ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

முதல்வர் உதவித்தொகை வேண்டாம்!’ - அனிதாவின் சகோதரர் ஆட்சியரிடம் கோரிக்கை

விகடன் :அஷ்வினி சிவலிங்கம் :
மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 7 லட்சம் ரூபாயை அனிதாவின் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அனிதாவின் மரணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  'அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும் உறுதுணையாகவும் அரசு செயல்படும்' என்று தெரிவித்திருந்தார்.

நளினி சிதம்பரம் : நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்றால் கடவுளிடம் போங்கள்! விவாகரத்து செய்வாரா சிதம்பரம்?

Troll Trousers 2.0 : நளினி சிதம்பரம்.... நீட் தேர்வு கட்டாயம் வேணும்னு நீதிமன்றத்துல வாதாடி அனிதாவுக்கு மட்டும் தனி சட்டம் கிடையாது இனிமேலும் மேல்முறையீடு செய்யனும்னா கடவுள்கிட்டதான் போகனும்னு சொன்ன உத்தமி... கேட்டா நான் வக்கீல் என்னோட தொழிலைத்தான் செஞ்சேன் அப்டின்னு சொல்லுவா.... நாளைக்கு உன்னோட மகன தூக்கி உள்ள வைப்பானுங்க... முதல் வெடி நான்தான் வெடிப்பேன்! புருசன் நீட்டை எதிர்ப்பான் பொண்டாட்டி ஆதரிப்பாள்... நல்ல குடும்பம்.... நீட்டுக்கு எதிரா இவ்ளோ கலவரம் ஆர்ப்பாட்டம் நடக்குது ஆனா எந்த காங்கிரஸ் காரனாவது வாய திறக்குறானா??? உங்களாளதான்டா பிஜேபி அதிகாரத்துக்கு வந்தது நீங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கி ஏன் நாடு நாசமா போய்கிட்டு இருக்கபோகுது!!!
 
 Rajasekar Pandian : ஒரு விஷயத்தில் மையப்பிரச்சினையை கவனமாக தவிர்த்துவிட்டு பிரச்சினையை லாவகமாக வேறொன்றின் மீது திசைதிருப்புவது அப்பட்டமான தந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான ஆட்கள் அதை அப்படியே நம்புகிறார்கள்.   நளினி  ஒய்வு பெற்ற நீதிபதி கைலாசம் கவிஞர் சௌந்தரா கைலாசம் தம்பதிகளின் மகள். அசல் பார்ப்பன திமிர் குடும்பம். சிதம்பரம்  செட்டியார் ... கொஞ்சம் நேர்மையான குடும்பத்தை சேர்ந்தவர்,  சேர கூடாத இடத்தில சேர்ந்தவர். இந்த நளினி முன்பு ஹர்ஷத் மேத்தாவின் மோசடி ஸ்டாக் வாங்கி ஒரு வழியாக சிதம்பரத்தின் திறமையால் தப்பி பிழைத்த ஊழல் பேர்வழி ..  இவரின் வாரிசு கார்த்திக் கொஞ்சம் கூட சிதம்பரத்தின் கல்வி வாசனையே இல்லாதவர். பக்கா ஊழல் மகன்தான் கார்த்திக் சிதம்பரம் . சிதம்பரத்துக்கு அனுதாபங்கள் !

துரோக துரோனாச்சாரிகளின் பாஜக ஆட்சி ! அனிதாவின் உயிரை பறித்தது ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய ..

GANESH BABU : அர்ஜுனன் உள்ளிட்ட சத்ரிய
மாணவர்களுக்கு 'வில்-வித்தை' கற்றுக்கொடுக்கும் பார்ப்பன குரு துரோணாச்சாரியார், ஏகலைவன் என்பவனுக்கு மட்டும் அந்த வித்தையைக் கற்றுக்கொடுக்க மறுத்துவிடுகிறார். காரணம், ஏகலைவன் பிறப்பால் ஒரு சூத்திரன் என்பதுதான். பின்னர் அதை எப்படியோ பலநாட்களாக துரோணாச்சாரியின் வகுப்புக்களை தூரத்தில் மறைந்து நின்றே கற்றுவிடுகிறான் ஏகலைவன்.
அதைத் தன் குருவிடம் சொல்வதுதான் நேர்மையெனக் கருதியவன் துரோணாச்சாரியிடம் விசயத்தைக் கூற, அவர் நம் ஏகலைவனை சோதித்துப் பார்த்ததில் ஏகலைவன்தான் இவ்வுலகின் தலைசிறந்த வில்-வீரன் என்பதை கண்டுப்பிடித்துவிடுகிறார். ஒரு சூத்திரன் தன்னிடம் பயின்ற சிறந்த வீரனான அர்ஜுனனையே முஞ்சுவதைத் துளியும் சகிக்கமுடியாத துரோணாச்சாரி, கொடூரமான ஒரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார்.
'மறைந்து நின்றுப் பயின்றாலும் நான் தானே உனக்கு குரு? எனக்கு குருதட்சனை எங்கே?' என்கிறார். தன்னை அவரது மாணவராகக் ஏற்றுக்கொண்டாரே என நினைத்து நெகிழ்ந்து, 'குருவே, நீங்கள் எதைக் கேட்டாலும் தருவேன்' என்கிறான் ஏகலைவன். வலதுக்கை கட்டைவிரல் இல்லாமல் வில்லை இயக்கமுடியாது என்பதை அறிந்த துரோணாச்சாரி, 'உன் வலதுக்கை கட்டை விரலை வெட்டிக்கொடு என்கிறார்'. சூத்திர ஏகலைவன் அதை வெட்டிக்கொடுத்தான்.
உலகின் ஒப்பற்ற குரு துரோணாச்சாரி என்றும், தன்னிகரற்ற வீரன் அர்ஜுன் என்றும் 'மகாபாரதம்' குறித்துக்கொண்டது.
அதன்படிதான் இந்த இரண்டு குரூரமான சதிக்காரர்களின் பெயரிலும் இந்திய அரசு விருதுகள் வழங்குகிறது.

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன்... பேராசிரியர் அனில் சடகோபால்.

நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.'
நீட் : அனில் சடகோபால்
து  ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

இதுதாண்டா மெரிட்டு! குடிசையில ஒண்ணுமே இல்லை ...இருந்தாலும் 1176 ....

வீட்டில் தனி அறை இல்லை!
ஏசி, மின் விசிறி இல்லை!
செல் போன் இல்லை!
பத்து நாள் ஆபீசுக்கு லீவு போட்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித்தரும்
தகுதியும், வசதியும் பெற்ற
அம்மா அப்பா இல்லை!
கண்விழித்துப் படிக்கும்போது
பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை!
அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும்போது யூ நோ என்று சொல்லும் தாத்தா இல்லை!
அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும் ரே பான் கண்ணாடி மாமா இல்லை!
ஒரு மணி நேரத்திற்கு 500, 1000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை!
வீக் எண்ட் சினிமா, ஹோட்டல் இல்லை!
விடுமுறைக்கு செல்ல ஊர் இல்லை!
இருந்தாலும் 1176!
இதுதாண்டா மெரிட்டு!
- Vijayasankar Ramachandran

S.V.சேகர் போன்ற பார்ப்பனர்கள் .... இவனுக்கு அனிதாவின் பெயர்கூட சரியாக தெரியவில்லை .. அவ்வளவு அலட்சியம்!


Steephan Raj :ஏண்டா நாயே இறந்த பொண்ணு பேரு கூட தெரியல நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட ! மூடிக்கிட்டு போடா எச்சை ,போய் மாட்டு கோமியம் இருந்தா குடிச்சிட்டு சந்தியா வதனம் பண்ணு .

ஆம்.. இந்தியாவில் தமிழ்நாடு தனிதான்... Govi Lenin


எந்த மாநிலமும் எதிர்க்காத நீட் தேர்வை
தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்ற முதல் கேள்வியில் தொடங்கி, அரியலூர் மாணவி அனிதா ‘நீட்’ கொடுமையால் (தற்)கொலையானதைக் கொச்சைப்படுத்தும் வகையில் பல கேள்விகளை எழுப்பி, தமிழ்நாட்டுக்கு மட்டும் தனிச் சட்டமா எனக் கேட்கிறார்கள் நேரடி-மறைமுக பா.ஜ.க.வினர்.
பிரிட்டிஷ் அதிகாரத்திற்குட்பட்ட இரட்டையாட்சி முறையில் 1928ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை மாகாணத்தில் இடஒதுக்கீட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ). இதன் வாயிலாகக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிமை கிடைத்தது.
சுதந்திர இந்தியாவில் அந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகக் களம் கண்டதால் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிரதமர் நேருவிடம் வலியுறுத்த, தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் 1951ல் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.
1989-91 கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீட்டின் அளவு 69% என்ற அளவை எட்டிய நிலையில்,1991-96 ஜெ ஆட்சிக்காலத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தால் அந்த இடஒதுக்குட்டிற்கு நெருக்கடி உருவானது. அப்போது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முயற்சியால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின் அடிப்படையில் புதிய சட்ட மசோதவை செல்வி.ஜெயலலிதா அரசு நிறைவேற்றி அதனை இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தது. இதன்காரணமாக 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

அத்தனை பேரும் கூண்டோடு பதவி விலகுங்கள்... ஸ்டாலின் ஆவேசம்!

tamil.oneindia.com/authors/gajalakshmi. அரியலூர் : அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது : மாணவி அனிதா மருத்துவம் படிக்க வேண்டிய வாய்ப்பை இழந்துவிட்டார். +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று கட்ஆப் மார்க்காக 196 மதிப்பெண் பெற்றிருக்கக் கூடிய சூழலில் நீட் இல்லாவிட்டால் அவர் மருத்துவராகியிருப்பார். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் பலன் கிடைக்கவில்லை. மத்தியில் இருக்கும் ஆட்சியும், குதிரை பேர ஆட்சியும் ஒவ்வொரு முறையும் தவறான தகவலைச் சொன்னது தான் கொடுமையின் உச்சம். ஒவ்வொரு முறையும் முதல்வர், அமைச்சர்கள் டெல்லி சென்று வந்த போதெல்லாம் நீட் விலக்கிற்காக செல்லவில்லை அடித்த கொள்ளையை அதிகரிப்பதற்காகவே சென்றார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அது மட்டுமல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்டமசோதாக்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாது என்று சொன்னார். அதற்கு பிறகு கடந்த வாரம் குறைந்த பட்சம் ஓராண்டாவது விலக்கு கிடைக்கும் என்று சொன்னார்.

அனிதாவின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் .


Final rites will be done for Anitha by this evening lakshmi-priya. Oneindia Tamil: சென்னை: நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவார் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடல் வீட்டருகே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி விட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.

பார்ப்பனர்களுக்கு சட்டப்படி corrupt செய்ய தெரியும்... NEET ஒரு சட்டப்படி தில்லாலங்கடி திருட்டு!

வாசுகி பாஸ்கர் : உலகம் முழுக்க மத நிறுவனங்களின் பிடியில் தான் பொருளாதாரமும், அரசும், சமூக கட்டமைப்பும் இருக்கிறது, இது எப்படி சாத்தியமாகிறது என்பது பெரிய சப்ஜெக்ட். அது விட்டுடுவோம், தமிழ்நாட்டிலேயே   எடுத்துக்கொள்ளுங்கள், காஞ்சி காமகோடி பீட கிளைகளுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என்று விஸ்தரித்து அவர்தம் சார்ந்தவர்களுக்கு பயன்படும் படி முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, அதனால் பலனடைகிறவர்களும் அதிகம்.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய கிடைத்த மிக நீண்ட கால வாய்ய்ப்பை திராவிட அரசியல்வாதிகள் அப்படியான நிறுவனங்களை நிறுவ தவறி விட்டார்கள் என்றே சொல்வேன். கல்வியால் நிகழ்ந்த சாதனைகள் அசாதாரணமானது தான், யாரும் மறுப்பதற்கில்லை, ஆனால் தமிழ்நாட்டை போல ஒரு மாநிலத்தில் கடவுள் மறுப்பு, முற்போக்கு, விளிம்பு நிலை மனிதர்களுக்கான அரசியல் பேசி நீண்ட காலமாக மக்களிடையே அங்கீகாரத்தை பெற முடிந்த இயக்கங்கள், கட்சிகள் இந்தியாவுக்கே முன்னோடி, ஏன் உலகத்துக்கே முன்னோடி என்று கூட சொல்லலாம்.

NEET ..அனிதா போன்ற குடிசை வாழ் மக்கள் 80 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்படுவார்கள்!

Vijay Bhaskarvijay  : மூன்று மாதம் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தேன்.
அந்த டிரைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கு வயது முப்பது. அவர் படித்த படிப்பு பத்தாம் வகுப்புதான்.

அவர் தம்பி என்ன படித்திருக்கிறார். அவரும் பத்தாம் வகுப்புதான்.
இன்னொரு தங்கை இருக்கிறார். அவரும் பத்தாம் வரைதான் படித்திருக்கிறாராம்.
ஆக 2017 - 30 = 1987. அவர் அப்பா அம்மாவுக்கு 1986 யில் திருமணம் முடிந்திருக்கும். நினைத்துப் பாருங்கள்.
1986 யில் உலகம் எவ்வளவு முன்னேறின காலம். அந்த முன்னேறின சமயத்திலும் ஒரு தம்பதியினருக்கு கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்திருக்கிறது.
அப்படி தெரிந்தாலும் அதை எப்படி போதிக்க என்று தெரியாமல் இருந்திருக்கிறது.
அப்படி போதிக்க தெரிந்தாலும் அவர்கள் வீடு இருந்த சுற்றுச் சூழல், குழந்தைகள் மனம் அங்கிருந்து திசை திரும்பாமல் வளர்க்க தடையாய் இருந்திருக்கிலாம்.

நீட் எதிரிகளை இனம் காட்டிய Dr.அனிதா ... நீட்டுக்கு / குலக்கல்விக்கு வக்காலத்து வாங்கும் துரோகிகள் !

நடிகர் விவேக், நடிகை கஸ்தூரி , சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமிகிருஷ்ணன் ஞானி போன்றவர்கள்   அனிதா மரணத்துக்கு நீலி கண்ணீர் வடித்து கொண்டே நீட்டுக்கு எந்த பங்கமும் ஏற்பாடவண்ணம்  வார்த்தை ஜாலம் செய்கிறார்கள் ..  பாஜகவின் கைகூலிகள் 
Don Ashok மன உறுதி வேணும், மயிரு உறுதி வேணும் என பேசிக்கொண்டிருக்கும் ஞாநி மாதிரியான பைத்தியங்களுக்கு... அனிதா தோல்வி அடைந்து மன உறுதியை இழந்து தூக்கில் தொங்கவில்லை. வெள்ளைத்தோல் மனிதர்களைவிடவும், காரில் செல்லும் மனிதர்களைவிடவும், கோச்சிங் சென்டருக்கு லட்ச லட்சமாக ஃபீஸ் கட்ட முடிந்த பணக்காரர்களைவிடவும் தனக்கு அதிகமான தகுதி இருந்தும்கூட அவர்களுக்கு கிட்டியது இவளுக்கு கிடைக்கவில்லையே என்கிற கோபத்தில் செத்திருக்கிறாள். நீங்கள் ‘நீட்’ என்ற பெயரில் அவளது அடிப்படை உரிமையை பறித்திருக்கிறீர்கள். அவள் இங்கே வாழ்வதற்கான உரிமையை பறித்திருக்கிறீர்கள்.
ஒற்றைக் கனவைக் கண்டு, அக்கனவை நோக்கி கடுமையாக உழைத்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்த அவளது கால்களை இலக்கை அடையும் கடைசி நேரத்தில் அநியாயமாக வெட்டி எறிந்திருக்கிறீர்கள். அவளுடைய கோபம் பெருங்கோபம். “உணர்ச்சிவசப்படாமல் அணுகுவோம்,” என மடத்தனமாக தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் மனசாட்சி இல்லாத மிருகங்கங்களுக்கு அந்த ஏழை இலட்சியவாதியின் கோபம் புரியவே போவதில்லை.

சனி, 2 செப்டம்பர், 2017

தன்னெழுச்சியான மக்கள் போரே நீட் அரக்கர்களை வெல்லும்! அனிதாக்களின் உயிரை பறித்தவர்கள்!

நந்தன் ஸ்ரீதரன் : முகநூல் வரவே அச்சமாக இருக்கிறது. இரவு முழுக்க அனிதாவின் மரணம் உறங்க விடாமல் அடித்துக் கொண்டிருந்தது..
முல்லைப் பெரியாறு பிரச்சினையின்போது தேனி மாவட்டத்தில் ஓர் எழுச்சி தோன்றியது. பெண்கள் முல்லைப் பெரியாறுக்காக பொங்கல் வைத்தார்கள். லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு கேரள எல்லை நோக்கி சென்றார்கள்..
அதைக் கண்டு ஜெயா அரசு நடுங்கியது. ஜெயா அரசு மட்டும் அல்ல. இவ்வளவு நாளும் தமிழர்களை அடித்து உதைத்தே பழக்கப்பட்ட மலையாளிகளும் நடுங்கிப் போயினர். அதன் பின்னர்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் எல்லை மலையாளிகள் தமிழர்களை மரியாதையுடன் நடத்தத் துவங்கினர்.. அது மாதிரி ஓர் எழுச்சிதான் இப்போதைய தேவை.. எந்த மயிரானும் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருக்கும் அரசியல்வாதி எவனும் ஊழல் செய்யாதவன் இல்லை.ஊழல் செய்யாத ஒரு சில அரசியல்வாதியும் தமிழர்களுக்கு ஆதரவானவன் இல்லை.. நல்ல அரசியல்வாதிகளையும் இந்த டெட்பாடி அரசு சிறையில் வைததிருக்கிறது..

அனிதாக்கள் இனி சாகமாட்டார்கள்..! எங்காவது கூலி வேலை செய்து வயிறு வளர்ப்பார்கள் ...

krishnavel.T.S  :  அனிதாக்கள் இனி சாகமாட்டார்கள்
அரியலூரில், +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று மருத்துவ கனவு உடைந்து அனிதா தற்கொலை செய்து இந்த நாட்டுக்கு NEET ஏன் தேவையில்லை என்று சொல்லிவிட்டாள், என் சொந்த மகளை பறிகொடுத்த மனநிலையில் இருக்கிறேன்.
இந்த நாட்டில் நடக்கும் புரட்டு பார்பன உயர் சாதி அரசியலுக்கு இன்னும் எத்தனை அனிதாகளின் உயிர் தேவைப்படும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.
இந்த கேவல அரசியலை, உற்றுநோக்கினால், எனக்கு ஒன்று தெரிந்தது, இன்னும் ஐந்து ஆண்டுகளில் NEET தேர்வு இருக்காது, IIT நுழைவு தேர்வான JEEE இருக்காது, இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் எந்த நுழைவு தேர்வும் இருக்காது என்றே தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது ஒன்று புரியவில்லையே, என புருவத்தை தூக்கவேண்டாம்.
நம் செல்ல மகள் அனிதாவின் மரணத்தின் துக்கத்தில், நாம் NEET-க்கு எதிராக ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க. இந்த பார்பன ஆதரவு அரசுகள், வேறு ஒரு நெடுங்கால கல்வி ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுகொண்டிருப்பது நம்மில் பலரின் கவனத்துக்கு வரவேயில்லை.

எந்த ஒரு பில்லியனரும் ஜாதகம் நட்சத்திரம் பார்த்து தொழில் தொடங்கியதில்லை

kkarthikeyan Fastura : ஜோதிடம், ஜாதகத்தை விட அயோக்கியத்தனம் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள் எழ வேண்டிய இயல்பான தன்னம்பிக்கையை உடைத்து, செய்ய வேண்டிய முயற்சிகளை முடக்கி அல்லது தள்ளிபோட்டு, உனக்கு இது தான் வரும் என்று மைன்ட் செட்டை உருவாக்கி வளரவே விடாமல் செய்வது தான் இதன் தந்திரம்.
ஜாதகமும் பார்ப்பேன், தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் படிப்பேன் என்பதை விட முட்டாள்தனம் எதவும் இருக்க முடியாது.
ஜாதகம் என்ற உளவியல்சதியை காப்பாற்றவே அர்ச்சனை செய்யும்போது என்ன ராசி, என்ன நட்சத்திரம் என்று கேட்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி என்று கதை அடிக்கிறார்கள். அதையே பார்ப்பனீயம் போற்றும் எல்லா பத்திரிக்கைகளும் பிரசுரிக்கின்றன.
நீங்கள் உண்மையிலேயே முன்னேற விரும்பினால் ஜாதகம் ஜோதிடம் போன்ற ஒரு மயிரும் வேண்டாம். தூக்கி எறியுங்கள். எல்லா காலமும் நல்ல காலமே.

நீட் கொலைகாரர்கள் இனிக்க இனிக்க பேசுகிறார்கள் ... பார்ப்பனர்கள் பாதி பார்ப்பன நக்கிகள் மீதி!

கூலித் தொழிலாளியின் மகள் அனிதா, பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல்போனதால் தனது மறைந்த தாய் ஆனந்தியின் படத்தின் முன்பு தூக்கிலிட்டுத் தற்கொலைசெய்துகொண்டார்.
பெரியார் நகர் காலனியில் வசிக்கும் சண்முகம், திருச்சி மார்கெட்டில் சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஆனந்திக்கு ஐந்து பிள்ளைகள், ஐந்தாவது பெண்தான் அனிதா. டாக்டராக வேண்டும் என்பது இவரது கனவு.
குடும்பம் ஏழையாக இருந்தாலும், பெரியாரியச் சிந்தனையும், கம்யூனிஸ்ட் சிந்தனையும், கல்வித் தகுதியும் அனிதா குடும்பத்தில் நிறைந்திருக்கின்றன. மனைவியை இழந்த தந்தைக்குப் பிள்ளைகள் முன்வந்து வாசகி என்பவரைத் திருமணம் செய்துவைத்தார்கள்.
பாட்டி பெரியம்மாள் மற்றும் சகோதரர்களுடன் வசித்துவந்த அனிதா, தன்னம்பிக்கை கொண்டவர். படிப்பில் திறமையானவர். கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். “எம்.பி.பி.எஸ். படிக்கப்போகிறேன். இல்லையென்றால் பி.எஸ்.சி அக்ரி படித்து சிவில் சர்விஸ் எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, மக்களுக்கு நலப் பணிகள் செய்யப்போகிறேன்” என்று தன் நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லியிருக்கிறார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்.

மாநிலதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களால் ஏன் கல்விதரம் குறையும்? பித்தாட்ட பாஜக நக்கிகள்!

மின்னம்பலம் : கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டுமா? நிச்சயமாக என்பதில் ஐயமில்லை. ஆனால் கல்வித்தரம் என்பது என்னவோ மாநிலப்பாடத்திட்டத்தில் மட்டுமே மோசம் என்பதைப் போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இப்படிப் பேசுபவர்கள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்குச் சென்றவர்கள் என்பதை வசதியாக மறைக்கிறார்கள்.
மாநிலத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக்கல்லூரிக்குள் நுழையும் ஒரு மாணவரால் எப்படி மருத்துவக் கல்வியின் தரம் தாழ்ந்து போகிறது? இந்தியாவிலேயே பொது மருத்துவத்தில், சுகாதார சேவையில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்று. நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள் என்று வேறு பேசுகிறார்கள். நீட்டை எதிர்த்தவர்கள் யாரும் தனியார் கல்லூரிகளுக்கு விலக்கு அளியுங்கள் எனக்கோரவில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் முந்தைய முறையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மட்டுமே குரல் கொடுத்தார்கள்.

மோதியே வீழ்த்துவோம் அனிதா! விடமாட்டோம்! சமுகவலையில் ....

மத்த ஸ்டேட்காரங்கள்லாம் கம்முன்னு இருக்கும் போது இந்த தமிழ்நாட்டு காரங்க மட்டும் தான் நீட் வேணான்னு உயிரைவிடுறாங்க. சரியான மொழி வெறியனுங்க’ன்னு அடுத்த ஸ்டேட்காரங்க சொல்றதைவிட இங்க உள்ள சில டிக்கெட்டுகளும் சொல்லிக்கிட்டு திரியுறாங்க. மாநில சுயாட்சி வேணும்னு 60 வருசமா பேசுறவங்கய்யா நாம. 50 வருசத்துக்கு முன்னாலேயே இந்தியை எதிர்த்தவங்க. இப்ப தான் கர்நாடகக்காரங்களுக்கு அது புரிய ஆரம்பிச்சுருக்கு. கொஞ்சம் கண்ணை திறந்து பார்த்தா மத்த ஸ்டேட்டை விட வளர்ச்சியிலயும் சமூக நீதிலேயும் நாம 50 வருசம் முன்னால இருக்கோம்னு தெரியும். இந்த நீட்டோட பாதிப்பு எவ்வளவு மோசமாயிருக்குங்கிறதை அவங்க பீல் பண்ணும் போது வைத்தியம் பார்க்க வசதியில்லாம பாதிபேர் பரலோகம் போயிருப்பாங்க. அந்த பச்ச புள்ள உசுர குடுத்து இத உணர்த்திட்டு போயிருக்கு. இன்னும் ஒரு குரூப்பு ‘அந்த புள்ள இஞ்சீனியருக்கு படிச்சுருக்கலாம்ல’ன்னு கிளம்பி வருது. அவங்களுக்கு இந்த குமாரை விட அப்டேட் தான் சரியா பதில் சொல்லும்.

ஹரியானா .. வகுப்பறையில் மாணவர்கள் துப்பாக்கி சூடு!


மின்னம்பலம் : ஹரியானாவில் ஐ.டி.ஐ. மாணவரை சக மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் சோனிப்பட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், (இன்று செப்.1) காலை வகுப்பில் இருந்த சக மாணவரை மற்றொரு மாணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இரண்டு மாணவர்களுக்குமே 16 அல்லது 17 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர் உடனடியாக ரொஹ்தக் பகுதியில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சோனிபட் துணை கண்காணிப்பாளர் ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது.

வெள்ளத்துக்கு எலியே காரணம்: பீகார் அமைச்சர்கள்! அங்கும் செல்லூர் ராசு?


வெள்ளத்துக்கு எலியே காரணம்: பீகார் அமைச்சர்கள்!பீகாரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு எலிகளே காரணம் என இரு அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கடும் தண்டனைச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. தடையை மீறி மது விற்பனை செய்தாலோ அல்லது சாராயம் காய்ச்சினாலோ பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்ட விரோதமாக கள்ளச் சாராயம், வெளிநாட்டு மது மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலைய கிடங்கில் வைத்துவந்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பலகோடி ரூபாய் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் போலீஸார் கடந்த மே மாதம் குற்றம்சாட்டினர். அது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”.. ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் அறிக்கை:
நிகழ்ந்தது மரணம் அல்ல மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை. அடிப்படை வசதிகளற்ற கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்து உயர் மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்று சட்டப் போராட்டங்களை நடத்தி, தீர்வு கிடைக்காத காரணத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணத்தை தழுவிய மாணவி அனிதாவை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருக்கும் தந்தைபடும் துயரம், இத் தலைமுறையோடு போகட்டும் என, 12 ஆம் வகுப்பில் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்து, படித்து 1,176 மதிப்பெண்களைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் செல்லும் கனவுகளோடு காத்திருந்த அரியலூர் மாணவி அனிதாவை, மார்ச்சுவரிக்குள் தள்ளி இருக்கும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயலை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

தர்மம் வென்றதாம்... பார்பனீயம் கொக்கரிப்பு... நம் குழந்தை அனிதா .. கொன்றது யார்?


பார்ப்பன பாஜக-வின் தர்மம் வென்றதில், தமிழச்சி நம் சகோதரி அனிதா பலியானாள்.
இது தற்கொலை அல்ல. நீட்-னால் செய்யப்பட்ட பச்சைப் படுகொலை. 1176 மதிப்பெண் எடுத்தும் 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும், பார்ப்பனருக்காகவும், பணக்காரர்களுக்காகவும் மட்டுமே நீட்-ஐ நீட்டி முழங்கி உன் உயிரை எடுத்திருக்கிறார்கள்.
தரம் தரம் என்று சொல்லி, 2000 ஆண்டுகளாக பார்ப்பன நீதியே அனைவருக்குமான நீதியாக சொல்லி நீ மருத்துவம் படிக்கும் உரிமையை மறுத்திருக்கிறார்கள். நீ உனக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காக, குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக போராடினாய்.
நீ நிமிர்ந்த நடையோடு டெல்லிக்கு பயணப்பட்ட போது, நாங்கள் மகிழ்ச்சியோடு கண்டோம் உன்னை. உன்னை முடித்துக் கொண்ட போது வெட்கப்பட்டு நிற்கிறோம். இது அடிமைகளின் தேசம்.

ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?'- பார்த்திபன்

tamil.thehindu.com.. Bharathi-parasuraman_ தானே... செய்துகொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்? என மாணவி அனிதா மறைவு குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்... அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.

அனிதாவின் தற்கொலை - சமூக அநீதிக்கான சாவோலை: கி.வீரமணி

அரியலூர் அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்படுவதற்குமுன்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:அரியலூர்ப் பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனிதா என்னும் மாணவியின் தற்கொலை அதிர்ச்சிக்குரியது, ஆழ்ந்த துயரத்திற்குரியது.
;தற்கொலை ஏற்புடையது அல்ல. என்றாலும்......தற்கொலையை ஏற்க முடியாது என்றாலும் தற்கொலைக்கு அனிதா விரட்டப்பட்டதற்கான காரணம் என்ன-? பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு 2007 முதல் கிடையாது; மாநிலக்கல்வித் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரித் தேர்வு  நடைபெற்றுவந்திருக்கிறதுஇதன்காரணமாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமானர்கள் டாக்டர்கள் ஆனார்கள்! எவ்வளவு பெரிய சமூகப்புரட்சி இது!

தமிழகம் எங்கும் வெடித்தது மக்கள் போராட்டம் ... அண்ணாசாலை... தலைமை செயலகத்தை முற்றுகையிட..

நீட் தேர்வினால் தனது டாக்டர் கனவு நிறைவேறாததால், மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மாநிலப் பாடத்திட்டத்தின்படி மருத்துவம் படிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட மாணவியான அனிதாவின் டாக்டர் கனவு, மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வினால் தகர்ந்து போனது. நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று சில மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். இதில் எதிர் மனுதாரராக தன்னை இணைத்துக்கொண்ட அனிதா, ‘நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறி போய்விடும்’ என்று மனு அளித்தார். ஆனால் நீட் தேர்வின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.