செவ்வாய், 10 நவம்பர், 2015

Chicago... நீதிமன்றம் ...தீர்ப்பு ..சட்டம் ...கவர்ச்சி ....விளம்பரம் ..பத்திரிகைகள் ..எல்லாமே நாடகம்தான்? டேக் இட் ஈசி!

Chicago won six Academy Awards in 2003, including Best Picture. The film was critically lauded, and was the first musical to win Best Picture since 1969.The film is based on the 1975 Broadway musical, which ran for 936 performances
Chicago சிகாகோ ! இத்திரைப்படத்தை பற்றி
எழுதும்போதே மிகவும் உற்சாகமாக இருக்கிறதுஇது  ஒரு Broadway ஷோ சம்பந்தப்பட்ட கதை.
படம் பார்க்கும் போது  நாம்  ப்ராட்வே  ஷோவில்  ஒரு நாட்டிய நாடகம் போன்று  அதாவது  மானாட மயிலாட  பாணி நிகழ்ச்சியை  பார்க்கும் உணர்வு வருகிறது,
இத்திரைப்படத்தின்  கதை ஒரு ஒரு பெண் கைதிகளுக்கான சிறைச்சாலையில்தான் பெரும்பாலும் நகர்கிறது,
இரு வேறு வேறு கொலை குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு  சிறைக்குள் வந்து சேர்கிறார்கள் இரு இளம் அழகான நாட்டியகாரிகளும் Rene Zellwagger, Catherina Zeta Jones .
அவர்களுக்கு ஒத்தாசை புரியும்  Queen Latifaa ஊழல்  பெண் ஜெயில் வார்டன்.
அவர் சிபார்சில் வந்து சேர்ந்த  Richard Gerry கில்லாடி வக்கீல்.

இவர்களின் கொலைகள்  லேசுப்பட்டத்தால் . எனவே  இவர்களின் குற்ற பின்னணியின் கடுமையை குறைப்பதற்கு  முதலில் மக்களையும் பத்திரிக்கைகளையும் ஏமாற்றவேண்டும் . அதற்காக கில்லாடி வக்கீல்  அளக்கும் கதைகள் நாடகங்கள் மிகவும் சுவாரசியமானவை,.
அந்த  ஜெயிலில் பலவிதமான குற்றங்களை செய்த நூற்று கணக்கான பெண்கைதிகள்  இருந்தார்கள்.
பணம் இருந்தால் எப்படியும் சாதகமான தீர்ப்பை பெற்று வெளியே வரலாம் என்பதை ஓரளவு வெளிப்படையாக காட்டி
இருக்கிறார்கள்.  ஒரு அப்பாவி ஹங்கேரிய பெண் தூக்கில் இடப்படும் காட்சி மிகவும் வேதனையானது.
அதைகூட ஒரு நாட்டிய நாடக பாணியில் காட்டிஇருப்பது மிகவும் ஒரு அற்புதமான கலைவெளிப்பாடு என்றுதான் கூறவேண்டும், நவரசங்களையும் பாட்டு நடனமாகவே காட்டி இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பாகும். அதனாலதானோ என்னவோ ஆறு ஆஸ்கார் பரிசுகளையும் அளப்பெரிய வசூலையும் இது குவித்தது,

இலவச மொபைல் போன்: அ.தி.மு.க., தீவிரம்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இலவச மொபைல் போன் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட, அ.தி.மு.க., தயாராகி வருகிறது. தமிழகத்தில், 2006ல், முதன் முதலாக வாக்காளர்களுக்கு, இலவச கலர், 'டிவி' வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், சைக்கிள், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, காஸ் அடுப்பு, ஆடு, மாடு போன்றவை, இலவசமாக வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், வரும் தேர்தலை மனதில் வைத்து, தி.மு.க., தரப்பில், மொபைல் போன் திட்டத்தை, தேர்தல் அறிக்கையில், அறிவிக்க உள்ள தகவல் பரவியது. அதற்கு முன், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட, ஆளுங்கட்சி தயாராகி வருகிறது.    dinamalar.com

திங்கள், 9 நவம்பர், 2015

உச்சதின் மண்டபம்..நடிகர் சங்க கூட்டம்...லட்சங்களில் பில்.....இதுவா தொண்டு? என்னய வால வைத்த..தமில்..மக்கலுக்கு.

பாம்புக்கு தலையும், தவளைக்கு வாலும் ஒரே நேரத்தில் டிஸ்பிளே செய்தால் மட்டுமே இந்த கலியுகத்தில் பிடித்து நிற்க முடியும். அதுவும் டாப்பில் இருப்பவர்களின் நிலைமை, கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் தொபுக்கடீர்தான். உச்சத்தின் ஆதரவு கிடைத்தால் மிச்சத்தை நாமே பார்த்துக் கொள்ளலாம் என நடிகர்களின் இரு அணிகளும் கணக்குப் போட்டு அவரை சந்தித்தன. போட்டிபோட்டு உச்சத்துக்கு சொந்தமான மண்டபத்தில் கூட்டத்தையும் நடத்தினர். இலவசமாக இடம் கிடைக்கும் என்று நினைத்தவர்களுக்கு, லட்சங்களில் வந்த பில் கரண்டை கையில் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. அட, டிஸ்கவுண்ட்கூட தரலையாம் உச்சம். மாங்காய்னு நினைச்சு தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதைதான் webduniya.com

(ஏழ்மையில் வாடும்) சச்சின் உள்ளிட்ட 11 மாஜி வீரர்களுக்கு தலா ரூ.1.5 கோடி பரிசு தொகை

Tendulkar, Dravid, Ganguly and 8 others to receive Rs 1.5 crore each from BCCIமும்பை: சச்சின், கங்குலி, டிராவிட், ரவிசாஸ்திரி, கவாஸ்கர் உள்ளிட்ட , 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.1.50 கோடியை ஒரே நேர செட்டில்மென்ட்டாக அளிக்கிறதாம்.
பிசிசிஐ இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல்: சச்சின் டெண்டுல்கர், டிராவிட், கங்குலி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, திலிப் வெங்சர்கார், சையது கிர்மானி, வெங்கட்ராகவன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகிய 11 வீரர்களுக்கு தலா ரூ.1.5 கோடி பணம் ஒரு டைம் செட்டில்மென்ட்டாக தரப்பட்டுள்ளது.

பீகார் எதிரொலி...மாயாவதி கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கிறது..தேர்தல் கமிஷன்...

1984–ல் தேசிய அந்தஸ்து பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு 2012–ம் ஆண்டுக்கு பிறகு சரியத்தொடங்கியது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் குறைந்த சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இதைத்தொடர்ந்து உங்கள் கட்சியின் தேசிய அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று விளக்கம் கேட்டு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. அதன்பின் நடந்த மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களிலும் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஓட்டு சதவீதமோ, வெற்றியோ கிடைக்கவில்லை.

உமாபாரதி : பாஜக எம்பி சத்ருக்கன் சின்ஹா நிதிஷ்குமாரை சந்தித்து புகழ்ந்தது கூட்டு சதி


பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக
வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக மறைமுகமாக கூட்டு சதி நடந்துள்ளதாக மத்திய மந்திரி உமா பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, சகிப்புத்தன்மை, இடஒதுக்கீடு, மாட்டுக்கறி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுத்தி கொண்டதாக குற்றம்சாட்டினார். மேலும், நிதிஷ்குமாரை சந்தித்த சத்ருகன் சின்கா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சத்ருகன் சின்கா பா.ஜ.க.,விற்கு எதிர் நிலைப்பாடு கொண்டவராக மாறியுள்ளார். கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார். முன்னதாக, பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்-மந்திரி நிதிஷ்குமாரை பா.ஜ.க., எம்.பி.,யும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா இன்று சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சின்கா, நிதிஷ்குமாரை புகழ்ந்தும் பேசினார்.

பீகாரில் பாஜக கப்பல் கவிழ்ந்தது ஏன்? சொந்த செலவில் சூனியம் வைத்த மோடியின் வெளம்பர வியாதி...

நல்லா தான் போய்கிட்டு இருந்தது... எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில், பிகாருக்கு ரூ. 5 கோடி நிவாரண உதவி கொடுத்தது தொடர்பாக பிகாரின் முன்னணி பத்திரிக்கைகளில் ரூ. 35 லட்சம் செலவு செய்து ஒரு விளம்பரத்தை வெளியிடுகிறார் நரேந்திர மோடி. அப்போது வெளியூரில் இருந்த நிதிஷ்குமார் காலையில் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வந்த இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கடுப்பாகிறார். என்ன பிச்சை போடுகிறார்களா என்று கேட்டவாறே, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தின் செயலாளருக்கு போன் செய்து பாஜகவினருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தை ரத்து செய்ய உத்தரவிடுகிறார். சார், ஷாமியானா எல்லாம் போட்டாச்சு, 5 ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து சமையல்காரர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள், சமையல் ஆரம்பமாகப் போகிறது என்று பதில் பேசிய செயலாளருக்கு டோஸ் விழுகிறது. ஷாமியானைவை கழற்றி வீசிவிட்டு, சமையல்காரர்களை உடனே வீட்டை விட்டு வெளியே போகச் சொல் என்று கூறிவிட்டு பாஜக தரப்புக்கு போன் செய்து விருந்து கேன்சல் என்று அறிவிக்கிறார்.
அன்று தான் விழுந்தது பாஜக- நிதிஷ்குமார் இடையிலான கூட்டணியின் பெரும் விரிசல்....

முதல்வர் ஜெயலலிதா அவசரமாக சென்னை திரும்பியது ஏன்?

கோட நாட்டிலிருந்து, சென்னை, போயஸ் கார்டன் வீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று திரும்பினார். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அக்டோபர் 14ல், நீலகிரி மாவட்டம், கோட நாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து, கட்சி மற்றும் அரசு பணிகளை கவனித்து வந்தார். நேற்று மதியம், கோட நாட்டிலிருந்து கோவைக்கு வந்த அவர், விமானம் மூலம், மாலையில், சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள், மழையில் நனைந்தபடி வரவேற்றனர். இம்மாத இறுதியில் வர திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, முன்கூட்டியே சென்னை திரும்பியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதன் முக்கிய அம்சங்களாவன:
*அரசு பணிகளை விரைவுபடுத்த உள்ளார்

Burma..பர்மிய தேர்தலில் ஆங் சான் சூ சி யின் ஜனநாயக தேசிய முன்னணி பிரமாண்ட வெற்றி! தொகுதி முடிவுகள் வரத்தொடங்கி உள்ளது

தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது, இருபத்து ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் முதல் சுதந்திரமான தேர்தல் இதுதான் , ராணுவ ஆட்சி கொடுமையில் இருந்து அவர்களின் ஆதரவு ஆட்சியில் இருந்தும் முதல் தடவியாக ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் முதல் தேர்தல் இதுதான், நோபல் பரிசுபெற்ற  ஆங் சான் சூ சி தலைமையில் அவரது கட்சி மிகபெரும் வெற்றியை பெற்றுகொண்டு இருப்பதாக வெளிவரும் தொகுதி முடிவுகள் அறிவிக்கின்றன. இந்த  முடிவுகளை எல்லோரும் எதிர்பாததாக  என்று பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அவர் கூறியுள்ளார். ஆனால், அரசியலமைப்பின்படி, ஒட்டு மொத்த இடங்களில் இராணுவத்துக்கு 25 வீதமான இடங்கள் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்க்கட்சி ஆட்சியமைக்க வேண்டுமானால், எஞ்சியுள்ள இடங்களில் அவர்கள் மூன்றில் இரண்டு பங்கை வென்றாக வேண்டும்<
 Myanmar's ruling party conceded defeat in a general election on Monday as the opposition led by democracy figurehead Aung San Suu Kyi appeared on course for a landslide victory that could ensure it forms the next government.
"We lost," Union Solidarity and Development Party (USDP) acting chairman Htay Oo told Reuters a day after the Southeast Asian country's first free nationwide election in a quarter of a century.
By late afternoon, vendors outside the headquarters of the National League for Democracy (NLD) in Yangon were selling red T-shirts with Suu Kyi's face and the words "We won".

நிதீஷ்குமார்: எங்கள் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர்..தேசிய அளவில் மாற்று சக்தி....

பாட்னா: ‘‘பீகார் தேர்தல்
முடிவானது, தேசிய அளவிலான மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. பலமிக்க மாற்று சக்தி உருவாக வேண்டுமென மக்கள் விரும்புவதை காட்டுகிறது’’ என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூறினார். பீகாரில் மெகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பீகார் தேர்தல் முடிவு, தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இது, தேர்தலில் ஒரு புதிய மைல்கல்லாகும். ஒரு தீர்க்கமான முடிவை அளித்த பீகார் மக்களுக்கு நன்றி.
எங்கள் வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகின்றனர். நாடு முழுவதும் இந்த தேர்தல் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. தேசிய அளவில் பலமிக்க மாற்று சக்தி உருவாக வேண்டுமென மக்கள் விரும்புவதை இது காட்டியுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

அருண் சோரி : மோடி, அமித் ஷா, அருண் ஜெட்லியே பீகார் தோல்விக்கு பொறுப்பு...பாஜக வேகமாக உடைகிறது...

நாடு முழுவதும் பீகார் தேர்தல் பெரும்
அதிர்வை ஏற்படுத்தியுள்ள சூழலில், பா.ஜ.க-வின் தேர்தல் தோல்விக்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியவர்களே காரணம் என்று முன்னாள் மத்திய மந்திரி அருண் சோரி குற்றம் சாட்டியுள்ளார். முந்தைய பா.ஜ.க ஆட்சியின் போது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் மோடியை மையப்படுத்திய தேர்தல் பிரச்சாரம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றும், மேலும் பா.ஜ.க வின் பிரிவினை உத்திகளும்தான் படுதோல்விக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நிருபர்களைச் சந்தித்த அவர், பீகார் தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில், “இதற்கு மோடி, ராஜ தந்திரி(அமித் ஷா) அருண் ஜெட்லி இவர்கள் தான் பொறுப்பு, இவர்களைத் தாண்டி பொறுப்பாளியான நான்காவது நபர் கட்சியிலோ அரசாங்கத்திலோ இல்லை.” என்றார். அருண் ஷோரி பீகார்  தேர்தலுக்கு முன்பே  மோடியை  தாக்க தொடங்கி இருந்தார் என்பதை கவனிக்க வேண்டும். வெறும் டுபாக்கூர் வாக்குறுதிகளை  அள்ளி வீசி  முதலாளிகளின் பணத்தால் ஆட்சியை பிடித்த  மோடியின்  சுயரூபத்தை பாஜாகாவிலேயே பலரும் அறிவார்கள். இவ்வளவு நாளும் அவர்களை கட்டிபோட்டது மோடியின் வெற்றி இமேஜ்தான் ..இப்போ அது காலி.....பாஜக பெரும் புயலை சந்திக்க தொடங்கி விட்டது...பெரும் பிளவை நோக்கி செல்கிறது,

ஞாயிறு, 8 நவம்பர், 2015

மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு...கட்டிய மனைவிக்கு துரோகம்...பிரமச்சாரி வேஷம்...

ஆமதாபாத்: விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பிரதமர்
நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான சான்றிதழ் அல்லது கணவருடன் சேர்ந்து அளிக்கும் அபிடவிட் இணைக்கப்படாத காரணத்தினால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் கான் கூறியுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க செல்வதற்காக யசோதா பென் மோடி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.புதிய பாஸ்போர்ட் சட்டப்படி, புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், திருமணம் செய்திருந்தால், அது தொடர்பான ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.

சோபித தேரர் காலமானார்! இலங்கை சமூக நீதி மக்கள் இயக்க தலைவர்...ஆட்சி மாற்றத்திற்கு காரணமானவர்!

இலங்கையில் சமூக
நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவருமான மாதுலுவாவே சோபித தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது 73வது வயதில் சிங்கப்பூரில் காலமானார்.காலஞ்சென்ற அவர் கோட்டே ஶ்ரீ நாக விகாரையின் விகாராதிபதியுமாகவும் இருந்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் அவர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.
உள் நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்த இவர் கடந்த ஜனாதிபதி பொதுத் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று கூட எதிர்பார்கப்பட்டிருந்தது.
அண்மைக் காலமாக உடல்நல பாதிப்புக்குள்ளான அவர் கடந்த செவ்வாய்கிழமை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துமனையொன்றில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். bbc.tamil.com

Heart and Souls கணக்குகள் முடியுமுன்னே வாழ்க்கை முடிந்து போய்விடுகிறது சிலருக்கு....இல்லை இல்லை எல்லோருக்கும்தான்


இந்த திரைப்படத்தை பார்பதற்கு  உண்மையில் மிகவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் . இது மனிதர்களின் எத்தனையோ அடிப்படை கேள்விகளுக்கு மிக சவாலான ஒரு படமாகும். இன்னும் சரியாக சொல்லப்போனால் எந்த புத்தகத்திலும் எந்த ஞானியும் சொல்ல முடியாத அளவு பிறப்பு, இறப்பு, வாழ்க்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம்  விலாவாரியாக விளங்க வைக்க முயற்சிக்கிறது.
எனது அனுபவத்தில் இது என்னுள் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்த உலகில் நாம் எப்படி வந்தோம்? எப்படி போகப்போகிறோம்? எங்கே போகப்போகிறோம்? எப்படி வாழவேண்டும்? இந்த வாழ்வின் அற்புதம்தான் என்ன?
கதை என்னவோ இறந்தவர்களை பற்றிதான் ஆனால் மிகவும் உயிர்த்துடிப்புள்ள படம்.
கணவன் இன்றியே தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் ஒரு  தாய்
தனது இரவு வேலைக்கு செல்கிறாள். அவள் ஒரு பேரூந்தில் ஏறுகிறாள்.
அந்த பேருந்தில் வேறு ஒரு நடுத்ததர வயது பாடகன் ஒருவனும் ஏறுகிறான் . அவனோ தன்னம்பிக்கை இல்லாதவன். பெரிய மண்டபத்தில் நடக்கபோகும் ஒத்திகைக்கு சமுகம் அளிக்க பயந்து தப்பி ஓடிவந்து பேருந்தில் ஏறியவன் .

பீகார் - சமூகநீதிக்கு கிடைத்திட்ட வெற்றி ..வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய ...கி.வீரமணி

பீகார் தேர்தல் முடிவு - ஒடுக்கப்பட்ட சமூகநீதிக் கூட்டணிக்குக் கிடைத்திட்ட வெற்றி: கி.வீரமணி நாடே எதிர்பார்த்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. துவக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை என்பது போல செய்திகள் வரத்துவங்கின! ஆனால் கடைசியில் லாலுபிரசாத்- நிதிஷ்குமார்- காங்கிரஸ் இணைந்துள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்துள்ள நிதிஷ் கூட்டணிக்கே மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்து, பீகார் ஜனநாயக வரலாற்றில் பொன்னேட்டை இணைத்துள்ளனர்.
அந்நாளில் ‘திராவிடநாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா தலைப்பிடுவார் “ஆரம்பத்தில் ‘அடானா’ முடிவில் ‘முகாரி’” என்று முதலில் மகிழ்ச்சி ராகம் பாடியவர்கள், பிறகு துயர ராகத்தில் முடிப்பர் என்று அதை நினைவூட்டுவதாக இது அமைந்தது!
இத்தேர்தலில் முடிவு இந்தியாவின் எதிர்காலம் இருட்டானதல்ல என்பதை நிரூபித்து மக்களின் அவநம்பிக்கையைப்போக்கி புது நம்பிக்கையை விதைத்துள்ளது!
பிரதமர் மோடி 30 பேரணிகள் நடத்தி, நிதிஷ்குமார், லாலுபிரசாத் போன்ற தலைவர்கள் மீது வைத்த தனிப்பட்ட தரக்குறைவான விமர்சனங்கள் “சைத்தான்”, ‘டி.என்.ஏ’, காட்டுத்தர்பார் நடத்துவோர், என்ற பேச்சு, நிதிஷ் அணிக்குப் பெரும் ஆதரவினைத் திரட்டியுள்ளது!

லாலு- நிதீஷ்- சோனியா கூட்டணி வெற்றிக்கு கலைஞர்- முலாயம் வாழ்த்து...

பீகாரில் சமுக நீதியை திறம்பட அமுல் படுத்தியதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது என்று கலைஞர் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்
பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். . சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் மற்றும் உத்தர பிரதேச முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் ஆகியோரும் பீகார் தேர்தலில் பலத்த வெற்றி பெற்றதை அடுத்து அக்கூட்டணி தலைவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.சமுக நீதி  கொள்கைகள்  சாதாரண மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது

Bihar : நிதீஷ் கூட்டணி 178, பாஜக கூட்டணி 59 இதர அணிகள் 6...பாஜக படுதோல்வி...

பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. இதில் பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அவசரப்பட்டு பாஜகவினர் வெடி கொழுத்தி சங்கு ஊதி லட்டு கொடுத்து......அப்புறம் நிதீஷின் வெற்றியை கொண்டாடினாய்ங்க

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணிலை வகித்ததால் அக்கட்சி தொண்டர்கள் சங்கு ஊதியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். ஆனால் சிறிது நேரத்துக்கு பின்னர் பா.ஜ.க. பின் தங்கியிருப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியானதால் அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். பீகாரின் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து பாட்னாவில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சங்கு ஊதியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதீஷ் குமார் கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி முகம் - மீண்டும் நிதீஷ் முதல்வராகிறார் ....பாஜக 72 மோடி மந்திரம் பலிக்கவில்லை


நிதீஷ் குமாரின் வெற்றி உறுதிபடுத்த பட்டு விட்டது  , ஆட்சி அமைக்க  தேவையான 122 தொகுதிகளையும் தாண்டி 140 தொகுதிகளில் நிதீஷ் லாலு காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி தற்போது உறுதியாக தெரிகிறது,
பாஜக முழு மத்திய மந்திரிகைகளையும் களம் இறக்கி ஏராளமான பணபலத்துடன் மோடியின் பூதகரமான இமேஜ் பில்டப்புக்களையும் தாண்டி மதசார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.

Bihar Election நிதீஷ் கூட்டணி முந்துகிறது 135 இடங்களிலும் ....பா.ஜ., கூட்டணி 90 இடங்களிலும்

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் 39 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதனால் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணி 82 இடங்களிலும், நிதிஷ்குமார், லாலு பிரசாத்-காங்கிரஸ் கூட்டணி 86 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ரகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரதாப் முன்னிலையில் இருந்து வருகிறார்.<

திமுக தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை...பிரேமலதா திமுகவை விமர்சிப்பது அதிக சீட் கேட்கத்தான்...

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, ரகசிய பேச்சு துவங்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.அ.தி.மு.க.,வை எதிர்க்க கூட்டணி அவசியம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், மகளிர் அணி செயலர் கனிமொழியும் கருதுகின்றனர். ஆனால், தனித்தே போட்டியிட, பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு, கூட்டணி சேர, ஆட்சியில் பங்கு வேண்டும் என, நெருக்கடி கொடுப்பது தான் காரணம். ஆனால், தே.மு.தி.க., - காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, கனிமொழி, களமிறங்கி உள்ளார். கனிமொழியின் ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். அப்போது, இரண்டு கட்சிகளும் சேர வேண்டிய அவசியத்தை உணர்த்தியவர்கள், 'சீட்' பேரம் குறித்தும் பேசியுள்ளனர். இந்த தகவல் விஜயகாந்திடம் சொல்லப்பட்டுள்ளது. அவர், 'டிசம்பரில் நடக்கும் ராகு - கேது பெயர்ச்சிக்கு பின், கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம்' என கூறியுள்ளார்.

பீகார் தேர்தல் கடும் போட்டி பாஜக 80 இடங்களில்...நிதீஷ் கூட்டணி 79 இடங்கள் ..

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி முன்னிலை பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் 39 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதனால் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. .nakkheeran.in

ஜெயலலிதா 38 கம்பெனிகளை சசிகலாவின் உறவுகளையும் நட்புகளையும் டைரக்டர்களாக்கி நடத்து கிறார்..

"வாரிச் சுருட்டும் கார்டன் கூட்டம்' என நக்கீரனில் வெளி வந்த கவர் ஸ்டோரியைத் தொடர்ந்து ஏராளமான தகவல்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் பறந்து வந்துகொண்டிருக்கின்றன. (2015 ஜூன் 27-30 இதழில் முதன்முதலில் இதை வெளியிட்டதும் நக்கீரன்தான்) ஜெ.வின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவுச் சங்கிலியில் இவரை விட்டுவிட்டீர்கள் என்ற தகவல்கள் ஒருபக்கம். மறுபக்கம், ஆட்சியைப் பயன்படுத்தி சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய 38 கம்பெனிகளை சசிகலாவின் உறவுகளையும் நட்புகளையும் டைரக்டர்களாக்கி நடத்து கிறார் என நாம் ஆதாரத் துடன் தந்த பட்டியலையும் தாண்டி இன்னும் பல கம் பெனிகள் இருக்கிறது என் கிறார்கள். அதில் முக்கியமா னது பலரும் அறிந்த மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ்.

2016 இல் தமிழக தேர்தல்....தனிதனியா கேட்டு அப்புறம் சேருவாய்ங்க.....வேற வழி? குதிரை பேரம்!

ஆர்.மணி வரும் 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் இதுவரையில் தமிழகம் கண்டிராத ஒன்றாக மாறும் அனைத்து சாத்தியங்களும் உள்ளன. . தமிழக அரசியல் வரலாற்றில் இத்தனை முதலமைச்சர் வேட்பாளர்களும், கட்சிகள் தனித் தனி அணிகளாய் நிற்கும் காட்சியும் இதுவரையில் நடந்தேறியதில்லை. அஇஅதிமுக சார்பில் ஜெயலலிதா, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாஜக சார்பில் ஒரு முதலமைச்சர் வேட்பாளர், தேமுதிக சார்பிலோ அல்லது ஒரு கூட்டணியின் சார்பிலோ விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில்  ஒரு வேட்பாளர். இது தவிர திமுக சார்பில் அனேகமாக இரண்டு வேட்பாளர்கள், ஆம்... மு.க. ஸ்டாலின் மற்றும் மு.கருணாநிதி. எல்லா கட்சிகளின் சார்பிலும் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்றால் திமுக சார்பில் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கலாம். இந்த இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் என்பது அறிவிக்கப் படாததாக இருக்கும். விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஸ்டாலினை முதலைமச்சர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நிறுத்தும் காரியத்தை திமுக ஒரு போதும் செய்யாது.

Abdul Sattar Edhi பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரைப்பட்ட கீதாவை பராமரித்தவர். உலகின் மிகப்பெரும் NGO வின் நிறுவனர்..நோபல் பரிசுக்கு உரியவர்...

ஏ.கே.கான்:  கீதா.... பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச
முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம். 14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள். Meet Abdul Sattar Edhi, The Man Who Kept Geeta Safe அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான். சிறுமி தனது பெயரைக் கூட சொல்லத் தெரியாத, சொல்ல முடியாத நிலையில், இந்தியாவில் இருந்து வந்த சிறுமி என்பதால் கீதா என பெயர் சூட்டியதும் அப்துல் சத்தார் ஈதி தான்.