வெள்ளி, 25 மார்ச், 2016

162 ஐ.எஸ். தீவிரவாதிகள் மலேசியாவில் கைது

Malaysian police have arrested 162 individuals suspected of having links with the Islamic State militant group, the Home Ministry said on Thursday. கோலாலம்பூர்: மலேசியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 162 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மலேசியா முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 162 individuals with links to ISIS arrested in Malaysia
பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களான விமான நிலையம், ரயில் நிலையம், கோயில் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டன. இதனிடையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த சுமார் 162 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கும் ஐ.எஸ்., அமைப்புக்கும் தொடர்புள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் மலேசிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: