செவ்வாய், 23 மே, 2017

சமஸ் வழங்கும் இட்டிலி – உப்புமா !

வினவு :அரச பயங்கரவாதத்தை வன்முறை என்றே கருதாத ஐ.பி.எஸ் அதிகாரி போல, சாதி ஒடுக்குமுறையை பாரதப் பண்பாடாக போற்றுகின்ற பார்ப்பனியர்கள் போல சிந்திப்பவர் சமஸ்.
மஸ் தமிழ் இந்து நாளேட்டின் நடுப்பக்க பொறுப்பாளர் என்ற முறையில் வாரம் ஒரு புரட்சியை அல்லது அதிர்ச்சியை வாசகர்களுக்கு வழங்க வேண்டிய நிலையில் இருப்பவர். அது அவர் சம்பளத்துக்கு செய்ய வேண்டிய வேலை. அதுவன்றி, நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் பொறுப்பையும் தன்னந்தனியாக அவர் தன் தோள் மேல் சுமக்கிறார். இதற்கும் சேர்த்துத்தான் இந்து நிர்வாகம் அவருக்கு சம்பளம் வழங்குகிறதா, அல்லது கொழுந்து விட்டெரியும் தேசபக்தியின் காரணமாக இந்தப் பெருஞ்சுமையை அவர் தானாக முன்வந்து ஏற்றிருக்கிறாரா தெரியவில்லை.

ஜேம்ஸ் பாண்ட் 007 ரோகர் மூர் காலமானார் ...

லண்டன்: பிரபல ஜேம்ஸ் பாண்ட் 007 புகழ் நடிகரான ரோஜர மூர் 89) இன்று மரணமடைந்தார்.
சர் ரோஜர் மூர் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். லண்டனில் பிறந்தவர். அப்பா போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் லட்சியம். ஆனால் கடைசியில் ஓவியராகி பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார் ரோஜர் மூர். அதுவும் சிறுதி காலமே நிலைத்தது. பின்னர் புகைப்படக் கலைஞரான தனது நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனால் அதிலும் பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள். மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை வந்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார் ரோஜர். முதலில் வீதி நாடகங்கள், டிவி தொடர்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது.

சந்திராசாமி காலமானார் .. சுப்ரமணியம் சாமியின் நண்பர் ... ராஜீவ் காந்தி படுகொலையில் விசாரிக்கபடாமலேயே ..

stanley.rajan. சர்ச்சையான சந்திராசாமி காலமானார்
ராஜிவ் கொலைவழக்கின் மிக முக்கியமான மர்ம புள்ளி அவர், ஆயுத வியாபாரியான அவர் மூலம்தான் அந்த பெல்ட்பாம் கொண்டுவரபட்டது எனும் செய்தி உண்டு
அவரை சிவராசன் சந்தித்ததாகவும், யாகம் நடத்தி அவர் அந்த பெல்ட்டினை ஆசீர்வாதம் செய்த்ததாகவும் அன்றைய பத்திரிகைகள் எழுதின‌
அந்த ஆர்டிஎஸ் பாம் புலிகளின் சொந்த தயாரிப்பு அல்ல, அது மிக நுட்பமான விஞ்ஞான தயாரிப்பு
ராஜிவ் கொலைக்கு பின் தெற்கு கடல்காவல் வலுபெற்றதால் நேபாளம் வழியாக இலங்கைக்கு தப்பும் சிவராசன் இவரை மையமாக கொண்டே வடக்கு நோக்கி நகர்ந்தான்
ராஜிவ் கொலை டெல்லி அல்லது சென்னையில் திட்மிடபட்டது, சென்னையில் தவறியிருந்தால் அது டெல்லியில் முடிந்திருக்கும், அன்று டெல்லியில் தயாராக இருந்த இன்னொரு மனித வெடிகுண்டு ஆதிரைக்கு சில உதவிகளை இவர் செய்ததாக சர்ச்சை
இவரை ஏன் கடைசிவரை போட்டு சாத்தி விசாரிக்கவில்லை என்றால் அதுதான் மர்மம்,
ராஜிவினை கொன்றது புலிகள் சந்தேகமில்லை, ஆனால் புலிகள் வாய்திறந்தால்தான் இம்மாதிரி ஆசாமிகள் சிக்குவார்கள், அவர்களோ கனத்த மவுனம்

Admk எம் எல் ஏக்கள் .. உள்குத்து, கழுத்தறுப்பு, போட்டு கொடுத்தல்... பாஜகவின் பிளாக் மெயில் வேற ..


டிஜிட்டல் திண்ணை :ஆழம் பார்க்கும் செந்தில் பாலாஜி... அசைந்து கொடுக்காத பழனிசாமிஅலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தது. முதல் மெசேஜ் கோட்டையில் இருந்து வந்திருந்தது.
“எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் தலைமையில் ஒரு டீம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். நேற்று தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வரைச் சந்தித்தார்கள். தொகுதி பிரச்சினைப் பற்றிப் பேசத்தான் முதல்வரைச் சந்திக்க வந்ததாக அவர்கள் சொன்னாலும், தங்களது பிரச்னை பற்றித்தான் அதிகம் பேசி இருக்கிறார்கள். எட்டு பேர் நேற்று வந்தாலும், அதில் அதிகம் பேசியது செந்தில் பாலாஜிதான். ‘எங்கள் பக்கம் எட்டு பேரு மட்டுமல்ல... இன்னும் 10 பேரு இருக்காங்க. அதை மனதில் வைத்து எதை செய்யுறதாக இருந்தாலும் செய்யுங்க. அம்மாவோட குட்புக்லதான் நாங்க எல்லோரும் இருந்தோம். யார் யாரோ எதையோ போட்டுக் கொடுத்து அம்மா எங்களை அமைச்சரவையில் இருந்து தூக்கிட்டாங்க. எங்களுக்கு மறுபடியும் நீங்க அமைச்சரவையில் இடம் கொடுக்கணும். நாங்களும் மக்களுக்கு பணியாற்றத் தயாராக இருக்கிறோம்...’ என்று செந்தில் பாலாஜி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

தென் தமிழகத்தில் ரேபிஸ் நோய் பீதி!

தென் தமிழகத்தில் ரேபிஸ் நோய் பீதி!ரேபிஸ் நோய் என்பது ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட வெறிநாய்க் கடிக்கும்போதோ அல்லது இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வேறுவகை விலங்குகள் கடிக்கும்போதோ ஏற்படக்கூடிய நோயாகும்.
இந்த ரேபிஸ் நோயானது நாய்கள் தவிர வெளவால், நரி, ஓநாய் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளான விலங்குகளாலும் ஏற்படுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படும் ஒருவர் முறையாக சிகிச்சை எடுக்காதபோது, மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மூளை பிறழ்வு ஏற்பட்டு மரணம்கூட நிகழும் எனத் தேர்ந்த மருத்துவர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்னை ஐ ஐ டி-யில் பெண் பலாத்கார முயற்சி .. இஞ்சினியர் அகப்பட்டார்!

சென்னை ஐ.ஐ.டி-யில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே நிகழ்ந்த பாலியல் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாரில் உள்ள ஐ.ஐ.டியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 9 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை சில இளைஞர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இருள் நிறைந்த பகுதிக்கு சென்றதும் மாணவியை அவர்கள் வழிமறித்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் மாணவியிடம் அத்துமீறியுள்ளார். இதை எதிர்பார்க்காத மாணவி தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர். அதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கனிமொழி :தமிழகத்தை பாஜகதான் மறைமுகமாக ஆள்கிறது

தமிழ்நாட்டை பாரதிய ஜனதா கட்சிதான் மறைமுகமாக ஆட்சி செய்கிறது என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மே 23-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் மாநிலங்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “அதிமுக கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சி செய்கிறது. இங்கு நடந்து கொண்டிருக்கும் அதிமுகவின் ஆட்சி, பாஜகவின் ஆட்சியாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறோம். எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்து தமிழகத்தில் பாஜக தன் ஆட்சியை எந்த தடையும் இல்லாமல் நடத்தி கொண்டிருக்கிறது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தமிழகத்தில் நிரந்தரமாக திணிக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது” என அவர் கூறியுள்ளார். மின்னம்பலம்

8 நடிகர்களுக்கு வெளிவரமுடியாத பிடிவாரன்ட் ..சத்யராஜ் ,சூரியா ,ஸ்ரீ பிரியா, சரத்குமார்,....

நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இன்று(செவ்வாய்கிழமை) நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், இந்த நடிகர்களை நீதிமன்றம் முன்பாக ஆஜர்ப்படுத்தவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய பத்திரிகையாளர்களுக்கு எதிரான கண்டன கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக குற்றஞ்சட்டப்பட்டது.

திருமாவளவன் :நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 2 வது கட்டமாக நடந்து வரும் 42 வது நாள் அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர், ‘’இந்த போராட்டம் மண்ணைக் காக்கும் போராட்டம். இதுவரை தலைவர்கள் போராட்டம் நடத்தி மக்களை அதில் கலந்து கொள்ள செய்வது தான் வழக்கம். ஆனால் இந்த போராட்டம் மக்கள் நடத்தும் போராட்டத்தில் அரசியல்வாதிகளை தலைவா்களை மக்கள் இழுக்கிறார்கள். தலைவர்கள் மக்கள் பின்னால் வருகிறார்கள். காலம் மாறிவிட்டது. பலரும் நான் ஆட்சிக்கு வந்தால்...என்று சொல்வார்கள். ஆனால், நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும். அரசியல்வாதிகளுக்கு ஊழல், முறைகேடுகளை சொல்லிக் கொடுப்பதே அதிகாரிகள் தான்.

செல்லூர் ராசு : 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்படும்படும் குளிர்பதனக் கிடங்கில், 12 அடுக்குகளில் காய்கறி, பழங்கள், பூக்களை பாதுக்காத்து வைத்து கொள்ள முடியும். குளிரூட்டியால் வழங்கப்படும் குளிர்ச்சியை, அறைகள் தக்க வைத்து கொள்ள வசதியாக சுவர்களில் தெர்மாகோல் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும். உர வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என்றும், 2006ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, 5 ஆயிரத்து 318 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் விவசாய கடன் தொடர்பான பிரச்சனை ஏதும் எழவில்லை. தேர்தல் வாக்குறுதிபடி சிறு-குறு விவசாயிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார். முன்னதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள குளிர்பதன கிடங்கு 2 கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. செண்பகபாண்டியன் நக்கீரன்

கூகுள் வெற்றிக்கும் யாஹூ வீழ்ச்சிக்கும் காரணம் இதுதான்! அத்தியாயம் 9

karthikeyan:.vikatan.: கூகுள் யாஹூகூகுள் பிறந்தபோது அது ஒன்றும் புதிய ஐடியா அல்ல. அவர்களுக்கு முன்னால் இருபதுக்கும் மேற்பட்ட தேடுபொறி இணைய தளங்கள் இருந்தன. அதில் Altavista, Ask, Lycos, Yahoo குறிப்பிடத் தகுந்தவை. அதிலும் Yahoo பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தது. பிறகு எப்படி கூகுள் வெற்றி பெற்றது?
இதைத் தெரிந்துகொள்ள அன்றிருந்த மற்ற தளங்கள் என்ன செய்தன என்பதைப் புரிந்துகொள்ளவேணும். யாஹூ உள்பட எல்லோரும் கலை, அறிவியல், விளையாட்டு, அரசியல், சினிமா என்று இணையதளங்களை வகைபடுத்தி அதற்குள் ஒவ்வொன்றாக கிளிக் செய்து உள்ளே உள்ளே சென்று நீங்கள் விரும்பிய தளத்தை அடையுமாறு செய்திருந்தார்கள். இடையில் நீங்கள் பத்து பதினெட்டு கிளிக்குகள் செய்ய வேண்டும். சர்ச் பாக்ஸ் இருந்தாலும் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வகைபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவர்களின் சர்ச் பாக்ஸ்-ம் அவ்வளவு துல்லியமான முடிவுகளைத் தரவில்லை.

பன்னீர் அணியில் இருந்து மாஃபா பாண்டியராஜன் விலகுகிறார்?

அதிமுக இரண்டாக பிரிந்தபோது  ஓபிஎஸ்
அணிக்கு  சசிகலா அணியில் இருந்து முதல் ஆளாக வந்து ஆதரவு கொடுத்தது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அவர் தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
>அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார். அப்போது சசிகலா அணியில் முக்கியமான நபராக இருந்தார் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன். அதன் பின்னர் நாளுக்கு நாள் ஒவ்வொருவராக ஓபிஎஸுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

BBC : மான்செஸ்டர் குண்டுவெடிப்பு 19 பேர் பலி 50 பேர் காயம் .... பிரிட்டன்:

Nineteen people have been killed and about 50 injured in a suspected terror attack at Manchester Arena. The blast happened at 22:35 BST
பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி மேலும், இந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார். ஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

Troll Mafia : மக்களே இதுக்கு எல்லாம் நான் பொறுப்பு இல்ல இன்பாக்ஸ்ல இவனுங்களா அனுப்புறானுங்க


சிதம்பரத்துக்கு வைத்த குறி ஒரு ஆரிய சதி?

stanley.rajan. ஆரிய சூது என்றால் என்ன என்பது பலருக்கு புரியாது, இப்பொழுது
அதற்கான காட்சிகள் கண்முன்னே தெரிகின்றன‌
ப.சிதம்பரம் மீது நடந்த சோதனையும், அவர்கள் அள்ளிவிடும் கட்டுகதைகளும் எல்லோருக்கும் தெரியும்
நகரத்து செட்டியார்களுக்கு, அதுவும் கானாடுகாத்தான் வம்சத்தாருக்கு கோடிகணக்கில் சொத்துக்கள் இருப்பதில் என்ன ஆச்சரியம்?
விலைவாசி உயர்ந்துவிட்ட காலத்தில் அவர்கள் அரண்மனை தேக்குமரங்களே தங்கத்திற்கு நிகரான சொத்துக்கள், அவர்களுக்கு 13 என்ன? 130 நாடுகளில் வியாபாரம் இருந்தாலும் அதில் ஆச்சரியமென்ன?
அன்றே கிழக்காசியா முழுக்க பொருளாதாரத்தால் கட்டுபடுத்திய வம்சத்திற்கு சொத்து இருப்பது ஆச்சரியமா? அதனை பட்டியலிடுகின்றார்களாம்
ஏன் மறைந்த எம் ஏம் எம் ராமசாமி செட்டியின் சொத்துகணக்கு என்ன? அண்ணாமலைபுர பங்களாவிற்கு விலை சொல்லமுடியுமா? அந்த குடும்பத்திற்கு இணையான அந்தஸ்துள்ள சிதம்பரம் மீது என்ன சொத்து சர்ச்சை வரமுடியும்?
ஆனால் வானதி சீனிவாசன் என்பவர் மீது வருகின்றதல்வா அது சர்ச்சை, ஐந்து வருடத்திற்கு முன்பு 5 ஆயிரம் இல்லாதவரிடம் இன்று பல்லாயிரம் கோடி பணம் புழங்குவதாக செய்தி வருகின்றதல்லவா அது உண்மை
அவர்களிடம் நடத்தபடாத சோதனை, பாரம்பரியம் மிக்க செட்டி குடும்பத்தின் மீது நடத்தபடும் மர்மம் என்ன?

நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.?',,,நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!

உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''
prakash.jp. நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்!!
இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், "நீங்கள் இந்திவழியில் கற்றவர்" என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், "ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன்.

ஆணுறுப்பை பறிகொடுத்த சாமியார் கேரளா பாஜக தலைவருடன் ...

நம் இந்திய நாட்டில் பல காலங்களாக பெண்களின் மீது திணிக்கப்பட்டு வந்த வன்முறைகள், பல்வேறு துணிச்சலான போராட்டங்களால் ஓரளவுக்குக்  கட்டுப் படுத்தப்பட்டன.  இருந்தபோதிலும், இந்த நாட்டில் எங்கேனும்  ஒரு மூலையில்  யாராவது ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறாள்.  சமீபத்தில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகில் உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்த  சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தன்னை பல வருடங்களாக தனது பாலியல் இச்சைகளுக்காக பயன்படுத்தி வந்த சாமியார் ஒருவரது ஆண்குறியை கத்தியால் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சுவாமி கணேசானந்தா (அ) ஹரி சுவாமி (வயது 54) என்று அழைக்கப்பட்டு வந்த போலிச்சாமியார்தான் தொடர்ச்சியாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வந்தவர். இவரது ஆணுறுப்பைத் துண்டித்த பின் அந்த மாணவி காவல்நிலையத்தில் அறிவித்தபோது தான், இந்தக் குற்றத்தின் பின்னால் உள்ள உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

அமைச்சர் பதவி கேட்டு 8 எம் எல் ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

சென்னை : முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்பட 8 எம்எல்ஏக்கள் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதிருப்தியில் உள்ள அவர்கள், முதல் முறையாக நேரடியாக வந்து முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். சில நாட்களில் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு 122 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அவரை எதிர்த்து தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எடப்பாடி தலைமையிலான அரசை தொடர்ந்து ஆதரித்ததால், 122 எம்எல்ஏக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படுவதுடன், அதிகமான பணமும் தரப்படும் என்று கூவத்தூரில் தங்கி இருந்த எம்எல்ஏக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி நினைவு நாள் மே 22.. பெரியாரின் திராவிட ...

govi.lenin? எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் திராவிட இயக்கத்திற்கும் அதனுடைய கொள்கைகளுக்காகவும் மட்டுமே தன்னுடைய சிந்தனையையும் பேனாவையும் அர்ப்பணித்தவர் மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி. தந்தை பெரியாரால் திருச்சியிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு, அவருடைய செலவிலேயே புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து சின்னகுத்தூசி என்று பின்னாளில் புனை பெயர் கொண்ட திருவாரூர் தியாகராஜனை படிக்கச் செய்தார்.சின்னகுத்தூசியின் எழுத்துகள் பெரியாரின் கொள்கைகளையும் , திராவிட இனத்தின் நலனையும், தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வலியுறுத்தியவை. அந்த நிலையிலிருந்து அவர் ஒருபோதும் மாறியதில்லை. அவர் தன் வாழ்நாளில் ஏற்றுக்கொண்ட ஒரே விருது, முரசொலி அறக்கட்டளை வழங்கிய விருது மட்டும்தான், அந்த விருதை 30-1-2006 அன்று வழங்கிப் பேசிய ஓய்வறியா உழைப்பாளியான கலைஞர், “எனக்கு சோர்வு சிறிது ஏற்பட்டால், களைப்பு சிறிது தோன்றினால், இல்லத்திலிருந்து நான் முரசொலி அலுவலகத்திற்கு செல்கிறேன் என்றால் எழுதுவதற்காக மாத்திரமல்ல. ஏற்பட்ட சோர்வை நீக்க-கவலைகளைப் போக்கிக்கொள்ள அங்கே சென்றால் சின்னகுத்தூசியைப் பார்க்கலமே, உரையாடலாமே அதன் காரணமாக மனதிற்கு ஒரு நிம்மதியைத் தேடிக்கொள்ளலாமே என்பதற்காகவும் நான் முரசொலி அலுவலகத்திற்குச் செல்வதுண்டு” என்றார். விருதினை விடவும் மதிப்புமிகு சொற்கள். தி.பி. 2048 வைகாசி-8

பாஜக வானதி சீனிவாசன் கம்பனி அறுபது கோடி சுருட்டல் ,,, சிபி ஐ வழக்கு..


As per TN BJP VP Vanathi, her husband Srinivasan was the legal consultant of Zylog systems.Her brother Shivakumar Kandaswamy, currently in New Jersy, USA, is the Vice President of Zylog Systems Private Limited. CBI has registered the case against the promoters and the ex directo... This company has created many fake companies to cheat the banks. So, as per Vanathi's statement, her husband is the brain behind these fake companies. Well Done BJP. Vanathi Srinivasan Tamilisai Soundararajan
prakash.jp. நியாயவான்கள் போல பேசும் பிஜேபி RSS ராகவனின் சகோதரர் சம்பந்தப்பட்ட ஐடி கம்பனி முறைகேடுகளை தொடர்ந்து, அதே RSS & பிஜேபி முக்கியஸ்தர்கள் தொடர்புடைய ஐடி கம்பனி  வங்கி கடன் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
பிஜேபி வானதி சீனிவாசன் குறிப்பிட்டபடி, Zylog Systems என்ற கம்பனியை ஆரம்பித்த RSS சுயம்சேவக்குகள் (Sudarshan Venkatraman, Ramanujam Sesharathnam), பின்னர் போலி கம்பனிகள் துவக்கி, வங்கிகள் மூலம் சுமார் அறுபது கோடிகளுக்கு மேல் கடன் பெற்று, அந்த போலி நிறுவனங்களுக்கு கொடுத்து சுருட்டியுள்ளார்கள்... இப்போது இவர் சட்ட ஆலோசகராக இருக்கும் சிக்லாக் போலி நிறுவனத்தின் மீது  சிபிஐ,வழக்கு பதிவு செய்துள்ளது

உத்தர பிரதேசம் .180 தலித் குடும்பங்கள் பௌத்த மதத்தை தழுவினர்.


pirakash JP  : உத்தரபிரதேசத்தில் சாதிக்கொடுமைகள் தாங்காது ஒரு கிராமமே மதம் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். இந்து மதத்தில் இருந்துகொண்டு சாதியை ஒழிப்பது தலித்களின் வேலையல்ல. அது சாத்தியமுமல்ல. தலித்கள் உடனடியாக அண்ணல் அம்பேத்கார் காட்டிய வழியில் பவுத்தம் தழுவவேண்டும்.
ஏன் இதை தலித்களுக்கு மட்டும் தான் சொல்வீர்களா இடைநிலை சாதிகளுக்கு இந்த கோரிக்கை கிடையாதா என்று கேட்கலாம். தலித்கள் முற்றிலுமாக பவுத்தத்திற்கு மாறிவிட்டால் பிறகு இடைநிலை சாதிகள் அந்த இடத்திற்கு வந்துவிடுவார் கள். அதன்பிறகு ஹிந்துத்வ குண்டர்களோடு அவர்களால் மல்லுக்கட்ட இயலாமல் அவர்களும் வெளியேறித்தான் ஆகவேண்டும். விடுதலை

மும்பை ... இரு சிறார்களை மொட்டை அடித்து செருப்பு அணிவித்து அடித்து துவைக்கும் காட்சி

Maharashtra: : Two minor boys were stripped and paraded with garlands of slippers for allegedly stealing a food item from a sweet shop, police said on Sunday. The shop owner and his two sons were arrested after the shocking incident that took place in Prem Nagar area of Ulhasnagar township on Saturday night, they said. The children, aged 8 and 9 and hailing from different families, went to the neighbourhood shop where they picked up a packet of ‘chakli’ (a snack) without the owner’s permission and ate it. This angered the shop owner, Mehmood Pathan (69), police said. Mehmood, with help from his sons, caught hold of the duo and chopped off their hair. Not stopping at that, they allegedly stripped the minors, made them wear garlands of slippers and paraded them on the street as punishment. Annoyed over the humiliation and mistreatment of the children, their parents, who reside in the same locality, lodged a complaint with the Hill Line police. Based on the complaint, Mehmood and his sons Irfan (26) and Salim (22) were arrested around midnight, police said. The trio was booked under IPC Sections 355 (assault or criminal force with intent to dishonour person), 500 (defamation) and 323 (voluntarily causing hurt), and also under the Protection of Children from Sexual Offences Act, they added. PTI

 மும்பை உல்லாஸ் நகரில் உள்ள பெட்டிக்கடையில், இரண்டு சிறுவர்கள் காசு கொடுக்காமல் முறுக்கை எடுத்து உண்டதற்காக செருப்பு மாலை அணிவித்துத் தாக்கப்படும் வீடியோ ஊடகத்தில் வெளியாகியுள்ளது. மகமூத் பதான் என்பவர், தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு அருகில் வசிக்கும் ஏழைச் சிறுவர்கள் இருவர், மிட்டாய் வாங்கக் கடைக்கு வந்துள்ளனர்.

கடையில் கூட்டமாக இருக்கவே அங்கு நின்றுகொண்டிருந்தனர். அப்போது மிட்டாய் பாட்டிலின் மேல் இருந்த ஐந்து ரூபாய் முறுக்கு பாக்கெட்டை எடுத்துச் சென்றுவிட்டனர்.
வியாபாரப் பரபரப்பிலிருந்த பதான், அதைக் கவனிக்கவில்லை. ஆனால், சிறுவர்களுடன் விளையாடியவர்கள் முறுக்கை எடுத்தவர்கள் யார் என்பதை கடைக்காரரிடம் காட்டிக்கொடுத்துவிட்டனர்.

ராதாரவி : வெள்ளைக்காரன்கூட 200 ஆண்டுகள் இங்கிருந்தான் அவன் எல்லாம் இந்தியனா?

ரஜினிகாந்த் 44 வருடம் தமிழ்நாட்டில் இருந்ததால் அவர் தமிழனாகி விடுவாரா என நடிகர் ராதாராவி கேள்வி எழுப்பியுள்ளார்.
 By: Suganthi சென்னை: வெள்ளைக்கரன் 200 வருடங்கள் இந்தியாவில் இருந்தான். அதற்காக அவனை இந்தியன் என்று கூற முடியுமா? 44 வருடங்கள் தமிழகத்திலிருந்தால் ரஜினி பச்சைத் தமிழனா? என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் நடிகர் ராதாரவி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ராதாரவி ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் கருணாநிதி வைர விழா, ரஜினி அரசியல் பிரவேசம், ஜெயலலிதாவின் மரணம்குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். நடிகர் ராதா ரவியின் சிறப்பு பேட்டி உங்களுக்காக.....

கேள்வி: கருணாநிதிக்கு வைரவிழா கொண்டாடப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: கருணாநிதிக்கு தொடர்ந்து வெற்றிகரமாக 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கிறார். இதனை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சட்டமன்றத்தை கூட்டி கொண்டாடி இருக்க வேண்டும். இதை பதிவு பண்ணக் கூடாது எனபதற்காக சட்டமன்றத்தை ஒத்திவைப்பது முட்டாள்னம்.

திங்கள், 22 மே, 2017

தங்கம் ஜெயித்த தமிழச்சி,, ஆசிய பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

R. Vaishali was at her best in the Blitz event and won seven games and
தங்கம் ஜெயித்த தமிழச்சி: பிரதமர் மோடி வியப்பு!
சென்னையைச் சேர்ந்த ஆர்.வைசாலி, ஆசிய பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் நடந்த ஒன்பது சுற்றுகளில், எட்டு புள்ளிகளைக் கைப்பற்றி, சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.
மொத்தம் நடந்த ஒன்பது சுற்றுகளில், ஏழு சுற்றில் வெற்றி பெற்றும், இரண்டு சுற்றுகளைச் சமன்செய்தும், எட்டு புள்ளிகளை எட்டினார்,ஆர்.வைசாலி. மேலும் அவர் இறுதி சுற்றில் மங்கோலியாவைச்சேர்ந்த உர்ட்சைக் யூரிந்த்யுயாவை எதிர்கொண்டு போட்டியை சமன் செய்தார். ஒட்டுமொத்தத்தில் களத்தில் இருந்த ஈரான் போட்டியாளரை விட, அரைப் புள்ளி அதிகம் பெற்று, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 'பிலிட்ஸ்' பிரிவில், இந்தியாவுக்காக தங்கம் வென்றிருக்கிறார்,வைசாலி. இதே பிரிவில், பத்மினி ரூட் ஏழு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவருக்கு வெண்கலம் கிடைத்தது.
அதேபோல் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட செளம்யா சுவாமிநாதன் 5.5 புள்ளிகளைப் பெற்று 12ஆவது இடத்தையும், மேரி ஆன் கோம்ஸ் கிளாஸிக்கல் செஸ் பிரிவில் 16ஆவது இடத்தையும் பிடித்தனர்.

பாஜக எடியுரப்பா .. தலித் வீட்டில் சாப்பாடு ஆனால் அது ஹோட்டலில் இருந்து வந்தது .. சாதி வெறியன் ,,,

தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!
கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில்  கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளானது.
எடியூரப்பா தீண்டாமையை கடைப்பிடிக்கிறார் என அந்த ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த எடியூரப்பா, “சமூகத்து ஒரு நல்ல செய்தியை தெரிவிக்க விரும்பினேன். அதில் ஏன் குற்றம் கண்டிபிடிக்கிறார்கள்?” என கேட்டிருக்கிறார்.