வெள்ளி, 13 நவம்பர், 2015

சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

"இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.>இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை.>இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.அசுவத்தாமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.>பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

இன்னக்கு 100 கோடி எல்லாம் சர்வசாதாரணம்....அம்மாகிட்ட இருந்தா தப்பா? அமைச்சர் வீரமணி சொந்த செலவில் சூனியம்...

இன்றைக்கு 100 கோடி சொத்து என்பது சர்வசாதாரணம்.
இந்த மேடையில இருக்குற பல பேருக்கு நூறு கோடிக்கு மேல சொத்து இருக்கிறது. நகரச் செயலாளர் பழனிக்கு நூறு கோடி சொத்து இருக்கிறது. நகரத் தலைவர் அமுதாவுக்கு நூறு கோடி சொத்து இருக்கிறது. பாலசுப்ரமணி, மதியழகன்னு எல்லாருக்கும் பல கோடி சொத்து இருக்கு. எங்களுக்கே இருக்கும்போது அம்மாவுக்கு இருக்கக் கூடாதா?
அதிமுக நகர செயலாளர் ரூ.100 கோடி சொத்து வைத்துள்ளார் என்று பொது மேடையில் அமைச்சர் வீரமணி பேசியது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பேச்சின்போது, பொதுச்செயலாளரிடம் (ஜெயலலிதா) ரூ.66 கோடி இருக்காதா..? என்றும் நகர செயலாளரோடு ஒப்பிட்டு பேசியுள்ளார் வீரமணி. அதிமுக தனது நான்காண்டு அரசின், 'சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை' தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. அதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமீபத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் கே.சி.வீரமணியும் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் அதில் பங்கேற்றனர்.  இதுதாண்டா  ஒப்புதல் வாக்கு மூலம்.......

சோட்டா ராஜனுக்கு சிபியை காவலில் Five Star உபசாரம்...வெளிநாட்டு உணவு ஜூஸ் ...

பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன
போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன், தில்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத்தள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 10  நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ விசாரித்து வருகிறது.
வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி மட்டுமே அளிக்கப்படும். ஆனால் சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. மும்பையில் இருந்தது வரை இந்திய உணவு வகைகளை உண்டு வந்த சோட்டா ராஜன், 27 வருடங்களுக்கு முன் வெளிநாடு தப்பிச் சென்ற பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டார்.

மோடிக்கு லண்டனில் கிடைத்த "வரவேற்பு"???

ன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ பாசிசத்தை மக்கள் இனங்கண்டு அங்கங்கே தன்னெழுச்சியாக எதிர்த்துப் போராடிவருகிறார்கள். இது இன்றைக்கு உலகம் முழுவதும் வீச்சாக செல்லும் பொருட்டு மோடியின் இலண்டம் பயணம் வரலாற்று இழிபுகழாக வந்து நிற்கிறது.
நாடாளுமன்ற வளாகம்எழுத்தாளர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி அரசியல், மைஅடிப்பது, வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, தலித்துகளை உயிரோடு எரிப்பது, அண்டை நாடான நேபாளத்தில் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என அத்துணை அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக இலண்டன் மக்களின் எழுச்சி இன்றைக்கு பாசிச மோடியை காறித்துப்பிக்கொண்டிருக்கின்றன. இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு சமூகத்தின் பரந்துபட்ட சனநாயக குரல்கள் எழுப்பும் எழுச்சி மிகு முழக்கங்களும் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்களும் வாசகர்களின் பார்வைக்கு இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பிரபலமான பிக் பென் கோபுரத்துக்கு அருகில் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நரேந்திர மோடியின் ‘நெகடிவ்’ பிம்பம் காட்டப்பட்டது.

தண்ணீரில் தள்ளாடுது தமிழகம்..ஊத்தி (கெ)கொடுத்த வானம்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால், பெரும்பாலான இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நவஜீவன் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டது. வாரம், இருமுறை இயக்கப்படும் திருவனந்தபுரம் - ஷாலிமர் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில்கள், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை, 7:30 மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிற்பகல், 1:30 மணிக்கும்; காலை, 7:15 மணிக்கு புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் மெயில் மதியம், 12:30 மணிக்கும் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை எழும்பூருக்கு வர வேண்டிய ரயில்கள், பல மணி நேரம் தாமதமாக வந்தன.

400 மேல்பட்ட படங்கள் முடக்கம்...தியேட்டர்களில் டிக்கெட் விலையோ கொள்ளையோ கொள்ளை.....

கனிமொழி நவீன் : மெல்ல தமிழ் சினிமா இனி சாகும் !
தலைப்பை பார்த்தால் பகீரென்று தான் இருக்கும் ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் உண்மை நிலை இது தான்..வாரம் பத்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. எத்தனை படங்கள் போட்ட முதலீடையாவது எடுக்கிறது என்றால் பெரிய பூஜ்யத்தை தான் சொல்ல வேண்டும். இன்றைய தமிழ் சினிமாவில் உட்கார்ந்த இடத்தில் சம்பாதித்து கொண்டிருப்பது யாரென்று தெரியுமா…? பழம்பெரும் தயாரிப்பாளரா…? பழம்பெரும் வினியோகஸ்தரா..? இல்லை திரையரங்க உரிமையாளர்களா..? இதில் எவருமே இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை…என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? அந்த அளவுக்கு சினிமா புதுப் புது தரகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.; அதே போல் இன்று திரைப்படங்கள் தயாரிப்பதும் தயாரிப்பாளர் கவுன்சிலோ..சேம்பரோ…கில்டிலோ இருக்கும் பழைய மெம்பர்கள் இல்லை என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்.

வித்யா பாலன் : இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வருகிறது”

சில்க் ஸ்மிதா வேடம் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா பாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ‘கஹானி’ படத்தில் தீவிரவாதியாக மாறிய கணவனை தேடிப்பிடித்து கொலை செய்யும் பெண்ணாக வந்தார். தற்போது மறைந்த இந்தி நடிகை கீதா பாலி வேடத்தில் புதுப்பட ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வந்த ‘குரு, உருமி’ படங்களிலும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இது குறித்து வித்யா பாலன் அளித்த பேட்டி வருமாறு:-
வாழ்க்கை கதை ‘‘நான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததில் இருந்து வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு அழைப்பு வருகின்றன. இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அந்த படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க அழைத்தனர்.

மோடி :மத சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது..லண்டனில் ஜோக்கடித்த குஜராத் எக்ஸ் சி எம் ....

லண்டன்: இந்தியாவில் மத சகிப்புத் தன்மையின்மைக்கு இடமில்லை. மத சகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர
மோடி இங்கிலாந்தில் தெரிவித்துள்ளார். மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று மாலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு மரியாதை வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அந்நாட்டு பிரதமர் கேமரூனை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுகையில்,  இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசுவது பெருமையாக உள்ளது. இருநாட்டு உறவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளும் வலுவான ஜனநாயகம், பொருளாதாரத்தை கொண்டுள்ளன. இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடுகளில் இங்கிலாந்து 3-ம் இடம் வகிக்கிறது.

வியாழன், 12 நவம்பர், 2015

மற்றவர்களை துச்சமாக பார்ப்பதில் நம் நடிகர் திலகத்திற்கு ஈடு இணை கிடையாது....savukkuonline.com

tng 9அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தேன் – சுற்றி எப்போதும் துதிபாடிகள், கதை சொல்லும்போதும் அவருக்கு ஐஸ் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும், உடனிருப்போர் ஆஹா ஆஹா என்று சொல்லுமளவு, ஷூட்டிங்கில் மற்றவர்கள் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படவே மாட்டார்
திரையுலக நிருபராக !
எதிர்பாராத வகையில் எனக்கு சம்பந்தத்திடமிருந்து விடுதலை கிடைத்தது.
இண்டியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஸ்க்ரீன் என்று ஆங்கில வார ஏடு ஒன்றையும் வெளியிட்டு வந்தது. திரையுலகச் செய்திகள் தாங்கி வந்த இதழுக்கு அகில இந்திய அளவில் நல்ல மதிப்பு இருந்தது. அதன் சென்னை நிருபர் சங்கர் வயதானவர். எக்ஸ்பிரஸ் நிருபர்கள் அறையைத் தான் அவர் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஏதோ ஒரு நேரம் வந்து ஓரிரண்டு மணி நேரம் இருந்துவிட்டுச் சென்றுவிடுவார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். அவருக்கும் சம்பந்தத்திற்கும் ஆகாது எனத் தெரிந்துகொண்டேன். ஒரு நாள் மதியம் அலுவலகத்தில் வேறு எவரும் இல்லாத நேரத்தில் சங்கரிடம் எல்லாவற்றையும் மூச்சுவிடாமல் சொன்னேன்.

சசி குழுவின் ஜாஸ் சினிமா கட்டுப்பாட்டில் 136 தியேட்டர்கள்...வேதாளம் மீண்டும் முழுமூச்சில்

சென்னை: சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்! என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ஜாஸ் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு?

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் சோனியா, கெஜ்ரிவால், மம்தா ,அகிலேஷ் யாதவ் ங்கேற்கிறார்கள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில முதல்–மந்திரியாக நிதிஷ்குமார் 5–வது முறையாக பதவி ஏற்க உள்ளார் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை வரும் 14–ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14–ந்தேதி நடக்கும் கூட்டத்தில் பதவி ஏற்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளது. இருப்பினும், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகின்ற நவம்பர் 20-ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.க., அல்லாத மாநிலங்களின் பெரும்பாலான முதல்-மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி தேவகவுடா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி பாபுலால் மராண்டி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

அடிவாங்கிய கருத்துகணிப்புகள்...பிகாரில் காபரெட் மீடியாக்களுக்கு மரண அடி..பாஜக பலூனை ஊதியது இவர்கள்தான்..


bihar election (7)
bihar election (6)தில்லி கொடுத்த அடியை விட இந்துத்துவ கும்பலுக்கு பீகார் கொடுத்த அடி அதிகம். கிட்டத்தட்ட முதுகு தோலை உரித்து அனுப்பியுள்ளனர். இது ஓட்டுக்கட்சித் தேர்தல் என்கிற பித்தலாட்ட நாடகத்தில் கிடைத்த தோல்வி தான். என்றாலும் இத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எப்படியும் வென்றே தீர வேண்டும் என்பதற்காக  பாரதிய ஜனதா காட்டிய பிரயத்தனங்களை பார்த்தால் காவிக் கும்பலின் இரத்த வெறியைப் புரிந்து கொள்ள முடியும்.
பாரதிய ஜனதா அமைத்த தேர்தல் வியூகங்களில் அதன் அல்லக்கைகளாக செயல்படும் முதலாளிய ஊடகங்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. மாட்டுக்கறி ஆகட்டும், பாகிஸ்தானாகட்டும் – இல்லாத “தேசிய விவாதங்களை” இருப்பதைப் போலவே ஊதிப் பெருக்கிக் காட்டியதில் இவ்வூடகங்களுக்கு பெரும் பங்கு இருந்தது.
ஆரம்ப கட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது பாரதிய ஜனதா முன்னிலை பெற்றதாக குதூகலித்த முதலாளித்துவ ஊடகங்கள், பின்னர் நிதிஷ் – லாலு கூட்டணியின் வெற்றி உறுதிப்பட்ட போது தோசையை அப்படியே திருப்பிப் போட்டனர். பாரதிய ஜனதா கூட்டணி கணக்குகளை தவறாக போட்டு விட்டது என்றனர் – சிலர் வளர்ச்சிக்கும் சாதிக்கும் இடையே நடந்த சண்டையில் சாதி வென்றது என்று தீர்ப்பெழுதினர் – வேறு சில ஊடகங்களோ பாரதிய ஜனதாவின் காவி செயல்திட்டங்களை இடித்துரைப்பது போல் சுட்டிக்காட்டி விட்டு, இனிமேலாவது இந்துத்துவத்தை விடுத்து வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும் என்று செல்லமாக தட்டிக் கொடுத்தனர்… இந்த ’ஆய்வுகளின்’ தராதரம் என்ன?

கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு சேதம்

கடலூர் மாவட்டத்தில், கன மழை மற்றும் வெள்ளத்தால், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் போக்குவரத்து, இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.<br /> <span style=" />மின்சாரம் துண்டிப்பு: ; கன மழையுடன், 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசியதால், பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன; மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்சாரம் இல்லாததால், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. கிராமங்களில், குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர்.மாவட்ட தலைநகரான கடலூர், செம்மண்டலம் பகுதியில், நேற்று மாலை தான் மின்சாரம் வழங்கப்பட்டது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.கன மழையால், மின் வாரியத்திற்கு மட்டும், 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திப்பு சுல்தான் ஜெயந்தி வன்முறை: மரண எண்ணிக்கை இரண்டாக உயர்வு

திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. பெங்களூரில் வி.எச்.பி போராட்டத்தில் தள்ளுமுள்ளு கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி என்கிற நகரில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, இரு தரப்புகளுக்கு இடையே மோதல் உண்டாகியது. அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. முதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், மோதலில் பலியாகவில்லை என்றும், ஒரு விபத்தின் காரணமாகவே அவர் இறக்க நேரிட்டது என்றும் கர்நாடக காவல்துறை அறிவித்துள்ளது. இரண்டாவதாக இறந்தவர் கலவரத்தின் போது ஏற்பட்ட காயத்தால், இறந்ததாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் உறுதி செய்கின்றன. பிரிடிஷ்காரன் கல்வியை கொடுத்தான் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தான் உள்ளூர் மேட்டுக்குடியை விட அவன் ஒன்றும் கொடுமையானவன் அல்ல

அட யாருங்க இப்ப சாதி பார்க்கிறா?



Ex எம்பி ராஜேந்திரன் சுடப்பட்டு மரணமானார்...முன்பு அதிமுக இப்போ திமுக....

கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார். >இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன், 11 நவம்பர், 2015

இந்த தாரைகையை ஏமாற்றிய.....உண்மையாக காதலிக்க சினிமாக்காரனால் ..முடியாதாமே?...அவனுக...

இந்த நடிகை என்னப்பா சேலையை மாற்றுவது போன்று காதலரை
மாற்றுகிறாரே என்று கோலிவுட்காரர்கள் இளம் நடிகை ஒருவரை பற்றி பேசுகிறார்கள். உண்மையில் இவர் யாரையும் ஏமாற்றவில்லை இவரை காதலித்ததாக  கூறப்பட்ட அத்தனை ஆண்களும் எதோ ஒரு விதத்தில் இவரை பயன்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. அண்டை மாநிலத்தில் இருந்து கோலிவுட் வந்த அந்த நடிகை வந்த வேகத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தார். பின்னர் வாய்ப் பேச்சு அதிகம் பேசும் அந்த இளம் நடிகரை காதலித்தார். அவர்கள் காதல் முறிந்து போனது. காதல் முறிந்த சோகத்தில் இருந்த நடிகை அழ ரப்பர் பாடி தோள் கொடுத்தார். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அவரை மணக்க நடிகை திரையுலகை விட்டு விலக முடிவு செய்தார். அந்த காதலும் முறிய நடிகை காதலே வேண்டாம் என்று கூறி மீண்டும் நடிக்க வந்தார்.

இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும்: உத்தவ் தாக்கரே...

இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகள் நகமும் சதையுமாக இருந்த பா.ஜ.க. – சிவசேனா கட்சிகளிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது திடீர் பிளவு ஏற்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்படாததால் சட்டசபை தேர்தலை தனித்தனியே சந்தித்தன. தேர்தல் முடிவில், மொத்தம் 288 இடங்களைக் கொண்ட மராட்டிய சட்டசபையில், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 145 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சி அதிகபட்சமாக 122 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 63 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் சேர சிவசேனா சம்மதித்தது. இருப்பினும், பா.ஜ.க. மீது சிவசேனா மூத்த தலைவர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.  பிகாரில் பாஜகவுக்கு ஏன் மரண அடி   விழுந்தது என்பது இன்னும் இவனுகளுக்கு வெளங்கல...

வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 36...கடலூரில்

தமிழகத்தின் பல பகுதிகளில், மூன்று நாட்களாக கொட்டிய கன மழைக்கு, பலியானோர் எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில், சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் கடலுார் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. வங்கக் கடலில், புதுச்சேரி அருகே, 150 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் கடலுார் அருகே கரையை கடந்தது. இதனால், சென்னை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, சேலம் உட்பட, பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது.மழை வெள்ளத்துக்கு, கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது; ஏராளமான இடங்களில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்று மாலை நிலவரப்படி, மூன்று நாட்களில், தமிழகம் முழுவதும், மழை, வெள்ள பாதிப்புகளுக்கு, 36 பேர் உயிரிழந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக, 19 பேர் பலியாகியுள்ளனர்.

பர்மா தேர்தல் முடிவுகளை ராணுவம் சகித்து கொள்ளுமா? ஆட்சி அமைக்க ஆன் சான் சூசி பேச்சுவார்த்தை...

பர்மிய தேர்தலில் சரித்திர ரீதியிலான வெற்றியை பெறுகின்ற நிலையில் உள்ள ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்கள் தேசிய நல்லிணக்க பேச்சுக்கு வருமாறு இராணுவ ஆதரவு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத் தலைவர்களை பேச்சுக்கு அழைக்கிறார் சூச்சி அதற்கான பதிலாக, ஞாயிறன்று நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் முழுமையாக அறிவித்து முடிந்த பின்னர் அந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அதிபர் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார். தொலைக்காட்சிக்கான செவ்வி ஒன்றில், ஆங் சான் சூச்சியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதுவரை 40 வீதமான இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 90 வீதமான வாக்குகளை ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி பெற்றுள்ளது. bbc.tamil.com

கேளிக்கை வரி அரங்கு உரிமையாளர்களுக்கு ஏன் செல்லவேண்டும். சசி அன் கோவின்..ஜாஸ் ஜாஸ் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்காக .

கேளிக்கை வரிச்சலுகை, மக்களுக்கா? தியேட்டர் உரிமையாளர்களுக்கா? கலைஞர் கருத்து கேளிக்கை வரிச்சலுகை, மக்களுக்கா? தியேட்டர் உரிமையாளர்களுக்கா?
உயர் நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி திமுக தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 22-7-2006 முதல் தமிழிலே பெயரிடப்பட்டு, தயாரிக்கப்படும் தரமானத் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பழைய திரைப்படங்கள் தமிழிலே பெயரிடப்பட்டிருந்தால் அவைகளுக்கும் 20-11-2006 முதல் கேளிக்கை வரியிலிருந்து கழக ஆட்சியிலேயே விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

இலுமினாட்டி மாபியா என்பது உண்மையா?



செவ்வாய், 10 நவம்பர், 2015

BJP க்குள் குத்து வெட்டு...அமித்ஷாவுக்கு எதிராக அத்வானி ஜோஷி போர்க்கொடி! பில்டிங் ஸ்ராங் பேஸ்மென்ட் வீக்... பீகார்

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சி தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்த குமார் ஆகியோர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி பாடம் கற்கவில்லை என்றும் அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படு தோல்வி அடைந்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேச்சுகளையும் அக்கட்சி மூத்த தலைவர்களே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

ஸ்ரீதேவியின் பேராசை...புலி தயாரிப்பாளர்கள் திணறல்..இவர்களுக்கு வேற நடிகைகளே கிடைக்கலயா?

புலி’ படத்தில் நாங்கள் சம்பள பாக்கி வைத்திருப்பதாக நடிகை ஸ்ரீதேவி அவதூறு பரப்புகிறார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள். விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘புலி’. சிம்புதேவன் டைரக்டு செய்தார். சிபு தமீம், பி.டி.செல்வகுமார் தயாரித்தனர். இந்த படம் கடந்த மாதம் வெளியானது. இதில் தனக்கு ரூ.50 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும், அந்த பணத்தை வாங்கி
தரும்படியும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சிபு தமீம், பி.டி.செல்வகுமார் ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு: ஸ்ரீதேவி மரியாதைக்குரிய மூத்த நடிகை. நாங்கள் அவருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக அவதூறு பரப்பி இருக்கிறார். ‘புலி’ படத்தில் ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்தபோது ரூ.3 கோடி சம்பளம் கேட்டார். நாங்கள் சம்மதித்தோம். அதில் ரூ.2½ கோடியை உடனடியாக கொடுத்தோம். மீதி பணத்தை படம் வெளியாகும்போது தருவதாக சொன்னோம்.

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழாவில் பயங்கர மோதல்.... வி.ஹெச்.பி. நிர்வாகி உயிரிழப்பு !

கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் வி.ஹெச்.பி. நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைப் போராட்ட வீரராக திப்பு சுல்தான் திகழ்ந்ததாக குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.  ஆனால் திப்பு சுல்தான் ஹிந்து விரோதி என கூறி இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.