மாலைமலர் :காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம்
தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றி உள்ளது.
சென்னை:<
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்
கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி
வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்
என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த
முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர்
அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. தி.மு.க. செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன்,
முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள்
என மொத்தம் 517 பேர் கலந்து கொண்டனர்.வெள்ளி, 30 மார்ச், 2018
ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. முடிவு
மாலைமலர் :காவிரி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 2-ம்
தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த தி.மு.க. செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றி உள்ளது.
சென்னை:<
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்
கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி
வருகின்றன. 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்
என சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு முடிந்தும் காவிரி பிரச்சனையில் எந்த
முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர்
அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. தி.மு.க. செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன்,
முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள்
என மொத்தம் 517 பேர் கலந்து கொண்டனர்.அதிமுக எம்பிக்கள் பதவி விலகவும் மாட்டாரகள் .. தற்கொலை செய்யவும் மாட்டார்கள் .. ஒரு நாள் உண்ணாவிரதம் ..
காவிரி பிரச்சினையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், அதற்கு 6 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், காவிரி நீர் கர்நாடகாவுக்கு சொந்தமல்ல என்றும் ஆணித்தரமாக தெரிவித்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. 6 வார காலத்திற்குள் வாரியத்தை அமைக்க அழுத்தம் தரவேண்டும் என மாநில அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதிமுக சார்பில் ஒரே பதில் 6 வாரம் இருக்கிறது, பொறுமை காப்போம் என்று கூறிவந்தனர்.
மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வருகை
tamilthehindu :இஸ்லமாபாத் விமான நிலையத்தில் குடும்பத்தினருடன் மலாலா
அமைதிக்கான நோபல் விருதை பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான மலாலா ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார்.
தற்போது 20 வயதாகும் மலாலா பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.
பின்னர் சிகிச்சைக்காக லண்டன் அனுமதிக்கப்பட்ட மலாலா, அதன் பின்னர் உடல் நலம் பெற்று தொடர்ந்து மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டு வருகிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புதன்கிழமையன்று ரகசியாக குடும்பத்தினருடன் மலாலா பாகிஸ்தான் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியது. இஸ்லமாபாத் விமான நிலையத்தில் மலாலா அமர்திருக்கும் புகைப்படங்களும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சென்றுள்ள ‘Meet the Malala’ என்ற நிகழ்சியில் மலாலா பங்கேற்கிறார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரியையும் சந்திக்கிறார். மலாலா பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை இன்று (வியாழக்கிழமை) சந்திக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புதன்கிழமையன்று ரகசியாக குடும்பத்தினருடன் மலாலா பாகிஸ்தான் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியது. இஸ்லமாபாத் விமான நிலையத்தில் மலாலா அமர்திருக்கும் புகைப்படங்களும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சென்றுள்ள ‘Meet the Malala’ என்ற நிகழ்சியில் மலாலா பங்கேற்கிறார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரியையும் சந்திக்கிறார். மலாலா பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை இன்று (வியாழக்கிழமை) சந்திக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 4 லோக்சபா சீட்தான்… கடந்த கால புள்ளி விபரங்கள் ...
tamiloneindia :காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற வியூகம்?-சென்னை:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 4 லோக்சபா இடங்கள்தான் ஒதுக்கப்படும் என திமுக மூத்த தலைவர் ஒருவர் கறாராக பேசியிருப்பது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேற்றத்தான் இப்படி 2-ம் கட்ட தலைவரை வைத்து திமுக மேலிடம் பேசுகிறது என குமுறுகின்றனர் கதர்சட்டைகள்.
2014 லோக்சபா தேர்தலின் போதே திமுகவை வேறு கூட்டணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர் வடமாவட்ட திமுக பிரமுகர். திமுகவில் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து இருக்கக் கூடிய சீனியர் இவர்தான்
திமுக மேலிடத்தின் நிழலாக வலம் வரும் இந்த தலைவர்தான் அண்மையில் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேசுகையில், உங்களுக்கு லோக்சபா தேர்தலில் 4 சீட்டுதான்.. இதுவே அதிகம்..
இதை ஏற்றுக் கொண்டால்… இந்த 4 லோக்சபா தொகுதிகளுக்குள் இருக்கும் ‘ஜெயிக்கக் கூடிய’ சட்டசபை தொகுதிகள் அது 10 அல்லது 15 ஆக கூட இருக்கலாம் அதுவும் உங்களுக்கு என பேசியிருக்கிறார்.
இதை கேட்ட கதர்த்தலைவர் கொந்தளித்திருக்கிறார். ஆனால் திமுக மூத்த பிரமுகரோ சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் நீக்கம் ? மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்
tamilthehindu :ஆர்.ஷபிமுன்னா ;புதுடெல்லி<
தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி
ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகக்
கூறப்படுகிறது.
தமிழகத்தில் ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம்
300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த
கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது.
இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜூலை 5, 2012-ல் கோரப்பட்ட
டிஜிட்டல் உரிமம் கிடைக்காமல் இருந்தது. பிறகு பிரதமராக பொறுப்பேற்ற
மோடியுடன் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இருந்த நட்பு
காரணமாக டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு ஆகஸ்ட் 2014-ல்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த
பரிந்துரை கணக்கில் கொள்ளப்படவில்லை. இதற்கு காரணமாக அப்போது இரு
அரசுகளுக்கு இடையே நிலவிய நட்பு ரீதியான அரசியல் சூழல் தற்போது மாறி
வருகிறது.
திமுக ஈரோட்டு மாநாடு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது .. மாநிலத்துக்கும் மத்திக்கும்
மம்தா பானர்ஜி கலைஞரை சந்திக்க சென்னை வருகிறார்
தினமலர் :சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க வரும் ஏப்.,11-ம் தேதி சென்னை வருகிறார்
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியானது.. சில பள்ளிகளும் பயிற்சி மையங்களும் விசாரணையில் . :
தினமணி : சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரம்: பிரதமர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மார்ச் 30, 2018, 02:08 AM
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியாகி இருப்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி முறையின் தோல்விக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. மறுதேர்வு என்பது 28 லட்சம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், தேசிய கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகர்ப்பதாகும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் :புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமலர் :புதுடில்லி : சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. இதில், பள்ளி நிர்வாகிகளும், பயிற்சி மையத்தினர் சிலரும் சிக்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய முடிவு ..... ?
tamiloneindia :சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் உட்பட 6 பேர் மட்டும் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கெடுவும் முடிந்துவிட்டது.அதனால் அதிமுக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் ராஜினாமாவுக்கு பதில் தற்கொலை செய்வோம் என்றார் அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்.
இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் அருண்மொழித் தேவன், குமார் ஆகிய 2 பேர் ராஜினாமா செய்யப்
வியாழன், 29 மார்ச், 2018
கமலஹாசன் பாஜகவின் Sleeper cell தான்.. முதலில் அம்பலப்படுத்தப்பட வேண்டிய அயோக்கியன்..
Vivek. May17movement.. :கமலஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து சொல்லப் போகிறேன் என சொல்லி வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமர்கிறார்.
முழுக்க முழுக்க மாநில அரசைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இவர்கள் யார் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துகிறார்களோ, அவர்களுக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்று காட்டமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.
பத்திரிக்கையாளர் ஒருவர் இடையில் கேட்கிறார். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டியது மத்திய அரசு, ஆனால் நீங்கள் மாநில அரசை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது என கேட்கிறார்.
உடனே கமலஹாசன் பம்மிக் கொண்டு, மோடி அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் சொல்ல முடியாது. அவர் நமது மதிப்பிற்குரிய பிரதமர்(Note the word: Honorable Prime Minister). நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தான் நான் கேட்க முடியும் என்று முடிக்கிறார்.
மத்திய அரசுக்கு உங்கள் கோரிக்கை என்ன என்று மீண்டும் கேட்கிறார் பத்திரிக்கையாளர். அவ்வளவு நேரம் மாநில அரசைப் பற்றி காட்டமாக பேசிக் கொண்டிருந்த கமலஹாசன் தனது குரல் டோனை இறக்கி, ”Please Sir, உங்களுக்கு காவிரி மேலாண்மை “திட்டத்தை” அமைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. நீங்கள் அதை அமைக்க வேண்டும்”.
காவிரி மேலாண்மை வாரியம் .. கெடு முடிந்தது ... எடப்பாடியும் பன்னீரும் ஆலோசனை ...
tamiloneindia - Veera Kumar :
காவிரி மேலாண்மை வாரியம் கெடு இன்றுடன் முடிவடைகிறது சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த 6 வார காலக்கெடு இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள் அவசரமாக ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள்.
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தது. அதில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றுடன் கெடு நிறைவு காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க செயல் திட்டத்தை 6 வாரங்களில் வகுத்திருக்க வேண்டும். இந்த காலக்கெடு இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது.
அம்பேத்கார் பெயரில் 'ராம்ஜி' சேர்க்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு ஆர் எஸ் எஸ் வியாதிகளின் புதிய கண்டுபிடிப்பு
தினமணி :உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்
என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி
குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை
பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று,
உத்தரப்பிரதேச அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை
பிறப்பித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள 'மோ' என்ற
இடத்தில் 1891, ஏப்ரல் 14ல் பிறந்தார். இவருடைய தந்தை ராம்ஜியும்,
பாட்டனாரும் ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். விடுதலை
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக
விளங்கியவர், ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்லாலு பிரசாத் :நிதிஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை முடிந்தது
மின்னம்பலம்: பிகார்
முழுவதும் வன்முறையும் கிளர்ச்சியும் பரவியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய லாலு
பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு
வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு கால்நடைத் தீவன முறைகேட்டு வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ராஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்துக்கொண்டே வந்ததால் உயர் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடல் ... பராமரிப்பு பணிக்காகவாம்
மின்னம்பலம்: பராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது.தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை நிறுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.
சசிகலா வைகோ சந்திப்பு .... பழங்கணக்கு பார்க்கிறார்களோ ?
மின்னம்பலம் :“சசிகலாவின்
கணவர் நடராஜன் மறைவுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல், ஸ்டாலின் உட்பட
அனைவருமே சென்று அஞ்சலி செலுத்தினார்கள். எடப்பாடியோ அதிமுகவில் இருந்து
வேறு எவருமோ அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது.
நடராஜனுக்கு நெருக்கமான நண்பராக இருந்த வைகோவும் நடராஜன் உடலுக்கு அஞ்சலி
செலுத்தியது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் வைகோ நேற்று
மீண்டும் தஞ்சாவூர் போயிருந்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு சென்று
பழ.நெடுமாறனை சந்தித்துப் பேசினார். பிறகு, நடராஜன் அடக்கம் செய்யப்பட்டு
இருந்த இடத்துக்கு நெடுமாறனுடன் சென்று மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் நிற்கவில்லை. நேற்று இரவே சசிகலா தங்கியிருந்த நடராஜன்
வீட்டுக்குப் போனார் வைகோ.வைகோ வருகிறார் என்ற தகவல் சொல்லப்பட்டதும், சசிகலாவும் தயாராகவே காத்திருந்தார். சசிகலாவிடம் நடராஜன் பற்றிய பல நினைவுகளை சொல்லி கண்கலங்கினாராம் வைகோ. தனக்கும் நடராஜனுக்குமான நட்பு, கட்சி என்ற பாகுபாடெல்லாம் தாண்டியது என்றும், கடைசி வரையில் தனக்கு நல்ல நண்பராக நடராஜன் இருந்தார் என்று வைகோ சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட நண்பரான வைகோவின் பெயர் நடராஜன் படத்திறப்பு நிகழ்வு அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அதுபற்றியும் தனது வருத்தத்தை தனது பேச்சினிடையே சசிகலாவிடம் பகிர்ந்துகொண்டாராம் வைகோ.
அதற்கு சசிகலா, ‘உங்களை ஒதுக்க வேண்டும் என எங்களுக்கு எந்த நோக்கமும் இல்ல. உங்க நட்பும் எனக்கு நல்லாவே தெரியும். ஆனால், நீங்க இப்போ இருப்பது திமுக கூட்டணியில். எடப்பாடிக்கும் எங்களுக்கும் ஆயிரம் வருத்தங்கள் இருந்தாலுமே அக்காவுக்கு ஒரே எதிரி என்றால் அது திமுக தான். அவங்களோட நீங்க இருக்கும் போது உங்க பெயரை எப்படி அழைப்பிதழில் போட முடியும்? ஆரம்பத்துல நீங்க அக்காவை உடன்பிறவா சகோதரி என்றெல்லாம் சொல்லிட்டு இருந்தீங்க.ஆனால், இப்போ அப்படி இல்லையே... ஆயிரம்தான் இருந்தாலும் திமுக எங்களுக்கு எதிரிதானே...’ என்று சொன்னாராம் சசிகலா. திருமாவளவன், சீமான் ஆகியோர் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
டாடா மோட்டார்ஸின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து !
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்.. ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு
தினதைந்தி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கல்லூரி
மாணவ-மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு
மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது
அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடக்கோரி கோஷமிட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது. மாணவர்கள் திடீர், திடீரென போராட்டம் நடத்தி வருவதால்
கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கேரளா.. சாதியும் மதமும் வேண்டாம் ! 1,24 லட்சம் மாணவர்கள் அறிவிப்பு!
மின்னம்பலம்: கேரளாவில் நடப்புக் கல்வியாண்டில் 1.24 லட்சம் மாணவர்கள் சாதி, மதம் என எதுவும் இல்லையென்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள மாநிலக் கல்வி அமைச்சர் சி.ரவேந்திரநாத் சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 28) கூறியதாவது: “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 1,23,630 மாணவர்களுக்குச் சாதி அல்லது மதம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதுபோன்று, பதினொன்றாம் வகுப்பில் 278 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்பில் 239 மாணவர்களும் இதையே குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இந்த மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேரும்போது சாதி மதமற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு குறிப்பிடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது.”
கேரள மாநிலத்தில் இயங்கிவரும் சுமார் 9 ஆயிரம் பள்ளிகளில், சேர்க்கைப் படிவத்தில் மாணவர்கள் தங்கள் சாதி, மதம் குறிப்பிடாததின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள மாநிலக் கல்வி அமைச்சர் சி.ரவேந்திரநாத் சட்டமன்றத்தில் நேற்று (மார்ச் 28) கூறியதாவது: “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 1,23,630 மாணவர்களுக்குச் சாதி அல்லது மதம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதுபோன்று, பதினொன்றாம் வகுப்பில் 278 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்பில் 239 மாணவர்களும் இதையே குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது இந்த மாணவர்கள் தாங்கள் பள்ளியில் சேரும்போது சாதி மதமற்றவர்கள் என்று அறிவித்துள்ளனர். இவ்வாறு குறிப்பிடுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது.”
கேரள மாநிலத்தில் இயங்கிவரும் சுமார் 9 ஆயிரம் பள்ளிகளில், சேர்க்கைப் படிவத்தில் மாணவர்கள் தங்கள் சாதி, மதம் குறிப்பிடாததின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவிரி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல்? ,, அதிமுக எம்பீக்கள் வாக்குறுதி அளித்தபடி தற்கொலை செய்வார்களா ?
Shankar A
:காவிரி ஆணைய நியமனத்துக்காக உயிர்த் தியாகம் செய்ய உள்ள வீரத் தமிழர்கள்.
வீர வணக்கம். வீர வணக்கம்.
தினத்தந்தி :காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? என்று விளக்கம் கேட்டு, மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. புதுடெல்லி, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளது. நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. எனவே சுப்ரீம் கோர்ட்டு, இந்த இரண்டு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று கூறியது என்பது பெரும்பாலானோரின் கருத்து.
திருப்பதி கோவிலில் தீ... லட்டு தயாரிப்பு மண்டபத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ...
மாலைமலர் :திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு தயாரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதியில் லட்டு தயாரிக்கும் அறையில் திடீர் தீ விபத்து திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள பெருமாளை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் அறையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி கோவிலின் லட்டு தயாரிக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா ... விபத்துக்குள்ளான மூதாட்டியை கண்டுகொள்ளாத மனிதர்கள் ....
தினத்தந்தி: திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த மூதாட்டியை அப்பகுதியில் செல்வோர் யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது கடக்காவூர் என்னும் பகுதி. இங்கு உள்ள சாலை ஒன்றில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் செல்லும் பொழுது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயங்களுடன் சாலையில் நடுவில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார்.
ஆனால் அவரைக் காப்பாற்ற அங்கிருந்த யாரும் முன்வரவில்லை.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் அந்த மூதாட்டியை காப்பாற்றாமல், வெறுமனே வேடிக்கைப் பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டிருந்தனர். இறுதியில் அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் மூதாட்டியை காப்பாற்ற முன்வந்தார்.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் அந்த மூதாட்டியை காப்பாற்றாமல், வெறுமனே வேடிக்கைப் பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டிருந்தனர். இறுதியில் அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் மூதாட்டியை காப்பாற்ற முன்வந்தார்.
விஜய் மல்லையா 3வது திருமணம்... மணமகள் பெயர் பிங்கி லால்வானி
மாலைமலர் :இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் தொழில்
அதிபர் விஜய் மல்லையா மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாக
தகவல் வெளியாகி உள்ளது. #VijayMallya #Mallya3rdMarriage #PinkyLalwani
புதுடெல்லி:<
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்
வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல்
மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில்
வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில்
தலைமறைவாக உள்ளார்.
; 62 வயதாகும் விஜய் மல்லையா மூன்றாவது முறையாக பிங்கி லால்வானி என்ற இளம் ஏர்ஹோஸ்ட்ரஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்துள்ளார்.
; 62 வயதாகும் விஜய் மல்லையா மூன்றாவது முறையாக பிங்கி லால்வானி என்ற இளம் ஏர்ஹோஸ்ட்ரஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்துள்ளார்.
ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு
மாலைமலர் :மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா
நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து
தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற
வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க
மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு
தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர்
இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும்
ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின்
முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை இணைமந்திரி
ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். Facebook என்ற மாயவலை. .. எந்த ஒரு நேர்மையான ஏழை அரசியல்வாதியும் தேர்தலில் ஜெயிக்கவே முடியாத சூழல்
savukkuonline :Jeevanand Rajendran ·:
Facebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது? எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ? ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது, எதை வைத்து லாபம் ஈட்டுகிறது என்பதை அறிந்தீர்கள் என்றார் அதிர்ந்து விடுவீர்கள்
நாம் தான் சமூக வலைதளத்தின் வியாபார பொருள், நாம் பகிரும் தகவல்கள், இடும் லைக் ஆகியவைவை தான் அந்த நிறுவனத்தின் வியாபாரம்.எளிமையாக ஒரு உதாரணத்தை பார்ப்போம், ஒரு 25 வயது திருமணம் ஆகாத பெண், அவரின் ப்ரொபைல் போட்டோ அவர் சற்றே பருமனாக இருப்பதை தெரிவிக்கிறது. அவர் உடல் எடையை குறைக்கும் விடயங்களை அதிகம் படிக்கிறார், ஆரோக்கியம் சார்ந்த குழுவில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். இந்த தகவலை சந்தைக்கு விற்பதன் மூலம் அந்த பெண்ணின் தேவையை அவர் சொல்லாமலே மற்றவர்கள் அறிந்து கொண்டு அவருக்கு ஏற்றவாறு விளம்பரங்கள் அவர் சுவரில் இடம் பெற செய்ய முடியும். உடல் எடை குறைக்கும் மருந்து, பிட்னஸ் கருவிகள் போன்றவற்றை நேரடியாக விளம்பரம் செய்ய முடியும்.
புதன், 28 மார்ச், 2018
தோழர் கோவன் மீது பாஜகவினர் போலீசில் புகார் .. எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ..
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி!
வினவு :ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ரத யாத்திரையின் உண்மை முகம் ‘ரத்த யாத்திரை’ என்று தமிழகம் எதிர்த்து நின்றது. இந்த போராட்டத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பாடல் வீடியோ தயாரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. வினவு யூ டியூப்பிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்றளவும் பாராட்டி மறுமொழிகள் வந்த வண்ணம் உள்ளன. வைரலான வீடியோவை இலட்சக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளனர். இது போதாதா? உடனே பா.ஜ.க கும்பலுக்கு வெறியேறி விட்டது.
“இராமாயணத்தையும் இராமனையும் இராம ராஜ்யத்தையும் இழிவு படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமரிசிக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டில் மதக்கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது. எனவே உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் கோவனைக் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இத்தகைய பாடல்களை வெளியிட்டு தேச விரோதமாக செயல்பட்டு வரும் ம.க.இ.க -வை தடை செய்ய வேண்டும்” என்று, திருச்சி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கவுதம் நாகராஜன் திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
திருச்சி நகரத்திலேயே பல காவல் நிலையங்களிலும், குமரி, கோவை
மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் அவுட் போஸ்ட்கள் என
அங்கிங்கெனாதபடி எங்கும் “சங்கிகள்” புகார் கொடுத்துள்ளனர். இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பாஜக-வினர்
இந்த தகவல் இன்றைய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலிருந்து நமக்கு தெரிய வந்துள்ளது.
வினவு :ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ரத யாத்திரையின் உண்மை முகம் ‘ரத்த யாத்திரை’ என்று தமிழகம் எதிர்த்து நின்றது. இந்த போராட்டத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பாடல் வீடியோ தயாரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. வினவு யூ டியூப்பிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்றளவும் பாராட்டி மறுமொழிகள் வந்த வண்ணம் உள்ளன. வைரலான வீடியோவை இலட்சக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளனர். இது போதாதா? உடனே பா.ஜ.க கும்பலுக்கு வெறியேறி விட்டது.
“இராமாயணத்தையும் இராமனையும் இராம ராஜ்யத்தையும் இழிவு படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமரிசிக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டில் மதக்கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது. எனவே உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் கோவனைக் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இத்தகைய பாடல்களை வெளியிட்டு தேச விரோதமாக செயல்பட்டு வரும் ம.க.இ.க -வை தடை செய்ய வேண்டும்” என்று, திருச்சி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கவுதம் நாகராஜன் திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






