மாலைமலர் : எத்தியோப்பியா நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள்
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த விமானத்தில் சென்றவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்னும் விபரத்தை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.ஞாயிறு, 10 மார்ச், 2019
எத்தியோப்பியாவில் விமான விபத்து: 157 பேர் உயிரிழப்பு .. 4 இந்தியர்கள் உட்பட
மாலைமலர் : எத்தியோப்பியா நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான 157 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள்
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த விமானத்தில் சென்றவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்னும் விபரத்தை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் .. திருவள்ளூர் அரக்கோணம் ஆரணி திருச்சி சிவகங்கை......
காங்கிரஸ் 1.திருவள்ளூர், 2.அரக்கோணம், 3.ஆரணி, 4.திருச்சி, 5.சிவகங்கை, 6.தேனி, 7.விருதுநகர், 8. திண்டுக்கல், 9.கன்னியாகுமரி மற்றும் 10. புதுச்சேரியில்
tamilthehindu :
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ள 9 தொகுதிகளில்
இறுதிப்பட்டியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல்
தொகுதியை குறிப்பிட்டு டெல்லி மேலிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது இதில் என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து பெரிய அளவில் இழுபறி நீடித்தது.
தற்போதும் இழுபறி நீடித்து வரும் நிலையில் இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்துள்ளதாகவும் தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உறுதிப்படுத்தப்படும் என காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
tamilthehindu :
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ள 9 தொகுதிகளில்
இறுதிப்பட்டியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் திண்டுக்கல்
தொகுதியை குறிப்பிட்டு டெல்லி மேலிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது இதில் என்னென்ன தொகுதிகள் என்பது குறித்து பெரிய அளவில் இழுபறி நீடித்தது.
தற்போதும் இழுபறி நீடித்து வரும் நிலையில் இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு ஓரளவு சம்மதத்தை திமுக தெரிவித்துள்ளதாகவும் தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் கிடைத்த அடுத்த கணம் தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உறுதிப்படுத்தப்படும் என காங்கிரஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.
விஜயகாந்த் வேடிக்கை பார்த்தபடி குழந்தை போல .. தன்னை சுற்றி நடப்பது புரியாமல் ..வீடியோ
Raj Dev :
செய்தியாளர்
சந்திப்பில் விஜயகாந்த் மிகவும் பாவமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
எல்லோரும் நேராக பார்த்துக் கொண்டிருக்க விஜயகாந்த் மட்டும் வேறு ஏதோ ஒன்றை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
தன்னை சுற்றி போட்ட கையை பிரேமலதா எடுக்க சொன்னார். ஒரு முறை எழுந்து விட்டு உட்காரும் போது பிரேமலதாவின் கரங்களை இறுகப் பற்றியபடி அமர்ந்தார். பிரேமலதா அதை துளியும் விரும்பவில்லை.
பேட்டி முடித்து போகும் போது விஜயகாந்தை கண்டுகொள்ளாமல் பிரேமலதா தனியாக எழுந்து சென்றார்.
விஜயகாந்தை கடந்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோர் சென்றனர். முதலில் விஜயகாந்தை அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும், பொறுப்பும் அங்கு யாரிடமும் இருக்கவில்லை.
விஜயகாந்தால் எதுவும் பேசவோ, புரிந்து கொள்ளவோ கூட முடியாத நிலை அப்பட்டமாக தெரிந்தது. விஜயகாந்த் ஒரு குழந்தையை போன்று பரமாரிக்கப்பட வேண்டியவர். ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் அவர் இரண்டாம் குழந்தைமையை (Second Childishness) எட்டி உள்ளார். கலைஞர் மட்டும் முதிய வயதில் பணியாற்றவில்லையா என்று கேட்கலாம். கலைஞரின் மனோ சக்தி திறம்பட இருந்தவரை மட்டுமே அவரிடமிருந்து அறிக்கைகள் வந்தன.
எல்லோரும் நேராக பார்த்துக் கொண்டிருக்க விஜயகாந்த் மட்டும் வேறு ஏதோ ஒன்றை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
தன்னை சுற்றி போட்ட கையை பிரேமலதா எடுக்க சொன்னார். ஒரு முறை எழுந்து விட்டு உட்காரும் போது பிரேமலதாவின் கரங்களை இறுகப் பற்றியபடி அமர்ந்தார். பிரேமலதா அதை துளியும் விரும்பவில்லை.
பேட்டி முடித்து போகும் போது விஜயகாந்தை கண்டுகொள்ளாமல் பிரேமலதா தனியாக எழுந்து சென்றார்.
விஜயகாந்தை கடந்து ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோர் சென்றனர். முதலில் விஜயகாந்தை அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும், பொறுப்பும் அங்கு யாரிடமும் இருக்கவில்லை.
விஜயகாந்தால் எதுவும் பேசவோ, புரிந்து கொள்ளவோ கூட முடியாத நிலை அப்பட்டமாக தெரிந்தது. விஜயகாந்த் ஒரு குழந்தையை போன்று பரமாரிக்கப்பட வேண்டியவர். ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில் அவர் இரண்டாம் குழந்தைமையை (Second Childishness) எட்டி உள்ளார். கலைஞர் மட்டும் முதிய வயதில் பணியாற்றவில்லையா என்று கேட்கலாம். கலைஞரின் மனோ சக்தி திறம்பட இருந்தவரை மட்டுமே அவரிடமிருந்து அறிக்கைகள் வந்தன.
அதிமுக. 8 லட்சம் பேருக்கு 500 ரூபாய் = 40 கோடி ! அனைத்து தொகுதிகளுக்கும் இந்தப் பணம் உறுதி
மின்னம்பலம் :
நீரின்றி
அமையாது உலகு என்பது போல கரன்சி இன்றி அமையாது தேர்தல். இன்னும் கொஞ்சம்
உடைத்துச் சொல்வதானால், கோடிகளின்றி அமையாது தேர்தல்.கூட்டணி முடிவு செய்யப்படுவதில் தொகுதிகளை விட அதிக முக்கியத்துவம் கோடிகளுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. கூட்டணி முடிவாகி வேட்பாளர்கள் தேர்வாவது கூட, ‘எவ்வளவு செலவு செய்வார்கள்?’ என்பதைப் பொறுத்துதான். இன்றைய நிலவரத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 50 கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள்.
‘உங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல’ என்று தேர்தல் ஆணையமும், பொது நலன் கருதி பல்வேறு நிறுவனங்களும் விளம்பரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் போக்கும், வாக்குகளுக்கு பணம் வாங்கும் போக்கும் இன்றும் நின்றபாடில்லை.
இந்த அடிப்படையில் கழகங்கள் ஒவ்வொன்றும் வாக்களர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் தேர்தல் வியூகங்களில் முக்கியமான வியூகமாக வகுத்து வைத்துள்ளன.
ஒரு ஜிபி டேட்டா கட்டணம் உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு ஆ.ராசாவின் சாதனை
இந்தியா - 0.26 டாலர்கிர்கிஸ்தான் - 0.27 டாலர்
கஜகஸ்தான் -0.49 டாலர்
உக்ரேன் - 0.51 டாலர்
ருவாண்டா -0.56 டாலர் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள் எவை?
ஜிம்பாபேவே - 75.20 டாலர் ஈகுவடோரியல் கினி - 65.83 டாலர் செயின்ட் ஹெலெனா - 55.47 டாலர் பாஃல்க்லாண்ட் தீவு - 47.39 டாலர் ட்ஜிபூட்டி - 37.92 டாலர்கள்
tamiloneindia : உலக அளவில் மக்கள் செல்பேசி டேட்டாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்த ஓர் ஆய்வில் ஐரோப்பாவில்தான் மக்கள் டேட்டாவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
Cable.co.uk எனும்
இணையத்தளத்தில் ஒரு கிகா பைட் அளவிலான டேட்டாவுக்கு ஒவ்வொரு நாட்டிலும்
எவ்வளவு செலவாகிறது எனது குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் மிகக்குறைவான விலையில் டேட்டா கிடைப்பது
தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒரு ஜிபி டேட்டா $0.26 கட்டணத்திற்கு
கிடைக்கிறது. அதுவே பிரிட்டனில் $6.66 என்ற கட்டணத்திற்கு கிடைக்கிறது. அமெரிக்காவில் ஒரு ஜிபி டேட்டாவின் கட்டணம் மிக அதிகம். அங்கே சராசரியாக ஒரு ஜிபிக்கு $12.37 செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த முடிவுகள் ஏமாற்றத்தை தருவதாக கேபிள் டெலிகாமின் பகுப்பாய்வாளர் டான் ஹௌடல் தெரிவிக்கிறார்.
தமுமுக- மமக: மோதல் முடிந்தது! தேர்தல் வருகிறது!
மின்னம்பலம் :
காலை
11 மணி முதல் இரவு வரை நடந்த தமுமுக- மமக செயற்குழுக் கூட்டத்தில் மமக
தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும், தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் இடையே
நிலவிவந்த கடுமையான கருத்து முரண்பாடுகள், மோதல்கள் முடிவுக்கு
வந்திருப்பதாகத் தெரிகிறது.விழுப்புரத்தில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நேற்று (மார்ச் 9) காலை தொடங்கிய செயற்குழு இரவு வரை நடந்தது. செல்போன்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உணவு கூட அரங்கத்துக்கே வரவழைக்கப்பட்டது.
இந்த அவசர செயற்குழுவில் இரண்டு விஷயங்கள்தான் பிரதான இடம் பிடித்தன. ஜவாஹிருல்லா –ஹைதர் அலிக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள், அதன் தொடர்ச்சியாக ஹைதர் அலி ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, அதையடுத்து ஜவாஹிருல்லா மீது பொது வெளியில் ஹைதர் அலி வைத்த கடுமையான 18 பக்க கடிதப் புகார்கள் ஆகியவையே முதன்மையாக விவாதிக்கப்பட்டன.
பாரிவேந்தருக்கு கள்ளகுறிச்சி ஒதுக்கப்படாது ? கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகல்?
மின்னம்பலம் :
திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாகா என்று பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ‘நாங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியை விரும்பிக் கேட்டிருக்கிறோம். அதுவே கிடைக்கும் என்று நம்புகிறோம்;’ என்று அறிவாலய வாசலிலேயே நிருபர்களிடம் பேசினார் பாரிவேந்தரின் மகன் ரவி.
ஏப்ரல் 11 தேர்தல்: மே 23 முடிவுகள் அறிவிப்பு!

முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 11
2ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 18
3ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 23
4ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஏப்ரல் 29
5ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 6
6ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 12
7ஆம் கட்ட வாக்குப்பதிவு- மே 19
மின்னம்பலம் : 17ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் நாள், வாக்குகள் எண்ணப்படும் நாள், தேர்தல் விதிமுறைகள் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல்களை வெளியிட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (மார்ச் 10) மாலை 5.00 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். நியாயமான மற்றும் சுதந்திரமான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய சுனில் அரோரா, “மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 8.43 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 1.5 கோடி வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுடையவர்கள்” என்றார்.
தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் புதுச்சேரிக்கு நடைபெறும்
nakkheeran.in - kathiravan :
17-வது மக்களவை தேர்தல் 7


கட்டங்களாக
நடைபெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே
கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
அறிவித்தார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றும், தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்போரின் விபரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் சுனில் அரோரா அறிவித்தார்.


கட்டங்களாக
நடைபெறும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே
கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
அறிவித்தார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்றும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்றும், தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிப்போரின் விபரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் சுனில் அரோரா அறிவித்தார்.
அதிமுக - தேமுதிக ஒப்பந்தம் .. 4 தொகுதிகள் .. கையெழுத்திட்டனர் !
அதிமுக கூட்டணியில், தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமகவும் இதை விரும்பியதால், அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். 4 மக்களவை தொகுதி தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தேமுதிக தரப்பில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு இடங்கள் கோரப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால், இழுபறி நிலை நீடித்து வந்தது.
விடுதலை சிறுத்தைகளுக்கு தேர்தல் சின்னம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை
வெப்துனியா :
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தடபுடலாக பிரசாரம் செய்து வருகின்றன. இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதிரம் சின்னம் கோரியிருந்தனர். ஆனால் தற்போது அந்த சின்னம் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். கடந்த தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நட்சத்திரம்,மெழுகு ஆகிய சின்னங்களில் போட்டியிட்டனர்.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் - தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு
மாலைமலர் :
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக
தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி
வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.புதுடெல்லி இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் சுமுகமான முறையில் நிர்ணயிக்கப்பட்டதாகவும் சுனில் அரோரா குறிப்பிட்டார் சி.பி.எஸ்.சி.இ. தேர்வுகள் மற்றும் சில திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவுக்கான தேதிகள் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல்.. 21 அல்ல... தேர்தல் ஆணையம் திடீரென அறிவிப்பு
tamil.thehindu.com/
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21
சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தான் இடைத் தேர்தல்
நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி 2-ம் கட்டமாக வாக்குபதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
சோஷியல் மீடியாவின் சுயம்வரம்
Devi Somasundaram :கமண்ட்ஸ்ல ஆணாய் பிறந்தற்க்கே வெட்கபடுகிறேன் டோலின்னு கண்ண கசக்கிட்டு ..இன்பாக்ஸ தட்டி அழாத பேபிம்மா நானிருக்கேன்னு நம்ம கன்னத்தை தடவ வர்றவன் சங்கி.... இதுலாம் வசந்த மாளிகைலயே பாத்துட்டோம் கெளம்புன்னு தொர்த்திடனும் .
கமண்ட்ஸ்ல லவ் யூ பேபின்னு ஆர்டின் விட்டு இன்பாக்ஸ் பக்கமே வராதவன்லாம் பெரியாரிஸ்ட் ..நாமலா இன்பாக்ஸ் தட்னாலும் ரிப்ளையே வராது ..அந்த டிக்கட்டலாம் உட்ற பிடாது .கண்ண கசக்கியாவது கரெக்ட் செய்து கல்யாணத்தை செய்து குடியும் குடித்தனமுமா செட் ஆகிடனும் . கமண்ட்ஸ்லயும் கன்னத்தை தடவ பாத்து முடியாம இன்பாக்ஸும் வரதுலாம் முத்துன சங்கி .கிட்டயே சேக்க ப்டாது .ப்ளாக் செய்து வுட்றுனும் .
கமண்ட்ஸ்லயும் துர்வாச முனி மேரி மொறச்சு கிட்டு ..இன்பாக்ஸ் போனாலும் ஸ்ரீராமனுக்கு சித்தப்பனாக்கும்னு சீன் போடறதுலாம் முத்தின பெரியாரிஸ்ட் ..அதுலாம் தன் கையே தனக்கு உதவின்னு சாமியாரா போக விட்றுனும் . அம்புட்டுதேன் .
84 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்... சிறப்பு அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு
தினமலர் : புதுடில்லி : அமெரிக்காவில், 'எச் - 4' விசா பெற்று, பணியாற்றி வருவோருக்கு
வழங்கப்பட்டு வரும் சிறப்பு அனுமதியை ரத்து செய்ய, அமெரிக்க அதிபர்,
டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றும்,
84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு, வேலை பறிபோகும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.பொறியியல் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு, அமெரிக்காவில் பணியாற்ற, 'எச் - 1பி' என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இந்த விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர்.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் மனைவி அல்லது கணவனை, தங்களுடன் அமெரிக்கா அழைத்துச் செல்ல, எச் - 4 என்ற விசா வழங்கப்படுகிறது.இந்த விசா பெற்றவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன், அமெரிக்காவில் வசிக்கலாம். ஆனால், அங்கு வேலை பார்க்கவோ, சொந்த தொழில்
பிரேமாவின் '25 மாடி ?.. தே.மு.தி.க., பின்னணியில் பலவித பேரங்கள் ... ரகசியம்!
தினமலர் : லோக்சபா தேர்தல் களத்தில் கவலைக்கிடமான நிலைக்கு தே.மு.தி.க.,
தள்ளப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி அமைப்பதாக பா.ஜ.,விடம் வாக்குறுதி
கொடுத்து சொந்த வேலைகளை தே.மு.தி.க., 'பெரும்புள்ளி' ஒருவர் சாதித்துக்
கொண்டது அம்பலமாகி உள்ளது.தி.மு.க., கூட்டணி கதவை அடைத்ததாலும், அ.தி.மு.க.,வில் கேட்ட தொகுதி கிடைக்காததாலும் லோக்சபா களத்தில் அக்கட்சி தன்னந்தனியாக தவிக்கிறது.
தே.மு.தி.க., 'பெரும்புள்ளி' ஒருவராலே அக்கட்சி 'ஊசலாடும்' நிலைக்கு வந்த பின்னணி ரகசியம் தற்போது கசிந்துள்ளது.
அதன் விவரம்: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமற்ற வகையில் உறுதியானது. இக்கூட்டணியில் தே.மு.தி.க.,வை எப்படியாவது சேர்க்க வேண்டுமென பா.ஜ., விரும்பியது. இத்தேர்தலில் அக்கட்சிக்கு 2.4 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என உளவுத்துறை அறிக்கை அளித்திருந்ததே அதற்கு காரணம்.
இதனால் அக்கட்சியையும் சேர்த்தால் பலம் அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு கூடும் என பா.ஜ., கணக்கு
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தே.மு.தி.க.,வின் முக்கிய புள்ளி ஒருவர், சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க பா.ஜ.,விடம் உதவி கோரியுள்ளார். இதற்கு உடனடியாக மத்திய அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்ட மண் பரிசோதனை பணிகள் நடக்கின்றன. இதற்கான வழித்தடங்கள் வரைபடம் மூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வழித்தடம் செல்லும் பகுதியில் 'பெரும்புள்ளி' 25 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார்... 2 .5 % வாக்கு உள்ளதா இந்த கட்சிக்கு. போடாதீங்க தப்பு கணக்கு. அது அந்த காலம். இப்போ 0.5 வாக்கு உள்ளதா என்று யோசித்து பாருங்க .
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு மருந்து தரப்படும். தமிழகத்தில் ஐந்து வயதிற்கு கீழுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழ்க அரசு அறிவித்துள்ளது.
வேல்முருகன்: திமுகவா, அமமுகவா?
மின்னம்பலம் :
தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வரும் தேர்தலில் யாரோடு
கூட்டணி வைக்கப் போகிறேன் என்பதை இன்று(மார்ச் 10) நடக்கும் பொதுக்குழுவில்
அறிவிக்க இருக்கிறார்.இது தொடர்பாக மார்ச் 8 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்,
“அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் முழுக்க முழுக்க வட இந்தியர்களைத் திணித்து வருகிறது மத்திய அரசு. இதற்காக நீதி வேண்டி தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்திருக்கிறோம்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி தொடக்கம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய சேவை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சுரங்கப்பாதையில் செல்போன் நெட்வொர்க் பிரச்சினை ஏற்படுவதாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
தமிழ் வேண்டாம், உருதுவே வேண்டும்;மாணவர்கள் போராட்டம்
nakkheeran.in . :
பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில்
2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க
வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறம் படிப்படியாக
நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து மொழி சிறுபான்மை பள்ளிகளில்
சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு
பின்னர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத மொழி
சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளித்து 2016ஆம் ஆண்டு நீதிமன்றம்
உத்தரவிட்டது. மேலும் விருப்பமுள்ளவர்கள் தமிழிலும் மற்றவர்கள் அவரவர் தாய்
மொழியிலே மொழி பாடத்துக்கான தேர்வு எழுதலாம் என்று இடைக்கால உத்தரவு
பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து வரும் 14ம் தேதி 10ம்
வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், ஆம்பூர்
மஜ்ஹருள் உலூம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகம் முன் மார்ச் 9
ந்தேதி திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 க்கும் அதிகமான மாணவர்கள்
பள்ளிக்கு வெளியே நின்றவர்கள், தங்களுடைய தாய்மொழியான உருது மொழியில்
பொதுத்தேர்வு எழுதவும், தமிழ் மொழித்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு
அளிக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.நடிகை ரோஹிணியை மிரட்டும் கும்பல்... மோடிக்கு எதிரான கருத்தை ..
திரைக் கலைஞர் ரோஹிணியை மிரட்டும் கும்பலுக்கு தமுஎகச கண்டனம்திரைக்கலைஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவருமான ரோஹிணி, தனது கலைப்பணியில் முனைப்புடன் செயலாற்றிக்கொண்டே சமூகப்பிரச்னைகள் மீது கூரிய விமர்சனங்களை முன்வைப்பதுடன் களப்போராட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர்.
மலையாள தொலைக்கட்சி ஒன்றின் சமீபத்திய நேர்காணலில் அவரிடம், பிரதமர் ‘மோடியிடமும் ராகுல் காந்தியிடமும் நீங்கள் கேட்பதற்கு ஏதுமுள்ளதா எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ‘மோடியிடம் கேட்பதற்கு எனக்கு ஏதுமில்லை, ஆனால் சொல்வதற்கு இருக்கிறது. மோடி அவர்களே தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள், இப்படியான பாசிச ஆட்சி இனி ஒருபோதும் தேவையில்லை.
கடந்த ஐந்தாண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, விமர்சித்துப் பேசுகிறவர்களைக் கொலை செய்வோருக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று பதிலளித்திருந்தார். விரிவான இந்த நேர்காணலில் இந்த ஒரு பகுதியை மட்டும் தமிழ் இதழ் ஒன்றும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.
அன்வர் ராஜா பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம்.. வீடியோ ..அதிமுகவினரை விரட்டிய ஊர் மக்க
சென்னை:“பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம், முதல்ல வெளியே போங்க.. இது எங்க ஏரியா” என்று கேட்டு எம்பி அன்வர்ராஜா உள்ளிட்ட அதிமுகவினரை ஊர்மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் “இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது” என்று உயர்த்தி குரல் கொடுத்தவர்தான் அன்வர் ராஜா. பிறகு தன் ஊரிலேயே நின்று தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் ஒருநாள் திடீரென யாகம் வளர்த்தார்.
இஸ்லாமிய மரபுகளுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அன்வர் ராஜாவை உடனே வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக அவருக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
மாணவிகளை சீரழித்த பாலியல் குற்றவாளிகளை கண்டுகொள்ளாத .. தொலைக்காட்சிகள் ..
LR Jagadheesan : தமிழ்நாட்டின்
சமூக சீரழிவு மற்றும் பொருளாதார <
சூறையாடல் என்கிற இரண்டு
விபரீதங்களுக்கும் ஒருசோற்றுப்பதமான இந்த இரண்டு செய்திகள் குறித்தும்
இன்றுமாலை எந்தெந்த 24/7 செய்தித் தொலைக்காட்சிகள் விவாதிக்கப்போகின்றன?
எந்தெந்த அறிவுஜீவி பேசப்போகிறார் என்று பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம்.
எந்தெந்த அறிவுசீவி தமது சமூக ஊடகத்தில் கருத்து சொல்லிக் களமாடப்போகிறார்?
என்று தெரிந்துகொள்வதிலும் கூடுதல் ஆர்வமாய் இருக்கிறோம்.இந்த இரண்டிலும் திமுகவின் கடைசி மட்ட தொண்டன் ஒருவன் தொடர்புபட்டிருந்தாலும் இந்நேரம் டில்லி தொலைக்காட்சிகளே ஓங்காரமாய் ஓலமிட்டிருக்கும்.
ஆனால் தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் சொந்த மாவட்ட
கட்சிக்காரர்கள் தொடர்புடைய செய்தி ஒன்று. மற்றது அந்த எடப்பாடியின்
“அரசியல் அம்மா”மட்டுமல்ல தமிழ்நாட்டு ஊடகங்களும் “அம்மா” என்றழைத்த
தர்மத்தாயும் நேரடியாக தொடர்புபட்டதாக கூறப்படும் செய்தி. இந்த இரண்டு
செய்திகள் குறித்து தமிழ்நாட்டு “மையநீரோட்ட ஊடகங்களோ” அரசியல் விமர்சக
விற்பன்னர்களோ நடுநிலை நல்லவர்களோ காக்கும் மௌனத்தை என்ன சொல்லி அழைக்க?
கள்ள மௌனம் என்றா? காரிய மௌனம் என்றா?
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. ..வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் தொகுதிகள் ..
பிந்திய செய்தி Mahalaxmi " ·
*அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகியுள்ளது. தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்

சென்னை:
“இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி… வந்தா வாங்க.. வராட்டி போங்க” என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில் தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்துள்ளதாம்!
திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் இறங்கி விட்டது. கூட்டணிகளுக்கு 20 போக மிச்சமிருக்கும் 20 தொகுதிகளில் போட்டி என்றுகூட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்து விட்டார்.
பாஜக ஆதரவு ஆனால் அதிமுகவால் இன்னும் இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட போகிறோம் என்று பகிரங்கப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதற்கு காரணம் தேமுதிகவின் இழுபறிதான்.. அதற்கு காரணம் பாஜகவின் சப்போர்ட்தான்!
“2, 3 எல்லாம் தர மாட்டோம், அன்று சொன்னபடி 4 சீட்டுகள் தருகிறோம், வாங்கி கொள்ளுங்கள், தேர்தல் தேதியோ இன்று நாளை அறிவித்து விடுவார்கள். அதனால் இன்று நாளைக்குள் சட்டுபுட்டுனு ஒருமுடிவை எடுக்க பாருங்க. நாளை ஒருநாள் தான் உங்களுக்கு டைம். அதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது” என்று அதிமுக கிடுக்கிப்பிடி கண்டிஷன் போட்டுள்ளதாம்.

சென்னை:
“இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி… வந்தா வாங்க.. வராட்டி போங்க” என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில் தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்துள்ளதாம்!திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில் இறங்கி விட்டது. கூட்டணிகளுக்கு 20 போக மிச்சமிருக்கும் 20 தொகுதிகளில் போட்டி என்றுகூட அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்து விட்டார்.
பாஜக ஆதரவு ஆனால் அதிமுகவால் இன்னும் இத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிட போகிறோம் என்று பகிரங்கப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதற்கு காரணம் தேமுதிகவின் இழுபறிதான்.. அதற்கு காரணம் பாஜகவின் சப்போர்ட்தான்!
“2, 3 எல்லாம் தர மாட்டோம், அன்று சொன்னபடி 4 சீட்டுகள் தருகிறோம், வாங்கி கொள்ளுங்கள், தேர்தல் தேதியோ இன்று நாளை அறிவித்து விடுவார்கள். அதனால் இன்று நாளைக்குள் சட்டுபுட்டுனு ஒருமுடிவை எடுக்க பாருங்க. நாளை ஒருநாள் தான் உங்களுக்கு டைம். அதற்கு மேல் எங்களால் காத்திருக்க முடியாது” என்று அதிமுக கிடுக்கிப்பிடி கண்டிஷன் போட்டுள்ளதாம்.
தமிழர் வரலாற்று ஓலைசுவடிகளையும் இதர சான்றுகளையும் உலகத்தரத்தில் தேடி பாதுகாக்கும் . Dr.க.சுபாஷினி வீடியோ
ஓலை சுவடிகளை கணினியில் பதிவேற்றம்
செய்வதில் மிகவும் கடினமான பணியை செய்து கொண்டுவருகிறது தமிழர் மரபு அறக்கட்டளை . கல்வெட்டுக்கள், ஓலைசுவடிகள், அகழ்வு ஆய்வுகள் மூலம் கிடக்கும் தகவல்கள் மட்டுமல்ல , மக்களின் வழி வழியாக வந்த வாய்மொழி இலக்கியங்கள் போன்றவறின் மூலம் கிடைக்கப்பெறும் செய்திகள் ...
அவுஸ்திரேலியா பழங்குடி மக்களின் டி என் ஏ, தென்னமரிக்கா, ஐரோப்பியா , கிழக்காசிய நாடுகள். எகிப்துக்கு சென்றாலும் சரி அங்கெல்லாம் தமிழர்களின் பானை ஓடுகள் போன்ற எராளமான சான்றுகள் கிடைந்திருக்கின்றன . தமிழர்களின் வரலாறு என்பது ஒரு நீண்ட நெடிய வரலாறு .ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி எழுதியுள்ளார்கள் ஆனால் இவற்றை உலகளாவிய ரீதியில் முதல்தரமான சான்றுகளாக கொடுக்க முடியாது .
அதற்கு ஆதாரங்கள் தேவை படுகின்றன . அவற்றை தேடவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் . நிறைய அறிஞர்கள் தன்னார்வ தொண்டர்கள் என்னோடு சேர்ந்து பயணிக்கிறார்கள் ..
தமிழ் எழுத்துக்கள் பல வடிவங்களாக மாறி மாறி வந்திருக்கிறது ..
தமிழி என்ற எழுத்து இரண்டாக பிரிந்தது .. வட்டெழுத்து என்றும் இன்றைய தமிழ் எழுத்தின் மூலகூராகவும் வளர்ந்தது ..
வட்டெழுத்தில் ஒரு மாறுபட்ட வடிவமாக இன்றய மலையாள எழுத்து உள்ளது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

