செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

உணர்ச்சி வசத்தால் அதிகம் உண்ணுதல் (emotional eating):.. சலிப்பு, தனிமை, கவலை போன்ற..

Farm to Table : நாம் முப்பத்திரண்டு(32) தடவை நன்கு மென்று சாப்பிடுகிறோமா?
மனசு நிறைந்து சாப்பிடுவதற்கு பதிலாக வயிறு நிறைய கொட்டிக்
கொள்வதனாலேயே உடற்பருமன் அதிகரிப்பதில் இருந்து தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறோம். பல்வேறுபட்ட உயிர்கொல்லி நோய்களுக்கு பயந்து Superfoodகளை தேடி அலைவதுமல்லாமல் தேவையில்லாமல் அதிக பணத்தையும் விரயம் செய்கிறோம். ஆனால் ஆரோக்கிய உணவு முறை என்பது அவற்றை நாம் எப்படி தயார் செய்கிறோம் மற்றும் எப்படி உண்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது.
உணர்ச்சி வயத்தால் அதிகம் சாப்பிடுதல் (emotional eating):
சலிப்பு, தனிமை, கவலை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளவர்கள் அதனை போக்க தம்மை அறியாமலே அதிகமாக சாப்பிட்டுக்கொள்வர். இந்த பிரச்சனை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் அதிகம். அவர்கள் வீட்டில் இருந்தாலும் சும்மா இருப்பதில்லை. ஆனால் தனிமை, மீண்டும் மீண்டும் ஒன்றையே திரும்பத்திரும்ப ஒவ்வொருநாளும் செய்யவேண்டிய சலிப்பான வாழ்க்கை மற்றும் புதிய விடயங்களை அறிந்து கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கும் சூழல் என்பன பெண்களை பாதிக்கும் விடயங்கள். இதற்காக தனியாக ஒரு பதிவு போடவேண்டிய தேவையுண்டு.

தர்பார் . ரஜினி, முருகதாஸை விநியோகஸ்தர்கள் சந்திக்க விடாமல் தடுத்தது போலீஸ்!

Mathivanan Maran..tamil.oneindia.com/ "  சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து
பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தால் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர் விநியோகஸ்தர்கள்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் முருகதாஸ் ஆகியோரை சந்திக்க முயன்ற விநியோகஸ்தர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ல் வெளியானது. தொடக்கத்தில் தர்பார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் ரூ150 கோடி வசூலித்ததாகவும் கூறப்பட்டது. ரஜினிக்கு எதிராக ஏன் போர்க்கொடி... விநியோகஸ்தர்களுக்கு உண்மையிலேயே பாதிப்பா?
ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் தர்பார் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை; இதனால் தங்களுக்கு 40% நஷ்டம் என்பது விநியோகஸ்தர்களின் புகார். இது தொடர்பாக தர்பார் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் விநியோகஸ்தர்கள் முதலில் முறையிட்டனர்.

The Reader : டைட்டானிக் புகழ் Kate Winslet நடித்த திரைப்படம்

சுமதி விஜயகுமார் : திரைப்படம் 1 : The Reader : டைட்டானிக் புகழ் Kate Winslet
நடித்த திரைப்படம். மத்திய வயதான Kateகும் பள்ளி மாணவன் ஒருவனுக்கும் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அந்த மாணவனுக்கு kateன் உடல் மேல் ஆசை. Kateகோ அவன் பையில் வைத்திருக்கும் புத்தகத்தின் மேல் ஆசை. இவள் முதலில் தன் உடலை அவனுடன் பகிர்ந்து கொள்ள, அவன் தான் வைத்திருக்கும் புத்தகத்தை அவளுக்கு படித்து காட்ட வேண்டும். ஒரு புத்தகம் படிப்பதற்காக தன் உடலை தர வேண்டுமா , வேண்டுமானால் தானே ஒரு புத்தகத்தை வாங்கலாம். பணம் இல்லை என்றால் நூலகம் செல்லலாமே? புத்தகம் வாங்குவது அவள் பிரச்சனை அல்ல. அதை படிப்பதில் தான் பிரச்சனை. அவளுக்கு புத்தகம் படிக்க தெரியாது.
கொஞ்ச நாட்களாக இப்படி தொடரும் அவர்களின் உறவு திடீரென்று ஒரு நாள் நின்று போகும். Kate காணாமல் போவாள். தினமும் அவள் வீட்டிற்கு சென்று ஏமாந்து போவான் அந்த மாணவன். சிறிது நாட்கள் கழித்து வழங்கறிஞருக்கு படிக்கும் அந்த மாணவன் கோர்ட்டில் நடக்கும் ஒரு முக்கியமான வழக்கை நேரில் காண்பதற்காக அழைத்து செல்லப்படுவான். அதில் தவறே செய்யாத ஒற்றை குற்றவாளியாக kate நிறுத்தப்பட்டிருப்பாள். அவளை கண்ட அந்த மாணவன் அதிர்ச்சி அடைவான். அவனை கண்டு kate அதிர்ச்சி அடைவாள்.

விலைக்கு வாங்கலாம் விலை போகத்தான் கூடாது .. திமுகவும் பிரசாந்த் கிஷோரும்

 Karthikeyan Fastura : ஒரு கிரிக்கெட் டீமுக்கு பிட்னெஸ் கோச், பவுலிங் கோச்,
பீல்டிங் கோச், பேட்டிங் கோச், மெண்டல் பிட்னெஸ் கோச் என்று நிறைய இருப்பார்கள். இவர்கள் அத்தனை பேரும் இந்தியர்களாத் தான் இருக்கவேண்டும் என்று தேட முடியாது.
ஜாண்டி ரோட்ஸ் நமக்கு பீல்டிங் கோச்சாக இருந்த போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி வென்றதும் உண்டு. அப்போது அவர் மீது யாரும் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை தானே
அதே போலத் தான் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் திமுகவிற்கு உதவ களம் இறக்கப்பட்டதும் . இன்று தேர்தல் அரசியல் மிகவும் நுணுக்கமாக இறங்கி அடிக்க வேண்டிய சூழலில் உலக அரசியல் இருக்கிறது. திமுக இப்போதாவது புரிந்துகொண்டு வேலை செய்வது மகிழ்ச்சியே. மூன்று வருடங்களுக்கு முன்பே தமிழக அரசியல் கட்சிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து நுணுக்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எழுதியிருந்தேன். IPAC நிறுவனம் அதையும் தாண்டி நுணுக்கமாக செயல்படும் ஒரு Political Strategic Management நிறுவனமாக செயல்பட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக இருக்கும். இங்கு பிரசாந்த் கிஷோர் ஒரு பார்ப்பனர் என்றெல்லாம் பார்க்கவேண்டியதில்லை. அவர் ஒரு தொழில் வல்லுனராக செயல்படுவாரே ஒழிய பார்ப்பனராக செயல்பட்டு தொழிலை கெடுத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் திமுக அவர் மீது ஒரு கண் வைத்துக்கொள்வதில் தவறில்லை.

அம்பேத்கரை படித்தவுடன் பாரதியர்களின் முகமூடி....பாலச்சந்தர்களின் குறுகிய ..... ஷாலின் மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : 'பெண்களின் குரல்' மாத இதழ் தொடரின் ஜனவரி மாத
கட்டுரை.
அப்பொழுது எனக்கு சரியாக 7 வயது இருக்கும்.தமிழார்வம் அதிகம் என்பதினால் அந்த வயதிலேயே தமிழ் நன்கு படிக்க வரும் .அம்மா அதிகம் புத்தகங்கள் படிப்பார்கள் .நல்ல வாசகி .அம்மா அப்பொழுது தமிழில் பிரபலமான பல எழுத்தாளர்களை படித்தாலும் அவருக்கு அதிக பரிச்சயம் சிவசங்கரியும் இந்துமதியும் .அம்மா படித்து போட்ட புத்தகங்களை நேரம் கிடைக்கும்போது விளையாட்டாக எடுத்து படிப்பது எனது வாடிக்கை ."எனக்கு ஒரு துப்பாக்கி கிடைத்தால் எல்லா ஆண்களையும் நிற்க வைத்து சுடுவேன்" என்று துவங்கிய சிவசங்கரியின் வரிகள் தான் எனக்கு பெண் எழுத்தின் முதல் அறிமுகம் .பின்பு சிவசங்கரியின் கதைகளில் பெண்கள் படும் பாடுகளை படித்து "சரி பெண்கள் என்றாலே இது தான் விதி போல " என்று நினைத்துக்கொள்ளலானேன் .
பின்புதான் என் ஒன்பதாவது வயதில் சசி அக்காவின் கைகளை பிடித்து கொண்டு தெருவில் கதைபேசி நடந்து கொண்டிருந்தபோது சசி அக்கா சொன்னாள் "ஆண்களிடம் பெண்கள் அடிமையாக இருக்க கூடாது ,ஆண் அடித்தால் பெண் திருப்பி அடிக்க வேண்டும் ". அப்படியே இன்னும் கொஞ்சம் பாரதியார் பெண்ணுரிமை கவிதைகளை காதுக்குள் ஓதிவைத்தாள்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தோடு திமுக ஒப்பந்தம் ... சமுக வலையில் ....

Devi Somasundaram : பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் வரும் சட்டமன்ற
தேர்தல் செயல்பாட்டுகாக திமுக ஒப்பந்தம் செய்திருப்பது பழைய திமுககாரர்களுக்கு பிடிக்காம இருப்பதில் ஒரு நேர்மை இருக்கு.
அவர்கள் கலைஞர் என்ற பேராற்றல் கூட செயல்பட்டவர்கள் .கள அரசியலை அடிப்படை மக்களோடு சேர்ந்து இயங்கியவர்கள் ..
நேர்மையான எதிரிகளோடு மட்டும் மோதியவர்கள் .அவர்கள் காலத்து இளைஞர்களிடம் இருந்த அடிப்படை அறிவு அவர்களது சாதாரண பொருளாதார சூழலால் ஒரளவு தெளிவோடு இருந்தது .
இன்று திராவிட ஆட்சிகளால் வளர்ந்துவிட்ட சமூகம் முதலாளித்துவ மனப்பான்மைக்கு மாறிவிட்டது ..உலகம் முழுதும் வளர்ந்து வரும் வலதுசாரித் தனம் நம் இளைஞர்களையும் விட்டு வைக்க வில்லை
இவர்களை டீல் செய்ய பழைய ஸ்டேஜஜியே போதும்னு நினைக்க முடியாது .காலத்துக்கு ஏற்ப மாற பழகனும்...
அதை விட்றலாம்.
திமுகவ மட்டும் விமர்சிச்சுட்டு நானும் நடுனிலையாக்கும் டைப் விமர்சனங்கள் ..பாப்பான விமர்சிச்சுட்டு பாப்பான் கூடவே கூட்டா ? . யார் இவங்க , நேத்து வரை இடைசாதி ஆதிக்கத்தை எதிர்க்காம ஏன் பாப்பான மட்டும் எதிர்க்கிறன்னு பேசியவர்கள் தான்..

1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே

Mathivanan Maran -tamil.oneindia.com : வேடசந்தூர்: திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளி குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அவரது 6 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நீண்டநேரமாக காணவில்லை என்பதால் பெற்றோர் தேடி அலைந்தனர்.
அப்போது அதே பகுதியில் கிணறு ஒன்றில் சிறுமி சடலமாக கிடந்தார். இதனையடுத்து கூம்பூர் போலீசார் அங்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் சிறுமியின் உடல் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

வீரபாண்டி ராஜா மாற்றப் பின்னணி.. ஸ்டாலின் முன் கொட்டப்பட்ட .....

ஸ்டாலின் முன் கொட்டப்பட்ட 5 லட்சம்! - வீரபாண்டி ராஜா மாற்றப் பின்னணி!மின்னம்பலம் :   ஆபரேஷன் செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், சேலம் மாவட்ட திமுகவில் உண்மையிலேயே ஆபரேஷன் தான் செய்திருக்கிறார்.
சேலம் மாவட்ட திமுக தலைவர் என்ற அளவுக்கு உயரத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பின்னர், சேலம் திமுகவில் கோஷ்டிக் குழப்பங்களுக்கு பஞ்சமே இல்லை. அதன் பின் பல ஆண்டுகளாக மாவட்டப் பொறுப்பாளர் என்ற நிலையிலேயேதான் சேலம் திமுக ஓடிக் கொண்டிருந்தது. கடந்த கட்சித் தேர்தலிலும் இதற்கு முடிவு காணப்படாத நிலையில், அடுத்த கட்சி அமைப்புத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் சேலத்தில் குழப்பங்கள் ஓயவில்லை.

டிஎன்பிஎஸ்சி: அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!

டிஎன்பிஎஸ்சி: அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!மின்னம்பலம் : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி ) நடத்திவரும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 16 இலட்சத்திற்கும் அதிகமானோர் எழுதிய குரூப் 4 தேர்வில் முதல் நூறு இடங்களைப் பிடித்தவர்களில் 39 பேர் இராமேஸ்வரம், கீழக்கரை மையத்தில் தேர்வு எழுதியிருந்தது சந்தேகத்திற்கு வித்திட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்குக் காரணமானவர்களைப் பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

தாய்லாந்தில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்கள்? Thailand Sees Good Result from Using Drug Mixture on Coronavirus

https://www.bloomberg.com/news/articles/2020-02-02/thailand-sees-good-result-from-using-drug-mixture-on-coronavirus 
A combination of flu and HIV medications are helping treat severe cases of the new coronavirus, Thai doctors said. Chinese health officials have already been administering the HIV and flu drugs to fight the coronavirus, but the combination of the three together in a cocktail seemed to improve the treatment. Thailand currently has recorded 19 cases of coronavirus, eight have recovered while 11 are still under treatment in hospitals. Shyamsundar-  tamil.oneindia.com : பாங்காக்: கொரோனாவிற்கு தாய்லாந்து மருத்துவமனையில் பயன்டுத்தப்பட்டு வரும் மருந்து ஒன்று சிறப்பாக பலன் அளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
உலக நாடுகளை இந்த ஆராய்ச்சி ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. t சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 361 பேர் பலியாகி உள்ளனர்.
17201 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 24 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. 
இந்த நிலையில் தாய்லாந்திலும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் மொத்தம் 35 பேர் சந்தேகத்தின் பெயரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 19 பேருக்கு இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பெண்கள் தற்கொலை .. தாயும் நான்கு மகள்களும் . உத்தர பிரதேசம்


தினமணி : ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், ஒரு பெண் மற்றும் அவரது நான்கு மகள்கள் உட்பட ஒரு குடும்பத்தின் ஐந்து பேர் இறந்து கிடந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஐந்து பேரும் விஷம் குடித்ததாக தெரிய வந்துள்ளது என்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) ராகேஷ் குமார் தெரிவித்தார். "ரம்பரோஸ் என்ற நபரின் வீட்டிலிருந்து விசித்திரமான வாசனை வருவதாக எங்களுக்கு பக்கத்து வீட்டிலிருந்து தகவல் கிடைத்தது. கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​அங்கே ஐந்து சடலங்கள் கிடந்ததைக் கண்டோம். வீட்டிலிருந்து விஷம் பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளோம்," என்று குமார் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். "அந்தப் பெண்மணியின் கணவர் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தவறாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டினர். இந்தக் காரணத்தினால்தான் மனைவி தனது மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார்" என்று அவர் மேலும் கூறினார். காவல்துறை அதிகாரி மேலும் கூறுகையில், அவர்கள் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தப்பியோடிய கணவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

சீனா 304 பேர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் ... பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒருவர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 304 ஆனது பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒருவர் பலிதினத்தந்தி : பெய்ஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியில் முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் இறந்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இதுதவிர 14,562 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. இவர்களில் 2,110 பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 19,544 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை 328 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

5 மாத கர்ப்பிணி மகள் மீது.. ஆசிட் ஊற்றிய போலீஸ் தந்தை.

 Hemavandhana - tamil.oneindia.com :    திருவள்ளூர்: "நான் கர்ப்பமா இருக்கேன்..ன்னு
சொன்னேன். என் வயித்துலயே என் அப்பா எட்டி
எட்டி உதைச்சாரு.. கொலை பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டினாரு" என்று காதல் திருமணம் செய்த பெண் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி - பாக்கியலட்சுமி... இவர்களது மகன் சாய்குமார்.. 24 வயதாகிறது.. ஏசி மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்க்கிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தீபிகா என்ற பெண்ணை காதலித்தார்.. தீபிகாவின் அப்பா விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் ஆவார்.. 6 வருடமாக தீபிகாவும் - சாய்குமாரும் காதலித்து வருகிறார்கள்.
விஷயம் வீட்டுக்கு தெரிந்தது.. மகளை கண்டித்தும் கேட்கவில்லை.. எதிர்ப்பு அதிகமாக கிளம்பவும் தீபிகா - சாய்குமார் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கடந்த ஜுன் மாதம், பெங்களூரில் கல்யாணம் செய்து கொண்டனர்.. இப்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பெங்களூரில் இருந்து வேப்பம்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மனைவியை அழைத்து வந்தார் சாய்குமார். அப்போது விஷயம் அறிந்த தீபிகாவின் தந்தை ஏட்டு, 4 பேரை கூட்டிவந்து மகள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்.

பட்ஜெட் “பணம் இல்லை, மாநிலங்களுக்கான நிதி குறைப்பு, 7.66 லட்சம் கோடி கடன்”.. விரிவான பார்வை:

BBC :நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக மத்திய
பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். அவர் பட்ஜெட்டில் செய்த அறிவிப்புகள் குறித்து தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன.
ஆனால், பட்ஜெட் கணக்கு வழக்குகளில் உள்ள பிரச்சனைகள் இன்னும் தீவிரமானவை. பட்ஜெட்டில் உள்ள பல விவரங்கள் பிரச்சனைக்குரியவை என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைர் ஜோதி சிவஞானம். இந்த பட்ஜெட் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் அவர் பேசியதிலிருந்து:
இந்த பட்ஜெட் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட். பொதுவாக ஒரு பட்ஜெட்டிற்கு சில நோக்கங்கள் இருக்கின்றன. 1. வளர்ச்சியை உறுதி செய்வது. இப்போது இருப்பது போல பொருளாதாரம் மிகவும் வீழ்ந்திருக்கும் நிலையில், அரசு முன்வந்து அதனைத் தூக்கி நிறுத்த வேண்டும். தனியார் முன்வராத நிலையில் அரசுதான் அதைச் செய்ய வேண்டும். 2. வேலைவாய்ப்பு. 3. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது. 4. பொருளாதாரம் அந்தத் தருணத்தில் எதிர்கொண்டுவரும் பிரச்சனையை சரிசெய்வதற்கான வழிகள் அந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பற்றி போலி இஸ்லாமியப் பாடம் எடுக்க வராதீர்கள்.....

Rishvin Ismath : கொரோனா வைரஸை வைத்து ஆஹா, ஓஹோ என்று இஸ்லாமிய மதப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது.
<<ஹதீஸ்>> :
‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது, அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது…. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.
<<ஹதீஸ் முடிவு>>

இதனைச் சொல்வதற்கு ஒரு விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர் தேவையா? ஒரு ஊரில் தோற்று நோய் பரவினால் அந்த ஊருக்குப் போகாதீர்கள், அங்கிருந்து வெளியேறாதீர்கள் என்று சொல்வதற்கு அனுபவ அறிவே போதுமானது. முஹம்மது உண்மையிலேயே இறை தூதராக இருந்திருந்தால், கொரொனோ வைரசிற்கான தடுப்பூசியை எப்படி தயாரிப்பது என்பதை அல்லவா ஹதீஸில் சொல்லி இருந்திருக்க வேண்டும்? அப்படிச் சொல்லி இருந்திருந்தால் காட்டுங்கள் முஹம்மது இறைதூதர்தான் என்று நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
இதே முஹம்மதுதான் சொல்கின்றார், தோற்று நோய் என்று ஒன்று இல்லை என்று.

2021-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இணைந்து IPAC அமைப்பு பணியாற்றுகிறது

தினகரன் : சென்னை: 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து IPAC  அமைப்பு பணியாற்ற உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்தார். திறமைமிக்க தமிழக இளைஞர்கள் IPAC அமைப்பின் கீழ் பணியாற்றிட இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி


மாலைமலர்: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்றிரவு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து பூரண ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட சோனியா காந்தி இன்றிரவு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்

நக்கீரன் :அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின்
ஆசியோடு கடந்த 2014ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினரானார் சசிகலா புஷ்பா. திமுக எம்பி திருச்சி சிவாவோடு இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது சசிகலா புஷ்பா பரபரப்பாக பேசப்பட்டார்.
அந்த புகைப்படங்கள் மார்பிங் என சொல்லப்பட்டது. இதையடுத்து போயஸ்கார்டனுக்கு சசிகலா புஸ்பாவை வரவழைத்த ஜெயலலிதா, அவருக்கு செம்ம டோஸ் கொடுத்தார்.

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீனப் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீனப் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறிமாலைமலர் : மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை:/> சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
கொடிய நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இது வரை 304 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அனைத்து நாடுகளிலும் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தர்பார் படு தோல்வி ... ரஜினிக்கு சம்பளம் 108 கோடியாம் .. பணத்தை திருப்பி கொடுன்னு பஞ்சாயத்து ..

தர்பார் படத்தில் நடிகர் ரஜினிக்கு சம்பளம் 108 கோடியாம்!
டைரடக்கரு முருகதாசுக்கு  முப்பத்தைந்து கோடியாம்  .
தமிழ்நாடு 62  கோடி மினிமம் காரண்டிக்கு  வித்தாங்களாம்.
கலெக்ட் பண்ணது 30 கோடியாம் .
அட்டர் ஃபிளாப்.
இப்ப பணத்தைத் திருப்பிக்குடுன்னு பஞ்சாயத்து.
ரைட்.
தொழில் தர்மப்படி எம் ஜி ( மினிமம் கேரண்டி) முறையில் படத்தை வாங்கினால்..எம் ஜி தொகையை விட அதிகம் போனால்..உபரித்தொகையை தயாரிப்பாளருக்குத் தர வேண்டும்.
ஆனால்..எம்ஜி தொகையை விடக் கீழே போனால்..நட்டத்தை விநியோகஸ்தர்கள் தான் ஏற்க வேண்டும்.
எம் ஜி யை விட அதிகம் ஈட்டி..எப்போதும் எவரும் லாபத்தைத் தயாரிப்பாளருக்குத் தந்தில்லை.
ஆனால் நஷ்டம் அடைந்தால்..நடிகரிடம் பணம் கேட்பது...அயோக்கியத்தனம்.
இதிலிருந்து பல விஷயங்கள் புலனாகும்.
1. அந்த நடிகரின் மார்க்கெட் மரண அடி வாங்கியுள்ளது.

பழைய ஜமீன்தார்கள் மீண்டும்... பண்ணை தொழிலை தனியார் ... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Kandasamy Mariyappan : எனது முகநூல் பக்கத்தில் பயணிக்கும் நண்பர்களின் கவனத்திற்கு...
பலருக்கு நிலவுடமைச் சமூகம் மற்றும் ஜமீன்தார் முறை பற்றி
தெரிந்திருக்கும், சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
தயவுசெய்து ஐந்து நிமிடம் இந்த பதிவிற்காக செலவிடுங்கள்.
ஒன்றிய ஃபாசிச RSS/BJP அரசின் மிகப்பெரிய சுனாமி தாக்குதல்.........
விவசாயத்தை குறிப்பிட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்ற முடிவு!!!
மனித தேவைகளை கீழ்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
1. காற்று
2. தண்ணீர்
3. உணவு
4. உடை
5. வீடு
6. மருத்துவம்
7. கல்வி
8. சாலைவசதி
9. போக்குவரத்து
10. மின்சாரம்
11. தொழிற்சாலை
12. தொலைத்தொடர்பு
உணவு உற்பத்தி,
மனித உழைப்பால் உருவாகுவது மட்டுமல்லாமல், இந்திய ஒன்றியம் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு தற்சார்பு பொருளாதாரத்தை அளிக்க கூடியது.
இந்திய ஒன்றியத்தில் உணவு உற்பத்தியான விவசாய முறை எப்படி இருந்தது!
அரசர்கள் காலத்திற்கு முன்பு, சில இனக் குழுக்களிடம் ஆறுகளை ஒட்டி ஆங்காங்கே நிலங்களும் ஆடு மாடுகளும் இருந்தன.
அரசர்கள் காலத்தில் குறிப்பாக 3ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அரசர்கள் பல்லாயிரக் கணக்கான வேலி நிலங்களை (1 வேலி என்பது 7 ஏக்கருக்கு 1 மா நிலம் குறைவு) ஜமீன்தார்கள், அரச கணக்கப்பிள்ளைகள், அரசவை புரோகிதர்கள், கோவில்கள் பெயரிலேயே எழுதிக் கொடுத்தனர். அவர்கள் யாரும் அந்த நிலங்களில் வேலை செய்ய மாட்டார்கள். அந்த நிலங்களை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குடியானவர்கள் அந்த நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வார்கள்.

கொரோனா வைரஸ்: மூடப்படும் எல்லைகள், 300 பேர் பலி - இதுவரை நடந்தவை என்ன? - விரிவான தகவல்கள்

BBC : கொரோனா வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் 304 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் மட்டும் 294 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும் அங்கு புதிதாக 2,590 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை சேர்த்தால் மொத்தம் 14,380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தரவுகளைவிட, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் கணக்கிட்டுள்ளது. வுஹான் நகரத்தில் 75,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சீனாவிற்கு வெளியேவும் நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்படும் எல்லைகள்&; உலக நாடுகள் பல, சீனா நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நாடுகள் கூறுகின்றன.
சீனாவிற்கு சென்று திரும்பிய வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் தடை விதித்துள்ளன.
>இதற்கு முன்னதாக ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சீனா சென்று திரும்புவர்களுக்கு தடை விதித்தது.

நேரு பதவியேற்பு: வருத்தத்தோடு பாலு பங்கேற்பு!

நேரு பதவியேற்பு:  வருத்தத்தோடு பாலு பங்கேற்பு!மின்னம்பலம் : திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என்.நேருவை திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 26ஆம் தேதி அறிவித்தார்.
மறுநாளே அறிவாலயத்துக்கு வந்து வாழ்த்து பெற்ற நேரு, திருச்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு இருப்பதால் உடனடியாக திருச்சி சென்றார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 1ஆம் தேதி) மாலை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இருக்கும் முதன்மைச் செயலாளரின் இருக்கையில் முறைப்படி நேருவை அமரவைத்துப் பதவியேற்கச் செய்தார் ஸ்டாலின்.

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: குணசேகரனை தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள்.. போக்சோ கோர்ட் அதிரடி


/tamil.oneindia.com/- சென்னை: 11 வயது சிறுமியை.. அயனாவரத்தில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பல நாட்களாக.. 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ கோர்ட் அறிவித்துள்ளது. 
. ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில், குணசேகரன் என்பவரை இந்த வழக்கில் இருந்து கோர்ட் விடுவித்து உத்தரவிட்டுள்ளது
தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத, நினைத்தாலே நெஞ்சில் ஈட்டியால் குத்தக்கூடிய சம்பவம் என்றால் அது அயனாவரம் சிறுமியின் கொடூரம்தான்.. வாய் பேச முடியாத.. காது கேளாத சிறுமி.. வயசு வெறும் 11தான்!
கடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.. ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும் லிப்டை பயன்படுத்தும்போது, லிப்ட் ஆபரேட்டர்தான் இந்த காம செயலுக்கு வித்திட்டவன்.. சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது மொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் என மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சீரழித்துள்ளான்.
அந்த லிப்ட் ஆபரேட்டருக்கு வயது 66. பெயர் ரவிக்குமார்!
பேத்தி வயதுடைய அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியதோடு அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சிறுமியை சீரழித்துள்ளார். மேலும் அங்கு பணிபுரியும் பிளம்பர் உட்பட தனது சகாக்களிடமும் அந்த வீடியோவை காண்பித்து வக்கிரத்தில் ஈடுபட வைத்தான் ரவிக்குமார்.. மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டது அந்த கும்பல்!

கொரோனா வைரஸ்: இலங்கையில் 48 மணிநேரத்தில் கட்டப்படும் மருத்துவமனை

இலங்கை மருத்துவமனை கட்டுமானம்இலங்கை மருத்துவமனை கட்டுமானம்BBC : கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் நோக்குடன் இலங்கை ராணுவத்தினால் 48 மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி முடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 குறிப்பாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் வாழும் இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வந்து சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை வழங்கும் நோக்குடனேயே இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சந்தன விக்ரமசிங்க பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சீனாவிலிருந்து வருகை தருவோருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க இலங்கை ராணுவம் தயார் நிலையிலேயே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வுஹான் மாகாணத்தில் தற்போது 32 இலங்கையர்களே தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் நோக்குடனேயே 32 அறைகளை கொண்ட இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.