திங்கள், 8 அக்டோபர், 2018

.7 கோடி மதிப்புள்ள விண்கல் – 30 ஆண்டுகளாக கதவு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட அவலம்!

ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல் – 30 ஆண்டுகளாக கதவு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட அவலம்!
metiroid_09362  ரூ.7 கோடி மதிப்புள்ள விண்கல் - 30 ஆண்டுகளாக கதவு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட அவலம்! metiroid 09362vikatan : மிகவும் பெரிய மற்றும் விலைமதிப்பு மிக்க விண்கல்லை ஒருவர் தன் வீட்டுக் கதவுக்கு முட்டுக்கொடுக்கப் பயன்படுத்திய அவலம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் மெக்‌ஷிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம் (Mona Sirbescu) அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டில் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப்பட்டிருந்த ஒரு கல்லை கொடுத்து சோதனை செய்யக் கூறியுள்ளார்.
ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 30 வருடங்களாகக் கதவில் முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தது விண்கல் எனச் சோதனையில் தெரியவந்துள்ளது.
இது 1930-ம் வருடம் மெக்சிகனின் எட்மோட் பகுதியில் உள்ள விளைநிலத்தில் விழுந்தது என மோனா தெரிவித்துள்ளார். இந்த விண்கல்லின் விலை தற்போது 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூபாயில் 7.37 கோடி) இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி விளக்கமளித்த மோனா, “ இந்தக் கல்லை நான் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஆய்வு மையத்தில் கொடுத்து உறுதி செய்தேன்.
தற்போது அதை விலை கொடுத்து வாங்க அனைவரும் போட்டிபோடுகின்றனர். மற்ற அனைத்து விண்கல்லிலும் 90 முதல் 95 சதவிகிதம் இரும்பு இருக்கும் ஆனால் இந்தக் கல்லில் 88 சதவிகிதம் இரும்பும் 12 சதவிகிதம் நிக்கலும் உள்ளது.
இது இக்கல்லில் தனி சிறப்பு. என் வாழ்நாளில் இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த கல்லை நான் ஆராய்ச்சி செய்ததில்லை. சோதனையின் முடிவில் தொடக்க கால சூரிய மண்டலத்தின் அங்கம் தற்போது என் கைகளில் கிடைத்துள்ளதாக உணர்ந்தேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கல்லை வைத்திருந்தவர் கூறும் போது, “ நான் தற்போதுள்ள இந்த நிலத்தைக் கடந்த 1988-ம் வருடம்தான் வாங்கினேன்.
அப்போது நிலத்துடன் சேர்ந்து இந்தக் கல்லும் எனக்குக் கிடைத்தது. நிலத்தின் முன்னாள் உரிமையாளர் 1930-ம் வருடம் தன் நிலத்தில் இந்தக் கல் இருந்ததாகக் கூறினர்.
நீண்ட நாள்களாக இந்தக் கல்லை பற்றி ஏதோ ஒரு சந்தேகம் எனக்குள் இருந்தது அதை உறுதி செய்யவே தற்போது கல்லை சோதனைக்கு அளித்தேன்” எனக் கூறியுள்ளார். இதுவரை பூமியில் விழுந்த விண்கற்களில் இதுவே பெரியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: