செவ்வாய், 9 அக்டோபர், 2018

நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைதுக்கு காரணமான நக்கீரன் கட்டுரை

 
கிரிஜா வைத்தியநாதன்
ஸ்பெல்கோ :ஆசிரியர் நக்கீரன் கோபால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவி தொடர்பாக வெளியிட்ட கட்டுரையின் காரணமாகத்தான் கைது செய்துள்ளோம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கட்டுரை விவரம் அப்படியே ஆச்சு மாராமல் ஸ்பெல்கோ இதோ தருகிறது ..இதில் எங்கு தேச துரோகம் வருகிறது என்பதை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
நக்கிரனில் வந்த கட்டுரை ஆசிரியர் : தாமோதரன் பிரகாஷ், சி.என்.ராமகிருஷ்ணன்
ஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப் பட்ட நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் நெருக்கடியில் தள்ளியது பற்றிய திடுக்கிடும் உண்மைகள் ஒவ் வொன்றாக தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளது. காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகள், “சுவாதி கொலையில் சிக்கிய ராம்குமாரை சிறையிலேயே கதை முடித்ததுபோல, நிர்மலா தேவிக் கும் குறிவைக்கப்பட்டது’ என அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார்கள்.
நிர்மலாவை ஏன் கொலை செய்ய வேண்டும்? யார், அதன் பின்னணி என விரிவாகக் கேட்டோம்.””ஏற்கனவே நிர்மலாவைப் போலவே மிக பிரபலமான செக்ஸ் வழக்கில் சிக்கிய டாக்டர் பிரகாஷை ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளேயே அவரது வழக்கை நடத்தி தண்டனையும் பெற்றுத் தந்தார்கள். அதுபோலவே நிர்மலா தேவி வழக்கையும் கொண்டு செல்கிறார்கள். அது முடியாவிட்டால் சிறைக்குள்ளே அவரை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தார்கள். இது நிர்மலா தேவிக்கே தெரியும் என்பதால்தான், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது’ என நீதிமன்றத்தில் கதறியிருக்கிறார் நிர்மலா தேவி” என விரிவாகவே சொன்னார்கள்.

நிர்மலா ஆளுனர் தொடர் எதிரொலி நக்கீரன் கோபால் தேசத்துரோக .. இதில் எங்கய்யா தேச துரோகம் இருக்கு ..?

splco.me -Splco Media : கைது செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் ஆசிரியருமான கோபால் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனே செல்வதற்காக இன்று காலை 7 மணியளவில் சென்னை விமானநிலையம் வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலை காவல் உதவி ஆணையர் விஜயகுமார் கைது செய்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோபால், காலை 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீது ஆளுநரின் தனிச்செயலாளர் அளித்த புகாரின் பேரில் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரின் தனிச்செயலாளரின் புகாரை அடுத்து ஜாம்பஜார் காவல் ஆய்வாளர் முருகேசன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

நக்கீரன் கோபால் விடுதலை ... வழக்கை தள்ளுபடி செய்தது எழும்பூர் நீதிமன்றம்

நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது - எழும்பூர் நீதிமன்றம்மாலைமலர் :சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுதலை செய்வதாக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மன்சூர் அலிகானின் 3 வது மனைவிமீது 2 ஆவது மனைவியின் வாரிசுகள் தாக்குதல் .. இரும்பு கம்பியால்

தாக்குதல்vikatan.com கலிலுல்லா.ச : மன்சூர் அலிகானின் 3-வது மனைவி வஹிதாவை, 2-வது மனைவியின் வாரிசுகள் இரும்புக் கம்பி கொண்டு தாக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லன் நடிகராகத் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மன்சூர் அலிகான். பொதுப் பிரச்னைகளுக்கு, அவ்வப்போது கருத்து தெரிவித்து வருபவர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு ஒரே கூட்டுக் குடும்பமாக வசித்துவருகிறார். மன்சூர் அலிகானின் இரண்டாவது மனைவி  பேபி என்கிற ஹமீதாவின்  வாரிசுகளான மகள் லைலா அலிகான் (22)  மகன் மீரான் அலிகான் ஆகியோர் மன்சூர் அலிகானின் 3-ஆவது மனைவி வஹிதாவை இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வஹிதா, ரத்தக் காயத்துடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன்மீது தாக்குதல் நடக்கும் போது, மன்சூர் அலிகான் வேடிக்கைபார்த்ததாகவும், மன்சூர் அலிகான், ஹமீதா,  லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

நக்கீரன் கோபால் கைது .. சென்னை விமான நிலையத்தில் ... காரணம் தெரிவிக்க மறுப்பு

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரக போலீசார் கைது செய்துள்ளனர். நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த கைதுக்கு பிறகு அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்கு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
Tamil.thehindu.com : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மே 22-ம் தேதி கலவரமாக மாறியது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 173 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன் விசார ணையை சிபிசிஐடி வசம் தமிழக அரசு ஒப்படைத்திருந்தது.

ஓட்டுனர் விஜயகுமார் .. பிரேக் இல்லை ஷட்டர் இல்லை .. பேசியது குற்றமா? பழிவாங்க படுகிறார்

பராமரிப்பு இல்லை புலம்பும் விஜயகுமார் tamil.oneindia.com - emavandhana.:சென்னை: அப்படி என்ன கேட்டுவிட்டார் விஜயகுமார், "பிரேக் இல்லை... ஷட்டர் இல்லை... பஸ்ஸுக்குள்ள ஒழுகுது.. தொப்பலா நனையறேன்.. ஓட்டவே முடியல" என்ற ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்! இதுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார் டிரைவர் விஜயகுமார்!
கனமழை ஜோ..வென பெய்கிறது... அதில் நின்றபடி பேசுகிறார் விஜயகுமார், "நான் பழனி கிளை அரசு பஸ் டிரைவர் விஜயகுமார். திருச்சி ரோடுதான் எனக்கு பஸ் ரூட். காலைல 7 மணிக்கு திருச்சியிலிருந்து பழனிக்கு பஸ் ஓட்டிட்டு வந்தேன். மழையில் நனைஞ்சுட்டுதான் வண்டி ஓட்டினேன். என் பக்கத்தில ஷட்டர் இல்லை.
 இதனால் தொப்பலா நனைஞ்சுபோய் 4 மணி நேரமாக பஸ் ஓட்டிட்டு வர்றேன். எனக்கு காய்ச்சல் வந்து படுத்துக்கிட்டா யார் பொறுப்பு? இப்படிப்பட்ட பராமரிப்பு இல்லாத பஸ்களைதான் ஓட்ட தர்றாங்க. பிரேக் பிடிப்பதில்லை, ஷட்டர் இல்லை, பஸ் முழுசும் ஒழுகுது... இப்படி பஸ்ஸை கொடுத்து ஓட்டச்சொல்றாங்க. ஆனாலும் வண்டியை நிறுத்தவே இல்லை. எல்லாரையும் இப்பக்கூட பத்திரமா இறக்கிவிட்டுட்டுதான் நிக்கறேன்." என்று மழை வேகத்தை விட அதிகமாகவே கொட்டி தீர்த்தார் விஜயகுமார்!!

களநிலவரப்படி பாஜகவுக்கு படுதோல்வி .. ஆனால் பாஜக ஆட்சி அமைக்கும் ? மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் நான்கிலும் பிஜேபி...

Swathi K : தற்போதுள்ள கருத்து கணிப்பு, களநிலவரப்படி மத்திய பிரதேசம்,
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் நான்கிலும் பிஜேபி தோல்வி அடையும்.. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களில் நடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் பிஜேபி படுதோல்வி அடைந்துள்ளது..
ஆனால் இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள்... பிஜேபி வெற்றி பெற தன்னோட கிரிமினல்தனத்தை இனி தான் ஆரம்பிக்கும்.. என்ன நடக்கலாம் என்று சொல்கிறேன் (இது தான் குஜராத்தில் நடந்தது, கர்நாடகாவில் நடந்தது)..
இப்போது வரைக்கும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும்னு சொல்லும் அனைத்து மீடியாவும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பல்டி அடிக்க ஆரம்பிப்பாங்க பாருங்க அடுத்த வாரத்தில் இருந்து... ஆளும் பிஜேபிக்கு எதிராக பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை + ராகுல் தலைமையை மக்கள் ஏற்க மறுப்பு + மோடியின் கடைசி நேர பிரச்சாரத்தால் ஓட்டு விகிதம் கூடும் என்று கலர் கலராக கதைகள் விடுவார்கள்... பாருங்கள்..இவையெல்லாம் சேர்ந்து பிஜேபி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்து உருவாக்கப்படும் மீடியாக்கள் உதவியுடன்..
கடைசி நேர கணிப்புகள் பிஜேபி, காங்கிரஸ் இடையே போட்டி மிக நெருக்கமாக இருப்பதாகவும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு, பிஜேபி.. காங்கிரஸ்சை விட ஒரு சில இடங்கள் அதிகம் பெற வாய்ப்பு இருப்பது போல வரும்.. முடிவில் பிஜேபி, காங்கிரஸ்சை விட ஒவ்வொரு மாநிலத்திலும் சில சீட்டுகள் அதிகம் வாங்கி ஆட்சி அமைக்கும்.. இவ்வளவு தான் பிஜேபி அரசியல்.. இப்படி தான் நடந்து வருகிறது கடந்த இரண்டு வருடமாக..

மைத்ரி - ரணில் - மகிந்த ஆட்டம்?

Ajeevan Veer : மைத்ரிக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்று
ஜனாதிபதியாக வேண்டும் என ஆசை.
அடுத்த முறை அவருக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஐதேக முடிவெடுத்துள்ளது. அதை அவருக்கு சொல்லியும் விட்டார்கள்.
எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து நல்லாட்சியை கலைத்து இடைக்கால அரசொன்றை உருவாக்கும் முயற்சியொன்றில் மைத்ரி ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக மகிந்த தரப்பின் ஒத்துழைப்பை நாடியுள்ளார். மகிந்த தரப்பு FCIDயை ஒழித்து தங்களது ஆதரவாளர் ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கச் சொல்லி டிமான்ட் பண்ணியுள்ளது.
மகிந்த தரப்பின் தற்போதைய தேவை தமக்கான வழக்குகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதுதான். இப்போதைய நிலையில் ஆட்சியை பொறுப்பேற்க மகிந்த விரும்பவே மாட்டார். காரணம் இந்த இரண்டு வருடங்கள்தான் மகிந்த தரப்பு எடுத்த கடன்களின் வட்டியை ஒட்டு மொத்தமாக கட்ட வேண்டிய காலமாகும். இது அரசுக்கு ஒரு பெரிய சவால். இந்த நேரத்தில் மகிந்த, அரசை கையிலெடுக்க அவ்வளவு பைத்தியக்காரர் இல்லை.
தற்போதைய வாழ்கை சுமைகளால் அடுத்த தேர்தலில் மகிந்தவின் பக்கம் மக்கள் திரும்ப வாய்பாகும் என, அவர் நம்புகிறார்.
கடந்த முறை , ரணிலை வீட்டுக்கு அனுப்ப மைத்ரி நடத்திய நம்பிக்கையில்லா பிரேரணை படு தோல்வியில் முடிந்தது. கடைசியில், ரணிலை அனுப்ப ஓடித் திரிந்த 15 பேர் நடுத் தெருவுக்கு வந்ததுதான் மிச்சம். உள்ளூராட்சி தேர்தலில் வீழ்ச்சியடைந்திருந்த ரணிலின் செல்வாக்கு, நம்பிக்கை இல்லா பிரேரணைக்குப் பின்னர் உயர்ந்தது.

வீரப்பனை காட்டி கொடுத்த கோவை ஷண்முக பிரியாவுக்கு 5 கோடி ரூபாய்; வீட்டுமனை! இன்னும் கொடுபட வில்லையாம்

விகடன் :தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் வீரப்பன் மற்றும் அவரின்
கூட்டாளிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தபோது, அவர்களைக் கொல்வதற்கு இரண்டு மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
இந்த நிலையில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரின் குழந்தைகளை கோவையில் உள்ள வடவள்ளி பகுதியில் போலீஸார் தங்க வைத்தனர்.
அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன், முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களைப் பெறும்படி தனது குடும்ப நண்பரான சண்முகப்பிரியா என்ற பெண்ணின் உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து, முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களைப் பெற்று அதிரடிப் படையினருக்குத் தெரிவித்தார். குறிப்பாக வீரப்பன் நடமாட்டம் குறித்தும் வீரப்பனுக்குக் கண் பார்வை குறைந்திருப்பது குறித்தும் தகவல்களைச் சேகரித்து அதிரடிப் படையினரிடம் கொடுத்தார்.

மண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி...நினைத்ததை முடித்த நிர்மலா சீதாராமனும் , முகேஷும்..??

keeladi
keeladi
nakkheeran.in - annal: மத்திய தொல்லியல் துறை சார்பில் மதுரை அருகில் கீழடியில் தமிழக அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 முதல் இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இந்நிலையில் 2017 ஏப்ரலில் அவரை திடீரென அஸ்ஸாமுக்கு  இடம்மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு போன நிலையில் அவருக்கு பதில் ஸ்ரீராம் புதிய இயக்குனராக அகழாய்வு பணியை தொடங்கினார். அமர்நாத் நக்கீரனுக்கு அப்போது அளித்த பேட்டியில், இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன் ”அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் ”திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது  இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது. அதற்கான காரணத்தை கேட்டு விளக்கம் கேட்டுள்ளேன் என்றும் கூறியிருந்தார். அதை பேட்டியாக வெளியிட்டிருந்தோம்.

புலி ஆதரவு பிரசாரம் இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது .. பிணையில் விடுவிப்பு


இவரின் கணவர் மகேஸ்வரனை (நாடாளுமன்ற உறுப்பினர்) புலிகள் கொழும்பில் வைத்து சுட்டு கொன்றார்கள் . எனினும் தேர்தல் வாக்குகளை மனதில் வைத்துகொண்டு தனது கணவனை சுட்டு கொன்ற புலிகளுக்கு ஆதரவான கலரி ரசிகர்களை மனதில் வைத்து புலி பிரசார கருத்துக்களை கூறிவருவது தெரிந்ததே..
மாலைமலர் : புலிகள் குறித்து கருத்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த இலங்கை  மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய  இலங்கை மந்திரி விஜயகலா விடுதலைப்புலிகள் குறித்து பேசியது கடும் சர்ச்சையானது.
விஜயகலா பேசும் போது, “ தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை  அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்?
விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால்  புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும்.

திங்கள், 8 அக்டோபர், 2018

மோடி- எடப்பாடி; டெல்லி டீல்!.. .. டுபாக்கூர்களில் சந்திப்பு ..

மின்னம்பலம் :”பிரதமரை சந்தித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிரதமரைப் பார்த்துவிட்டு வந்ததும், ‘அண்ணாவுக்கும், அம்மாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கச் சொல்லி கேட்டேன். எம்.ஜி.ஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வைக்கச் சொல்லி கேட்டேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவை மானியங்களை வழங்கவும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை சீக்கிரம் அமைக்கவும் கேட்டுக் கொண்டேன். நிதி சம்பந்தமாக சில விஷயங்களைப் பேசினேன்...’ என ஆரம்பித்து ஃபைலில் என்னவெல்லாம் கொண்டு போனாரோ அத்தனையும் மீடியா முன்பு ஒப்பித்தார். இதெல்லாம் தெரிந்ததுதான். ஃபைலில் இல்லாதது என்ன பேசினார் எடப்பாடி என்பதை சொல்கிறேன்.
எடப்பாடியோடு அமைச்சர் ஜெயகுமாரும் டெல்லி வந்திருந்தார். தமிழக அரசின் மீது மத்திய அரசு கொஞ்சம் கோபத்தைக் காட்டி வந்தாலும், இந்த முறை எடப்பாடி அப்பாயின்ட்மெண்ட் கேட்டதும் கிடைத்தது. ‘நாங்க கேட்டதும் எங்களை பார்க்க நேரம் ஒதுக்கியதுக்கு நன்றி’ என்று உள்ளே சென்றதுமே பிரதமரிடம் முதல்வர் சொல்லியிருக்கிறார். அதன் பின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டு எடுத்துக் கொண்டு போன கோரிக்கைகள் அடங்கிய ஃபைலை பிரதமரிடம் கொடுத்திருக்கிறார் .

பாலியல் தேவைக்காக ராணுவ ரகசியங்களை லீக் செய்த அகர்வால் .. நாக்பூர்

ndtv.com :"ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுக்கு தெரிவித்த புகாரில் பாதுகாப்புத்துறை ஊழியர் கைது" மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஒருவர் பாதுகாப்பு ஆவணங்களை உளவு பார்த்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அதிரடி ஆய்வை உத்தரப்பிரதேச போலீசாரும், மகாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு படையினரும் மேற்கொண்டனர். இதில் நிதிஷ் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள நிஷாந்த் அகர்வால் மகாராஷ்டிராவின் நாக்பூரில் செயல்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணையை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த பிரிவு டி.ஆர்.டி.ஓ.வின் கீழ் செயல்படுகிறது.
பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில் நுட்ப பிரிவில் கடந்த 4 ஆண்டுகளாக நிஷாந்த் பணியாற்றியுள்ளார். குருக்ஷேத்ராவில் உள்ள என்.ஐ.டி.யில் தங்கப் பதக்கம் பெற்றவர் நிஷாந்த் அகர்வால்.
“ஹனி ட்ரேப்” எனப்படும், பெண்களை பயன்படுத்தி காரியம் சாதிப்பதன் மூலமாக, நிதிஷ் குமாரை வசப்படுத்தி பாகிஸ்தான் அதிகாரிகள் தகவலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடலூர் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவை பரப்பிய வாலிபர்

வெப்துனியா :பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் பகுதியியில் வசிக்கும் மாணவி, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு சதீஷ் என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையின் போது, மாணவியை ஆசை வார்த்தை கூறி பள்ளி வளாகத்திற்கு வரவழைத்த அந்த வாலிபர், அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
இதில், அந்த மாணவி மயக்கமடைய, அதை பயன்படுத்தி அவரை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்-அப் மூலம், இந்த வீடியோ பலருக்கும் பரவ இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. எனவே, இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி, சதீஷை கைது செய்த போலீசார் அவரை கடலூர் சிறையில் அடைத்தனர்.

சேலம் பசுமை வழிச்சாலை.. மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு.. உயர்நீதிமன்றம்

8 வழிச்சாலை வழக்கு - அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்மாலைமலர் : சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ChennaiSelamExpressWay #MadrasHC சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலைக்கு சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்தனர். தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆர்வம் காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கு விசாரணைக்காக அரசு வழக்கறிஞரை பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டுமா?.
எந்த தகவலும் இல்லை அவகாசம் வேண்டும் என்றே கூறுகின்றீர்கள். என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வெட்டிய மரங்களுக்கு பதிலாக எத்தனை மரங்கள் நடப்பட்டன?. சட்ட விரோதமாக மரம் வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்

இரத்த அழுத்த அளவு 70-140.இனி நார்மல் இல்லையாம்? புது BP வியாபாரம்

முன்பெல்லாம் 150 | 60 தாங்க நார்மல் B.P .. 
 பின்னாடி 140 | 70 யா குறைந்தது ... 
இனி 130 | 80 அடுத்து 120 | 90 ...வியாபாரம்? 
Balu subramanian : இது தாங்க மருத்துவ வியாபாரம். உஷார்....
பாருங்க நாம இவ்வளவு நாள் என்ன நினைச்சோம் B.P. யின் அளவு 70-140....
70 கீழ போன Low B.P 140க்கு மேல போன High B.P ன்னு நினைத்தோம் ... அதுக்கு மருந்து மாத்திரை வாங்கி சாப்டாங்க .... இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் மருந்து மாத்திரை வியாபாரம் உலகம் பூரா நடக்குது....
ஆனா அந்த பல லட்சம் கோடி போதாதுன்னு இப்ப இந்த B.P அளவை இப்போ மாத்தி அமைச்சி இருக்காங்க...
அதாவது இனிமே 130க்கு மேல High B.P.. 80க்கு கீழ இருந்த Low B.P..
இதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வரையரை செய்து இருக்கு.
இதன் மூலம் மேலும் 3 கோடி பேர் அமெரிக்காவில் மட்டும் கூடுதலா மருந்து மாத்திரை வாங்கி சாப்டாகணும்.
அனைத்துக்கும் அமெரிக்காவை உதாரணம் காண்பிக்கும் நம்ம ஊர் டாக்டர்கள் இதை அப்படியே உங்கள் கிட்ட சொல்லி உங்களை B.P. நோயாளியாக மாத்துவாங்க ...
பின்ன எப்படிங்க மருந்து கம்பெனிகள் கிட்ட அதிகமா மாத்திரை மருந்து எழுதி கொடுத்ததுக்கு கமிஷன் கேட்க முடியும் .... இல்லை வெளிநாட்டு டூர், கார்னு கேட்க முடியும்..

பால் கொடுத்தேன் வலித்தது....குழந்தைய கொன்னுட்டேன் .. தாயின் வாக்குமூலம்

போலீசில் புகார் tamil.oneindia.com - hemavandhana : சென்னை: "புழுக்கமா இருந்தது... கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினோம்..
விடிகாலை 3 மணிக்கு அழுத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்கினேன்... காலைல பார்த்தா என் குழந்தையை காணோம்... எப்படியாவது கண்டுபிடிச்சு குடுத்துடுங்க சார்.. ப்ளீஸ்" என்று கண்ணீருடன் போலீசில் கதறினார் இளம் தாய்.
சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி வெங்கண்ணா - உமா. இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்புதான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சார்விக் என்று பெயரிட்டார்கள் போலீசில் புகார் இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால், கதவை திறந்துவைத்து தூங்கி கொண்டிருந்தபோது குழந்தையை யாரோ தூக்கி சென்று விட்டதாக பெற்றோர் போலீசில் புகார் சொன்னார்கள். இதையடுத்து வேளச்சேரி போலீசார் துரிதமாக விசாரணையில் இறங்கினர். 2 மாத குழந்தையை காணோம் என்று நேற்றெல்லாம் வேளச்சேரி பகுதியில் ஒரே பரபரப்பாக இருந்தது.

திராவிடத்துக்குள் பகை மூட்டிய பகை

வனத்தையன் தமிழரிமா :  1971 ல் தி.மு.க. வின் வெற்றியை சகிக்காமல் அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழின அடையாளங்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முடிவு கட்டினால்தான் அகண்ட பாரதம் சாத்தியம், பார்ப்பன மேலாதிக்கம் சாத்தியம், இந்து ராஜ்ஜியம் சாத்தியம் என்று எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வுக்குள் கலகம் விதைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் வள்ளல்தன அறிவிப்புகள் பலவும் ஏட்டு சுரைக்காய் மட்டுமே..... ஜெயலலிதாவின் 110 விதியின் கீழ் அறிக்கைகளை போல. விவசாயியாகவும், தொழிலாளியாகவும், மீனவ நண்பனாகவும் நடித்து விட்டு, அதே மக்களை தேவாரம்-மோகன்தாஸ் தலைமையிலான காவல்துறை அடியாட்களை ஏவிக் கொடூரமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர். அவரை மனிதநேயர், வள்ளல் என்பது நிகழ்கால வரலாற்றையே திரித்துப் புரட்டுவதாகும். இந்த உண்மையை மறைத்து, தெரிந்தே பார்ப்பன ஊடகங்களும் , சூத்திர பிழைப்புவாத ஊடகங்களும், சாதி சங்க தலைவர்களும் , சினிமாக்காரர்களும் புளுகித் திரிந்தனர்.

இந்தோனேசியா சுனாமி 1,763 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியா சுனாமி 1,763 பேர் பலி!மின்னம்பலம் : இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,763 பேராக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் செய்தி நிறுவனமான ஏஎஃப்பி நேற்று (அக்டோபர் 7) செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: செப்டம்பர் 28 ஆம் தேதியன்று இந்தோனேசியாவிலுள்ள சுலாவேசி தீவை பூகம்பமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் 1,763 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் காணாமல் போய் உள்ளனர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிலை கடத்தல் .. பெண் தொழிலதிபர் கிரண் ராவ் வெளிநாடு செல்ல தடை ..


தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் கிரண்ராவுக்கு ‘லூக் அவுட்’ நோட்டீஸ்தினத்தந்தி : கிரண்ராவ், வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருபவர் ரன்வீர்ஷா. தொழில் அதிபரான இவரது வீட்டில் பழமையான கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 இதையடுத்து அவரது தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் கலைநயமிக்க கல்தூண்கள், பழமையான கோவில் சிலைகள் உள்பட 91 கலைப் பொருட்கள் சிக்கியது.
 இதையடுத்து ரன்வீர்ஷா சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் வெளிநாடு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லூக் அவுட்’ நோட்டீசு அனுப்பப்பட்டது.

.7 கோடி மதிப்புள்ள விண்கல் – 30 ஆண்டுகளாக கதவு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட அவலம்!

ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல் – 30 ஆண்டுகளாக கதவு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட அவலம்!
metiroid_09362  ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல் - 30 ஆண்டுகளாக கதவு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட அவலம்! metiroid 09362vikatan : மிகவும் பெரிய மற்றும் விலைமதிப்பு மிக்க விண்கல்லை ஒருவர் தன் வீட்டுக் கதவுக்கு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் மெக்‌ஷிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் (Mona Sirbescu) அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த ஒரு கல்லை கொடுத்து சோதனை செய்யக் கூறியுள்ளார்.
ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 30 வருடங்களாகக் கதவில் முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தது விண்கல் எனச் சோதனையில் தெரியவந்துள்ளது.
இது 1930-ம் வருடம் மெக்சிகனின் எட்மோட் பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்தது என மோனா தெரிவித்துள்ளார். இந்த விண்கல்லின் விலை தற்போது 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூபாயில் 7.37 கோடி) இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

குஜராத் . பாலியல் வல்லுறவு: பயத்தில் தொழிலாளர்கள்!

பாலியல் வல்லுறவு: பயத்தில் தொழிலாளர்கள்!
மின்னம்பலம் : 14 மாத பெண் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் எதிரொலியாக குஜராத்தில் பிற மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்துக்கு வேலைத் தேடி நாள் தோறும் உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து செல்கின்றனர். அவர்கள், அங்குக் கட்டட வேலை, ஓட்டல்களில் சப்ளயர், வியாபாரம் போன்ற பலதொழில்களைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் குஜராத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தை பிகாரைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வல்லுறவைக் கண்டித்து குஜராத் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, பாலியல் வல்லுறவு போன்ற பிற வழக்குகளில் சுமார் 150 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்த பெரும்பாலானவர்கள் ,உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் பிறமாநிலத்தவர்களை கண்டாலே குஜராத் மக்கள் அடிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பயந்து அங்கு வேலை செய்யும்பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஸ்டாலின் : தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது

tamil.indianexpress.com :மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை தள்ளிவைத்ததில் நியாயம் இல்லை என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - தீர்ப்புக்கு எதிராக சென்னை, டெல்லி, பெங்களூருவில் பக்தர்கள் போராட்டம்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - தீர்ப்புக்கு எதிராக சென்னை, டெல்லி, பெங்களூருவில் பக்தர்கள் போராட்டம்மாலைமலர் : சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரளான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் சென்னை, பெங்களூருவிலும் போராட்டம் நடைபெற்றது. புதுடெல்லி : சபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கிடையே, இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது. நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே சிலர் தீர்ப்புக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ’ஐய்யப்ப நம ஜப யாத்ரா’ எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளை நிற சேலை அணிந்த திரளான பெண்கள் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.