
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இழப்புகளை ஈடு செய்யும் வகையில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே அந்த முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை கொண்ட ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் விமானப் போக்குவரத்துத்துறையும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து அதன் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக