செவ்வாய், 9 அக்டோபர், 2018

களநிலவரப்படி பாஜகவுக்கு படுதோல்வி .. ஆனால் பாஜக ஆட்சி அமைக்கும் ? மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் நான்கிலும் பிஜேபி...

Swathi K : தற்போதுள்ள கருத்து கணிப்பு, களநிலவரப்படி மத்திய பிரதேசம்,
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் நான்கிலும் பிஜேபி தோல்வி அடையும்.. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடங்களில் நடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்திலும் பிஜேபி படுதோல்வி அடைந்துள்ளது..
ஆனால் இனி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள்... பிஜேபி வெற்றி பெற தன்னோட கிரிமினல்தனத்தை இனி தான் ஆரம்பிக்கும்.. என்ன நடக்கலாம் என்று சொல்கிறேன் (இது தான் குஜராத்தில் நடந்தது, கர்நாடகாவில் நடந்தது)..
இப்போது வரைக்கும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும்னு சொல்லும் அனைத்து மீடியாவும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பல்டி அடிக்க ஆரம்பிப்பாங்க பாருங்க அடுத்த வாரத்தில் இருந்து... ஆளும் பிஜேபிக்கு எதிராக பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை + ராகுல் தலைமையை மக்கள் ஏற்க மறுப்பு + மோடியின் கடைசி நேர பிரச்சாரத்தால் ஓட்டு விகிதம் கூடும் என்று கலர் கலராக கதைகள் விடுவார்கள்... பாருங்கள்..இவையெல்லாம் சேர்ந்து பிஜேபி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்து உருவாக்கப்படும் மீடியாக்கள் உதவியுடன்..
கடைசி நேர கணிப்புகள் பிஜேபி, காங்கிரஸ் இடையே போட்டி மிக நெருக்கமாக இருப்பதாகவும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு, பிஜேபி.. காங்கிரஸ்சை விட ஒரு சில இடங்கள் அதிகம் பெற வாய்ப்பு இருப்பது போல வரும்.. முடிவில் பிஜேபி, காங்கிரஸ்சை விட ஒவ்வொரு மாநிலத்திலும் சில சீட்டுகள் அதிகம் வாங்கி ஆட்சி அமைக்கும்.. இவ்வளவு தான் பிஜேபி அரசியல்.. இப்படி தான் நடந்து வருகிறது கடந்த இரண்டு வருடமாக..

இப்படி தான் வரும் தேர்தலில் நடக்கும் என்று சொல்லவில்லை.. ஆனால் நடக்க வாய்ப்பு இருக்கிறது..
கடந்த மூன்று வருடத்தில் நடந்த MP, MLA இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், யுனிவர்சிட்டி/ காலேஜ் தேர்தல் என எல்லாவற்றிலும் 85% இடங்களில் பிஜேபி தோற்றுப்போயுள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் மாநில சட்டசபை தேர்தலில் மட்டும் அவர்கள் வெற்றி பெற்றுத்தான் வருகிறார்கள்.
இது எப்படி நடக்கிறது?
மீடியாவை கைக்குள் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கருத்துக்கணிப்பை தனக்கு சாதமாக கொண்டுவந்து.. அப்புறம் கருத்துக் கணிப்புப்படி ரிசல்ட் கொண்டுவர கிரிமினல்தனம் செய்யும் கூட்டம் தான் மோடி, அமித்ஷா & கோ.
இங்கு தேர்தல் முடிவுகளை மக்கள் எடுக்கவில்லை.. அமிட்ஷா எடுக்கிறார்.. வெற்றி பெறுவோம் என்று மோடி மேடையில் முழங்குகிறார்.. தேர்தல் நாடகம் அரங்கேறுகிறது மீடியா மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன்.. இது தான் பிஜேபி அரசியல்..
VVPAT ரெசிப்டை எண்ணி EVM மெஷின் ஓட்டு எண்ணிக்கையுடன் சரி பார்த்தால் மட்டும் தான் உண்மை தெரியவரும்.. மற்றபடி இந்த கோல்மால் கண்டுபிடிக்கவே முடியாது. குஜராத் தேர்தல் முடிவில் இருந்தே காங்கிரஸ் இதை வலியுறுத்தி வருகிறது.. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.. (Pls check my post about EVM machine rigging in the comments section).
இன்னும் நம்பிக்கை இல்லை என்றால் Dec 11 தேர்தல் முடிவு வரும் வரைக்கும் பொறுத்திருந்து பாருங்கள்.. நான் சொன்னது தான் குஜராத்தில் நடந்தது.. கர்நாடகாவில் நடந்தது.. இனியும் அது தான் நடக்க வாய்ப்பு அதிகம். இது தான் நடக்கும் என்று சொல்லவில்லை... ஆனால் இது நடக்க வாய்ப்பு அதிகம்..
காங்கிரஸ் கட்சி கவனமாக இருப்பது நல்லது..
குறிப்பு: கமெண்ட்டில் EVM கோல்மால் (Microchip level) பற்றி குஜராத் தேர்தலுக்கு முன்னர் நான் பதிவிட்டதை பகிர்ந்துள்ளேன்.. கண்டிப்பாக படிக்கவும்..

கருத்துகள் இல்லை: