வெள்ளி, 25 மார்ச், 2016

திமுகவின் உள்வீட்டு சமாச்சாரங்கள்....நாமறியோம் எல்லாம் வதந்திகள்தான்

ஸ்டாலின் மனதில் என்னதான் நினைத்துகொண்டு இப்படிஎல்லாம் நடக்கிறார்?  என்ன தம்பி இப்படி பண்றீங்களே என்று உள்வீட்டில்  பலரும் கொஞ்சம் உரக்கவே விவாதிக்கிறார்கள். இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை பல இடங்களில் மூன்றாவது இடத்து அழைத்து சென்றார். குஷ்பூவை கலைத்து விட்டு காங்கிரசுக்கு வைட்டமின் கொடுத்தார். இப்போ காதர் முஹிதீனையும் ஒரு வழிபண்ண பார்த்தார். ஆனால் கலைஞர் அந்த ஆபத்தில் இருந்து திமுகவை காப்பாற்றி விட்டார் என்று சில குருவிகள் கூவுகின்றன.   கலைஞரின்  நீண்ட நாள் நண்பரான, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காதர் மொய்தீனிடம், 'ஒரு சீட் தான் கிடைக்கும். வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் தாராளமாக போகலாம்' என, ஸ்டாலின் தரப்பினர் கறாராக பேசியதாக கூறப்படுகிறது. கருணாநிதிக்கு இந்த தகவல் கிடைக்கவே, துக்கமடைந்த அவர், காதர் மொய்தீனை அழைத்து, 'உங்களுக்கு எவ்வளவு சீட் வேண்டும் சொல்லுங்கள்' என்றாராம். 'ஐந்து சீட் போதும்' என்று சொன்ன காதர் மொய்தீனிடம், உடனடியாக ஒரு தாளில், 'ஐந்து சீட் ஒதுக்கப்பட்டது' என்று எழுதிக் கொடுத்தார்.ஏற்கனவே, கே.ந.கூ.,வால் எரிச்சலில் இருந்த கருணாநிதியை, ஸ்டாலினுக்கு செக் வைக்க, காதர் மொய்தீன் சம்பவம் துாண்டியது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

162 ஐ.எஸ். தீவிரவாதிகள் மலேசியாவில் கைது

Malaysian police have arrested 162 individuals suspected of having links with the Islamic State militant group, the Home Ministry said on Thursday. கோலாலம்பூர்: மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மலேசியா முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 162 individuals with links to ISIS arrested in Malaysia

வியாழன், 24 மார்ச், 2016

பெல்ஜியத்தில் காணமல் போன இந்தியர் இறுதியாக மெட்ரோ ரயில் இருந்து பேசியுள்ளார்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் குண்டுவெடிப்பு தாக்குதலின் போது காணாமல் போன இன்போசிஸ் ஊழியர், கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து செல்போனில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பிரஸெல்ஸில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த அன்று முதல் காணாமல் போன பெங்களுருவைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷைத் தேடும் பணிகள் இந்திய தூதரகம் மூலம்  நடந்து வருகின்றன.

இனி விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்....ஹவுஸ் அரெஸ்ட்?....வைகோதான் சொன்னார்

விகடன்,com :தி.மு.க. உடன்தான் அணி சேருவார்... இல்லை பா.ஜ.க.வுடன்தான் விஜயகாந்த் போவார் என கடந்த சில மாதங்களாகவே விஜயகாந்தை மையப்படுத்தி ஏராளமான யூகங்கள் செய்திகளாக வலம் வந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், கட்சியின் மகளிர் தின பொதுக்கூட்டத்தில் தனித்து போட்டி என அறிவித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் பேச்சை முடித்த உடன், எங்களோடு வந்து இணையும் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்தார் பிரேமலதா. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைய காரணமாக இருந்த பிரேமலதாவுக்கு நன்றி தெரிவித்து அதை நேற்று உறுதி செய்தார் வைகோ. வைகோவின் சொல்லை கேட்டு அரசியல் நடத்தி முதலுக்கு மோசமானவங்க லட்சகணக்கா இருக்காங்க....கொஞ்சம் தெற்கு  நோக்கி பாருங்க கதை கதையா சொல்லுவாங்க....திட்டுவாங்க சாபம் கொடுப்பாங்க....  

ரூ.100 கோடியை விழுங்கிய கல்வி அதிகாரிகள்..(சபீதா ஐ.ஏ.எஸ்).! -பள்ளிக் கல்வித் துறை 'மெகா' மோசடி

விகடன்.com: பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபலமான தனியார் பள்ளி அது. தனது மகன் சுரேந்திரனை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்காகச் சென்றார் விவசாயி தியாகராஜன். பத்தாயிரம் கட்டணம், ட்யூஷன் பீஸ் தனி என பள்ளி நிர்வாகம் சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டினார். அவர் கொடுத்த பணத்திற்கு எந்த ரசீதும் கொடுக்கவில்லை. ஒருநாள் கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்று சொல்லி, பள்ளி நிர்வாகம் கையெழுத்து கேட்டபோதுதான் தெரிந்துகொண்டார், தனது மகனைக் கல்வி உரிமைச் சட்டக் (RTE) கணக்கின்கீழ் கொண்டு வந்துவிட்டார்கள் என்று. எவ்வளவோ போராடியும் பலனில்லை. இதேபோல், வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஒன்று, மாணவர் ஒருவரின் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அழைத்தது. 'எதற்கோ கூப்பிடுகிறார்கள்' என நம்பிச் சென்ற அவரிடம், ஒரு தாளில் கையெழுத்துப் போடச் சொல்லியுள்ளது நிர்வாகம். எதற்கு என விசாரித்தபோதுதான், கல்வி உரிமைச் சட்டக் கதை வெளியே வந்திருக்கிறது. மாணவரைச் சேர்ப்பதற்காக இருபதாயிரம் ரூபாய் கட்டணத்தை கட்டியிருந்தார் மாணவரின் தந்தை.

"சூப்பர் சிங்கர்" எந்த ரூல்சும் கிடையாது விஜய் டிவியின் விருப்பம் ஒன்றே ரூல்ஸ்

விகடன்.com :விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார்,
அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி.
பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன்.

குரங்கு(BJP) வாலில் கட்டப்பட்ட பூமாலை...உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு

bharath mathaki jeiமோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.குரங்கு கையில் சிக்கிய பூமாலை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குரங்கு வாலில் கட்டப்பட்ட நாட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi
 ந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் உயிர் காக்கும் மலிவுவிலை பதிலீட்டு (Generic Versions) மருந்துகளைத் தயாரிக்கும் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய உரிமம் வழங்கமாட்டோம்’ என மோடியின் பாஜக அரசு  அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பு (USIBC-United States Indian Business Council), அமெரிக்க வணிக பிரதிநிதியத்திடம் (USTR-Unites States Trade Representative) சென்ற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியா மலிவு விலையில் மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு கட்டாய உரிமம் இனி வழங்காது என அமெரிக்காவிற்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கிறது.

அழகிரி கலைஞர் சந்திப்பு......யார் என்ன சொன்னாலும் அழகிரி சாதாரணமானவர் அல்ல...

விகடன்.com :அழகிரி- கருணாநிதி சந்திப்பு கட்சியினர் மத்தியிலும் உற்சாகமாக பேசப்படுகிறது. அழகிரி இத்தனை நாள் வெளியில் இருந்ததாலோ என்னவோ கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில்,  அவரது வரவு திமுகவினர் மத்தியில் கொஞ்சம் பலம் பெற்ற உற்சாகத்தை தந்திருக்கிறது. 'எல்லாம் எங்க செல்வி அக்கா சாதனை' என செல்வி மீது உச்சிமோந்து பேசுகிறார்கள் உடன்பிறப்புகள்.
உலகிலேயே தந்தை மகனை சந்தித்து பேசுவதே பரபரப்புக்குள்ளாகிறது என்றால் அதுதான் தமிழக அரசியல்.திமுகவின் முன்னாள் தென்மண்டல பொறுப்பாளரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான அழகிரி,  இன்று தன் தந்தையை சந்தித்துப்பேசி திரும்பியிருப்பது அரசியல் களத்தை அதகளப்படுத்தியுள்ளது. மீண்டும் திமுகவில் அழகிரிக்கு கட்சியில் மகுடம் சூட்டப்படப்படலாம் என்கிறது திமுக வட்டாரம். திமுக தலைவரின் மகனான அழகிரி,  ஆரம்ப காலங்களில் அரசியல் ஆர்வம் அற்று,  தனிப்பட்ட தொழில்  என தனிப்பாதையில் சென்றவர். பின்னாளில் திமுகவில் ஸ்டாலின் எழுச்சி பெற்ற ஒரு தருணத்தில், அழகிரிக்கும் அரசியல் ஆர்வம் துளிர்விட,   தாய் மூலம் தந்தையிடம் அதை கொண்டு சென்றார். யார் என்னதான் சொன்னாலும்  அழகிரி ஒரு சுய மரியாதைகாரர்தான்...அவரின் குரல் பலரின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.   

ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்... எச்சரிக்கும் கன்ஹையா குமார் ஹைதராபாத்தில் பல்கலை கழக வாசலில்....


ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, ரோகித்தின் சகோதரர் ராஜா ஆகியோரை சில மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார் ஆறுதல் கூறினார்.

காங்கிரஸ் கேட்கும் 63 தொகுதிகள் பட்டியல் விவரம்...தி.மு.க. கூட்டணியில்...

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்கும் 63 தொகுதிகள் பட்டியல் விவரம் 1. திருத்தணி, 2. பூந்தமல்லி, 3. ஆவடி, 4. திரு.வி.க.நகர், 5. ராயபுரம், 6. அண்ணாநகர், 7. தியாகராயநகர், 8. மயிலாப்பூர், 9. ஆலந்தூர், 10. ஸ்ரீபெரும்புதூர், 11. மதுராந்தகம், 12. வேலூர், 13. ஆம்பூர், 14. சோழிங்கர், 15. அரியலூர், 16. அறந்தாங்கி, 17. அவினாசி, 18. ஆத்தூர், 19. ராமநாதபுரம், 20. ரிஷிவந்தியம், 21. ஈரோடு மேற்கு, 22. உதக மண்டலம், 23. ஒசூர், 24. கடையநல்லூர், 25. கரூர், 26, காங்கேயம், 27. காரைக்குடி, 28. கிருஷ்ணகிரி, 29. கிள்ளியூர், 30. குளச்சல், 31. சிங்காநல்லூர், 32. சிவகங்கை, 33. செங்கம், 34. செய்யாறு, 35. சேலம் வடக்கு, 36. தஞ்சாவூர், 37. தாம்பரம், 38. திருசெங்கோடு, 39. திருத்துறைப்பூண்டி, 40. திருப்பரங்குன்றம், 41. திருப்பூர் மேற்கு, 42. திருமயம்,

தே மு தி க, திமுக சேராமல் தடுத்த ராஜதந்திரம்.....அலுங்காமல் குலுங்காமல் ஒரே அமுக்கு....சூட்கேஸ்......

தமிழகத்தில் திமுக - தேமுதிக கூட்டணியை அதிமுக வெற்றிகரமாக முறியடித்துள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு வலுமான அணியும் அமைக்கும் பணிகள் வேகம் எடுத்தன. இந்த நிலையில், வைகோ தலைமையில் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியது. இந்த தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி என அறிவித்த நிலையில், அக்கட்சி திமுக கூட்டணிக்கு செல்லக்கூடும் என்ற தகவல் வெளியானது. அவ்வாறு தேமுதிக திமுக கூட்டணிக்கு சென்றால் ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் சுமார் 10, 000 வாக்குகள் திமுக கூட்டணி பக்கம் செல்லக்கூடும்.  அம்மாவின் வழக்கமான சூட்கேஸ் டிப்ளோமசி விஜயகாந்திடம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது . ஆனால் உண்மையில் ஒரு வரலாற்று தவறில் இருந்து திமுகவை ஜெயலலிதாவே காப்பாற்றி உள்ளார்....சரித்திரத்தில் ஒரு விசித்திரம் 

அ.தி.மு.க., நேர்காணல்: வசூல் வேட்டை, குற்றப் பின்னணி கிரிமினல்கள் தான் அதிகம் செலவு செய்ய ரெடி.....

அ.தி.மு.க.,வில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் தகுதி இல்லாதவர்களும், வசூல் வேட்டையாடியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளையும், குற்றப் பின்னணி சிக்கியவர்களையும் அழைத்துள்ளதால், தி.மு.க., தலைமை உற்சாகமடைந்து உள்ளது புது முகங்கள்: வலுவான கூட்டணி அமைக்கவில்லை என்றால், ஆளுங்கட்சியை சுலபமாக வீழ்த்த முடியாது என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதனால், ஆளுங்கட்சியின் பலவீனத்தை
மையமாக வைத்து, அக்கட்சியை தோல்வி அடைய வைக்கும் வியூகங்கள், தி.மு.க.,வில் வகுக்கப்பட்டு வருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத, புது முகங்களை கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என, தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தக்கூடிய, 'ஒன்மேன் குரூப்' மூலமாக, வேட்பாளர்களை தேர்வு செய்ய, மாவட்ட வாரியாக அனுப்பி, தேர்வு செய்யும் பணி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், ஆளுங்கட்சியில் நடத்தப்பட்ட நேர்காணலில் இடம் பெற்றவர்களில் சிலர், தகுதி இல்லாதவர்கள் உள்ளனர்.

அமித் ஷா : அரசியல் காழ்ப்புணர்ச்சியால் காஞ்சி ஜெயேந்திரர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது ......அண்டப்புழுகன் ஆகாசப்புழுகன்கிறது இதானா ?

சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியான நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற ஜெயேந்திரரின் 84வது ஜெயந்தி நிறைவு விழா நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘' காஞ்சி மடம், 2,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது. குஜராத்தில் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்ட போது, ஜெயந்திரர் வந்து சமரசம் செய்து வைத்ததார். Case Against Kanchi Shankaracharya Was For Political Reasons: Amit shah   அய்யோ அய்யோ இந்த பிரேமானந்தா  அவசரப்பட்டு செத்துபூட்டாரே.....அவர் மேல உள்ள கேசும் அரசியல்  காழ்புணர்ச்சியால் போட்டதுன்னு  அமித்ஷா சொல்லியிருப்பர் ஏலே......அதாய்ன் முடியாதுல பிரேமானந்தாதான் பார்ப்பான் இல்லையே ...... 

புதன், 23 மார்ச், 2016

விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? - சமூக நோக்கர்கள் கருத்து..tamil.thehindu.com

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணி இனி 'விஜயகாந்த் அணி' என அழைக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் இது மிகப் பெரிய திருப்பம்தான். அதேசமயம் விஜயகாந்த் முதல்வர் ஆவாரா? என்பதுதான் தற்போதைய கேள்வி.
அந்த கேள்வியை சில சமூக நோக்கர்களிடம் முன்வைத்தோம்.
ஆழி செந்தில்நாதன் (அரசியல் விமர்சகர்): விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட ஆக முடியாது. தேமுதிகவின் வாக்கு வங்கியை ஊடகங்கள் மிகை மதிப்பீடு செய்து வெளியிடுகின்றன.

பாடி பொற்கிழி பெறும் ஊடகங்கள் ஒருபுறம்...அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன்களின் ...சுப்பர் ஊடகங்கள் மறுபுறம்...

அரசியும், அரசியைப் போற்றிப் பிழைக்கும் புலவர்களும் (மீடியா) எவ்வழியோ அவ்வழிதான் குடிமக்களும் என்பதற்கிணங்க ஆன்மீகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஜெயா-சசி கும்பல் பிரபலப்படுத்திய யாகங்கள், யாருமறியாத கோவில்கள், நேர்த்திக் கடன்கள், கஜமுக யாகங்கள் என்பதிலிருந்து அம்மாவைப் பார்க்க, மனு கொடுக்க, வேட்பாளர் தெரிவுக்கு என அ.தி.மு.க கூடராமே நல்ல நாள், முகூர்த்தம், எம கண்டம் பார்த்து தனது அடிமைத்தனத்தை காட்ட வேண்டியிருக்கும் போது தினசரிகளும் இந்த அசட்டுத்தனத்தை கடைவிரிப்பது கல்லா கட்டுவதற்கு உதவுகிறது. அதே நேரம் ஆன்மீகத்தை படிப்பதில்லை என்று ஐந்தில் ஒரு பங்கினர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வினவு.com தேர்தல் பரபரப்பை அறுவடை செய்யும் ஊடகங்கள் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை என்ன? பொதுவில் ஊடகங்கள் உருவாக்கும் அல்லது ஆதரிக்கும் கருத்துக்களை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

நிஜமான போட்டி என்னவோ அய்யாவுக்கும் அம்மாவுக்கும்தான்...மிச்சம் மீதியெல்லாம் சென்சேஷன் மட்டும்தான்

nisaptham.com :ஓபிஎஸ், நத்தம், பழனியப்பன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு ‘எல்லாம் இந்த கேடிகள் செஞ்ச தப்பு..அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..பாவம்
கலைஞருக்கு தேமுதிகவை உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. ‘திமுகக் கூட்டணிக்கு தேமுதிக வருகிற வாய்ப்பு இருக்கிறது’ என்று ஒரு பக்கம் கலைஞர் நெக்குருகிக் கொண்டிருக்க, ‘கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை’ ‘அவங்க கூட பேச்சுவார்த்தையே நடக்கலை’ என்று பெருங்கற்களைச் சுமந்து ஸ்டாலின் ஒவ்வொன்றாகப் போட்டார். ஆட்சியில் பங்கு உள்ளிட்ட தேமுதிகவின் கடுமையான நிபந்தனைகள் ஸ்டாலினை எரிச்சலூட்டியிருந்தாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களிடம் இப்படி வெளிப்படையாகப் பேசியதை விஜயகாந்த்துக்கான ஸ்டாலினின் எதிர்ப்புணர்வு என்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அப்பா எதிர்பார்ப்பதை மகன் எதிர்ப்பதை எப்படி புரிந்து கொள்வது?

அதிமுகவின் துதிபாடும் அரசியல் திமுகவின் குடும்ப அரசியல் இரண்டுமே தேமுதிகவிடம் இருக்கிறது.....தமிழருவி மணியன்

விஜயகாந்தின் முதுகுக்கு பின்னால் போன வைகோ, வீழ்ச்சியடையப் போகிறார், என்று மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தது, அவருக்கு முதல்வர் வேட்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது, குறித்து தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
திமுக எப்படியாவது விஜயகாந்த்தை தன் பக்கம் வரவழைத்து அவர் வைத்திருக்க கூடிய 5 சதவீத வாக்குகளை தன்னோடு சேர்த்து ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றி விடலாம் என்று கனவு கலைந்திருக்கிறது.

ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கப் போகும் விஜயகாந்த்!

 ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கப் போகும் விஜயகாந்த்!tamil.chennaionline.com: சென்னை,மார்ச் 23 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபைக்கான தேர்தல் நாள் அறிவிக்காத முன்பே, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்தன. முதலில்  திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும். விஜயகாந்தை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்தது. ஆனால், மறுபுறம் பா.ஜ.க விஜயகாந்துக்கு வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், திமுக-வும் விஜயகாந்தின் மீது ஆர்வத்தைக் காட்ட, தேமுதிக-திமுக கூட்டணி உறுதி என்ற சூழல் உருவானது.

தேர்தல் செலவுகளுக்கு பாஜக அல்லது காங்கிரசை உள்ளே கொண்டுவரவேண்டும் என்றார் விஜயகாந்த்....

விகடன்.com :தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. 'மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்' என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ' நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்' என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் போன கோபத்தில், " தனித்துப் போட்டியிட்டு தனித்துவமான அணியாக நாங்கள் இருப்போம்" என பேட்டியளித்தார் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை.

சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணியில்....அப்பாயின்ட் மென்ட் கிடைத்தது!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று போயஸ்கார்டனில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடைபெற உள்ள தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது ஏற்கனவே அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார். கட்சியின் வளர்ச்சிக்காக அவ்வாறு யோசித்தோம்.

344 மருந்து பொருட்கள் உற்பத்தி, மத்திய அரசு தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

344 மருந்துப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய மத்திய அரசு அண்மையில் விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய மருந்து உற்பத்தி யாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் சேதுராமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட ஒரு அறிவிப்பாணையில் வலி நிவா ரணி, சளி, இருமலுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்புக் கான மருந்துகள், குறிப்பிட்ட சில சர்க்கரை நோய் மருந்து கள், ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளை கொண்ட மருந்துகள் என 344 மருந்துப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்து உத்தர விட்டார்.

விஜயகாந்த்-தர்மர், நான்-அர்ஜூனன், திருமா-பீமர், ஜி.ரா-நகுலன், முத்தரசன்-சகாதேவன்... வைகோ ஒப்புதல் வாக்கு!

சென்னை: நாங்கள் பஞ்சபாண்டவர்கள். விஜயகாந்த் - தர்மர், நான் அர்ஜூனன், திருமாவளவன் - பீமர், ஜி.ராமகிருஷ்ணன் - நகுலன், முத்தரசன் - சகாதேவன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நானும் திருமாவளவனும் யாரையும் விஜயகாந்திடம் நெருங்க விடமாட்டோம். ( என்னங்க வீட்டுக்காவலில் வச்சுடுவீங்களோ? இப்படிதான் அம்மாவின் அல்லக்கைகளும் பண்ணிச்சு)  அரண் போல காப்போம் என்றும் வைகோ கூறியுள்ளார்.  சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜயகாந்த் தமிழக முதல்வாராவது உறுதி என மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் தேர்தலில் ம.ந.கூ - தேமுதிக மகத்தான வெற்றி பெறும்; விஜயகாந்த் முதல்வராவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் உடன்பாடு...விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ம. ந. கூட்டணி

விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றது மக்கள் நலக் கூட்டணி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் , தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுகிறது.  கூட்டணி ஒப்பந்தத்திற்குப் பின் விஜய்காந்த்துடன், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நல கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யும் தேமுதிகவின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக மொத்தமாக 124 தொகுதிகளிலும், மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்+பிரேமலதா : அது இது எது? இன்று கூட்டணி விபரம் (பேரம்?) அறிவிப்பு.

சென்னை: யாரோடும் கூட்டணி இல்லை... தனித்துதான் போட்டி என்று முன்பே திட்டவட்டமாக விஜயகாந்த் அறிவித்தாலும், மீண்டும் அவருடன் கூட்டணி பற்றிப் பேசி வருகின்றன முன்னணி கட்சிகள். இந்தக் கட்சிகளுடன் அவர் இணையப் போகிறாரா? எடுத்த முடிவில் உறுதியாகப் பயணிக்கப் போகிறாரா? என்பது இன்று புதன்கிழமை தெரிந்துவிடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.பழம் கனிந்திருக்கிறது... பாலில் விழும் என நம்புகிறேன் என்று விஜயகாந்துடனான கூட்டணி எதிர்ப்பார்ப்பு குறித்து முன்பு திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் அவரது நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, தனி ரூட்டை அறிவித்தார் விஜயகாந்த்.

8 மாதங்களில் 20 லாரி, 25 டிரைவர்கள் மாயம் / கொலை ? வடமாநில கும்பல் கைவரிசையா?


திண்டுக்கல்: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 20 லாரிகள், 25 டிரைவர்கள் மாயமாகியுள்ளனர். இது குறித்துசெம்பு கம்பி கடத்தல் வழக்கில் சிக்கிய ஹரியானா வாலிபரிடம் விசாரிக்க நாமக்கல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
துாத்துக்குடி 'ஸ்டெரிலைட்' நிறுவனத்தில் இருந்து மத்திய பிரதேசம் இந்துாருக்கு ரூ.ஒரு கோடி மதிப்புள்ள ரூ.24.50 டன் செம்பு கம்பிகளை ஏற்றி ஒரு லாரி சென்றது. நாமக்கல்லலை சேர்ந்த ரவிச்சந்திரன், 39, லாரியை ஓட்டினார்.கொடைரோடு அடுத்துள்ள காமலாபுரம் அருகில் மற்றொரு லாரியில் வந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வழிமறித்தனர். டிரைவர் ரவிச்சந்திரனை தாக்கி கை, கால்களை கயிற்றால் கட்டி தாங்கள் வந்த லாரியில் போட்டனர்.செம்பு கம்பி ஏற்றிவந்த லாரியை வேறொரு டிரைவர் மூலம் ஓட்டிச் சென்றனர்.