வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

கொரோனா: 20ஆயிரம் பேர் கருணைக் கொலை?

கொரோனா: 20ஆயிரம் பேர் கருணைக் கொலை?
மின்னம்பலம் : கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 20,000 பேரைக் கொல்ல சீனா, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளி வந்தன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொடர்பான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும் பரவி வருகின்றன.
இதில், ”கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,000 பேரை கருணைக் கொலை செய்யச் சீன நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தினசரி 20 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும், சுகாதார ஊழியர்களைக் காப்பாற்றும் வகையிலும், 20,000 பேரைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இதனை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 7ஆம் தேதியான இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கும்” என்ற தகவல் சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வந்தது. இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஆதீனம் !

மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் ஆதீனமா?மின்னம்பலம் : தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் பட்டினப் பிரவேசத்தை நிறுத்த வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது ஆதினகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் டிசம்பர் 13ஆம் தேதி பொறுப்பேற்றார். வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்ற தருமபுரம் ஆதீனம், வெள்ளிப் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டார். அதுபோலவே திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி நடந்த பட்டினப்பிரவேச நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். இந்த நிலையில் மனிதர்கள் வைத்து பல்லக்கு தூக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு எதிர்ப்பு எழத் துவங்கியுள்ளது.

நேற்று வாடா.. இன்று வாப்பா.. பம்மிய திண்டுக்கல் சீனிவாசன்.. சிறுவனுடன் சமரசம்!


 /tamil.oneindia.com   : நீலகிரி: "நான் அமைச்சரின் செருப்பைக் கழற்றி விடுவதை எல்லாருமே வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.. இதை எல்லா டிவிகளிலும் ஒளிபரப்பினார்கள்.. நான் பெருத்த அவமானத்துக்கு உள்ளானேன்..
அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என பழங்குடியின சிறுவன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது போலீசில் புகார் தந்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன், அவரது தாய் உள்ளிட்டோரை அமைச்சர் நேரில் வரவழைத்து வருத்தம் தெரிவித்தார்.. இதையடுத்து அமைச்சர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
நேற்று முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.. நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வரும் வழியில் கோயிலுக்குள் சாமி கும்பிட செல்ல நேர்ந்தது. அப்போது அவரது செருப்பை கழட்டிவிடும்படி அங்கிருந்த பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார்.. செருப்பு பக்கிள்ஸை சிறுவன் கழட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.. "அந்த பையன் எனக்கு பேரன் மாதிரி" என்று சொன்னாலும் அமைச்சரின் விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.. அதனால் பல்வேறு தரப்பில் அமைச்சர் மீது நடவடிக்கை கோரி புகார் தரப்பட்டு வருகிறது.

அன்புசெழியனை காப்பாற்றும் அமைச்சர்கள்!

 - madurai -நக்கீரன் : பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர். அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய தமிழ் திரைப்பட உலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு இரண்டு முறை அன்புசெழியன் வீட்டில் சோதனை நடந்துள்ளது. ஆனால் ஒருமுறை கூட அவர் நேரில் ஆஜராகவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அன்புசெழியனுக்கு தமிழக அமைச்சர்கள் சிலர் அதிக செல்வாக்கு உள்ளது. இவர் மீது குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் அந்த அமைச்சர்கள் தலையிட்டு இவரை காப்பாற்றி விடுவார்கள். தற்போதும் அன்புசெழியனை அந்த அமைச்சர்கள்தான் காப்பாற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படப்பிடிப்புதளத்தில் பாஜக போராட்டம்... விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்!!

Fans rallied in support of VijayFans rallied in support of Vijaynakkheeran.in - சுந்தர பாண்டியன் : விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2 வது சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சூட்டிங் தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனையடுத்து தற்போது இன்று மீண்டும் என்எல்சி 2 வது சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சரவணசுந்தரம் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது  'மிகவும் பாதுகாப்பு பகுதி என்று கடும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதியான சுரங்க பகுதியில் படப்பிடிப்பு நடத்த   என்.எல்.சி நிர்வாகம் எப்படி  அனுமதி அளித்தது என்றும், விஜய்யின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது போல், தங்களுக்கும் குடும்பத்துடன் உள்ளே சென்று  வீடியோ, படங்கள் எடுக்க  அனுமதிக்க வேண்டும் என கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் மரணம்

hindutamil.in : அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி
நரசிம்மனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் (51) மாரடடைப்பால் இன்று காலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அண்மையில், 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர் லட்சுமி நரசிம்மன். போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்கள் தொலைதூரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன், ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

ரஜினிக்கு சலுகை சசிகலாவுக்கு தண்டனை ..: வருமான வரித் துறையின் " நேர்மை : "

ரஜினிக்கு உண்டு, சசிகலாவுக்கு கிடையாது: வருமான வரித் துறை!மின்னம்பலம் : ரஜினிக்கு அளித்தது போல சசிகலாவுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறைக்கு தவறான தகவல் அளித்ததாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2005ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான ரஜினிகாந்தின் முறையீட்டை ஏற்று, அபராதத்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கடந்த வாரம் வாபஸ் பெற்றது.
“1 கோடிக்கும் குறைவான அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கைவிடும்படி மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் 2019, செப்டம்பர் 8ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படுகிறது” என அதற்கு வருமான வரித் துறை விளக்கம் அளித்தது.

ஜெயக்குமாரை நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை!

tnpsc group 4 exam jayakumar tomorrow egmore court பா. சந்தோஷ் பி.அசோக்குமார் - நக்கீரன் : டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக சுமார் 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  இதையடுத்து டிஎன்பிஎஸ்சி வழக்குகள் அனைத்தும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஜெயக்குமாரை நாளை (07/02/2020) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை (07/02/2020) காலை ஆஜர்படுத்தும் வரை ஜெயக்குமாரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் உயிரிழப்பு 630 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 630  ஆக உயர்வு தினத்தந்தி :  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. பெய்ஜிங், சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.5,600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு
புல்லட் ரெயில்  மாலைமலர் : மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் 508.17 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புல்லட் ரெயில் திட்டப்பணிகளை தேசிய அதிவேக ரெயில் கழகம் மேற்கொள்கிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் ​​2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் புல்லட் ரெயில் திட்டத்தை முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாடேடிகள் 2.. வன்மங்களை கடந்து திரைவரை வந்து கண்களை கலங்கவைக்கும்

Thangaraj Gandhi : நாடேடிகள் 2 விமர்சனம் செய்யாமல் கடக்க முடியாது.
படம் முழுக்க பெரியார். அம்பேத்கர்.
சாதி மறுப்பு
இதை ஒடுக்கப்பட்ட நாங்கள் பேசிடலாம. ஏனென்றால் இரத்தமும் வலியும் உயிரும் என இழந்தது இரண்டாயிரம் ஆண்டுகள்.
ஆனால்,
இப்படத்தில் முக்குலத்து சமூகமே ஒன்று கூடி தங்களது கதா பாத்திரத்தை‌ ஏற்றுக்கொண்டு சாதிக்கு எதிராக சாதியற்றோராக இணையலாம் என‌ ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்திருப்பதைக் காணும் போது சூரியனைப் போல பூர்வக்குடிகளாய் ஜொலிக்கிறார்கள்.
முன்பு ஒருமுறை, படையாட்சி ராமதாஸ் மருத்துவர் அவர்கள் அருந்ததிய உள்இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுத்தார்.
உள்ளபடியே, ஆதித்தமிழர் பேரவையின்
அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில் கொங்கு ஈஸ்வரன் பங்கேற்று கவுண்டர்களும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என தன்னை முன்னத்தியாய் முன்னிருத்தினார்.
ஆக, தமிழர்கள் நாம் இணைவதில் மனத்தளவில் அளவில் உருத்தாக உள்ளோம்.

ரெய்டில் சிக்கிய நடிகர் விஜய்… மதுரையில் நடத்திய ரகசிய கூட்டம் காரணமா?

விஜய்vikatan.com - நமது நிருபர் : நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த விசாரணையின் பின்னணியில் மதுரையில் நடைபெற்ற ரகசியக் கூட்டம் ஒன்று காரணமாகச் சொல்லப்படுகிறது. 2006-ல் வெளிவந்த `திருட்டுப் பயலே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் சக்சஸ் தயாரிப்பாளராக அறிமுகமான ஏ.ஜி.எஸ் நிறுவனம், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘எங்கேயும் காதல்’, ‘அனேகன்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜய் நடித்த `பிகில்’ திரைப்படம், வியாபார ரீதியாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் பட்டையைக் கிளப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இதைப் பல முன்னணி சினிமா விமர்சகர்களும், பி.ஆர்.ஓக்களும் தங்களது சமூக வலைதளக் கணக்குகளில் பதிவிட்டிருந்தனர்.

வியாழன், 6 பிப்ரவரி, 2020

பெரியாரியம் என்பது அடிப்படை உண்மையை சொல்வது .. எது உண்மையோ அதை சொல்வதே திராவிடம்.

Devi Somasundaram : பெரியாரியம் என்பது ஆரியத்திற்கு எதிரானது என்று மட்டும் புரிந்து கொள்ளப் படுவதை தடுக்கப் படனும் .
பெரியாரியம் என்பது அடிப்படை உண்மையை சொல்வது ..
ஆரியம் எதை செய்யச் சொல்கிறதோ அதற்கு எதிரா செய்வது தான் திராவிடம் என்று சொல்வது அரைகுறைத்தனம் .அப்ப நாளைக்கு பாப்பான் வாயல சாப்டுன்னு சொன்னா அதுக்கு எதிரா வேற எதாலயாச்சுமா சாப்டுவோம் ..
திராவிடம் என்பது எது நிஜமோ அதை சொல்வது தான் .
பாப்பான் சாதி இருக்குன்னு சொல்வதால மட்டும் சாதிய எதிர்க்கல .சாதி என்பது நிஜமாவே கிடையாது அதனால தான் சாதி இல்லன்னு சொல்கிறோம் .
பாப்பான் தன்னை விட மேல்சாதி பொண்ணை அதை விட கம்மியான சாதிகாரன் கட்டக் கூடாதுன்னு சொல்றான் அதனால மேல்சாதி பொண்ணை கட்டுவது தான் சாதி ஒழிப்புன்னு சொல்வது பகுத்தறிவில்லை .
பெரியார் சாதி மறுத்து தான் கல்யாணம் செய்யச் சொன்னார் .அது மேல் சாதி பொண்ண கட்டுவதுன்னு அர்த்தம் இல்லை ..அப்படி சொன்னா அப்ப ஒடுக்கப் பட்ட சாதிப் பெண்களை பகுத்தறிவாளர் கட்டிக்ககூடாதுன்னு அர்த்தமா ? ..
சாதி மறுப்பை அடிப்படை அறிவியலில் இருந்து பேச பழகுங்க ..சாதின்னு ஒன்னு கிடையாது . சாதிக்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை . சாதி என்பது கடவுள் நம்பிக்கை மாதிரி வெறும் நம்பிக்கை தான்..,it's a state of mind ..
திராவிடம் என்பது உண்மை ...ஆரியம் உண்மைக்கு எதிரானது என்று சரியாப் புரிஞ்சுக்கலன்னா நாம பகுத்தறிவாளர்னு சொல்லிப்பதில் அர்த்தம் இல்லை..
ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்று மட்டுமே கட்டமைப்பது திராவிடத்தை சார்பு நிலைப்படுத்தி விடும் ..

ஆதிவாசி சிறுவனிடம் தனது செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்.. போலீசில் முறையீடு செய்த சிறுவன் குடும்பம்

தனக்கு நேர்ந்த அவமரியாதை தொடர்பாக மசினகுடி காவல்நிலையத்தில் மாணவன் கேத்தன் வனத்துறை அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார்.

maalaimalar.com : தெப்பக்காடு யானைகள் முகாமில் சிறுவனை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஊட்டி: தமிழக அரசு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் டாப்சிலிப், முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கும் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அந்தந்த முகாம்களிலேயே நடந்து வருகிறது.

வீரபாண்டி ராஜாவின் வீடு தேடிச் சென்ற செல்வகணபதி: சேலம் திருப்பம்!

 வீரபாண்டி ராஜாவின் வீடு தேடிச் சென்ற செல்வகணபதி: சேலம் திருப்பம்!மின்னம்பலம் : திமுகவின் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செல்வகணபதி, இன்று (பிப்ரவரி 6) சேலத்துக்கு வந்தார். முதல் வேலையாக புதிய பஸ் நிலையம் அருகே இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சகிதமாகச் சென்று மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியை தேர்தல் பிரிவு செயலாளரும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா புறக்கணித்துவிட்டார்.

சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்

சிஏஏ பற்றி ரஜினி புரிந்துகொள்ளவில்லை: ஸ்டாலின்மின்னம்பலம் : சிஏஏவால் ஏற்படும் பாதிப்புகளை ரஜினிகாந்த் புரிந்துகொள்ளவில்லை என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சிஏஏ, என்.பி.ஆரை ஆதரிப்பதாக நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்று பீதி ஏற்படுத்தப்பட்டதாகவும், சில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன்பு தீவிரமாக யோசிக்க வேண்டும். எஃப்ஐஆர் போட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும் எனவும் எச்சரித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ரஜினிகாந்த் பாஜகவின் குரலாக ஒலிப்பதாக குற்றம்சாட்டினர்.

நடிகர் விஜய் ! 38 இடங்கள்; ரூ.300 கோடி ஆவணங்கள்; ரூ.77 கோடி ரொக்கம்!' - வருமான வரித்துறை சொல்வதென்ன? #ITRAID


பிந்தய செய்தி நடிகர் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் கைப்பற்ற படவில்லை!
வருமான வரித்துறை சோதனைvikatan.com - ராம் பிரசாத் : வருமான வரித்துறை சோதனை<! பிரபல நடிகர், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஃபைனான்ஷியர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாள்களாக நடக்கும் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். வரி ஏய்ப்புப் புகார் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட படம், 'பிகில்'. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பிகில் படத் தயாரிப்புக்கு நிதியளித்தது, மதுரையைச் சேர்ந்த ஃபைனான்ஷியர் அன்புச்செழியன். இதனடிப்படையில், நடிகர் விஜய் மற்றும் ஃபைனான்ஷியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர்.

9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100 சதவீதம் உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது - முக ஸ்டாலின்

மாலைமலர் : சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளதாவது: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10-ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
2015 -16ல் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல், அடுத்த ஆண்டு 16 சதவீதம் என்ற அளவில் நூறு சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம், அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவு மிக மோசமான  சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்ற ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், 2015-16ம் ஆண்டில் 3.76 சதவீதமும்,  2016-17இல் 3.75 சதவீதமும், 2017-18இல் 3.61 சதவீதமும் தான் இடைநிற்றல் ஏற்பட்டதாக சட்டமன்றத்தில், கொள்கை விளக்கக் குறிப்புகளில் பொய்யான புள்ளி விவரங்களை அதிமுக அரசு கூறுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சீமானுக்கும் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் பணபரிமாற்றம்?

Shankar A : · திமுக மீது அதிபர் அண்ணனின் தாக்குதல்கள் இனி உக்கிரமாக
இருக்கும்.
 8 நாட்களுக்கு முன்னதாக, முதல்வரை அவரது வீட்டில் நள்ளிரவில் தனியாக சந்தித்துள்ளார் அதிபர் சீமான். நான் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் தரப்பில் என்ன பதில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.
இந்நிலையில் இன்றும், தலைமைச் செயலகத்தில் அதிபர் அண்ணன் முதல்வரை சந்திக்கிறார். பகலில் பார்த்து சந்தித்து விட்டு, கோரிக்கை வைத்தது தொடர்பாக பேட்டியளிப்பது நல்லதுதான். நள்ளிரவில் ஏன் சந்தித்தார் என்று அதிபர் விளக்குவாரா

3700 பயணிகளோடு நிற்கும் கப்பலில் 10 பேருக்கு பாதிப்பு.... கொரோனா வைரஸ்: ஜப்பான் துறைமுகத்தில்


BBC : ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
கப்பலில் இருந்த 80 வயது ஹாங்காங் நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல் நலம் குன்றியதை அடுத்து பரிசோதனைகள் தொடங்கின.
3600 பேருடன் ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்துள்ள இன்னொரு சொகுசு கப்பலில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக சுமார் 1.8 கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோடிகளில் ஊழல்: ராதாரவிக்கு எதிராக சின்மயி சபதம்!

minnamblam :  நடிகர்கள் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், இயக்குநர்கள் சங்கத் தேர்தல், ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் எனத் திரைத் துறை சார்ந்து நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்றவைதாம். இவற்றுக்குச் சற்றும் குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது, திரைத் துறையின் டப்பிங் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தல். இதில், பல வருடங்களாகத் தலைமைப் பொறுப்பேற்று வரும் ராதாரவிக்கு எதிராக, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் புகழ்பெற்ற பாடகி சின்மயி போட்டியிட்டார். ஆனால், திடீரென சின்மயியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, போட்டியின்றி ராதாரவி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் சின்மயி.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சின்மயி “ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும்.

சீனா .. கொரோனா.. 570 பேர் உயிரிழப்பு .. 28000 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 73 பேர் ...


Shyamsundar /tamil.oneindia.com : - பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது 
யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. 
இந்த வைரஸ் காரணமாக எல்லா நோயாளிகளும் வுஹன் நகரத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். வுஹன் நகரத்தை விட்டு வைரஸ் வெளியே செல்ல கூடாது என்பதால் நோயாளிகள் எல்லோரையும் அங்கேயே வைத்து சோதனை செய்து வருகிறார்கள். 
வுஹன் நகரத்தில் இதற்காக 6 நாட்களில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு 2000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இத்தனை செய்தும் இந்த வைரஸ் வெளியே சென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

பதவி நீக்கத்தில் இருந்து தப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

பதவி நீக்கத்தில் இருந்து தப்பினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தினத்தந்தி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.
வாஷிங்டன், அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டிரம்ப் மீதான புகாரை விசாரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதி அளித்தது. அதன்படி விசாரணை நடத்தப்பட்டது.

பதவி பறிபோய்விடும் என்பது வதந்தி, ஆதாரம் இதோ!’- பெரியகோயில் சென்டிமென்ட் குறித்து தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு
தஞ்சை பெரிய கோயில்vikatan.com - கு. ராமகிருஷ்ணன் - ம.அரவிந்த் : 1997-ல்,  கலைஞர்  மட்டுமல்ல, பல அமைச்சர்கள், வாசல் வழியாகத்தான் பெரியகோயிலுக்குள் சென்று வந்தார்கள். அவர்கள் எவரும் பதவியை இழக்கவில்லை. மீதியிருந்த ஆட்சிக்காலத்தையும் முழுமையாக நிறைவு செய்தார்கள். உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் வருகையால் தஞ்சை நகரமே விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது. ஆனால், இவ்விழாவில் அ.தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. இது தஞ்சை மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தவிர மற்ற அமைச்சர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.

டெல்லி பெரியார் படத்தை நீக்ககோரி பிஜேபினர் பகுஜன் திராவிட கட்சியினர்களிடம் வாக்குவாதம்..

BBCI Bahujan Broadcasting Company India : 2020 புதுடெல்லி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது பகுஜன் திராவிட கட்சி திரு. ராஜபீர் அவர்களுக்கு சமத்துவ தூதர் ஜீவன் குமார் மள்ளா வாக்கு சேகரிக்கும் பொது உயர் சாதியை சேர்ந்த பிஜேபியினர்(BJP) தந்தை பெரியார் அவர்களின் புகைப்படத்தை நீக்கக்கோரி பிரச்சனை பண்ணினார்கள் ஆனால் பகுஜன் திராவிட கட்சி சகோதரர்கள் தந்தை பெரியார் புகைப்படத்தை நீக்க முடியாது என்றும் பகுஜன் திராவிட கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிஜேபியினர் சிதறி ஓடினர்.. இதை கண்ட பொதுமக்கள் பகுஜன் திராவிட கட்சியின் நபர்களை வெகுவாக பாராட்டினார்கள்... BBCi செய்திப்பிரிவு .. புது டெல்லி...