வியாழன், 12 நவம்பர், 2015

சசி குழுவின் ஜாஸ் சினிமா கட்டுப்பாட்டில் 136 தியேட்டர்கள்...வேதாளம் மீண்டும் முழுமூச்சில்

சென்னை: சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்! என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ஜாஸ் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலே இருப்பவர் சாட்சாத் இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்திலே உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால் அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? முதன் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்ட ஒரு நாளிதழ், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலே உள்ள திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகத் தானே செய்தி வெளியிட்டது. அந்த சத்யம் சினிமாஸ் நிறுவனத்திற்கும், பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கும் என்ன தொடர்பு? சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து, திரையரங்கம் நடத்தும் உரிமையை ஜாஸ் நிறுவனம் பெற்றதா? அல்லது பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி நிறுவனத்திடமிருந்து அவர்கள் அறிக்கையிலே சுட்டிக்காட்டியிருப்பது போல நேரடியாகப் பெற்றதா? என்று கேட்டுள்ளார்.
தியேட்டர்களின் உரிமையாளர்கள் யார்? லூக்ஸ் எனப்படும் 11 திரையரங்குகளுக்கு 2014 மார்ச் மாதத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மை என்றால்; 2014 மார்ச் மாதம் முதல் 2015 ஜனவரி மாதம் வரை அந்த 11 திரையரங்குகளை நடத்திக் கொண்டிருந்தது யார்? சத்யம் சினிமாஸ் நிறுவனம் தானே? அதை ஏன் மறைக்கிறீர்கள்?
2013 செப்டம்பர் மாதத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததே; அந்த வழக்கின் அடிப்படையில் தான் தற்போது, சத்யம் சினிமாஸ் நிறுவனம் மிரட்டப்பட்டு, இந்த 11 திரையரங்குகள் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா?
136 தியேட்டர்கள் சசிகலா குழுவினரின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், இந்தியா முழுவதும் 136 திரையரங்குகள் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? அதற்கான பணம் எங்கிருந்து, யாரால், கிடைத்தது?
அனுமதி வாங்கி விட்டார்களா? பி.வி.ஆர். சினிமா நிறுவனம், சத்யம் சினிமா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரையரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முயற்சித்தாக ஒரு ஆங்கில நாளிதழ் முதன் முதலாகச் செய்தி வெளியிட்டிருந்ததே, அந்த பி.வி.ஆர். நிறுவனத்திற்குச் சொந்தமான திரையரங்குகளுக்கு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் போடப்பட்டது எப்போது? அதற்கு அனுமதி வழங்கப்பட்டாகி விட்டதா? எப்போது? வழங்கப்படவில்லை என்றால், அவர்கள் அவற்றை விற்பதற்கு முன் வராதது தானா?
ஜாஸ் சினிமா நிறுவனம், கோவை - பீளமேடு பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து, 2015 ஜனவரியில், 42 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில், "லூக்ஸ்" திரையரங்குகளில் உள்ள புரஜக்டர், ஃபர்னிச்சர், ஏர் கண்டிஷனர்கள் ஆகியவற்றை கடனுக்கு அடமானமாகக் காட்டியிருக்கிறார்கள்.
தியேட்டர்களை விலைக்கு வாங்காமல், ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு மட்டுமே எடுத்ததாகக் கூறப்படும் ஒரு நிறுவனம், திரையரங்குகளில் உள்ள தளவாடங்களைக் காட்டி, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற முடியுமா? 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்பார்கள்; இவர்களின் புளுகு மூட்டையை எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்துப் பாதுகாக்க முடியும் என்பது போகப் போகத் தான் தெரியும்!
இங்கே குறிப்பிட்டுள்ள கேள்விகள் அனைத்திற்கும் முறையான முழுமையான பதில் விளக்கங்கள் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கும் வரை, பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள ஆழமான அய்யப்பாடுகள் அகலாது! மேலும் மத்திய அரசு தன்னுடைய உளவுத் துறை மூலம் இந்தத் தியேட்டர்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்திருப்பதாகப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன
நீதியை நிலை நாட்டுமா? அது உண்மையானால், மத்திய அரசு அந்த ஆவணங்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கு உரிய நேரம் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக வெளியிட்டு விபரங்களைத் தெரிவிப்பதோடு; மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் மூலம் விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான், நீதியை எப்போதும் நிலைநாட்டுவோம் என்று பா.ஜ.க. அரசு உரிமை

Read more at: //tamil.oneindia.com/    luckylookonline.com

கருத்துகள் இல்லை: