திங்கள், 26 ஆகஸ்ட், 2019

திரை நட்சத்திரங்களின் மேக் அப் இல்லாத முகங்கள் Real Face of Top Tamil Cinema Actress Photos

filmibeat.com:  " Real Face of Top Tamil Cinema Actress Photos
Photos Of Real Face of Top Tamil Cinema Actress

அம்பேத்கர் உருவச்சிலை இடிப்பு: சாதி பயங்கரவாதிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்க! விசிக வலியுறுத்தல்

நக்கீரன் : ாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,< நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையத்தின் எதிரே இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் உருவச்சிலையை சாதி பயங்கரவாதக் கும்பல் இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளது. காவல் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களைக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் எனவும், தமிழக அரசே புரட்சியாளர் அம்பேத்கரின் வெண்கலச் சிலையை அந்த இடத்தில் நிறுவ வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

தமிழக வேலை வாய்ப்புக்கள் வட இந்திய மாநிலத்தவர்களால் எப்படி பிடுங்கப்படுகிறது ... பன்னீர்செல்வத்தின் துரோகம் ?

வட இந்தியாவில் குறிப்பாக BIMARU மாநிலங்கள் எனக் குறிக்கக் கூடிய பீகார் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் எப்படி தமிழகத்தின் வேலைவாய்ப்பினை குறிப்பாக அரசு வேலை வாய்ப்பினை வட இந்தியர்கள் ஆக்கிரமிப்புகள் செய்ய இயலும் என்பதற்கு ஆதாரமாய்  பல காணொளிகள் அங்கே பகிரப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நமது இன்றைய துணை முதல்வர் திரு ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக இருந்த பொது செய்த சட்ட திருத்தும் ஆகும். ஆனால் கர்நாடகத்திலோ, இமாச்சல் பிரதேசத்திலோ, குஜராத்திலோ என இன்னும் பல மாநிலங்களில் 80 % பேர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பினை பெறக் கூடிய சூழலே நிலவி வருகின்றது.
இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டி தருவது குறிப்பாகச் சொல்லப் போனால் முதல் இடத்தில் இருப்பது தமிழகம் வரி ரீதியாக, ஆனால் கணக்குகளின்படி மஹாராஷ்ட்ரா மாநிலம் தான் முதல் இடம் இருப்பதாக நம்மில் பலர் நம்பி வருகின்றோம்.
ஆனால் அதை எவ்வாறு நோக்க வேண்டும் எனில்
தமிழகத்தில் இருக்கும் தொழிற் சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமானங்கள் செலுத்தக் கூடிய வரியில் தமிழகத்தின் கணக்கு பார்க்கப் படுகின்றது.
ஆனால் மகாராஷ்டிராவின் வருமானம் ஏண் அதிகம் பார்க்கப்படுகின்றது என்றால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் முதல், பல தொழிற்சாலைகளின் தலைமை நிறுவனங்கள் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு அங்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள காரணத்தினால் அந்த தொழிற்சாலைகள் அந்த மாநிலத்தில் இல்லாவிட்டாலும் , வேறு எந்த மாநிலத்திலிருந்தாலும்
உதாரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்தில் உள்ளது ஆனால் அவர்களின் வரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவிடப்படுகின்றது.

கொளத்தூர் மணி : கலவரக் களிமண் கலாச்சாரத்தை க்ண்காணியுங்கள்... விநாயகர் சதுர்த்தி

நண்பர்களே ! கலவரக் களிமண் t; கலாச்சாரத்தை க்ண்காணியுங்கள்.
அண்ணன் கொளத்தூர் மணியின் இந்த அறிக்கை இயக்ககாரர்களுக்கு மட்டுமல்ல மதசார்பற்ற அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும்.
படியுங்கள் அப்படியே பரப்புங்கள்.
*விநாயகர் சதுர்த்தி*
- தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! அன்பார்ந்த தோழர்களே!
கடந்த சில ஆண்டுகளாக - பல விதிமீறல்களை, அத்துமீறல்களை செய்து சர்ச்சைகளை,கலவரங்களை உருவாக்கவே உருவாக்கப்பட்டுள்ள பிள்ளையார் சதுர்த்தி எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் நாள் வருகிறது.
ஏறத்தாழ செப்டம்பர் 6ஆம் நாள் முதல் பிள்ளையார் ஊர்வலங்கள் தொடங்கிவிடும்.
இது தொடர்பாகவே சில செய்திகளை, அதற்கென நாம் எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள் குறித்து நினைவூட்டவே இதை எழுதுகிறோம்.
1) பிள்ளையார் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யக்கூடாது; இரசாயன வண்ணம் பூச கூடாது என்பதும், பச்சைக் களிமண்ணால் மட்டுமே செய்யவேண்டும்; நீரில் கரையும் தீங்கில்லா வண்ணங்களை மட்டுமே பூச வேண்டும் என்பது விதி; உயர் நீதிமன்ற தீர்ப்பும் கூட. தும்பை விட்டு நாம் வாலைப் பிடிக்க அலைய வேண்டாமே!

ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது

ww.allahvin.com :
ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது.  இஸ்லாமிய பயங்கரவாதத்தை இலங்கையில் அறிமுகம் செய்து வைத்த சாபம் ஜமாத்தே இஸ்லாமியையே சாரும். 80 களில் இருந்தே இலங்கை முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் பயிற்சிக்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்திற்கும் ஜமாத்தே இஸ்லாமி அனுப்பி வைத்து வந்துள்ளது. ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு சொந்தமான மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரியின் முதலாவது அதிபரான A.G.M. நதீர் மெளலவி அவர்கள், தான் ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் மூலம் பாகிஸ்தான் நாட்டிற்கு ஜிஹாத் பயிற்சிக்காக சென்று வந்தமை குறித்து நெத் FM வானொலிக்கு அண்மையில் முழுமையான வாக்கு மூலம் ஒன்றை சிங்களத்தில் வழங்கி இருந்தார். இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதுதான் ஜமாத்தே இஸ்லாமியின் இறுதி இலக்கு என்பதை அந்த அமைப்பு அதனது வதிவிட பயிற்சி வகுப்புகளிலும், போதனைகளிலும் குறிப்பிட்டு வந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு நான் பங்கு பற்றிய வதிவிடப் பயிற்சி வகுப்பு ஒன்றில் ஹஜ்ஜுல் அக்பர் மேற்படி விடயம் குறித்து எமக்குக் கற்றுத் தந்துள்ளார். மேலும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வது அல்லாஹுவுக்கு செய்யும் மிகப்பெரும் இணைவைப்பு, பாவம் என்றும் எமக்குக் கற்றுத் தரப்பட்டது.

வேதாரணியம் அம்பேத்கர் சிலை உடைப்பு... கலவரம் வீடியோ


செல்வகுமார் நக்கீரன் : நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டிருந்த முன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பெரும்பதட்டத்துடன் கூடிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி என்கிற பாண்டியன், இவர் முக்குலத்து புலிகள் அமைப்பில் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவருக்கும் வேதாரண்யம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுகத்து மக்களுக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்சினையாகியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தைச்சேரந்த ராமகிருஷ்ணன் என்பவரின் காலை பாண்டியனின் தரப்பு வெட்டி வன்மத்தை மூட்டியிருக்கிறது.
இந்தநிலையில் பிரச்சனை அமைதியாகியிருந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பாண்டியன் தனது பொலிரோ காரில் வந்து வேதாரண்யம் காவல்நிலையத்தின் வாசலில் நிறுத்திவிட்டு காவல்நிலையத்திற்குள் சென்றிருக்கிறார்.

ரஜினி 100 கோடி விஜய் 80 கோடி .. ஆனால் தற்போது நடிகர் விஜயும் 100 கோடி டிமாண்ட் பண்ணுகிறார் ..?

மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த இடத்தில் செல்வாக்கோடு வலம் வருபவர் விஜய். படத்தின் வசூல், ரசிகர் மன்றங்களின் பலம், அரசியல் நோக்கோடு தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் என ரஜினியின் ஃபார்முலாவில் அதே பாய்ச்சலோடு முன்னேறி, ஒவ்வொரு படத்திலும் தனக்கான இடத்தை நிரூபித்து வருகிறார் விஜய்.
நாடகத்தின் நீட்சியாக தமிழ் நிலத்தில் கருதப்படும் சினிமா, ஒவ்வொரு கால கட்டத்திலும் அக்கால சூழலுக்கு ஏற்ப சவால்களை கடந்து வந்திருக்கிறது. தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு டி.வி.டி, தமிழ் ராக்கரஸ், வெப் சீரிஸ் என ஒவ்வொரு சவாலையும் கடந்து சினிமா இன்னமும் அதே வீரியத்துடன் நடைபோட்டு வருவதற்கு முக்கிய காரணம் திரையரங்கில் சினிமா பார்க்கும் அனுபவத்தை மற்ற பிளாட்ஃபார்ம்கள் ஏற்படுத்துவதில்லை என்பது தான். இந்த சவால்கள் அனைத்துமே, ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறக்கூடியவை. ஆனால், என்றுமே மாறாமல் இருக்கும் சவால் என்றால் அது படத்திற்கு படம் உயரும் நட்சத்திரங்களின் சம்பளம் தான்.
திரையரங்குகளுக்குள் பெரும் திரளான மக்களை ஒரே சமயத்தில் ஈர்ப்பது முன்னணி நட்சத்திரங்களே. அந்த முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் தொடர்ந்து நடிக்க முதலீடுகள் செய்து, ரசிகர்கள் மத்தியில் கொண்டுவருவது தயாரிப்பாளர்கள். இதை ஒரு உணவுச் சங்கிலியாகவும் பார்க்கலாம். ஒருவர் அதிகமாய் உண்டாலும், மற்றொருவர் பாதிப்படையலாம். அதனால் அந்த கண்ணியே கூட எதிர்காலத்தில் நிர்மூலமாகலாம்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

கலைஞர் எங்க குலசாமி .. 30 லட்சம் ரூபாயில் கலைஞருக்கு மணி மண்டபம் கட்டும் குச்சிகாடு .. வீடியோ


தந்தி டிவி : "ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தை சேர்ந்த 10 பேர் தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு மணிமண்டபம்  கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். கோவில் கட்டும் பணிக்காக இன்று போடப்பட்ட பூமி பூஜையில் கட்சி வேறுபாட்டை கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். அருந்ததியர் இனமக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம்  கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி எம்பி செந்தில்குமார் : நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன். பாத்ரூம் அடைத்துள்ளதாகவும் அதை கிளீன் செய்வீர்களா?

It is not a disgusting. Ill come and get it right, says Senthil kumar mp இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்
tamil.oneindia.com - VelmuruganP.தருமபுரி: தருமபுரி தொகுதி எம்பி டாக்டர் செந்தில்குமாரிடம் டுவிட்டரில் ஒருவர் பாத்ரூம் சாலரம் அடைத்துள்ளதாகவும் அதை கிளீன் செய்வீர்களா என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள அவர், நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல என கூறியுள்ளார்.
தருமபுரி தொகுதி எம்பி டாக்டர் செந்தில்குமார், தன்னுடைய தொகுதிவாசிகள் அடிப்படைகள் வசதிகள் தொடர்பாக டுவிட்டரில் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்அளித்து வருகிறார். அந்த குறைகளை சரி செய்து அதனை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்.
தெருக்களில் மின்விளக்கு எரியாதமு, சாலைகள் சரியில்லாதது, , குடிநீர் தொட்டி இல்லாதது, குடிநீர் விநியோகம் இல்லாது உள்பட பல்வேறு பிரச்சனைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு அளித்து வருகிறார். இதேபோல் டுவிட்டரில் கேள்விகள் மக்கள் கேட்பதையும் அதன்பின்னர் அளிக்கப்பட்ட தீர்வுகளையும் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமிமின்னம்பலம் : வருமான வரியை ஒழிக்க வேண்டுமென சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதால் டிவிஎஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வேலைநாட்களை குறைத்துள்ளது. மேலும் பார்லே-ஜி உள்ளிட்ட நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து வகைக் கடன்கள் மீதான வட்டியும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு ஏற்ப உடனுக்குடன் குறைக்கப்படும் என்பது உள்பட பொருளாதார மந்தநிலையை சமாளிக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில் சண்டிகரில் நேற்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம், நிர்மலா சீதாராமன் எடுக்கும் நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிரூட்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

திருமாவளவன் : எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? புலிகளின் கேள்விக்கணை ...

இலக்கியா :  காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதீர்கள். நீங்கள் விமர்சிக்க விமர்சிக்க எம்மீது கடுமையான தாக்குதல் நடத்துகிறார்கள்“ இப்படி விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன்.
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இதனை தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து தாம் போராட்டம் நடத்தியதையும் அவர்கள் கண்டித்ததாகவும், இந்திய அரசை எதிர்த்து தம்மால் தீர்வை பெற முடியாதென்றும், காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுமென்றால் அவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி புலிகள் குறிப்பிட்டார்கள் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
 ”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அருண் ஜேட்லியின் வீட்டில் தங்கிய நரேந்திர மோடி .. இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை?

Muralidharan Pb : அதாகப்பட்டது மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ஜெட்லி
அவர்கள் வீட்டில் தான் நரேந்திரமோடி ஆரம்ப காலங்களில் புதுடெல்லியில் தங்கினார் என்று ஒரு தகவல் கேள்விப்பட்டேன்.
அபுதாபி-புதுடெல்லி சுமார் 3 மணிநேரம். Just 3 hours.
என்னதான் ஜி-7 மாநாடு முக்கியமாக இருந்தாலும் ஒரு எட்டு மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் சடலத்தை கண்டுவிட்டு போயிருக்கலாம்.
மோடி சார், நீங்க என்ன போர்டிங் பாஸ் எடுக்கப்போறீங்களா? டிக்கெட் கிடைக்காமல், விமானம் கிடைக்காமல் தவிர்த்து விட?
ட்ரம்ப்பும், புட்டினும் இப்படி ஒரு நிலையில் தாயகம் திரும்பி போயிருப்பார்கள்.
நமக்கு நாடு முக்கியமாக நீங்கள் கருதினால் ஜி-7 மாநாட்டுக்கு போகிற வரையில் குறைந்தது துக்கமாக இருந்திருக்கலாம். இப்படி உடை உடுத்தித்தான் உங்க துக்கத்தை காண்பிக்க வேண்டுமா மோடி சார்?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

பிகார் . ஒரே நேரத்தில் 3 அரசுப்பணிகள் - 30 ஆண்டுகள் சம்பளம் வாங்கிய நபர்!

Suresh Ramகலிலுல்லா.ச vikatan : ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக சம்பளமும் பெற்றுவந்துள்ளார்.
பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் வசித்துவருபவர் சுரேஷ் ராம். கடந்த 30 ஆண்டுகளாக வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக்கொண்டே சம்பளம் பெற்றுவருகிறார். அரசு வேலைகளில் சேர்வதற்குப் பலரும், கஷ்டப்பட்டு படித்து, போட்டித் தேர்வுகளில் முட்டி மோதிக்கொள்ளும் நிலையில், சுரேஷ் ராமின் இத்தகைய நடவடிக்கை அங்கிருந்தவர்களால் கண்டறியமுடியவில்லை.
அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை கொண்டுவந்தபிறகுதான் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. ஒரே பெயர் மற்றும் அதே விலாசத்தில் சுரேஷ் ராம் எப்படி பணியாற்றி வந்துள்ளார் என்பது அதிகாரிகளுக்கு குழப்பமாகவே இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், தகுந்த ஆதாரங்களுடன், ஆவணங்களுடன் சந்திக்கும்படி கூறியுள்ளனர். அப்போது சுரேஷ் ராம், ஆவணங்கள் என்றவுடன், தன்னுடைய பான்கார்டு, ஆதார் கார்டை எடுத்துச்சென்றுள்ளார். அதிகாரிகள் பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரும்படி கூறியுள்ளனர்.

கோவையில் "மறக்க முடியுமா கலைஞரை" திரை உலகம் புகழ் அஞ்சலி சிவகுமாரின் அழகான பேச்சு

காஷ்மீரில் தமிழக போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை .....

ஸ்ரீநகர்:தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 33).
மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவு(சி.ஆர்.பி.எப்.) துணை தளபதியான இவர் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் கடந்த 14-ந்தேதி மீண்டும் காஷ்மீருக்கு திரும்பினார். அவரது மனைவி 20-ந்தேதி அங்கு சென்றார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கி இருந்த வீட்டில் அரவிந்த் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2014-ம் ஆண்டு நேரடியாக சி.ஆர்.பி.எப்.பில் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், 40-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதி வாழ்வதற்கு உகந்தது இல்லை அதனால்தான் அரவிந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதை சி.ஆர்.பி.எப். மறுத்துள்ளது. மேலும் அரவிந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

சிதம்பரத்தின் சொத்துக்கள் முழு இந்தியாவை விட அதிகம்.. ஆர் எஸ் எஸ் அண்டப்புளுகு ஆகாச புளுகு

வெப்துனியா : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலை இதுவரை ஒரு தமிழ் ஊடகம் கூட வெளியிடாத நிலையில் மலையாள மீடியா ஒன்று இதுகுறித்து பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதுஅந்த பதிவில் சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர், 300 ஏக்கர் நிலம் ஆகியவை ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமாக இருப்பதாகவும், ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ் இருப்பதாகவும், அதுபோக பிரிட்டனில் 88 ஏக்கர் நிலம், 500 ஏக்கர் மருத்துவமனை, குதிரைப்பண்ணை , மற்றும் முந்திரி தோட்டங்கள் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.மேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகின்றன. மேலும் கார்த்திக் சிதம்பரம் பெயரில் பல ரியல் எஸ்டேட் கம்பெனிகள் உலகின் பல நாடுகளில் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகின்றது. காமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் தனது வாழ்வின் கடைசி பகுதியில் வறுமையில் வாடிய நிலையில் ஒரு மத்திய அமைச்சருக்கு இவ்வளவு சொத்தா? என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.<

காஷ்மீரில் முதலீடு செய்ய மோடி அழைப்பு!

காஷ்மீரில் முதலீடு செய்ய  மோடி அழைப்பு!மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, முதலாவதாக ஆகஸ்ட் 22ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் பயணத்தை தொடங்கினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாடுகளின் நட்புறவு, அதனை மேலும் வலுப்படுத்துதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிலையில், பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று(ஆகஸ்ட் 24) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை ஸ்டார் ஓட்டலில் வேலை 16 மாநிலங்களில் 600 ஆபாசபடங்கள் காணொலி ..

chennai-techie-masquerades-as-hr-manager-extorts-nudes-from-600-women-on-promise-of-jobs
.hindutamil.in/ :  சென்னை மென்பொறியாளர் கைது:
ஸ்டார் ஓட்டலில் வேலை என மோசடி; 16 மாநிலங்களில் 600 இளம்பெண்களிடம் ஆபாசபடம், காணொலி எடுத்து மிரட்டல்
ஸ்டார் ஓட்டல்களில் முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறி இளம் பெண்களின் நிர்வாணப்படம் மற்றும் காணொலிகளை எடுத்து மிரட்டிய சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரை சைபராபாத் சைபர்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சைபராபாத் சைபர் பிரிவு போலீஸாருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணமான 29 வயது பெண் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு ஸ்டார் ஹோட்டலில் வேலை தருவதாக இண்டர்வியூ நடத்தியபின் அதன் எச்.ஆர் வாட்ஸ் அப் காலில் தொடர்புக்கொண்டு நிறுவனத்துக்கு தங்களின் முழு உடல் தெரியும் வண்ணம் ஆடையில்லா புகைப்படம் தேவை. அதை பல்வேறு கோணங்களில் எடுத்து அனுப்புங்கள் என தெரிவித்ததன்பேரில் அனுப்பியதாகவும், தற்போது அதை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சைபராபாத் உதவி கமிஷனர் ரவி தலைமையில், சைபர் பிரிவு போலீஸார் நடத்திய நீண்ட தேடுதல் வேட்டையில் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கிளமெண்ட் ராஜ் செழியன் (எ) பிரதீப்(33) என்பவர் சிக்கினார். சென்னை வந்து அவரை கைது செய்தது சைபராபாத் போலீஸ்.
அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான திடுக்கிடும் விஷயங்கள் கிடைத்தது. அவரது லாப்டாப், ஹார்ட் டிஸ்க், ஏராளமான சிம் கார்டுகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர்.

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி: சோனியா சம்மதம் .. மே.வங்கத்தில்

காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி: சோனியா சம்மதம்!மின்னம்பலம் : மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மேற்கோள்காட்டி டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதேநேரம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கு வங்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோமன் மித்ரா, டெல்லியில் கட்சித் தலைவரான சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் பற்றியும் கட்சி அமைப்புத் தேர்தல் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஏடிஎம் திருடனை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்... கட்டுக்கட்டாக பணம்.


 The auto driver who handed over the ATM thief to the police
 The auto driver who handed over the ATM thief to the police The auto driver who handed over the ATM thief to the policenakkheeran.in - kalaimohan கடந்த 20 ஆம் தேதி திருச்சியில் ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணம் 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் நைசாக பேசி அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 The auto driver who handed over the ATM thief to the police The auto driver who handed over the ATM thief to the policeபெரம்பலூர் ரோவர் அப்பகுதியைச் சேர்ந்த முருகையா என்கின்ற ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் நேற்று ஒருவர் சவாரி செய்துள்ளார். சவாரி செய்த அந்த நபர் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் ஒரு டிராவல் பேக்கை வைத்திருந்துள்ளார். அறை எடுத்து தங்க வேண்டும் தன்னை ஏதாவது ஒரு தங்கும் விடுதியில் இறக்கி விடுமாறு  ஆட்டோ ஓட்டுனரிடம் போதையிலேயே கூறியுள்ளார். இதனைக்கேட்ட ஆட்டோ ஓட்டுனர் முருகைய்யா ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார், ஆனால் அந்த நபர் நிற்காத போதையில் இருந்ததால் விடுதி ஊழியர்கள் அவருக்கு அறை தர மறுத்தனர். அதனை அடுத்து வேறு ஏதாவது தங்கும் விடுதிக்கு வண்டியை விடுமாறு ஆட்டோ ஓட்டுனரிடம் அந்த போதை ஆசாமி கேட்டுள்ளார்.

போலீசை எதிர்த்து மலையக தமிழரின் உடலை சுமந்த சிங்கள அமைச்சர் தேவார பெருமா வீடியோ


Jeevan Prasad : இறந்த தோட்ட தமிழ் கங்காணியாரின் உடலை புதைக்க செய்ய விடாது தடுத்த போலீசாரை எதிர்த்து போராடிய சிங்கள அரசியல்வாதியான பிரதி அமைச்சர் தெவரப்பெரும!
அப்பாவியின் சடலத்தை தகனம் செய்ய இடம் கொடுக்காத விலங்குகள் மத்தியில் பாலித்த நீங்கள் ஒரு உண்மையான வீரன்..! (Video)
(லங்காஈநியூஸ் 2019 ஆகஸ்ட் 23 பிற்பகல் 03.45) மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் தனது வாழ்நாள் முழுவதும் தோட்டத்தின் முன்னேற்றத்துக்காக இரத்தம் வியர்வை சிந்தி உழைத்து தோட்டத்தில் வசித்து வந்த 70 வயதான தமிழ் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த பின்னர் அந்தத் தோட்டத்தில் இருந்த மயானத்தில் குறித்த சடலத்தை தகனம் செய்வதற்கு தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிசார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றதோடு அதையும் மீறி குறித்த உடலை தோட்டத்துள் தகனம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்டாலின் இலங்கை செல்வாரா? இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம் மகளின் திருமனத்துக்கு நேரில் அழைப்பு!


  தினக்குரல் :  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். திரு ஹக்கீமின் மகளின் திருமணத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் திரு.ஸ்டாலினுக்கு  நேரில் அழைப்பு விடுத்தார்

தி மு க தலைவராக ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்தினை தெரிவித்த ஹக்கீம் , செப்ரெம்பரில் நடைபெறவுள்ள தனது புதல்வியின் திருமண நிகழ்வுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.
இவரின் அழைப்பை ஏற்று ஸ்டாலின் இலங்கை செல்வாரா என்பது பலரின் மனதில் ஓடும் கேள்வியாகும். 
திரு ரவுப் ஹக்கீம் இலங்கையில் மிகவும் செல்வாக்கு உள்ள தலைவராகும். இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் மகிந்தா ராஜபக்சவுடனும் மாத்திரம் அல்லாமல் TNA  தலைவர் திரு சம்பந்தனோடும் மிகவும் நல்ல புரிந்துணர்வு கொண்டவராகும.
இந்நிலையில் இவர் நேரில் வந்து அழைப்பு கொடுத்தமை ஒரு சாதாரண விடயம் அல்ல என்றும் கருதப்படுகிறது

காஷ்மீரில் மருத்துவ வசதிகள் கேள்விக்குறி ? ... பெல்லட் குண்டுகள் ... இந்திய அரசு மறைக்கிறது ..


"Vivek Gananathan : " மருந்து பஞ்சத்தால் அழியும் காஷ்மீர் ! காஷ்மீரில்
மருந்துப்பொருட்கள் அதிவேகமாக தீர்ந்துவருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மோசமான மருந்து பஞ்சம் உருவாகியுள்ளது. காஷ்மீரில் அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட பிறகு வேறு எந்தக்கடைகளுக்கும் அனுமதி இல்லை. .மருந்துக்கடைகளுக்கு மட்டுமே பெயரளவிலான அனுமதி இருந்தது. ஆனால், மறைமுக நெருக்கடிகளால் இப்போது
மருத்துவ அவசரத்திற்கு (Medical Emergency) எதிரான முடக்கு நடவடிக்கைகளை பாஜக நடத்துவது மெல்ல மெல்ல தெரியவருகிறது.
முறையான மருந்துகள், 'Lifesaving Tablets' இல்லாமல் நோயாளிகள் இறக்கும் அவலச்சூழலுக்கு காஷ்மீர் தள்ளப்பட்டுள்ளது. SMHS போன்ற ஸ்ரீநகரின் பிரதான மருத்துமனைகளிலேயே இச்சூழல் உருவாகியுள்ளது எனில் புறநகர் தொடங்கி குக்கிராமம் வரையிலான நிலைமைகள் யோசிக்கவே அதிர்ச்சி அளிக்கின்றன.
அடிப்படையான தகவல் தொடர்பு துண்டிப்பே இந்த அவலத்துக்கு காரணம் என செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18.
ஏற்கனவே, தி வயர் வெளியிட்ட ஆவணப்படத்தில், இசுலாமியரைக் குறிவைத்து, மக்களை குருடர்கள் ஆக்கும் நோக்கத்தோடு பெல்லட் குண்டுகளால் நடத்தப்படும் தாக்குதல்களின் போக்கு எப்படி 'நடைமுறை வாழ்க்கைக்கு பயனற்ற ஊனங்களாக' மக்களை மாற்றுகிறது என விளக்கப்பட்டிருந்தது.

நல்ல மனிதர்களும் RSS பாசிசத்தால் உள்வாங்கப்பட்டு பாசிஸ்டுகளாகிறார்கள்?

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களின் விபர பட்டியலை எனக்கு ஒருவர்
அனுப்பி இருந்தார் . அவர் எனக்கு நீண்ட நாளைய நண்பர்.
ஏனோ கடந்த பத்து வருடங்களாக சுவாமிஜி பாபாஜி அனந்த பத்மநாபசுவாமி  திருப்பதி பாலாஜி,  டபுள் ஸ்ரீஜி  , ஜகஜித்ஜி என்று அதிகம் நேரத்தையும் பணத்தையும் களவு கொடுத்துகொண்டிருந்தார் .
நான் அவரின் இந்த ஆத்மீக பேர்வழிகளின் சுயரூபம் பற்றி என்ன சொன்னாலும் கேட்கமாட்டார் .
தவறான நபர்களின் சகவாசம் மெல்ல மெல்ல அவரை ஒரு முட்டாளாக மாற்றி கொண்டிருக்கிறது என்று பல தடவை அவரிடம் கூறியிருக்கிறேன் . அவர் அவற்றை செவி மடுப்பதில்லை.. சிரித்து சமாளிப்பார் . சரி ஏதோ அவரின் பொழுது போக்கு என்று கருதினேன்.
தற்போது ஆர் எஸ் எஸ் இன் அங்கத்தவராகவே மாறிvவிட்டிருக்கிறார்.

அவர் முன்பு 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் போது ஆ. ராசாவின் கடல் போன்ற சொத்து விபரங்களின் பட்டியலையும் அனுபியிருக்கிறார்.
அதற்கு நான்  கூறிய எந்த விளக்கத்தையும்  அவர் கேட்க தயாராக இல்லை.
இப்போதாவது ஆ.ராசாவின் சொத்து பற்றி நீங்கள் கூறியது  எல்லாம் தவறுதானே அதற்கு என்ன கூறுகிறீர்கள் என்ற எனது கேள்வியை அவர் மிகவும் வேடிக்கையாக்கி கடந்து போனார்.

அருண் ஜெட்லி ... பணமதிப்பிழப்பின் சூத்திரதாரி ... 3 கண்டெய்னர்களில் சிக்கியது 570 கோடிகள் மட்டும்தானா... Flashbacks

Raja Rajendran : 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த சமயம்,
மூன்று கண்டெய்னர்கள் முழுக்க பணம் சிக்குகிறது. 500 கோடிகள் என்றார்கள். 5000 கோடிகளாகவும் இருக்கக் கூடுமென்றார்கள். இரண்டு நாட்கள் கேட்பாரின்றி அந்தப் பணக்கார லாரிகள் அனாதையாக நடுத்தெருவில் நின்றன !
மன்னார்குடி மாஃபியாக்களின் பணம், ஸ்டீல் மங்கையின் பணம்
என்றெல்லாம் புரளி பரவியது. ஜேட்லியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். கூலாக மூன்றாம் நாள் அது ஸ்டேட் வங்கியின் பணம் என்று எடுத்துக் கொண்டுப் போனார்கள்
ஓர் அரசு வங்கிப் பணத்தை எடுத்துப் போக எதற்கு அத்தனை ரகசியம் என்று தெரியவில்லை. ஏன் போலிப் பதிவெண் கொண்ட லாரிகளில் கொண்டு சென்றார்களென்று ஒரே ஒரு வங்கி அதிகாரி கூட நமக்கு விளக்கவில்லை. ஏன் பறக்கும் படையினர் சோதனைக்காக லாரியை நிற்கச் சொல்லும் போது, தடைகளை உடைத்து வேகமாக அந்த லாரிகள் தப்பி ஓட முயன்றன என்பதைப் பற்றி இன்று அறம் பேசும் எந்த வாயும் கேட்கவில்லை. லுங்கி அணிந்த செக்யூரிட்டிகள் அந்தப் பணத்தை எப்படி காக்க முடியுமென்று காவல்துறை விளக்கம் ஏதுமில்லை, மூச்.