புதன், 30 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின் to ஆளுநர் : எங்களிடம் இருக்கும் பந்தை வீச தயங்கமாட்டோம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு ..

Mathi   Tamil Oneindia    சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக நலன்களைப் பாதுகாக்க எங்களிடம் இருக்கும் பந்தை பயன்படுத்த எள்முனையளவும் தயங்கமாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை", என்று ஆளுநர் தெரிவித்திருப்பது, அரசியல் சட்டப்பதவியில் அமர்ந்துகொண்டு, ஜனநாயக படுகொலைக்கு பச்சைக்கொடிக் காட்டுவதுபோல் அமைந்துவிட்டதை எண்ணிப் பெரும் அதிர்ச்சியடைகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா ஆகியோரிடன் இப்படியொரு கருத்தினை, ஆளுநர் தெரிவித்து, "பந்து என் கோர்ட்டில் இல்லை", என்று கூறியிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது.

விபத்தில் சிதைந்த முகத்தை சீரமைத்த தமிழக டாக்டர் சாதனை .. குஜராத் பெண்ணுக்கு புதுவாழ்வு !

வைஷாலியைப் பரிசோதிக்கும் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி. வந்தாள் வைஷாலி! - 1: கொடூர விபத்தில் சிக்கிய ஓர் ஏழை பெண் மறுபிறவி எடுத்த உண்மைக் கதை..!கட்டிட வேலையின்போது விபரீத விபத்துக்குள்ளான 18 வயது வைஷாலிக்கு விடிவு தேடி, குஜராத்தில் இருந்து சென்னை வந்த அந்த குடும்பத்தை இன்று மறுபடியும் வரச் சொல்லி அனுப்பியிருந்தோம். முகச் சீரமைப்பு நிபுணர் எஸ்.எம்.பாலாஜியின் உதவியாளர் தனலட்சுமியிடம் ஏற்கெனவே பேசி ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கி இருந்தேன். மதியம் 12 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள அவரது மருத்துவமனைக்குச் சென்றோம். வைஷாலியும் அவரது தாய் மற்றும் சகோதரரும் நேற்றைவிட இன்று கூடுதல் படபடப்புடன் இருந்தார்கள்.

ஜெயலலிதாவின் மகள் . DNA சோதனைக்கு தயார் !. அம்ருதா என்கின்ற மஞ்சுளா குடியரசு தலைவர் பிரதமருக்கு கடிதம்

I'm The Daughter Of Jayalalitha & Sobhan Babu'
Amrutha from Bengaluru has recently claimed herself as the biological daughter of Jayalalithaa. She even expressed her willingness to undergo DNA Test to prove her claim. She also wrote letters to the President Ram Nath Kovind and PM Narendra Modi demanding CBI Inquiry into the 75-days stay of Jayalalithaa at Apollo Hospital and her subsequent death. நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா(38) என்ற பெண் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், என் பெயர் மஞ்சுளா என்ற அம்ருதா. என்னை செல்லமாக அம்மு என்று அழைப்பர். பெற்றோரை இழந்த என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார்.
அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். கர்ப்பமாக இருந்த என் தாய் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி என்னை பெற்றெடுத்தார். ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் ஜெயலலிதா தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் ஒப்படைத்தார். சைலஜா - சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர்.

உங்கள் படங்களை தகுதியானவர்கள் தான் விமர்சிக்க வேண்டும் என்றால்

Shalinmarialawrence: தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி
உலகமே போற்றும் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி இருக்கிறதா நமக்கு ? வாருங்கள் ஆராய்வோம் .
வடசென்னைக்காரனெல்லாம் கருப்பன் ,ரவுடி ,கொலைகாரன் ,கூலிப்படை-இப்படிக்கு தமிழ் சினிமா
ஆன்டனி ,டேவிட் என்று கிறிஸ்தவ பெயர் வைத்தவனெல்லாம் கடத்தல்காரன் ,வில்லனுக்கு அடியாள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
நாங்கள் சண்டை போட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடுதான் சண்டை போடுவோம் ,இங்கே தென் தமிழ்நாட்டில் சாதி வெறியோடு சுற்றி திரியும் மிருகங்களை பற்றி கவலை பட மாட்டோம்-இப்படிக்கு தமிழ் சினிமா
கேரள பெண்கள் எல்லோருமே வெறும் ரவிக்கை பாவாடையோடு ஆண்களை தேய்த்து கொண்டு வளம் வருவார்கள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
வன்புணர்வு செய்த வில்லனை ஹீரோயின் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் ,அவன் மேல் கேஸ் கொடுக்க கூடாது -இப்படிக்கு தமிழ் சினிமா
இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
படித்த பெண்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள் ,ஹீரோ அவர்களை அடிப்பார் சினிமாவில் குடும்ப வன்முறை நியாயப்படுத்தப்படும் -இப்படிக்கு தமிழ் சினிமா .

‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்

அதி அசுரன்: மோடி தலைமையிலான இந்து – பார்ப்பன அரசு புதிய தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கப்போகிறது. அநேகமாக பணமதிப்பிழக்க நடவடிக்கை போல அதிரடியாக இக்கொள்கை விரைவில் திணிக்கப்படலாம். டி,எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர் தலைமையில் உருவாக்கப்பட்ட இக்குழுவின் அறிக்கை விவாதத்திற்காக வெளியிடப்பட்ட நாள் முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கங்களும், தலித் அமைப்புகளும், கம்யூனிச இயக்கங்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இக் காவிக்கல்விக்கொள்கையை எதிர்ப்பதை முழுநேரப் பணியாகவே மேற்கொண்டு வருகிறார் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. சி.பி.எம்., சி.பி.அய் கட்சிகளும் தீவிரமான எதிர்ப்பைக் காட்டி வருகின்றன.
புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துக்கள் >2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு எட்டாம் வகுப்புவரை மாணவர்களுக்கு தேர்வில் ஃபெயில் என்பது கிடையாது. ஆனால் இனி, 4 வகுப்பிலேயே பாஸ் அல்லது ஃபெயில் என்று அறிவிக்கும் வடிகட்டும் முறை தொடங்கப்பட உள்ளது.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க "நீட்" மூலம் மோடி அனுப்பின ஆட்கள்...... சமுகவலையில் தெறிக்கும் பொறிகள

Sumi B · தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க "நீட்" மூலம் மோடி அனுப்பின ஆட்கள்...... சாவுங்கடே ஜாதி மத வெறி புடிச்ச நாய்களே..... உங்க ஊட்டுலயும் எவளும்/எவனும் டாக்டர் ஆக முடியாதுங்கடா சாணி பொறுக்கிங்களா....

CBSE மாணவர்கள் கோச்சிங் க்ளாஸ் போவதை தடை செய்து, வெறும் பள்ளிப்பாடத்தை மட்டுமே வைத்து நீட் பாஸ் பண்ண சொல்லுங்கடா ..... அதுக்கப்புறம் தமிழ்நாட்டின் சிலபஸ் சரி இல்ல... சிஸ்டம் சரி இல்லலன்னு நொட்டுவிங்க ..... எச்சகல டாக்ங்களா......
Muthukrishna Murthy ஒரு பரதேசி பதிவி போட்டு இருகிறான் முதல் முறையா பட்டில் இன தமிழக மாணவா்கள் என்று அவன் வாயில மாட்டு சானியை தினிக்கவேண்டும் எல்லா பெயரும் வடஇந்திய பெயா் முதல் மாணவன் கோவை அதுவும் பீஎஸ்ஜி கல்லூாி மாணவன் கல்லூாி பொறியல் படிப்பை பாதியில் நிறுத்தியவன் மற்ற எல்லேரும் தனியாா் கோச்சிக்கு வகுப்புக்கு சென்று வெற்றி பெற்றவா்களே

17 வயது இளம்பெண் தெருவில் குழந்தை பெற்ற கொடுமை ... ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலத்தின் சாராகிலா மாவட்டத்தை சேர்ந்த ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 17வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ண ராம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது பழக்கம் நெருக்கமாகவே பிரியா கற்பமாகியுள்ளார். இதை அறிந்த அவரது காதலர் ப்ரியாவை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். ப்ரியா கற்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதனால் சுமார் 4 மாதங்கள் தங்க வீடு இன்றி ப்ரியா தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார். பின்னர் நிறைமாத கர்ப்பிணியான பிரியா அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பிரியாவை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் மீண்டும் தங்க இடமின்று தவித்த பிரியா கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அதிகாலை 7 மணியளவில் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்பகுதியில் இருந்த யாரும் ப்ரியாவிற்கு உதவ முன்வரவில்லை. பின்னர் அந்த வழியாக சென்ற ஓம் பிரகாஷ் என்பவர் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த தாயையும் குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடுதெருவில் வலியால் துடித்து கொண்டிருந்த ப்ரியாவிற்கு உதவ யாரும் முன்வராத புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மனிதநேயம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. லைவ்டே

வன்புணர்வு சாமியார் பாஜக டீல் ... மகள் குற்றச்சாட்டு

தன்னை கடவுளாக நினைத்து வணங்கும் பெண்களையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு சாமியாருக்கு ஆதரவாக மூன்று மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
வட இந்தியாவில்தான் இந்த கொடுமைகள் சாத்தியம். அதேசமயம் லட்சக்கணக்கான மக்களை, பக்தி வேஷத்தால் ஏமாற்றி, தனி அரசாங்கமே நடத்தி வந்தாலும், உண்மையான முகம் தோலுரிக்கப்படும்போது உரிய தண்டனை கிடைத்தே தீரும் என்பதற்கு, சரியான உதாரணம் குர்மீத் ராம் ரஹீம் சிங்.
யார் இந்த கற்பழிப்புச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்? டேரா சச்சா சவ்தா என்ற அமைப்புக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?">பலுசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா ஜி மகராஜ் என்பவரால் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த டேரா சச்சா சவ்தா அமைப்பு.
1919ல் இந்த அமைப்பை ஷா சத்னம் சிங் என்பவர் இந்த அமைப்பின் தலைவராக வந்தார். இவருடைய காலத்தில்தான் 1990 ஆம் ஆண்டு தலைமை பீடத்துக்கு அறிமுகமானார் குர்மீத் ராம் ரஹீம் சிங்.

நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு

Mathi  : Oneindia Tamil: சென்னை: தினகரன் ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
சசிகலா, தினகரனின் தீவிர விசுவாசியான நாஞ்சில் சம்பத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை நேற்று இரவு பாஜகவினர் முற்றுகையிட்டனர். அத்துடன் நாஞ்சில் சம்பத் மீது பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத்தின் வழக்கறிஞர்கள் இன்று ஒரு மனு அளித்தனர். அதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூண்டுதல் பேரில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. ஆகையால் நாஞ்சில் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

thetimestamil : கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் நல்லூர் காலனி பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு, பல வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மற்றும் துணிமணிகளை சூறையாடியுள்ளனர். குடிசை வீடுகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், ஆட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.

10 வயது சிறுவனுக்கும் 18 வயது பெண்ணுக்கும் திருமணம்.. இந்தி சீரியல் Pehredaar Piya Ki. நிறுத்தம்

சோனி எண்டர்டெய்ன்மெண்ட் சேனலில் வெளியான சர்ச்சைக்குரிய இந்தி சீரியல் Pehredaar Piya Ki. இந்த சீரியல் ஒளிபரப்புவதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BCCC (The Broadcasting Content Complaints Council) தடைவிதித்துள்ளது.
‘இந்த சீரியலின் இறுதி எபிசோட் கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. திங்கள் கிழமை எபிசோட் யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது’ என சோனி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் Scroll.in-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்த செய்தி, நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் சோனி நிறுவனத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BCCC நோட்டீஸ் கொடுத்த பின் நிகழ்ச்சியை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று சோனி தரப்பிலிருந்து தெரிவித்ததாக Indian Express செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்ணாக மாறிய கடற்படை வீரர் : தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை!

மின்னம்பலம : இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த வீரர் ஒருவர் பெண்ணாக மாறியதையடுத்து அவரைப் பணியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்திய கடற்படையில் கிழக்கு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் விசாகப்பட்டினம் ஐ.என்..எஸ் எக்சிளா தளத்தில் நேவி மெக்கானிக்கல் என்ற பொறியியல் பிரிவில் பணியாற்றி வந்த ஒருவர் தற்போது பெண்ணாக மாறியுள்ளார். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தனது விருப்பத்தின் பேரில் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சில வெளி நபர் மூலமாகப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, அவர் கூந்தல் வளர்ப்பது, சேலை கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த கடற்படை அதிகாரிகள் ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் கடற்படையில் பணிபுரியத் தகுதியற்றவராக கூறி அவரைப் பணியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி பதவி விலகல் ... பி ஹெச்.பாண்டியனின் மகன் அரவிந்த் பாண்டி புதிய தலைமை ...


பன்னீர் அணியை சேர்ந்த பி.ஹெச். பாண்டியன் தனது மகனான அரவிந்த் பாண்டியனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியைக் கேட்கிறார். அவருக்கு வழி விடும் வகையிலேயே முத்துகுமாராசாமி ராஜினாமா செய்திருக்கிறார்’’
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரான முத்துக்குமாரசாமி இன்று (ஆகஸ்ட் 29) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி... அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் அரசின் சார்பில் முக்கியப் பங்காற்றினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் முக்கிய வழக்குகளில் பங்கு பெறவில்லை என்கின்றனர் நீதிமன்ற வட்டாரங்களில்.
இந்நிலையில் இன்று தமிழக அரசுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், எழுபது வயது ஆகும் தனக்கு உடல் நலம் ஒத்துழைக்காததால் தலைமை அரசு வழக்கறிஞர் பணியில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தனியரசு :தினகரனை நிராகரித்து எடப்பாடி இரையாகி விடக்கூடாது

அதிமுக அரசு காக்கப்படவேண்டும் அதே நேரத்தில் டிடிவி தினகரனை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி இரையாகி விடக்கூடாது என்று தனியரசு எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் பேட்டி அளித்தனர்.
இதில் தனியரசு எம்.எல்.ஏ கூறியதாவது:
இப்போது உள்ள அசாதாரண நிலையில் அதிமுக அரசை ஆதரிக்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் கட்சி வலிமை, ஆட்சி வலிமை என்கிற சூழ்நிலையை உருவாக்க அனைவரும் முன் வரவேண்டும்.
தற்போதைய நிலவரம் குறித்து மூன்று பேரும் கலந்து ஆலோசித்தோம். மத்தியில் உள்ள பாஜக அரசின் அழுத்தத்திற்கு இரையாகி விட கூடாது. திராவிட பாரம்பரியம் காக்க தொடர்ந்து போராட வேண்டும்.

மும்பையில் வெள்ளம்; அதி கனமழைக்கு வாய்ப்பு, வெளியே செல்வதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுரை

மும்பையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 29, 2017, 02:58 PM மும்பை, தென் ராஜஸ்தான் பகுதியில் வீசிவரும் பலத்த காற்றால் மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஒடிசாவின் வடக்கு மற்றும் அதையொட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மும்பையில் மழை பெய்து வருகிறது. இதே வானிலை அடுத்த 48 முதல் 72 மணி நேரத்துக்கு தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது, இதனால் வெள்ளம் போன்ற நிலையானது அங்கு காணப்படுகிறது. மும்பையில் கனமழை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக மும்பையில் ரெயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையானது முடங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்தது, மரங்கள் முறிந்து விழுந்தது போன்ற விபத்து சம்பவங்களும் பதிவாகி உள்ளது. வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை காணப்படுகிறது. முக்கிய இடங்களில் டிராபிக் சிக்னல்கள் செயல்பட முடியவில்லை.

காவியா மாதவன் : திலீப் கூறியதால் 25 ரூபா ஆயிரம் குற்றவாளி சுனிலுக்கு கொடுத்தேன்

விகடன் : நடிகை பாவனா  துன்புறுத்தல் வழக்கில், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், ஓணம் பண்டிகை கொண்டாட ஜாமீன் வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த ஓணத்தை திலீப் சிறை நண்பர்களுடன் கொண்டாடும் சூழல். திலீப்புக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பியிருந்த அவரின் குடும்பத்தினர் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். திலீப்புக்கு ஜாமீன்  கிடைக்காமல் போனதற்கு அவரின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் அளித்த வாக்குமூலமே காரணம் என்று கூறப்படுகிறது. நடிகையை கடத்தியதாக கூறப்படும் பல்சர் சுனிலை முதலில் யாரென்று தனக்குத் தெரியாது என விசாரணையில் காவ்யா மாதவன் கூறியிருந்தார். போலீஸின் கிடுக்கிப்பிடி விசாரணையில், "தன் போனில் இருந்து ஒரு முறை பல்சர் சுனிலுக்கு  திலீப் போன் செய்ததாகவும் அவர் சொன்னதன் பேரில், சுனிலுக்கு 25 ஆயிரம் பணம் கொடுத்தேன்'' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

12 வயது பெண் குழந்தை தற்கொலை .. மாதவிடாய் உதிரப்போக்கை .. திட்டிய ஆசிரியர் ... மனமுடைந்த ..

Geetha Narayanan :பாளையங்கோட்டையில் ஒரு 12 வயது பெண் குழந்தை தற்கொலை செய்து கொண்டு விட்டது.காரணம் மாத விடாய் உதிரப் போக்கு அதிகமாக ஆகி யூனிபார்ம் நனைந்து பெஞ்சிலும் கொட்டி விட்டது.அதற்காக ஆசிரியை திட்டியிருக்கிறார்.மனமுடைந்த குழந்தை மாடியிலிருந்து குதித்து உயிரை விட்டு விட்டது.இந்தச் செய்தியைப் படித்ததிலிருந்து மனம் ரொம்பவே வேதனைப் படுகிறது.
இந்த மாத விடாய் அதிக உதிரப் போக்கைப் பற்றி மேற் கொண்டு பேசப் போகிறேன்.அய்யோ கண்றாவி,அருவருப்பு என நினைக்கிறவர்கள் இங்கே நிறுத்திக் கொண்டு விலகி விடுங்கள்.
ஒரு பெண்ணைப் போல் மற்றொரு பெண்ணிற்கு biological make up,harmonal make up இருக்காது.11 வயதிலிருந்து அதிக உதிரப் போக்கிற்கு உள்ளாகும் பிள்ளைகள் உண்டு.மாத விடாய் நேரத்தில் கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் உழைத்தாலும் உதிரம் கொட்டித் தீர்க்கும்.இன்றைய செயற்கை உணவு எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டியையும்,நார்க்கட்டியையும்( cysts,fibroid) கொடுத்து விடுகிறது.இச்சிக்கல்களால் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும்.நடுத்தர வயது அடைந்த அனேகப் பெணகள் பெரும் உதிரப் போக்கோடு போராட வேண்டியிருக்கும்இந்த அதிக ரத்தப் போக்கால் ரத்த சோகை ஏற்பட்டு அன்றாட உழைப்பைக் கொடுக்கவே சிரமமாக இருக்கும்.

“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”:

துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன் ஒட்டர், குறவர் இன மக்களின் பல்வேறு போராட்டங்களில் தானும் ஒருவராக பங்கேற்று அம் மக்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு ‘துரத்தப்படும் மனிதர்கள்’ என்ற நூலை எழுதிய ம.இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ரேகைச் சட்டம், அலைகுடி மக்கள் சங்கம், பொதுப்புத்தி, குற்றவியல் நீதிமுறைமை பற்றி யதார்த்தமாக பேசுகிறார். டைம்ஸ் தமிழுக்காக உரையாடியவர் : பீட்டர் துரைராஜ்.
ம.இராதாகிருஷ்ணன்
கேள்வி: நீங்கள்  எழுதிய “துரத்தப்படும் மனிதர்கள் ” நூலின் பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன் ?
பதில்: தமிழ்நாடு ஒட்டர் – குறவர் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது 2010 ல் எழுதிய நூல் இது. ஹென்றி திபேன் அணிந்துரை எழுதியிருந்தார்; மக்கள் கண்காணிப்பகம் இதனை வெளியிட்டது. கல் ஒட்டர், ஒட்டர், குறவர் ,மலைக் குறவர் பற்றி இதில் எழுதியிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முறை , விழுமியங்கள் , சந்திக்கும் இன்னல்கள் பற்றி எழுதி இருக்கிறேன். பொய் வழக்கிற்கான ‘ரிசர்வ் போர்ஸ் ‘ ஆக இவர்களை காவல்துறை எப்படி வைத்திருக்கிறது என்பதை எழுதியுள்ளேன்.

ஆம் ஆத்மி வெற்றி! டெல்லியில் பாஜகவுக்கு மக்கள் கொடுத்த நெத்தியடி


ஆம் ஆத்மி வெற்றி!டெல்லி மாநில பாவனா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று பாஜகவை இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது. தலைநகரில் நடைபெற்ற இந்தத் தேர்தல் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
டெல்லி மாநிலத்தில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் முன்பு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. பிரகாஷ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து பாவனா தொகுதி எம்.எல்.ஏ. பதவி காலியானது.
இதையடுத்து, பாவனா தொகுதிக்குக் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நேற்று (ஆகஸ்ட் 28) அறிவிக்கப்பட்டது. இதில் ஆம் ஆத்மி பெரிய அளவில் வெற்றி பெற்று பாஜகவை வீழ்த்தி தனது தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

ரகசிய பேச்சு? திருவாரூர் ! திமுகவுக்கும் தினகரனுக்கும் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவது தொடர்பாக ....

ரகசிய பேச்சு? திருவாரூர் திருப்பம்!
திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 26, 27ஆம் தேதிகளில் திருவாரூர் பயணம் மேற்கொண்டார். திருவாரூர் திமுக மாசெ பூண்டி கலைவாணன் மகள் திருமணத்தை நடத்தி வைத்த அவர், திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
திருவாரூரில் இருந்த ஸ்டாலினுடன் சசிகலாவின் தம்பி திவாகரன் அலைபேசியில் பேசியதாக ஒரு செய்தி பரவி டெல்டாவில் இருந்து டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி டெல்டா வட்டாரங்களில் விசாரித்தோம்.
“திருவாரூர் வந்த ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா ஆகியோர்தான் எப்போதும் இருந்தனர்.

BBC : ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு


வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து'' என்று வர்ணித்துள்ளார்.
அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட போதிலும், ஜப்பான் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணை முயற்சி மிகவும் அரிதான ஒன்றாகும். கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையன்று, தனது கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து மூன்று குறைந்த தூரம் செல்லும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள்.

ந்திய விவசாயத்தைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தகச் சூதாட்டக் களமாக  மாற்றுவதையே தனது வேளாண்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு! இதற்கேற்ப வேளாண்மைத் துறையின் விதை, நீராதாரங்கள், நிலம், இயற்கைவளம்  என அனைத்துக் கட்டமைப்புகளும் கார்ப்பரேட் நலனுக்கேற்ப மறு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போதுள்ள  வேளாண் சந்தைகளையும் கார்ப்பரேட் நலனுக்கானதாக மறுசீரமைக்கும் வகையில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகிய இரு திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை:நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

veerakumaran. Oneindia Tamil டெல்லி: 'தேரா சச்சா சவுதா' என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, நீதிமன்றம் இன்று அறிவித்தது. நீதிபதி முன்னிலையில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹீம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வன்முறையில் இறங்கினர் ராம் ரஹிம் ஆதரவாளர்கள். இதனிடையே குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, நீதிமன்றம் இன்று அறிவித்தது. நீதிபதி முன்னியில் சிபிஐ மற்றும் ராம் ரஹிம் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியபிறகு அவர்கள் வாதத்தை கருத்தில் கொண்டு நீதிபதி ராம் ரஹிம் மீதான தண்டனையை அறிவிப்பதாக கூறப்பட்டிருந்தது.

தமிழக வியாபம் ? மருத்துவ சேர்க்கையில் இரட்டை சான்றிதழ் .. சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இரட்டை இருப்பிடம் சான்றிதழ் மூலம் பலர் மருத்துவ சேர்க்கை தகுதி பட்டியலில் இடம் பெற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏதோ ஒன்று இரண்டு பேர் இப்படி கொடுத்துவிட்டார்கள் என்று காவல் ஆணையரிடம் புகார் அளிப்பதால் இந்த முறைகேட்டின் மொத்த உருவமும் வெளிச்சத்திற்கு வராது என்று அறிக்கை ஒன்றில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். வியாபம் ஊழல் போல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை 40 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்துள்ளனர். ஒபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை அடுத்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்தனர். அதன்படி சசிகலாவை பொது செயலாளர் பதிவியில் இருந்து நீக்க இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சி கலைந்தாலும் கட்சியை விடமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளிப்படையே தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்களை தவிர மேலும் சில அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மொத்தம் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெப்துனியா