறதா?
தமிழக அமைச்சர்கள் வீடுகளிலேயே வருமானவரி சோதனைகள் நடந்திருக்கின்றன. தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. பல நடிகர்கள், தொழில் நிறுவனங்கள் இடங்களில் நடந்திருக்கின்றன. சசிகலா தொடர்புடைய இடங்களில் நடந்திருக்கின்றன. ஆனால் எப்போதாவது ஒரு வருமானவரி சோதனையை முன்னிட்டு பா.ஜ,க ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறதா? அர்ஜின் சம்பத் போன்றவர்கள் விஜய்யின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற அளவு செல்கிறார்கள்.

யாழ் பல்கலைக்கழக ராக்கிங் ஆடியோ லீக் .. பாலியல் சித்திரவதை என்கிறார் வரதராஜ பெருமாள்

பல்கலைக்கழகங்களில் ராக்கிங் நடப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

IBC :  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்டகுற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு, இன்று (10) முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் விசாரணைகளில் தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவும் பல்கலைக்கழக எல்லைக்குள் நுழைவதற்கான (Out of Bounds) இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பகிடிவதை தொடர்பில் சான்றாதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மேலும் சில மாணவர்களுக்கு உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே குறித்த எட்டுப்பேருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த உள்நுழைவதற்கான தடை விதிக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MyFinanza - Income and Expense Tracker.. தனிநபர் நிதிமேலாண்மை திறம்பட கையாள ஒரு மொபைல் செயலி

Karthikeyan Fastura : என் அப்பா என்பீல்டு நிறுவனத்தில் 16 ஆண்டுகள் வேலை செல்ல வேண்டிய சூழலுக்கு வந்து ஒரு கிரானைட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். அடுத்த ஐந்து வருடங்கள் போராட்டமாக சென்றது. 2005க்கு பிறகு நான் வேலைக்கு சென்று ஓரளவிற்கு அவருக்கு உதவினேன்.
பார்த்து வெளியில் வந்தபோது ஒண்ணே கால் லட்ச ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்தது. வேலை பார்த்து மாதா மாதம் சம்பளம் வாங்கிய அவரால் ஒரு மிகப் பெரும் தொகை கிடைத்த போது அதை சரியாக முதலீடு செய்ய தெரியவில்லை. ரெம்பவும் சிக்கனமானவர். வரவு செலவு கணக்குகளை எழுதி வைப்பவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். பத்து வருடங்கள் இந்த பணத்தை வைத்து பலசரக்கு கடை, தவணைக்கு கொடுத்தல் என்று பார்த்து எங்களை காப்பாற்றினார். அதன் பிறகு மீண்டும் வேலைக்கு
வரவு செலவு கணக்குகளை குறித்து வைத்துக் கொள்வது நாம் என்ன செலவு செய்கிறோம் நமக்கு என்ன வருவாய் வருகிறது, எதில் அதிகமாக செலவு செய்கிறோம் என்று தெளிவாக தெரிந்து கொண்டு நம்மை சரியாக வழிநடத்த உதவும். அப்படிதான் என் அப்பா எங்களை பாதுகாத்தார். அவருக்கு அந்த பழக்கம் இல்லையென்றால் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்போம்.
ஆனால் அது மட்டும் போதாது. அவர் சரியான வழிகளில் அளவில் முதலீடு செய்திருந்தால் இன்னும் பல்கி பெருகி இருக்கும். தனிநபர் நிதிமேலாண்மை என்பது வரவு செலவு அறிவதும் சிக்கனமும் மட்டுமல்ல. சரியான வழிகளில் முதலீடு செய்வதும், காப்பீடு செய்து கொள்வதும் என்று பல நிலைகள் இருக்கிறது. அவ்வப்போது அது மாறிக்கொண்டேவும் இருக்கிறது. அவற்றை அறிந்து கொண்டு நமது நிதி மேலாண்மையை இன்னும் மேம்படுத்திக் கொள்வதும் அவசியம்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித்தனர்.. போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் ..


tamil.oneindia.com : மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித்தனர்.. போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார்
டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு பேரணியில் இன்று பங்கேற்றபோது ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் போலீசாரால் தாக்கப்பட்டதாகவும், அதுவும் அந்தரங்க உறுப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
காயமடைந்தவர்கள், ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிருபர்களிடம் பேசிய சுகாதார மையத்தில் வசிக்கும் மருத்துவர்கள், கூறுகையிில், சில காயங்கள் மிகவும் கடுமையானவை, இதனால் மாணவர்களை அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டியுள்ளது.
10க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களுக்கு பிறப்புறுப்பில் தாக்குதல் காயம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் காயங்களைக் கண்டறிந்துள்ளோம், மேலும் சிலர் காயமடைந்திருக்கிறார்கள். காயங்கள் தீவிரமாக இருப்பதால் நாங்கள் அவர்களை அல் ஷிஃபாவுக்கு மாற்ற வேண்டியிருந்தது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பழிவாங்கப்படுகிறாரா வீரபாண்டி ராஜா? -கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் !

 dmk
இரா.இளையசெல்வம் - நக்கீரன்: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ஆ.ராஜாவை அப்பொறுப்பிலிருந்து தூக்கியது திமுக தலைமை! சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பார்த்த வெற்றியை வீரபாண்டி ராஜாவால் பெற்றுத்தர முடியவில்லை என்கிற குற்றாச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவரது பதவி பறிக்கப்பட்டது என திமுக தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், ’’ இது உண்மையான காரணம் இல்லை ‘’  என கொந்தளிக்கிறார்கள் சேலம் மாவட்ட உடன்பிறப்புகள்.
உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி-தோல்வி குறித்து விவாதிக்க கட்சியின் செயற்குழு கூட்டத்தை சமீபத்தில் கூட்டியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது மாவட்ட செயலாளர்கள், பொருப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலரும் தேர்தல் குறித்துப் பேசினார்கள். குற்றச்சாட்டுகளும் ஆதங்கங்களும் எதிரொலித்தன. அந்த வகையில், தனது மாவட்டம் குறித்து சில பல விளக்கங்களை சுட்டிக்காட்டிப் பேசினார் வீரபாண்டி ஆ.ராஜா. அதுதான் அவரது பதவி பறிப்புக்கு காரணம் என சொல்லப்பட்டு வரும் சூழலில், இது குறித்து செயற்குழுவில் கலந்துகொண்ட சேலம் மாவட்ட உடன்பிறப்புகளிடம் நாம் பேசினோம்.

திமுகவின் நடவடிக்கையில் பாரபட்சம்? எழுப்பும் உடன்பிறப்புகள்!

நக்கீரன் : உள்ளாட்சியில் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராத மாவட்ட செயலாளர்கள் மீது சாட்டையை சுழற்றி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சமீபத்தில் நடந்த செயற்குழு விவாதங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுகவில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆரோக்கியமானதுதான் என்கிற குரல்கள் உழைக்கும் தொண்டர்களிடம் எதிரொலிக்கும் நிலையில், ‘’ விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படுகிறது ‘’ என்கிற குரலும் அவர்களிடம் வெளிப்படுகிறது.
நம்மிடம் பேசிய தென்மாவட்ட உடன்பிறப்புகள், ‘’ தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் களை எடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், ஒரு கண்ணுக்கு மை; மறு கண்ணுக்கு சுண்ணாம்பு என்கிற பாகுபாடுதான் ஜீரணிக்க முடியவில்லை. சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுத்தீர்கள். ஓ.கே.! ஆனால், தென்மாவட்டங்களில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ? தென் மாவட்டங்களில் கட்சி தலைமை எதிர்பார்த்த 100 சதவீத வெற்றி திமுகவுக்கு கிடைத்து விட்டதா?

சீன அதிபர் ரகசிய இடத்தில பதுங்கல் .. மக்கள் கடும் கோபம் ...

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் - பொதுமக்கள் கடும் கோபம்மாலைமலர் : கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
3 வாரங்களுக்கு முன்பு அவர் பீஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு சீனரும் இந்த நாட்டில் வாழ்வதற்காக பெருமைபடும் வகையில் இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும். நமது நாட்டின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதை நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்க போகிறீர்கள்” என்று பேசினார்.

நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த விஜய்

‘நன்றி நெய்வேலி’ என செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த விஜய்மாலைமலர் : நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகர் விஜய் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை: நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்

பாராசைட் பட போஸ்டர்ஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்மாலைமலர் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் -  பாராசைட்

சிறந்த இயக்குநர் -  போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகர் -  வ்வாக்வ்யீன் ஃபீனிக்ஸ்  (ஜோக்கர்)

சிறந்த நடிகை -  ரெனீ ஜெல்வேகர் (ரூடி)

சிறந்த ஆவணப்படம் -  அமெரிக்கன் பேக்டரி

சிறந்த வெளிநாட்டு படம் -  பாராசைட் (கொரியன்)

தயாநிதி மாறன் : ரஜினிக்கு சலுகை விஜய் மீது ரெயிட் : ... மக்களவையில் அதிரடி குற்றச்சாட்டு

ரஜினிக்கு எதிர்ப்பு, விஜய்க்கு ஆதரவு: மக்களவையில் திமுக!மின்னம்பலம் : ரஜினி மற்றும் விஜய் ஆகியோரிடம் வருமான வரித் துறை நடந்துகொண்ட விதம் தொடர்பாக மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமான வரித் துறைக்கு தவறான தகவல் அளித்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2005ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரஜினிக்கு எதிராக வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதே நேரத்தில் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை நேரில் சென்று கையோடு சென்னை அழைத்துவந்த வருமான வரித் துறையினர், அவரது இல்லத்தில் இரண்டு நாட்கள் வரை சோதனை நடத்தினர்.
விஜய்-ரஜினி விவகாரத்தில் வருமான வரித் துறை நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளது திமுக.
மக்களவையில் இன்று (பிப்ரவரி 10) பேசிய மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்,

ஜப்பான் கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.. டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess)

Samayam Tamil : 24 மணிநேரத்தில் 65 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது.
இவர்களில் 45 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள் 11 பேர். <
யோகோஹமா துறைமுகத்தில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பயணிகளைக் கொண்ட கப்பலில் வைரஸ் தொற்று மேலும் 65 பேருக்குப் பரவியுள்ளது. டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்ற சொகுசு கப்பல் கடந்த மாதம் 20ஆம் தேதி ஜப்பானிலிருந்து புறப்பட்டு ஹாங்காங்குக்கு 25ஆம் தேதி சென்றது. பின், ஹாங்காங்கிலிருந்து பிப்ரவரி 3ஆம் தேதி ஜப்பான் திருப்பியது. இதில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஜப்பான் வந்த கப்பல் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தினமும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் 65 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 45 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கர்கள் 11 பேர். பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாட்டை சேர்ந்தவர்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

BBC ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிராட் பிட்

கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ், வல்லுநர் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்" எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு 'சிறந்த துணை நடிகர்' எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட் திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுதான்.
அதே போன்று, சிறந்த துணை நடிகைக்கான விருதை 'மேரேஜ் ஸ்டோரி' எனும் படத்தில் நடித்த லாரா டெர்ன் பெற்றார்.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'லிட்டில் வுமன்' திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ஜாக்குலின் டர்ரன் பெற்றார்

ஆஸ்கார் விருது 2020 நேரடி ஒளிபரப்பு லைவ் live

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக்கும் மக்களாட்சி!

ராஜன் குறை
சிறப்புக் கட்டுரை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்; நம்பகத்தன்மை இழக்கும் மக்களாட்சி!ராஜன் குறை- மின்னம்பலம் :  எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கையோ, பொருள் உற்பத்தி மற்றும் சமூக வாழ்வையோ ராணுவத்தாலோ, போலீசாலோ மட்டுமே உறுதி செய்துவிட முடியாது. மக்கள் அவர்களாக விரும்பி சட்டத்துக்குக் கூடியவரை கட்டுப்பட்டு நடந்தால்தான் தேசம் என்ற கருத்தாக்கம் நிலைபெறும்; சமூக அமைதியும் வளர்ச்சியும் சாத்தியமாகும். மக்களின் ஒத்துழைப்புக்கு அவர்கள் மக்களாட்சி நடைமுறைகளை, அரசின் செயல்பாட்டை, நீதியின் பாரபட்சமற்ற தன்மையை நம்புவது அவசியம். அரசும், மக்களாட்சி நடைமுறைகளும் அந்த நம்பகத்தன்மையை இழந்தால் நாடெங்கும் குற்றச்செயல்களும் கலகங்களும் பெருகும். அடக்குமுறையே ஆட்சிமுறையாகும். அதனால், சமூக வாழ்வும் வளர்ச்சியும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். தேசம் சீரழியும்.
இந்தியா இத்தகைய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறதோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டிய அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நீதிமன்றம் ஆகிய அனைத்துமே சந்தேகத்துக்கு உள்ளாகின்றன. வெளிப்படையாகவே மக்கள் அவர்கள் ஐயங்களை உரத்துப் பேசுகிறார்கள். ஊடகங்கள் விவாதிக்கின்றன. இந்த நிலை மெள்ள, மெள்ள கட்டுக்குமீறி சென்று கொண்டுள்ளது. பொதுவான இந்தப் பெருகும் அவநம்பிக்கை சூழலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்ற தொழில்நுட்பம் சார்ந்த உபகரணம் சிக்கலை தீவிரப்படுத்துகிறது என்றால் மிகையாகாது.

இன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும் இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு!

இன்று நாடாளுமன்றத்தை உலுக்கப்போகும்  இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு!மின்னம்பலம் : அரசாங்க வேலைகளுக்கான பதவி உயர்வுகளுக்கான இட ஒதுக்கீடு ஓர் அடிப்படை உரிமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு இப்போது நாடு முழுவதும் விவாதமாகியுள்ளது.
இட ஒதுக்கீட்டை வழங்க மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும், பொது சேவையில் சில சமூகங்களின் பிரதிநிதித்துவத்தின் தரவு இல்லாமல் மாநிலங்கள் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய நிர்பந்திக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
உத்தரகாண்ட் அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையில் 2012ஆம் ஆண்டு உதவி பொறியாளர் (சிவில்) பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதில் எஸ்சி / எஸ்டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

தெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக்கிய ராம் மோகன் ராவ் தீவிரம்!

தெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி: ராம் மோகன் ராவ் தீவிரம்!மின்னம்பலம் : ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயலாளராகவும், அரசின் தலைமைச் செயலாளராகவும் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம் மோகன் ராவ் இப்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்.
ஜெயலலிதா இறந்த சில நாட்களிலேயே சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் ஆகியோரது வீடுகளைக் குறிவைத்து மத்திய அரசின் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. ‘அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?’ என்று கேட்ட ராம் மோகன் ராவ் பின்னர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு பின் ஓய்வு பெற்றார்.

போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் .. விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால்

விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால் போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேர் தகுதி நீக்கம் தினத்தந்தி  : விளையாட்டு பிரிவு சான்றிதழ் சரி இல்லாததால் போலீஸ் வேலைக்கு தேர்வான 800 பேரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்து உள்ளது. சென்னை, போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கு காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், ஜெயில் வார்டர்கள் என 8 ஆயிரத்து 888 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்காக ஆகஸ்டு 25-ந் தேதியன்று எழுத்துத்தேர்வு நடந்தது. 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 15 மையங்களில் உடல் தகுதித்தேர்வு நடந்தது. இறுதியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விளையாட்டு பிரிவினருக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. விளையாட்டு பிரிவு இட ஒதுக்கீட்டின்மூலம் தேர்வான சுமார் 800 பேரை, சான்றிதழ்கள் சரியில்லை என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தகுதி நீக்கம் செய்து அறிவித்தது.

ஆசிரியர் கே. வீரமணி : வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு என்னும் சிமிழுக்குள் அடைக்காதீர்!

Asiriyar K Veeramani : ஆரிய சனாதனங்களையும்  மூடநம்பிக்கைகளையும் சாடிய
வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு என்னும் சிமிழுக்குள் அடைக்காதீர்!
இன்று வடலூர் இராமலிங்க அடிகளார் நாள்.
வடலூரில் வாழ்ந்து இறுதிக் காலத்தில் ஜாதி, மதம், மூடச் சடங்குகள் - இவைகளை வெறுத்து - தெளிவடைந்த நிலையில், ஆரியப் பண்பாட்டை எதிர்த்து, அதன் அடிக்கட்டுமானம் எத்தகைய அறிவுக்கு ஒவ்வாத - மக்களை மதம், ஜாதி என்று பிளவுபடுத்தும் ஹிந்து மதம் - சனாதனம், வேத மதம் என்று பேதம் பரப்பிய நிலைகளைக் கண்டித்து ஆறாம் திருமுறை என்ற அருட்பாவின் பகுதியில் தாம் உணர்ந்தவைகளை ஓதினார்.
அதன் காரணமாகவே வடலூரார் வள்ளலார் - இறுதி முடிவு மர்மமானதாகவே ஆரியச் சூழ்ச்சியினால் அமைந்தது.
சோதியில் கலந்தார் என்பது உண்மையா?
சோதியில் கலந்தார் என்று கூறிமுடித்து, அவரை வெறும் சடங்கு, ஆச்சார நிகழ்வுகளுக்கு உரியவராகவே ஆக்கி விட்டனர்.

ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் .. முதல்வர் எடப்பாடி சந்திப்பு ... என்னதான் நடக்கிறது?

Aburayan Dmk : முந்தாநாள் செய்தி
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு கொள்கை ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ₹50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இன்றைய செய்தி
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தராது. மேலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் - முதல்வர் பழனிசாமி
படம் : ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் எடப்பாடி

வயசுக்கு வந்தால் போதும்... பெண்ணை கடத்தி கல்யாணம் செய்யலாம்.. தப்பில்லை.. பாக். கோர்ட் ஷாக் தீர்ப்பு

https://www.albawaba.com/node/new-pakistan-law-allows-men-marry-underage-girls-sparks-outrage   By Hemavandhana - tamil.oneindia.com :  இஸ்லாமாபாத்: "பொண்ணு வயசுக்கு வந்தாச்சு இல்லே.. அப்ப கடத்திட்டு போய் தாலி கட்டறது ஒன்னும் தப்பு இல்லை" என்று பாகிஸ்தான் கோர்ட்
தீர்ப்பு சொல்லி உள்ளது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.. 
14 வயது சிறுமியின் கட்டாய திருமணத்தை அங்கீகரித்து பாகிஸ்தான் கோர்ட் இவ்வாறு தீர்ப்பு சொல்லி உள்ளது! 
14 வயது சிறுமி.. கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்.. ஹுமா என்பது இந்த பெண்ணின் பெயர்!
கடந்த வருடம் அக்டோபா் மாதம் இந்த பெண்ணை சிலர் கடத்தி விட்டதாக, அவரது பெற்றோர் யூனிஸ் - நகீனா மஸை தம்பதி குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், ஹுமாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதுடன், அப்துல் ஜாபா் என்பவருக்கு வலுக்கட்டாயமாக மகளை கல்யாணம் செய்து வைத்ததாகவும் பெற்றோர் புகார் தெரிவித்து வருகின்றனர். 
இதுதொடா்பாக சிந்து ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.. அந்த வழக்கை கோர்ட் விசாரித்தது.. அப்போது நீதிபதிகள் சொன்னதாவது, "ஹுமாவுக்கு திருமண வயது வரவில்லைதான்.. ஆனால் அவர் வயசுக்கு வந்தாச்சு அல்லவா?

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

சங்கராச்சாரிக்காக கலைஞரிடம் தூது போன ரஜினி ... இந்துத்வா பிரசாரகர் ரஜினி

சாவித்திரி கண்ணன் : எல்லோரும் நினைப்பது
போல பாஜகவும்,இந்துத்துவ
சக்திகளும் ரஜினியை பின்னிருந்து இயக்குவது என்பது ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையப்படுத்தி மட்டுமல்ல!
உண்மையில் ரஜினி அரசியல் மைய நீரோட்டத்தில் நேரடியாக இல்லாவிட்டாலும் கூட மறைமுக இந்துத்துவ ஆதரவாளராக இருபதாண்டுகளுக்கும் மேலாக களத்தில் இயங்கி கொண்டு தான் உள்ளார்!
அவரது பாபா படமே பகிரங்கமாக இந்துத்துவ அரசியலை ஆதரித்து எடுக்கப்பட்ட படம் தான்!
அதுவும் எந்த காலகட்டத்தில் அந்தப் படம் வந்தது என்பதும் கவனத்திற்குரியது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு ஆண்டு கொண்டிந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது நடந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது....!
தீடிரென்று ஒரு நாள் ரஜினி கலைஞரை வீடு தேடிச் சென்று சந்தித்தார். எதற்காக அவர் கலைஞரை சந்தித்தார் என்று பத்திரிகையாளர்கள் பலவாறாக யூகித்தும் சரியான விடை கிடைக்கவில்லை.
ஆனால்,ஒருசில நாட்களில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞரே அதனைச் சொன்னார்.

காவிரி டெல்டா: வேளாண் பாதுகாப்பு மண்டலம் - சந்தேகம் எழுப்பும் செயற்பாட்டாளர்கள்

மு. நியாஸ் அகமது - பிபிசி தமிழ் : சர்ச்சை மிகுந்த திட்டமாக அறியப்பட்ட ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படமாட்டாது என்றும் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சேலத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த அறிவிப்புக்கு தாங்கள்தான் காரணம் எனப் பல அமைப்புகள் உரிமை கோரியும் உள்ளன. ஆனால், அதே நேரம் இந்த அறிவிப்பு குறித்து சந்தேகங்களையும் எழுப்புகின்றனர் செயற்பாட்டாளர்கள்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், "இந்த அறிவிப்புக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டால் மகிழ்ச்சிதான். ஆனால், எங்களுக்கு சில சந்தேகங்களும் இருக்கிறது," என்கிறார். சந்தேகம் மற்றும் அச்சம்.. அவர், " கடந்தாண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றார் அல்லவா? அப்போது ஒரு பெட்ரோல் கெமிக்கல் நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி அவர்கள் 50 ஆயிரம் கோடி வரை இங்கு முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன்படி அவர்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு பெட்ரோல் கெமிக்கல் வளாகத்தை அமைக்கப் போகிறார்கள். இதுதான் எங்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது," என்கிறார்.

அதிமுக கூட்டணியில் இணைய சீமான் திட்டம்.. முதல்வர் எடப்பாடி சந்திப்பின் ரகசியம்?

தினகரன்:  சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 6ம் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். முதல்வரை சந்தித்து பேசிய சீமான் நிருபர்களிடம் கூறும்போது, சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியதுடன், நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராகவும் கருத்துக்களை கூறினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அதிமுகவை எதிர்த்து சீமான் பேசவே இல்லை. ஆனால் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து தமிழக அரசை சீமான் தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதிமுக அரசின் முடிவுகளை கடுமையாக எதிர்த்ததுடன், ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை பொதுக்கூட்டங்களில் கடுமையாக விமர்சனம் செய்தும், கிண்டல் செய்தும் பேசினார்.