புதன், 23 மார்ச், 2016

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் உடன்பாடு...விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றது ம. ந. கூட்டணி

விஜய்காந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றது மக்கள் நலக் கூட்டணி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் , தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுகிறது.  கூட்டணி ஒப்பந்தத்திற்குப் பின் விஜய்காந்த்துடன், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக, தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நல கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யும் தேமுதிகவின் அதிகாரபூர்வ செய்தி அறிக்கையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக மொத்தமாக 124 தொகுதிகளிலும், மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க., கூட்டணிக்கு வரும் என்கிற நம்பிக்கையை இழக்கவில்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய இரண்டு நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாகவும் கூட திமுகவின் தலைவர் கருணாநிதி இதே போன்ற நம்பிக்கையை வெளியிட்ட இரண்டு நாட்களில் தேமுதிக தனித்து போட்டி என விஜயகாந்த் அறிவித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த அறிவிப்பு தொடர்பாக பாஜகவின் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் விமர்சனம் செய்கையில், இது மக்களுக்கு பயனளிக்க கூடிய கூட்டணி இல்லை என்றார். மேலும் தேமுதிக மீது திமுக தலைவர் கருணாநிதி வைத்திருந்த நம்பிக்கையை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், பழம் கனிந்து பாலாய்போய்விட்டது என்றும் கூறினார். tamil.bbc.com

கருத்துகள் இல்லை: