இன்றைய நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவ
பாசிசத்தை மக்கள் இனங்கண்டு அங்கங்கே தன்னெழுச்சியாக எதிர்த்துப்
போராடிவருகிறார்கள். இது இன்றைக்கு உலகம் முழுவதும் வீச்சாக செல்லும்
பொருட்டு மோடியின் இலண்டம் பயணம் வரலாற்று இழிபுகழாக வந்து நிற்கிறது.
எழுத்தாளர்கள் கொல்லப்படுவது, மாட்டுக்கறி அரசியல், மைஅடிப்பது,
வகுப்புவாத கலவரங்களை மூட்டுவது, தலித்துகளை உயிரோடு எரிப்பது, அண்டை நாடான
நேபாளத்தில் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என அத்துணை
அரசபயங்கரவாதத்திற்கும் எதிராக இலண்டன் மக்களின் எழுச்சி இன்றைக்கு பாசிச
மோடியை காறித்துப்பிக்கொண்டிருக்கின்றன. இந்துத்துவ பாசிசத்தை
முறியடிக்கும் பொருட்டு சமூகத்தின் பரந்துபட்ட சனநாயக குரல்கள் எழுப்பும்
எழுச்சி மிகு முழக்கங்களும் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின்
குரல்களும் வாசகர்களின் பார்வைக்கு இங்கே புகைப்படங்களாக
தொகுக்கப்பட்டிருக்கின்றன.


பிரபலமான பிக் பென் கோபுரத்துக்கு அருகில் நாடாளுமன்ற வளாகத்தின் மீது நரேந்திர மோடியின் ‘நெகடிவ்’ பிம்பம் காட்டப்பட்டது.
“மனித
குலத்துக்கு எதிரான மோடியின் குற்றங்கள் – குஜராத் படுகொலை 2002,
இந்தியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல், குரு கிரந்த் சாஹிப்ஜி
இழிவுபடுத்தப்பட்டது – சீக்கியர்கள் கூட்டமைப்பு”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக