புதன், 17 ஏப்ரல், 2019

சன்னி லியோன், சீமான் & கமல்

A Sivakumar  : சன்னி லியோன், சீமான் & கமல் பார்த்தவுடன் பற்ற வைக்கும்
பதுமை. கல்யாணம் கட்டினா சன்னி லியோன் மாதிரியான ஒரு கட்டையை தான் கட்டுவேன் என்று வாலிப வயதில் அவர் நடித்த படங்களை பார்க்கும் போது தோன்றுவது யாருக்கும் இயல்பே! அப்படி தோன்றினால் தான் அது வாலிபமே!
உண்மையில் நம்மில் எத்தனை பேருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது?
நமக்கு சன்னி லியோனை பிடிப்பது இருக்கட்டும், சன்னி லியோனுக்கு நம்மை பிடிக்க வேண்டுமல்லவா?
அட, சன்னி லியோனுக்கு கூட நம்மை பிடிக்க வேண்டாம். அவரை போன்ற, அவரில் 50 சதமேனும் அழகான ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்க வேண்டுமே! வாய்ப்பிருக்கா என்று வாலிப வயதில் நாமெல்லாம் சிந்திப்பதே இல்லை. ஊரிலேயே அழகான ஒரு பெண்ணை பார்த்து, அல்லது நம் நண்பர்கள் குழுவில் பெரும்பான்மையோர் யாரை அழகு என்று சொல்லுகிறார்களோ அந்த பெண்ணை வட்டமடித்து வளைக்க முயன்று மூக்குடைபட்டோரும் உண்டு தானே?

.நீட் தேர்வு.. இனிமேலும் அனிதாக்களை இழக்காமல் இருப்போம்.

Sumathi Vijayakumar : இன்னும் ஒரு நாள். நாளை விடிந்தால் தேர்தல் நாள். முன் பொழுது ஒருவருக்கு சார்ந்து தானே இருக்கிறது. அப்பொழுதே நடுநிலைமை என்பது மாறி விடுகிறது. இன்னமும் நடுநிலைமை என்று சொல்லி கொள்பவர்கள், ஒன்று இன்னும் புரிந்து கொள்ளவில்லை, இல்லையென்றால் மக்களை குழப்பபார்க்கிறார்கள். வேறு யார் சொல்வதை தாண்டியும், அனிதாவின் குடும்பத்தின் குரல் தான் முக்கியமானதாக பார்க்கிறேன். அவர்களை தாண்டி இந்த அரசுக்கு எதிராக கோபம் கொள்ள சிறந்த காரணம் உடையவர்கள் யாரவது தமிழ்நாட்டில் இருப்பார்களா என்ன? நீட்டை திணித்த இந்த அரசுக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்பதோடு அவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லையே. யாருக்கு வாக்களிக்க வேண்டும், எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று மிக தெளிவாய் சொல்லி இருக்கிறார்கள்.
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யாரும் அவர்கள் செய்த குற்றங்களை மறுக்கவோ, மறைக்கவோ இல்லை. நாளை அவர்கள் ஆட்சி அமைத்ததும் அவர்களையும் விமர்சனம் செய்யத்தான் போகிறார்கள். தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக அல்லாமல், மக்கள் நலனுக்காக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பெரியார், பின்னாளில் அதே காங்கிரஸ் கட்சிக்காக, காமராஜருக்காக பிரச்சாரம் செய்தது என்ன விதமான அரசியலோ, அதே தான் இந்த தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் அரசியலும்.

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

சுப்பிரமணியம் சாமி : தினகரனின் அமமுக பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத்தோடு ...

1995ல அமலாக்கப் பிரிவுன்னா என்னன்னு தமிழ்நாட்டுக்கு அறிமுகப் படுத்துனதே டிடிவி தினகரந்தான்
சாவித்திரி கண்ணன் : ’’பா ஜ கவை எதிர்ப்பதில் நான் தான் தமிழகத்தில் நம்பர் ஒன்’’ என்கிறார்!
ஆனால், சுப்பிரமணியசாமி என் மரியாதைக்குரிய நண்பர் என்கிறார் .சு.சாமியும்,’’ தினகரனுக்கு போடும் ஒட்டு தேசத்தை காப்பாற்றும் ஓட்டு’’ என்கிறார்.
’’ஒட்டுமொத்த இந்தியாவே பா ஜ கவை வெறுக்கிறது’’ என்று பேட்டியளிக்கிறார். ஆனால்,’’மோடிக்கு கறுப்புக் கொடியெல்லாம் காட்டக் கூடாது..’’ என பதற்றமடைகிறார்..!
குடியரசு தேர்தல் நடந்த போது ,தனது ஆதரவு 18 எம் எல் ஏக்களின் வாக்குகளயும் தருவேன் என பா ஜ க வேண்டுகோள் வைக்கும் முன்பே முந்திக் கொண்டு ஆதரிக்கிறார்.!
’’நான் தான் பெரியார்,அண்ணா திராவிட வழி இயக்கத்தின் தொடர்ச்சி’’ என்கிறார்.ஆனால், பி பி சி பேட்டியில் பிராமணர்களை புகழ்ந்து பேசி ஐஸ் மழை பொழிகிறார்.
’பெரா’ வழக்கில் உள்ளே இருக்க வேண்டியவரை சுதந்திரமாக நடமாடவிட்டிருப்பதோடு, இந்த தேர்தலில் அ ம மு கவின் பண வினியோகத்தை பா ஜ க கண்டு கொள்ளாமல் அனுமதித்தது..!

கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சட்டவிரோத சோதனை.. திமுகவை முடக்க சதி? வெறுங்கையுடன் திரும்பிய அதிகாரிகள்!

கரி பூசிகொண்ட வருமானவரித்துறை.. தேர்தல் நேரத்தில் அராஜகத்தை கையிலெடுக்கும் மோடி அரசு
tamilthehindu :தூத்துக்குடி, குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் கனிமொழி
போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் பாஜக தலைவர் தமிழிசையும் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியில் கனிமொழி தரப்பில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தொகுதியில் வரும் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் கடந்த மாதம் மற்றும் ஏப்ரல் 1-ம் தேதி நடந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்து இன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆணையம் அறிவிப்புக்கு திமுக தரப்பில் கண்டனம் வெளியாகிய நிலையில் அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் தூத்துக்குடி இல்லம் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தத் தொடங்கியுள்ளனர்.

தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் இருக்கு... அங்கு ஏன் சோதனை நடத்தல... ஸ்டாலின் சரமாரி கேள்வி

Crores of rupees In Tamilisais Home; Why did not raid there? DMK president MK Stalin questioned
tamil.oneindia.com - alagesan : சென்னை: தூத்துக்குடி பாஜக வேட்பாளரான தமிழிசை வீட்டில் கோடி, கோடியாக பணம் வைத்துள்ளனர்; அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, பள்ளி மற்றும் சிமெண்ட் குடோன்களில் வருமாண வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த அதிரடியாக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. வீடு, அலுவலக கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு சோதனை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரின் தகவலின் பேரில் சோதனை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நான் இந்த குலத்தில் பிறந்து இருக்கிறேன் நாங்கள் எல்லாம் அறிந்தவர்கள்? ..

Shalin Maria Lawrence : மாற்று அரசியல் என்பது இங்கே மிக மிக தேவையான ஒன்றுதான். இந்த தேர்தலில் மாற்று அரசியலை முன்மொழிந்து இருப்பது இரண்டு கட்சிகள்தான். மய்யமும் ,நாம் தமிழர் கட்சியும். ஆனால் இவர்களின் உண்மை நிலை என்ன? முதலில் மய்யத்துக்கு வருவோம்.
மக்கள் நீதி மய்யம்.
பெயரிலேயே மய்யம்.பெயரிலேயே ஏமாற்று வேலை.சமூகநீதிக்கு இரண்டு பக்கம்தான். ஒன்று சரி ,இன்னோன்று தவறு .
நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் "இரண்டுக்கும் நடுவில்" என்று சொல்பவன் தீயவனை விட தீயவன்.
"சாதி விளையாட்டு வேண்டாம்" என்கிறார் கமல்.
"சாதி பற்றி எல்லாம் பேச மாட்டேன்" என்கிறார் .
ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் கிழத்துக்கு இங்கே இந்தியா என்கிற நாட்டில் ஜாதிதான் முதல் தீங்கு ...ஜாதிதான் பொருளாதாரம் ,வேலைவாய்ப்பு ,ஆரோக்கியம் ,வளங்கள் என்று எல்லாவற்றையும் இயக்குகிறது என்று தெரியாதா? ஜாதிதான் இந்தியாவின் 2000 காலத்து மிக முக்கிய ஊழல் என்று தெரியாதா?
சாதி சான்றிதழை கிழித்து போடு என்று சொல்லும் ஒரு அறைவேகாட்டிற்கு ஒரு கட்சியை வழிநடத்தும் ,மக்களை ஆளும் யோக்கியதை இருக்கிறதா?
திராவிட கட்சிகள் மாநிலங்களை சீரழித்து விட்டது என்கிறார்.சரி.
பின்பு ஏன் அப்பொழுதே கலைஞரையும் ,ஜெயலலிதாவையும் கேள்வி கேட்க வில்லை?

வாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி

savukkuonline.com : பாஜக ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித்திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது. 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது.
இன்று 2019ல் நாட்டு நிலவரம் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்திரமும் அதிருப்தியும் 1967 நிலைமையைப் போலவே இருக்கின்றன. ஆயினும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. இவ்வாண்டுத் தேர்தலில் தெள்ளத் தெளிவான மாற்று என வாக்காளர்கள் முன்னிலையில் எதுவும் நிறுத்தப்படவில்லை.

தேனியில் ஓட்டுக்கு 1000 ரூபாய் ..பன்னீர் பட்டுவாடா ..வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து .. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Breaking news வேலூர்  மக்களவை தொகுதி தேர்தல் இரத்து செய்யப்படுவதாக
தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது . குடியரசு தலைவர் ஒப்புதலுடன் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது

பணம் கொடுக்கும்போது காமிராவில் சிக்கிய எடப்பாடி.. ..பெர்போமான்ஸ் வீடியோ


மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளான 16ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் வீதி வீதியாகச் சென்று தேர்தல் அறிக்கையின் துண்டு சீட்டுகளைக் கொடுத்து ஓட்டு சேகரித்தார். அப்போது, பழ வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடம் சீட்டு கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அதனுடன் சேர்த்து சிறிது பணத்தையும் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தேர்தல் பரப்புரையின்போது பணம் கொடுப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது என்பதுடன், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முதல்வர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பணம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை உருவாக்கியதுடன், வைரலாகவும் பகிரப்பட்டது. ஆனால், அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுதும் தெரிந்துகொள்ள பல்வேறு வீடியோக்களையும், களத்தில் இருந்தவர்களையும் விசாரித்தபோது உண்மை தெரிந்தது.

தேனீயில் பன்னீர் கொடுக்கும் கூப்பன்! அதை பர்னிச்சர் கடையில் கொடுத்தால் திருமண சீர்வரிசை பொருட்கள் இலவசம் . .. விதவிதமான பட்டுவாடாக்கள் ...

டிஜிட்டல் திண்ணை- அதிமுக பணப்பட்டுவாடா நிலவரம் !மின்னம்பலம் : ”அதிமுக தரப்பிலும் ஓட்டுக்கு பல தொகுதிகளில் பணம் போய்க்கொண்டிருக்கிறது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஒன்றிய செயலாளர்கள் வரை பணம் போய் சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒன்றிய செயலாளர்கள் தரப்பில் இருந்து சில தொகுதிகளில் இன்னும் கீழே உள்ள நிர்வாகிகளுக்கான பட்டுவாடா என்பது சரியாக செய்ய ஆரம்பிக்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் இருந்தே சேலத்தில் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார்.
ஸ்டாலின் எப்படி திருவாரூரில் தொடங்கி திருவாரூரில் முடித்தாரோ அதே போல எடப்பாடியும் சேலத்தில் தொடங்கி சேலத்தில்தான் முடித்திருக்கிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் பலரும் இன்று, ‘ஓட்டுக்கு காசு கொடுத்தா கொடுங்க.. கொடுக்கலைன்னா போங்க. முதல்ல கூட்டத்துக்கு வந்ததுக்கு பெட்ரோல் போட காசு கொடுங்க...’ என்று கோபத்துடன் சண்டை போட்டிருக்கிறார்கள். முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதில்தான் இப்படியான பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தகவல்கள் வேட்பாளர் சரவணன் கவனத்துக்குப் போயிருக்கிறது. அவர் உடனடியாக இதை எடப்பாடியிடம் சொல்லிவிட்டாராம். ‘பிரச்சாரம் முடிச்சதும் பேசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதேபோல துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பல வீடுகளுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கல்யாண வயதில் அந்த வீட்டில் பெண்கள் இருந்தால், அந்த கூப்பன் கொடுக்கப்படுகிறது. அந்தக் கூப்பனை அந்த ஊரில் உள்ள பர்னிச்சர் கடையில் கொடுத்தால், திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். வீட்டுக்கு டெலிவரி சார்ஜ் கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஸ்டீல் கட்டில், மெத்தை, ஸ்டீல் பீரோ, பாத்திரங்கள், பூஜை பொருட்கள் அடங்கிய செட் அது.
அந்த கூப்பனை நிர்வாகிகள் சரியாக கொடுக்காமல் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிட்டார்கள் என தொகுதிக்குள் சல சலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதிநீக்க மனு தள்ளுபடி!

மின்னம்பலம் : கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதிநீக்க மனு தள்ளுபடி!திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலை ஏற்று நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
இவ்விவகாரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், சிறப்புக் குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

கருப்பைக்குள் சண்டையிட்டு கொண்ட இரட்டை குழந்தைகள்.. வீடியோ...

நக்கீரன் : தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். உடனே அதனை வீடியோவாக எடுத்த அவர், இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தார்.
இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் பெரும் ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சியானது தற்போது 2.5 மில்லியன் லைக்ஸ் மற்றும் 80,000 கருத்துகளை பெற்றுள்ளது.

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - வேட்பாளர்கள்: இறுதிக்கட்ட கள நிலவரம்

tamil.thehindu.com :  வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன, நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ்  என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் என இருவருமே வலிமையான வேட்பாளர்கள் என்பதால் களத்தில் போட்டி மிக கடுமையாக உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி இங்கு குறிப்பிட்ட அளவில் இருப்பது திமுகவுக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏ.சி.சண்முகத்துக்கு தனிப்பட்ட முறையில் சமூக வாக்குகள் இருப்பது அவருக்கு வலிமையைத் தருகிறது. இருவரும் சமபலத்துடன் மோதும் சூழல் உள்ளது.

கரூரில் பதட்டம் .. அதிமுகவினர் பணப்பட்டுவாடா .. போலீஸ் குவிப்பு

கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்புதினத்தந்தி :கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது திமுக - அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது. கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது.
பிரசாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோதல் போக்கு நேரிட்டுள்ளது. இதனையடுத்து கரூர் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக - காங்கிரஸ் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மசாஜ் சென்டரில் லஞ்சம் வாங்கிய சென்னை போலீஸ் உதவி கமிஷனர் கைது

லஞ்சம், போலீஸ் உதவி கமிஷனர், கைதுதினமலர் :லஞ்சம், போலீஸ் உதவி கமிஷனர், கைது சென்னை: சென்னை அசோக் நகர் போலீஸ் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், ரூ.50 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வின்சென்ட் ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் . ஏசி சண்முகத்தின் பணப்பட்டுவாடா தேர்தல் ஆணையத்தின் உதவியோடு ஜோர் ?

v தி.மு.க. பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான குடோனில் ஏப்ரல் 01-ந்தேதி வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11,48,51,800 பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்தது என தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியது வருமான வரித்துறை.
இந்த 11 கோடி ரூபாய் பற்றி டெல்லியில் ஆலோசித்த அதிகாரிகள், ""வேட்பாளரின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டாலோ, வாக்காளர்களுக்கு பணம் தரும்போது பிடிபட்டாலோ, வேட்பாளர் கொடுத்ததாக கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளர் வாக்குமூலம் கொடுத்தாலோ மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ, வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்யவோ முடியும். இது அப்படியான அறிக்கை கிடையாது. வேட்புமனுத் தாக்கலின்போது தவறான தகவல் கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள்'' என பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி, தேர்தல் செலவின மைய ஒருங்கிணைப்பாளர் சிலுப்பன் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது கொடுத்த புகாரின் அடிப் படையில், காட்பாடி மாஜிஸ்திரேட்டின் அனுமதியோடு கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காட்பாடி காவல்நிலையம்.

பாஜக எதிர்ப்பு அலையை ஒட்டு இயந்திரம் சீராக்குமாம் .. பாஜகவின் இறுதி நம்பிக்கை


     விகடன் : தேசம் முழுவதும் தனக்கு எதிரான மௌன அலை வீசுவதாக அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்
பிரதமர் மோடி. இதற்காக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்ட அத்தனை ப்ளான்களையும் தடையின்றி அரங்கேற்ற வேண்டும் என்பதில் மோடியும் அமித்ஷாவும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மோடி போட்டிருக்கும் ஸ்கெட்ச் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள் ""மத்திய உளவுத்துறையும் புலனாய்வு அமைப்புகளும் கொடுத்த ரிப்போர்ட்டின் படி பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் இடங்களின்
எண்ணிக்கை மிக மோசமாக இருக்கிறது. மோடியின் அறிவுஜீவிகளின் ரிப்போர்ட்டும் மேற்கண்ட முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன. அந்த ரிப்போர்ட்டுகள் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் தீ விபத்து

பிரான்சில்  வரலாற்று சின்னமாக விளங்கும்  தேவாலயத்தில் தீ விபத்துதினதந்தி : பிரான்சில் வரலாற்று சின்னமாக விளங்கும் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரடேம் கதீட்ரல். பாரம்பரியாக சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியது.தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கியிருந்த இந்த தேவாலயத்தில் எப்படி தீப்பிடித்தது<

மோடியின் சாதனை காட்சியில் மட்டுமே!,,, ஆட்சியில் அல்ல அல்லவே அல்ல!

Swathi K : · கடந்த ஐந்து வருடத்தில் மக்களை ஏமாற்ற மோடி போட்ட
ஆயிரக்கணக்கான போலியான வேடங்களில் சில வேடங்கள்.. இதில் எதுவுமே போட்டோஷாப் இல்லை என்பது தான் சிறப்பு.. உலகம் முழுவதும் இந்தியாவின் பிரதமரை கோமாளி + கிரிமினல் கலந்த கலவையாக தான் பார்க்கிறார்கள்.. அதனால் தான் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மோடியே பிரதமர் ஆகவேண்டும் என்று விரும்புகின்றன.. அதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகம், பொருளாதாரம் அனைத்தையும் எளிதில் உடைக்கமுடியும்.. இந்தியாவை பாதுகாக்க.. மோடியை தூக்கியெறிய வேண்டியது அவசியம்..

இரும்பை கண்டுபிடித்தது தமிழர்களே.. ஆதிச்ச நல்லூர் அகழாய்வு! ...Henry Bessmer, Engaland - 1856 அல்ல!


சமரன்  : இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை...
இனி அப்படி சொல்வோமா???
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.
அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.
கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.
‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்’
‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என
பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது.
‘அதியமான் நெடுமான் அஞ்சி’
அவரது தலைநகர் - தகடூர்.

அதிமுக கடந்து வந்த பாதையும் ..இன்று சேர்ந்திருக்கும் இடமும்

மு.ரா. விவேக் : எம்ஜியாருக்கு உடல்நிலை சரியில்லை கேபினட் கூட்டத்தில் கூட தன்னை அறியாமல் இயற்கை உபாதையை கழிக்கிறார் அவருக்கு பதில் என்னை முதல்வராக்குங்கள் என்று முதல் துரோகம் ஜெயாவால் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதபடுகிறது !
எம்ஜியார் ஜெயாவை அதிமுகவை விட்டே நீக்கி உத்தரவு பிறப்பிக்கிறார் -அது அதிமுக அதிகாரபூர்வ நாளிதழிலும் வருகிறது !
bulk க்கா ஒரு அமௌன்ட் கொடுங்க நான் கண்காணா இடத்துக்கு போய் settle ஆகிடுறேன் ன்னு உயிருக்கு பயந்து எம்ஜியாருக்கு கடிதம் எழுதி அதுவும் பத்திரிக்கைகளில் வருகிறது !
எம்ஜியார் மறைகிறார் -சவ ஊர்வலத்தில் அந்த வாகனத்தில் ஏறி அமர
ஆசைப்பட்டு தாக்கப்பட்டு அந்த இடத்தை விட்டே துரத்தப்படுகிறார் !
சசிகலா-நடராஜன் entry !
ஜானகி அணி -ஜெயா அணி !
சேவல் -புரா -குத்துக்கள் எல்லாம் முடிந்து எம்ஜியாரின் மனைவிக்கு எமிஜியார் தொடங்கிய கட்சியின் ரத்தத்தின் ரத்தங்கள் ஆப்பு அடித்து -எம்ஜியாரின்.......ஜெயாவை தூக்கி தலைமை பொறுப்பில் அமரவைக்கிறார்கள் !
மீண்டும் காலம் உருண்டோடுகிறது !
ஜெயாவால் சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கும் அளவு செல்வாக்கு பெற்ற சசிகலாவின் குடும்பம் ஒட்டு மொத்தத்தையும் ஒதுக்கி வைக்கிறார் புரட்சித்தலைவி!?இது தான் முதல் புரட்சி !
பின்னர் சசிகலா வோடு சிலரை மட்டும் மீண்டும் சேர்த்து நாடகம் தொடங்குகிறது !
வளர்ப்பு மகனின் அண்ணன் தினகரன்(குண்டாக இருந்த காலம்) MP யாக இருந்தார் !
மீண்டும் காலம் உருண்டோடுகிறது !
ஜெயா மறைகிறார் அல்லது மறைய வைக்கபடுகிறார் (இன்னமும் மர்மம் தான் !)

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தார் ... எப்படி இருக்கிறார் ? வீடியோ


மாலைமலர் :சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சென்னை, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து  வரும் 15ந்தேதி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம்  செய்வார் என கூறினார்.

டிக்டாக் செயலிக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

மாலைமலர் : டிக்டாக் செயலிக்கு ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையை 22-ந்தேதி தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். புதுடெல்லி: ‘டிக்டாக்’ செயலியில் ஆபாசமான மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாவதால் அந்த செயலிக்கு தடைவிதிக்க மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த செயலியின் சீன நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. சீன நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, கோடிக்கணக்கான செல்போன் செயலிகள் உள்ளன. ஐகோர்ட்டு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்காமலும், அதன் கருத்தை கேட்காமலும் உத்தரவை பிறப்பித்துள்ளது என்றார்.

திங்கள், 15 ஏப்ரல், 2019

டேராடூனில் பாஜகவினரின் குறை கேட்பு கூட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

Sudhakar Chandra : இந்தச் செய்தியை எந்தத் தமிழகப் பத்திரிகையிலும் வந்ததாக நான் பார்க்கவில்லை .
இன்று - பத்திரிகையாளர் கவின்மலர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன்.
பாரதிய ஜனதா தலைமை அலுவலகம்.
மாநில அமைச்சர் சுபோத் உனியால்
'ஜனதா தர்பார்' நடத்தி மக்கள் குறைகளைக் கேட்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நடுத்தர வயது ஆள் முகம் வெளிறி தட்டுத் தடுமாறி வந்தார்.
44 வயசு.
பிரகாஷ் பாண்டே .. ( தந்தி டிவி பாண்டே உறவினர் )..
அவர் உரத்த குரலில் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கத்தினார்.
"என்னால் தொழில் நடத்த இயலவில்லை.
மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் - ஜிஎஸ்டி வரிக்கொடுமையும்
என் தொழிலை முடக்கிவிட்டன. பெருநட்டமாகிவிட்டது. என் கடன்சுமை அதிகரித்துவிட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு - என் வாங்கிக்கடன்களிலிருந்து விலக்கு அளிக்கக் கோரினேன். எதுவுமே நடக்கவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேன்....அதனால்...."

அமைச்சர் உதயகுமார் அறையில் வருமானவரி சோதனை ...

அமைச்சர் உதயகுமார் அறையில் ஐடி ரெய்டு!சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலுள்ள அமைச்சர் உதயகுமார் அறையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் பொருட்டு வருமான வரித் துறையினரும், பறக்கும் படையினரும் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் நோட்டுக்கள் சிக்கின.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, நேற்றிரவு (ஏப்ரல் 14) அங்கு விரைந்த வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.