திங்கள், 9 நவம்பர், 2015

முதல்வர் ஜெயலலிதா அவசரமாக சென்னை திரும்பியது ஏன்?

கோட நாட்டிலிருந்து, சென்னை, போயஸ் கார்டன் வீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று திரும்பினார். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அக்டோபர் 14ல், நீலகிரி மாவட்டம், கோட நாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து, கட்சி மற்றும் அரசு பணிகளை கவனித்து வந்தார். நேற்று மதியம், கோட நாட்டிலிருந்து கோவைக்கு வந்த அவர், விமானம் மூலம், மாலையில், சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள், மழையில் நனைந்தபடி வரவேற்றனர். இம்மாத இறுதியில் வர திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, முன்கூட்டியே சென்னை திரும்பியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதன் முக்கிய அம்சங்களாவன:
*அரசு பணிகளை விரைவுபடுத்த உள்ளார்

*அதிகார மையத்தின் குடும்ப உறுப்பினர்களால் வாங்கப்பட்டதாக கூறப்படும் தியேட்டர்கள் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளார்
*சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க, மற்ற கட்சிகளிடம் பேச்சு நடத்த முன்னாள் அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைக்க உள்ளார்
*தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின், 'நமக்கு நாமே' சுற்றுப்பயணத்திற்கு பதிலடி கொடுக்கும் செயல்பாடுகள் குறித்த திட்டமிட உள்ளார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், ஜெ., வருகையால், சில மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -   தினமலர்.com

கருத்துகள் இல்லை: