ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

பழைய ஜமீன்தார்கள் மீண்டும்... பண்ணை தொழிலை தனியார் ... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Kandasamy Mariyappan : எனது முகநூல் பக்கத்தில் பயணிக்கும் நண்பர்களின் கவனத்திற்கு...
பலருக்கு நிலவுடமைச் சமூகம் மற்றும் ஜமீன்தார் முறை பற்றி
தெரிந்திருக்கும், சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
தயவுசெய்து ஐந்து நிமிடம் இந்த பதிவிற்காக செலவிடுங்கள்.
ஒன்றிய ஃபாசிச RSS/BJP அரசின் மிகப்பெரிய சுனாமி தாக்குதல்.........
விவசாயத்தை குறிப்பிட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்ற முடிவு!!!
மனித தேவைகளை கீழ்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
1. காற்று
2. தண்ணீர்
3. உணவு
4. உடை
5. வீடு
6. மருத்துவம்
7. கல்வி
8. சாலைவசதி
9. போக்குவரத்து
10. மின்சாரம்
11. தொழிற்சாலை
12. தொலைத்தொடர்பு
உணவு உற்பத்தி,
மனித உழைப்பால் உருவாகுவது மட்டுமல்லாமல், இந்திய ஒன்றியம் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு தற்சார்பு பொருளாதாரத்தை அளிக்க கூடியது.
இந்திய ஒன்றியத்தில் உணவு உற்பத்தியான விவசாய முறை எப்படி இருந்தது!
அரசர்கள் காலத்திற்கு முன்பு, சில இனக் குழுக்களிடம் ஆறுகளை ஒட்டி ஆங்காங்கே நிலங்களும் ஆடு மாடுகளும் இருந்தன.
அரசர்கள் காலத்தில் குறிப்பாக 3ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அரசர்கள் பல்லாயிரக் கணக்கான வேலி நிலங்களை (1 வேலி என்பது 7 ஏக்கருக்கு 1 மா நிலம் குறைவு) ஜமீன்தார்கள், அரச கணக்கப்பிள்ளைகள், அரசவை புரோகிதர்கள், கோவில்கள் பெயரிலேயே எழுதிக் கொடுத்தனர். அவர்கள் யாரும் அந்த நிலங்களில் வேலை செய்ய மாட்டார்கள். அந்த நிலங்களை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள குடியானவர்கள் அந்த நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வார்கள்.
தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே விவசாய கூலிகளாக வேலை செய்வார்கள்.
எனவே ஆண்டான் அடிமை முறை தீவிரமாக இருந்தது.
சுதந்திரத்திற்கு பிறகு,
உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் அதே வேளையில் இந்த ஆண்டான் அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒன்றிய அரசு 1960களின் தொடக்கத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தியது. ஒரு தலைக்கட்டுக்கு (கணவன், மனைவி) 30 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க வேண்டும்.
கேரள மாநிலத்தில் மட்டுமே முறையாக செயல்படுத்தப்பட்டது.
மற்ற எல்லா மாநிலங்களிலும் ஓரளவு செயல்படுத்தப்பட்டது. 70களில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் அரசால் முழுமையாக செயல்படுத்தப் பட்டது. மற்ற மாநிலங்களில் அந்த குத்தகைக் காரர்களின் பெயரிலேயே நிலங்களை எழுதிவைத்துவிட்டு, பத்திரத்தை அந்த நில உடமையாளரே வைத்துக் கொள்வார். தமிழ்நாட்டில், இன்றைய நரேந்திர தாமோதரதாஸ் போன்று அன்று திரு காமராஜர் அவர்களும், நில உடமையாளர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
1967ல் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து கொடுக்கிறார். நில உச்சவரம்பு பற்றி பெரிதாக ஏதும் செய்ய இயலவில்லை, காரணம் இதைவிட கொடூரமான நடைமுறைகளை தகர்க்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் தான், நாகப்பட்டிணம் வெண்மணியில் நில உடமையாளர் ஒருவர், கூலி உயர்வு கேட்ட விவசாய கூலிகளை சாணிப்பால் குடிக்க வைத்தது மட்டுமல்லாமல் பல குடிசைகளை எரித்து சாம்பலாக்கிய சம்பவம் நடந்தது. இது உடல் நிலை சரியில்லாத நிலையில் இருந்த அண்ணாவை மிகவும் பாதித்தது. அண்ணா அழுதேவிட்டார் என்று ஒரு கம்யூனிஸ்ட் தோழர் எழுதியிருப்பார். அதேநேரத்தில் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த தஞ்சாவூர் மாவட்டக்காரரான கலைஞரை தனிப்பட்ட முறையில் தாக்கியது.
1969ல் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், நில உச்சவரம்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தினார்.
1. நில உச்சவரம்பு தலைக்கட்டுக்கு 15 ஏக்கர் என்று குறைத்து விட்டார்.
2. குத்தகைக்காரர்களுக்கே நிலம் சொந்தம் என்று சட்டம் இயற்றினார்.
3. பத்திரம் பழைய உடமையாளரிடம் இருந்தது. எனவே, குத்தகைக்காரர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கினார்.
4. குத்தகைதாரர்கள், நில உடமையாளர்களுக்கு தரவேண்டிய குத்தகை பணத்தை தரவேண்டாம் என்றும் சட்டம் இயற்றினார்.
5. அதே நேரத்தில் வினோபாவா இயக்கம் ஒன்றியம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சரி ஏற்கனவே குத்தகை என்ற பெயரில் இதே விவசாயிகள்தானே அந்த நிலங்களில் விவசாயம் செய்தனர், இப்படி நிலம் பலரிடம் இருப்பதால் என்ன பெரிய மாற்றம் வரப் போகிறது!!!???
1. அந்த நிலம் எனது உடமை மற்றும் நான் அடிமை இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.
2. எனது குடும்பத்திற்கு தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்கிறேன்.
3. எனது பணத் தேவைக்காக மேலும் உழைத்து உணவு உற்பத்தியை அதிகரிக்கிறேன்.
4. இதனால் நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது.
ஆனால், நிலங்களை பிரித்து கொடுக்கப்பட்டதன் மூலம், அந்த குறிப்பிட்ட நில உடமையாளர்கள் குறிப்பாக பிள்ளை, முதலியார், அய்யர், அய்யங்கார், மூப்பனார், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் கலைஞர் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் தீராத பகையை ஏற்படுத்திக் கொண்டனர். கோவில் பெயரில் இருந்த நிலங்களையும் பிரித்துக் கொடுத்தால், கலைஞர் இந்துக்களுக்கு எதிரானவர் என்று, அன்றைய RSS பத்திரிக்கைகள் மூலமாக பிரச்சாரம் செய்து விட்டனர். அதைப்பற்றி கலைஞர் கவலைப்படவில்லை!
வாய்ப்பு வரும்பொழுது, இழந்த நிலங்களை எல்லாம் மீட்பது இல்லையென்றால் அந்த நிலங்கள் இன்றைய விவசாயிகளுக்கும் பயன்படாமல் செய்வது என்று இன்றைய நாராயணன் போன்று முகத்தை வைத்துக் கொண்டே இருந்தனர்.
அவர்களுக்கான நேரம் 1980ல் வந்தது. டெல்டா பகுதிகளில் பெட்ரோலியப் பொருட்கள் உள்ளதா என்று கண்டறியும் சோதனையை ஒன்றிய அரசு ஆரம்பித்தது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளில் அதிகாரிகளாக இருந்த அந்த நிலச்சவான்தார்களின் வாரிசுகள் தங்களுடைய ஆட்டத்தை தீவிரமாக ஆட ஆரம்பித்து விட்டனர்.
அதன் முதல் வினைதான், எம் ஜி ராமச்சந்திரனை மிரட்டி, முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 130 அடியாக குறைத்து, இராமநாதபுரம் மாவட்டத்தை பொட்டல் காடாக்கினர்.
அதனைத் தொடர்ந்து காவிரி பிரச்சனை தலைதூக்கியது. தஞ்சாவூர் டெல்டா பகுதிகளிலும் விவசாயம் குறைய ஆரம்பித்து விட்டது. பல விவசாயிகள் விவசாயித்தை விட்டு விட்டு, நகரங்களை நோக்கி சென்று விட்டனர்.
ஒருபுறம், ஒன்றிய ஃபாசிச அரசு பெட்ரோலியப் பொருட்கள் எடுக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்ற கொடூரமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பது தீவிரமாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.
மற்றொருபுறம் விவசாயம் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள இன்றைய ஒன்றிய ஃபாசிச அரசு சட்டமியற்றுகிறது.
இப்பொழுது, நிலைமையை பழைய ஜமீன்தார் நிலைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
சரி,
இதற்கெல்லாம் காரணம் யார்!!!???
அடிமை அதிமுக அரசா!
அன்றைய RSS கூடாரமாக இருந்த காங்கிரஸ் அரசா!
இன்றைய ஃபாசிச RSS/BJP அரசா!
இல்லை.
இது முழுக்க, முழுக்க விவசாயிகளின் தவறு.
1. கூட்டுறவு முறையை சிதைத்தது!
2. காலத்திற்கு ஏற்றது போன்று தங்களுடைய விவசாய முறைகளை மாற்றிக் கொள்ளாதது!
3. விவசாயி நிலங்களின் கட்டமைப்பை மாற்றாமல், பழைய முறையிலேயே வைத்திருந்தது!
4. விவசாய தொழிலாளர்களை சரிவர அரவணைத்து செல்லாதது!
5. எல்லாவற்றுக்கும் அரசையே நம்பி இருப்பது அல்லது அரசை குறை கூறுவது!
6. தங்களுக்கான இயக்கம் எது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளாதது!
தீர்வு என்ன!
இப்போது விவசாயிகள் நினைத்தால்........
இந்த நவீன ஜமீன்தார் முறையை வரவிடாமல் தடுக்க முடியும்.
Consolidation of Land and proportionately redistribute the Lands with proper Infrastructure
என்ற முறையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களை பாதுகாக்க முடியும்.
ஆனால்......
செய்வார்களா!

கருத்துகள் இல்லை: